ஜப்பான்: கனவும் மாயமும் (10) : ‘நீர்மை’ நாயகியும் சன்னி லியோனியும்…

தோக்கியோ டிகேடன்ஸில் பதினைந்து சிறுகதைகள் உள்ளன.  அதில் உள்ள தோப்பாஸ் என்ற சிறுகதைதான் தோக்கியோ டிகேடன்ஸ் என்ற திரைப்படம்.   இருபத்திரண்டு வயது கல்லூரி மாணவியான அய் ஒரு எழுத்தாளனை ஒருதலையாகக் காதலிக்கிறாள்.  அவன் எழுதுவதோடு நிறுத்துவதில்லை.  சினிமா எடுக்கிறான்.  பாட்டு எழுதுகிறான்.  பாடுகிறான்.  ஓவியம் வரைகிறான்.  (இது எல்லாமே ரியூ முராகாமிக்குப் பொருந்துகிறது.  ரியூவின் பல கதைகள் சுயசரிதைத்தன்மை வாய்ந்தவை.)  ஒரு சனிக்கிழமை அன்று பகலில் ஒரு கஃபேயில் அமர்ந்து பியர் அருந்திக் கொண்டிருக்கிறாள் அய்.  எஸ் அண்ட் எம் அலுவலகத்திலிருந்து அவளுக்குத் தொலைபேசி அழைப்பு.  ”பகல் பூராவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன், எங்கே போய் விட்டாய்?  டாக்டர் யமாகிஷி அழைக்கிறார்.  அவர் முக்கியமான வாடிக்கையாளர் இல்லையா?  இரண்டு மணி நேரம்.”

டாக்டர் யமாகிஷியை அய் ஏற்கனவே அறிவாள்.  இரண்டு மணி நேரம் என்றால் நான்கு மணி நேரம் கூட வைத்துக் கொள்வார்.  நேரம் போகப் போக வருமானம். 

யமாகிஷி தங்கியிருக்கும் New Otani Tower ஓட்டலுக்குச் செல்கிறாள் அய்.  அறை முழுவதும் மாலை வெயிலின் வெளிச்சம் பளீரென்று அடிக்கிறது.   அவ்வளவு வெளிச்சத்தில் நிர்வாணமாக நிற்க அய்க்குக் கூசுகிறது.  கொஞ்சம் விளக்கை அணைக்கலாமா என்கிறாள். 

விளக்குகளை அணைத்தாலும் திரைச்சீலைகள் திறந்திருப்பதால் வெளிச்சம் குறையவில்லை.

அய்யை சாளரத்தின் அருகே போய் நிற்கச் சொல்கிறார் யமாகிஷி.  பதினைந்தாவது மாடியோ, இருபதாவது மாடியோ.  தோக்கியோ நகரம் முழுவதும் தெரிகிறது.  கீழே கார்கள் குட்டிக் குட்டி பொம்மைகளாய் நகர்கின்றன.

கண்ணாடிச் சாளரத்தின் கைப்பிடியைப் பிடித்தபடி நிர்வாணமாக நிற்கிறாள் அய்.  இடுப்பில் கட்டியுள்ள தோல் கயிறின் மூலம் யோனிக்குள் வைப்ரேட்டர் செருகப்பட்டுள்ளது.  உடலின் முன் பக்கத்தை முன்னே நீட்டி, பிருஷ்டத்தைப் பின்னால் தள்ளி, பிருஷ்டத்தால் காற்றில் வட்டம் போடு என்கிறார் டாக்டர் யமாகிஷி.

ஏன்?

அப்போதுதான் உச்சம் அடைந்து யோனி நீர் வழியும். 

இதுதான் அன்றைய எஸ் அண்ட் எம் விளையாட்டு.  யமாகிஷி எஸ்.  அய் எம். 

இது எல்லாமே கதையில் ஒரு வாக்கியத்தில் வருகிறது. The whole time I was tied up having a vibrator stuck in me and smelling the customer’s bad breath.  ஆனால் படத்தில் இந்த வாக்கியம் பத்து நிமிடக் காட்சி.  இதுதான் கதைக்கும் திரைப்படத்துக்கும் வித்தியாசம்.    

பிறகு, கலவிக்கு ஏங்கும் பெண்ணைப் போல் துடி என்கிறார் யமாகிஷி.  அய்க்கு அப்படி நடிக்கத் தெரியவில்லை. 

“நீ பிருஷ்டத்தை ஆட்டுவது கலவிக்காகத் துடிப்பது போல் இல்லை.  உடற்பயிற்சி செய்வது போல் இருக்கிறது” என்கிறார் யமாகிஷி. 

அய்க்கு சிரிப்பு வந்து விடுகிறது. 

அவளுடைய முலைக்காம்புகளைப் பிடித்துத் திருகிக் கொண்டே வெறி பிடித்தது போல் கத்துகிறார் யமாகிஷி. 

“சிரிக்காதே.  நீ எந்த அடையாளமும் இல்லாதவள்.  மூளையோ சிந்திக்கும் திறனோ இல்லாதவள்.  அடையாளம் என்றால் என்ன என்று கூட உனக்குத் தெரியாது.  அப்படி அடையாளமே இல்லாத ஒரு பெண் எப்படி சிரிக்கலாம்?”

முலைக்காம்புகளில் அவளுக்கு இப்போது தாங்க முடியாத வலியும், தாங்க முடியாதபடி சிறுநீரும் வருகிறது.  கட்டுப்படுத்திக் கொண்டு ஸாரி ஸாரி என்று சொல்கிறாள்.

