நேற்று இரவு ஒன்பது மணி அளவில் எனக்கு ஒரு வாட்ஸப் மெஸேஜ் வந்த்து. ”உங்கள் கட்டுரை சுவாரசியமாக இல்லை. Bore அடிக்கிறது.”
“எந்தக் கட்டுரை?” என்று பதில் மெஸேஜ் அனுப்பினேன்.
மெஸேஜ் அனுப்பியவரோடு கடந்த நான்கைந்து ஆண்டுகளாகத் தொடர்பு இல்லை. அவர் ஒரு காலத்தில் எனக்கு மிகவும் பிரியமானவராக இருந்தார். அவர் இல்லாமல் ஒரு வாசகர் வட்டச் சந்திப்பு கூட நடந்தது இல்லை. ஆனால் அவரிடம் ஒரு பழக்கம் இருந்தது. குடிக்காமல் இருக்கும்போது சாது சாரங்கபாணி போல் இருப்பவர் குடி உள்ளே போனதும் சைத்தானாக மாறி விடுவார். மொத்த சந்திப்புமே உருக்குலைந்து போவது போல் நடந்து கொள்வார். பேட்டை ரவுடியாக மாறி விடுவார். அவரை அடக்கிப் படுக்க வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகி எல்லோரும் களைத்து விடுவார்கள். நான் இமயமலைக்குச் சென்றிருந்த ஒரு சமயத்தில் அப்படி ஒரு வெற்று கலாட்டா நடந்த போது காலையில் விமானத்தைப் பிடித்து சென்னைக்கே திரும்பியிருக்கிறேன். பகலெல்லாம் சாது சாரங்கபாணியாகத் திகழ்பவர் குடித்ததும் அப்படி மாறி விடுவார்.
அதனால் ஒரு கட்டத்தில் சலித்துப் போய் “நீங்கள் இனிமேல் வாசகர் வட்டச் சந்திப்புகளில் கலந்து கொள்ள வேண்டாம்” என்று தடை போட்டு விட்டேன். இத்தனைக்கும் அவர் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளியாக இருப்பவர். அவருக்கு இப்படி ஒரு பக்கம் இருக்கிறது என்றே அவரைச் சார்ந்தவர்களுக்குத் தெரியாமல் கூட இருக்கலாம்.
அதிலிருந்து சுமார் நாலைந்து ஆண்டுகளாக அவரோடு தொடர்பு இல்லை.
அவர்தான் நேற்று அப்படி ஒரு மெஸேஜ் அனுப்பினார்.
உங்கள் கட்டுரை சுவாரசியமாக இல்லை என்ற மெஸேஜ் உடனடியாக அவரால் அழிக்கப்பட்ட போதும் அது என் கண்களில் பட்டு விட்டது. அதனால் நானும் எந்தக் கட்டுரை என்று கேட்டு ஒரு பதில் அனுப்பினேன்.
உடனே அவர் “குறிப்பிட்ட கட்டுரை என்று இல்லை; சமீப காலமாக நீங்கள் எழுதுவது எதுவுமே தரமாக இல்லை” என்று பதில் அனுப்பினார்.
