சித்த மருத்துவம்

சித்த மருத்துவமும் ஆயுர்வேதமும் யோகமும் இந்தியா இந்த உலகுக்கு வழங்கிய கொடைகள். இதில் யோகா உலகப் புகழ் பெற்று விட்டது. ஒரு ஜெர்மானிய வெப்சீரீஸில் கூட ஒரு பதின்பருவச் சிறுமி தன் தந்தையிடம் யோகா வகுப்பு போவதற்குக் காசு கொடுங்கள் என்று கேட்கும் காட்சியைப் பார்த்தேன். தமிழ்நாட்டில் மவுசு இல்லை. அது வேறு விஷயம். ஆயுர்வேதம் ஓரளவு பிரபலமாகி இருக்கிறது. ஆனால் சித்த மருத்துவம் பற்றி யாருக்குமே தெரியவில்லை. ஈரோடு பக்கத்தில் ஒரு மலையடிவாரத்தில் ஒரு பாரம்பரிய சித்த வைத்தியர் வெண்குஷ்டத்தைத் தன் மூலிகைகளால் பூரணமாகக் குணப்படுத்துகிறார். இது பற்றி எழுதியிருக்கிறேன். என் நண்பர் ஒருவரின் தந்தைக்கு 90 சதவிகித வெண்குஷ்டம் இருந்தது. இப்போது அது அந்த சித்த வைத்தியரின் மருந்தினால் 20 சதவிகிதமாகக் குறைந்து விட்டது. அந்த வைத்தியர் ஒரு விவசாயி. போலியோவினால் பாதிக்கப்பட்டவர். ஒரு மலையடிவாரத்தில் தன் ஆடுமாடுகளுடன் வசிக்கிறார். தன்னைப் பற்றி எழுதக் கூடாது என்று என்னிடம் வாக்கு வாங்கியிருக்கிறார்.

காரணம், மருந்தை நானே காய்ச்சுகிறேன். நோயாளி குணமடைய வேண்டும் என்ற பிரார்த்தனையோடு காய்ச்சுகிறேன். இது பற்றி நீங்கள் எழுதி நிறைய பேர் வந்தால் ஆள் வைத்து செய்வேன். அவர்கள் கூலிக்கு வேலை செய்வார்கள். மருந்து வேலை செய்யாது. எனக்கும் பணத்தாசை வந்து விடும். இப்போது பணம் இல்லை என்பதால் ஆசையும் இல்லை. பணத்துக்கு ஒரு குணம் உண்டு. அதைப் பார்த்து விட்டால் ஒட்டிக் கொண்டு விடும். நானும் பணத்தாசை பீடித்து வேறு மனிதனாக மாறி விடுவேன்.

வேண்டாம். எழுதாதீர்கள்.

இதுதான் அவர் சொன்னது. ஆனால் இன்னும் கொஞ்சம் தெளிவாக, சேவை மனப்பான்மையுடனும் வலுவான மனதுடனும் செயல்பட்டால் பணத்தாசை வராது. முதியோர்களிடம் நான் கன்ஸல்டேஷன் கட்டணம் வாங்குவதில்லை என்றார் மருத்துவர் பாஸ்கரன். தவறு என்றேன். முதியவர் கோடீஸ்வரர் என்றால் என்ன செய்வது என்று கேட்டேன். மேலும், எதையும் இலவசமாகக் கொடுத்தால் அதைப் பெறுவோருக்கு அதன் மீது மதிப்பு இருக்காது. அதனால்தான் நாம் காற்றையும், சூரியனையும், பூமியையும் வணங்குவதில்லை. மதிப்பதில்லை. ஏனென்றால், அதெல்லாம் இலவசமாகக் கிடைக்கிறது. வணங்குவோரையும் பைத்தியக்காரன், மூடன் என்று ஏளனம் செய்கிறோம்.

சமீபத்தில் என் வாசகர் ஒருவருக்கு (வயது 61) prostrate gland வீங்கி அலோபதியில் அறுவை சிகிச்சைக்கு சிபாரிசு செய்து இருக்கிறார்கள். அவர் சித்த மருத்துவர் பாஸ்கரனிடம் சென்றார். ஒரு மாத காலத்தில் அறுவை சிகிச்சை தேவையில்லை என்ற நிலைக்கு வந்து விட்டார். இதுதான் சித்த மருத்துவத்தின் சிறப்பு.

இதை நீங்கள் பிரச்சாரம் என்று நினைத்தாலும் பரவாயில்லை. இதை நான் மருத்துவர் பாஸ்கரன் பற்றி எழுதுவதாக நினைக்கவில்லை. போகர், கோரக்கர் பற்றி எழுதுவதாகவே நினைக்கிறேன். நம் அருகில் உள்ள பாஸ்கரனின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நாளை சென்னையில் இருப்பார். தமிழ்நாடு முழுவதுமே செல்கிறார். அதன் விவரம் கீழே:

https://forms.gle/ewdHK6YvJf2aFB9bA

சித்த மருத்துவர் பாஸ்கரனிடம் ஆலோசனை பெற.. (To consult Siddha Dr Baskaran) (google.com)