ஆகஸ்ட் 15 அன்று பெங்களூருவில் புக் ப்ரம்மா அமைப்பின் ஆண்டு விழாவில் நான் ஆற்றிய உரையை கபிலனின் ஷ்ருதி டிவி காணொலியாகத் தருகிறது. நிகழ்ச்சிக்கு என் தமிழ் வாசகர்கள் பலர் பல ஊர்களிலிருந்து வந்திருந்தது மகிழ்ச்சியை அளித்தது. வந்திருந்த கன்னட எழுத்தாளர்களில் சிலர் என் ஸீரோ டிகிரியை ஆங்கிலத்தில் படித்திருந்தார்கள். ஒரு கன்னடப் பெண் எழுத்தாளர் அக்கம்மா தேவியைப் பற்றி 700 பக்க நாவல் எழுதியிருக்கிறார். அவர் ஒரு களச் செயலாளியும் ஆவார். பெயர் மறந்து போனேன். அவர் என்னிடம், “நான் டெரரிஸ்டுகளோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உங்கள் பேச்சும் டெரரிஸ்ட் மாதிரிதான் இருந்தது. உங்களோடும் நட்பாக இருக்க விழைகிறேன்” என்று சொல்லி தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார்.