உடனே நான் ஒரு வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினேன். அதன் விவரம்:
”நான் இதுவரை ஒரு நூறு புத்தகங்கள் எழுதியிருப்பேன். அதில் ஒரு பத்து புத்தகங்கள்தான் புனைவு சார்ந்தவை. மீதி தொண்ணூறும் அ-புனைவுகள்தான். இது ஒரு வெட்கக்கேடான நிலை. மேற்கத்திய எழுத்தாளர்கள் இப்படிச் செய்வதில்லை. முதலில் அவர்கள் நூறு புத்தகங்களெல்லாம் எழுதுவதில்லை. மிக அதிகமாக எழுதும் எழுத்தாளர்களே ஒரு பதினைந்து நூல்கள்தான் எழுதுகிறார்கள். அந்தப் பதினைந்துமே புனைவுகள்தான். ஒன்றிரண்டு புத்தகங்கள்தான் அ-புனைவு வகை. அதுவும் தன்னுடைய எழுத்து குறித்த நேர்காணல்களும் அது சம்பந்தமான கட்டுரைகளும்தான். உலகிலேயே மிக அதிகமாக எழுதிய மரியோ பர்கஸ் யோசாவே ஒரு நாற்பது நாவல்களும் நாலைந்து அ-புனைவு நூல்களும்தான் எழுதியிருக்கிறார். இங்கே தமிழ் எழுத்தாளனோ தன் வாழ்நாள் பூராவும் கட்டுரை எழுதி சிலுவை சுமக்க வேண்டியிருக்கிறது. உங்களுக்குப் பிடிக்காத என் ப்ளாக் கட்டுரைகளை ஏன் படிக்கிறீர்கள்? அவை என்னுடைய மளிகைக்கடை ஜாபிதா போன்றவை. நான் ஆறே மாதத்தில் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட ஔரங்ஸேப் நாவலை எழுதியிருக்கிறேன். ஒரு இணைய இதழில் வாரம் மூன்று அத்தியாயம் வந்தது. அது ஒரு உலக சாதனை. ஒருநாள் விட்டு ஒருநாள் எழுத வேண்டும். சுமாராக இருநூறு நூல்களை அதற்காகப் படித்திருப்பேன்.
அதைத் தொடர்ந்து அன்பு என்ற நாவலை ஒரே வாரத்தில் எழுதினேன்.
அதைத் தொடர்ந்து பெட்டியோ என்ற நாவலை எழுதி முடித்திருக்கிறேன்
அதற்கு இடையில் அந்தோனின் ஆர்த்தோ பற்றி ஒரு நாடகம் எழுதியிருக்கிறேன். இதில் பெட்டியோ தவிர மற்றதெல்லாம் விற்பனையில் உள்ளன. நீங்கள் இதில் எதையுமே படிக்காமல் என் ப்ளாகை மட்டுமே படித்து பஜனை பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். என் நாவல்களைப் படியுங்கள்.”
அனுப்பி விட்டு அவர் எண்ணைத் தடை செய்து விட்டேன். ஏன்யா, உங்களிடம் என் தொலைபேசி எண் இருக்கிறது என்ற ஒரே காரணத்தினால் போதையில் உங்களுக்குத் தோன்றியதையெல்லாம் எழுதி அனுப்புவீர்களா? ஏன், இதையே பகலில், நீங்கள் போதையில் இல்லாத போது எனக்கு அனுப்புவதற்குத் திராணி இருக்கிறதா?
ஒரு வேகத்திலும், கோபத்திலும்தான் ப்ளாகில் எழுதுவதை மளிகைக்கடை ஜாபிதா என்று சொன்னேனே தவிர உண்மையில் நான் ப்ளாகில் எழுதுவது எல்லாமே ஸோர்போன் போன்ற ஒரு சர்வகலாசாலையில் பயில வேண்டிய விஷயங்களே ஆகும்.
நான் குறிப்பிடும் ஒவ்வொரு பெயரும் தமிழ்க் கலாச்சார சூழலுக்குப் புதியவை. இதுவரை யாருமே குறிப்பிட்டு இருக்காதவை. உதாரணமாக, அந்தோனின் ஆர்த்தோவைத் தமிழ்நாட்டில் சில நாடகப் பேராசிரியர்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் என் மூலமாக இன்று ஆர்த்தோவின் பெயர் ஒரு குடும்பப் பெயராக நிலைகொண்டு விட்டது. மேலும், ஆர்த்தோ என்பது ஒரு எழுத்தாளனின் பெயர் அல்ல. ஐரோப்பிய சிந்தனா முறையின் மீது தாக்குதல் தொடுத்து அதை நிர்மூலமாக ஆக்கிய ஒரு போராளியின் பெயர். இந்த விஷயம் நான் எழுதிய ஆர்த்தோ நாடகத்தை வாசித்திருந்தால் தெரிந்திருக்கும். படிக்கவில்லை. குறைந்த பட்சம், என் தளத்தில் வெளிவந்த ஜெயமோகனின் கட்டுரையைப் படித்திருந்தால் கூட ஆர்த்தோவின் முக்கியத்துவம் புரிந்திருக்கும்.
