ஆகஸ்ட் 15 பெங்களூர் விழா

பெங்களூருவில் Book Brahma என்ற கன்னட இலக்கிய அமைப்பு உள்ளது. www.bookbrahma.com

இந்த அமைப்பினர் சென்ற ஆண்டிலிருந்து கன்னடத்தில் சிறந்த நாவலையும் சிறந்த சிறுகதைகளையும் போட்டி மூலம் தேர்ந்தெடுத்து பரிசு அளிக்கிறார்கள். நாவலுக்கு ஒரு லட்சம் ரூபாய். முதல் பரிசு மட்டும் அல்ல. மற்றும் பல பரிசுகள். சென்ற ஆண்டு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டவர் தாமோதர் மாஸோ. பாரதீய ஞானபீடப் பரிசு பெற்ற கொங்கணி எழுத்தாளர். இந்த ஆண்டு சிறப்பு விருந்தினர் அடியேன். (என்னை அவர்களுக்கு எப்படித் தெரியும் என்று தெரிந்து கொள்ள ஒரே ஆர்வமாக இருக்கிறேன்!)

பதினோராம் தேதி காலையில் வந்தே பாரத் மூலம் பெங்களூர். அங்கிருந்து காரில் கூர்க். 11, 12 இரண்டு தினங்களும் கூர்க். 13ஆம் தேதி ஸ்ரீரங்கப்பட்டணம். 14 மற்றும் 15 தேதிகளில் பெங்களூரு. அங்கே நான் எலக்ட்ரானிக் சிட்டியில் தங்கியிருப்பேன்.

விழா ஆகஸ்ட் 15ஆம் தேதி மாலை நான்கு மணியிலிருந்து ஏழு மணி வரை நடைபெறும்.

இடம்: சுசித்ரா ஃபில்ம் சொஸைட்டி, பனஷங்கரி, பெங்களூரு. Suchitra Film Society
Banashankari, Bengaluru, from 4 pm to 7 pm.

பெங்களூரில் வசிக்கும் நண்பர்கள் மேற்கண்டுள்ள நிகழ்ச்சிக்கு வந்தால் மகிழ்ச்சி அடைவேன்.

எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள Bloom Suits என்ற ஓட்டலில் 14, 15 தேதிகளில் தங்கியிருப்பேன்.

ஒரு வேடிக்கை கேளுங்கள். கடவுள் என்னுடைய பெரிய வேண்டுதல்களை நிறைவேற்றாமல் சின்ன வேண்டுகோள்களை நிறைவேற்றி வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார் என்று சொன்னேன் அல்லவா? இன்றுதான் காலையில் “பகவானே, ஏன் இப்படி எங்கள் பயணமெல்லாம் ஒரே கே க்ளப் பயணம் மாதிரி இருக்கிறது, உனக்கே நியாயமா இது?” என்று கேட்டேன். சற்று நேரத்துக்கு முன்பு ஒரு வாசகி ஃபோன் செய்து ”நான் கோவாவுக்கே வருவதாக இருந்தேன், கொஞ்சம் தயக்கம், அடுத்த சந்திப்புக்கு வந்து விடுவேன்” என்றார். இதையெல்லாம் உடனுக்கு உடன் நிறைவேற்றி விடும் பகவான் அந்த புக்கர் விஷயத்தில்தான் சுணக்கம் காட்டுகிறார். பகவானின் இல்லத்திலேயே க்ரூப் செக்ஸ் நடக்கிறது என்றெல்லாம் எழுதினால்தான் அருள் புரிவார் போல. கலிகாலம். கடவுளே இப்படி இருந்தால் நாம் மனிதர்கள் என்ன செய்ய?