நான் குறிப்பிடும் பெயர்கள் யாவுமே வெறும் name dropping அல்ல என்பது என் தளத்தைப் பொழுதுபோக்காக மேயாதவர்களுக்குத் தெளிவாகப் புரியும். Pierre Guyotat என்ற ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் பற்றி எழுதினேன். இந்தியாவில் ஃப்ரெஞ்ச் கற்பிக்கும் எந்த ஒரு நபருக்கும் தெரிந்திராத பெயர் பியர் க்யூத்தா. பியர் க்யூத்தா பற்றி இதுவரை யாருமே பேசினதில்லை.
பியர் க்யூத்தா என்பது ஒரு பெயர் மட்டும்தானா?
மார்க்கி தெ ஸாத், அந்தோனின் ஆர்த்தோ, ஜான் ஜெனே, ஜார்ஜ் பத்தாய் ஆகிய நால்வருமே கூட நெருங்க முடியாதவர் பியர் க்யூத்தா என்று ரொலாந் பார்த் சொல்கிறார். ஃப்ரெஞ்ச் மொழியில் அதுவரையிலான சொல்லாடலையே முழுமையாகச் சிதைத்து, ஒரு புதிய மொழியை உருவாக்கியவர் பியர் க்யூத்தா. இதை நான் பியர் க்யூத்தாவின் பெயர் தெரியாத காலத்திலேயே இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் தமிழில் செய்து முடித்து விட்டேன்.
இப்படி வருவோர் போவோருக்கெல்லாம் இத்தனை வயதிலும் நான் என்னுடைய பயோடேட்டாவைக் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. நான் இங்கே என்ன ஓள் பஜனை கதைகளா எழுதிக் கொண்டிருக்கிறேன், சுவாரசியமாக இருப்பதற்கு? அதற்குத்தான் ஆயிரத்தெட்டு பாலியல் தளங்கள் இருக்கின்றனவே, என் தளத்துக்கு ஏன் வருகிறீர்கள்?
என் தளத்தில் நான் எழுதுவதெல்லாம் ஆழ்ந்த ஞானத் தேட்டத்துடன் வருபவர்களுக்காக மட்டுமே. ஸோர்போனில் மிஷல் ஃபூக்கோ போன்ற ஒரு மேதை பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது அந்த வகுப்பறையை எட்டிப் பார்க்கும் ஒரு சராசரிக்கு என்ன புரியும்?
எனக்கு மெஸேஜ் அனுப்பிய அன்பர் சமீப காலத்தில் நான் எழுதிய எந்த நாவலையும் புனைவு எழுத்தையும் படிக்கவில்லை என்று தெரிகிறது. ஏனென்றால், அதற்கு பதிப்பாளருக்குப் பணம் அனுப்பி புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும். அன்பர் கோடீஸ்வரர்தான். பணத்துக்குப் பிரச்சினையே இல்லை. ஆனால் யார் பணம் அனுப்பி புத்தகம் வாங்கிப் படிப்பது? அதற்கு உடம்பு வளைய வேண்டுமே? இணைய தளம் என்றால் நோகாமல் நோன்பு கும்பிட்டு விடலாம். இத்தனைக்கும் அன்பர் நான்கைந்து ஆண்டுகளாக இணைய தளத்துக்கு ஒரு நயா பைசா சந்தாவோ நன்கொடையோ அனுப்பியதில்லை. ஓசி ஓளுக்கே இந்த அளவுக்கு எதிர்பார்ப்பு! பாலியல் தொழிலாளியாக இருந்தால் துடைப்பக்கட்டையால் அடித்து விரட்டுவாள், ஓசி ஓள் போட வந்தவனுக்கு இத்தனை கேட்கிறதா என்று…
ஆகவே, உண்மையான ஞானத்தேட்டம் இல்லாதவர்கள் என் தளத்தை எட்டிப் பார்க்காதீர்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.