முட்டாள் பெண்ணே, சிந்திப்பது என்றால் என்ன என்றாவது உனக்குத் தெரியுமா?

திருதிருவென்று விழிக்கிறாள் அய்.

தலையையாவது ஆட்டித் தொலை என்று கத்துகிறார் யமாகிஷி.

பிறகு அவளை அவிழ்த்து விட்டு விட்டு சோஃபாவில் அமர்கிறார்.  அய் நாலு காலால் தவழ்ந்து சென்று அவர் காலடியில் அமர்ந்து அவருடைய கால் விரல்களை ஒவ்வொன்றாக சப்பி மன்னியுங்கள் மன்னியுங்கள் என்கிறாள்.  அப்போது அவர் தன்னுடைய அடுத்த காலை அவளுடைய தோள் மீது வைத்திருக்கிறார்.  கால் முனை அவள் தலையைத் தட்டிக் கொண்டிருக்கிறது.

“நீங்கள் சொல்வது உண்மைதான்.  எனக்கு என் முலைகளையும் தொடை நடுவில் உள்ள பிளவையும் தவிர வேறு எதுவும் தெரியாது” என்கிறாள் அய். 

இரண்டு மணி நேரம் கேட்டது அன்றைய தினம் நான்கு மணி நேரம் போகிறது.  அய்க்குக் கூடுதல் வருமானம்.  ஆனால் அந்த நான்கு மணி நேரத்தில் டாக்டர் யமாகிஷி அவள் வாயில் இரண்டு முறை விந்து விடுகிறார்.

இரண்டாவது முறை பற்றிக் கதையிலும் விவரிக்கப்படுகிறது, சினிமாவில் இன்னும் விரிவான விவரணம் வருகிறது.  வைப்ரேட்டரை இயக்கியபடியே யமாகிஷிக்கு அவள் ஓரல் செக்ஸ் செய்ய வேண்டும்.  கூடவே யமாகிஷியின் மனைவியிடமும் (யமாகிஷி அப்படி அறிமுகப்படுத்துகிறார்) ஃபோனில் பேச வேண்டும்.  (பட்த்தில் அவள் நேரிலேயே வருகிறாள்.) 

“என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்கிறாள் யமாகிஷியின் மனைவி.

அய் தான் செய்து கொண்டிருப்பதைப் பச்சையான வார்த்தைகளால் விளக்குகிறாள்.  அது யமாகிஷியின் மனைவியின் உணர்ச்சியைத் தூண்டி விடுகிறது.  உணர்ச்சி மிகுதியில் மனைவி ஃபோனிலேயே “துப்பி விடாதே, விழுங்கு, விழுங்கு” என்று கத்துகிறாள். அய்யின் வாயில் விந்து விட்ட பிறகு ஃபோனை அவளிடமிருந்து வாங்கும் யமாகிஷி தன் குழந்தையிடம் கொஞ்சுவது போல் தன் மனைவியிடம் கொஞ்சுகிறார்.

அந்த முறை அய்க்கு யமாகிஷியிடமிருந்து அதிகமான பணம் கிடைக்கிறது.

இதை வாசிப்பவர்களுக்கு செக்ஸ் தளங்களில் வரும் காட்சிகளுக்கும் ரியூ முராகாமி வர்ணிக்கும் கதைக்கும் அல்லது சினிமாவுக்கும் உள்ள வித்தியாசம் புரியும் என்று நினைக்கிறேன்.

அது என்ன வித்தியாசம் என்றால், செக்ஸ் தளத்தில் வரும் பெண் அடையாளம் இல்லாதவள்.  அவள் ஒரு செக்ஸ் பொம்மை.  ஆனால் இங்கேயோ அய் ஒரு பாத்திரம்.  அந்தப் பாத்திரத்தோடு நீங்கள் ஒன்றுகிறீர்கள்.  அதனால் அவளுடைய வலியும், வேதனையும், அபத்தமும் உங்களையும் தொற்றுகிறது.  அதனாலேயே நீங்கள் செக்ஸ் தளம் பார்க்கும் நிலையிலிருந்து அந்நியமாகிறீர்கள்.  அல்லது, செக்ஸ் தளம் பார்க்கும்போது நீங்கள் எஸ்ஸாக இருக்கிறீர்கள்.  ரியூ முராகாமியின் படங்களில் நீங்கள் எம்மாக உணர்கிறீர்கள்.  அதுதான் குப்பைக்கும் கலைக்குமான வித்தியாசம்.

யமாகிஷியின் அறையிலிருந்து திரும்பி வரும் வழியில் அய் தன் கையில் இருந்த தோப்பாஸ் மோதிரம் காணாமல் போய் விட்டதை கவனிக்கிறாள். 

ஓட்டலுக்கு ஃபோன் போடுகிறாள்.  டாக்டர் யமாகிஷி யாரும் தன்னைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று சொல்லியிருப்பதாக ஓட்டலில் சொல்கிறார்கள். 

அந்தத் தோப்பாஸ் மோதிரத்தை அய் தான் காதலிக்கும் எழுத்தாளனின் ஞாபகமாக அணிந்திருக்கிறாள்.

பிறகு அவள் ஒரு கழிப்பறைக்குள் சென்று தன்னுடைய பெரிய கைப்பையைத் (ஒரு சூட்கேஸ் அளவுக்கு இருக்கிறது) திறந்து எல்லாப் பொருட்களையும் தரையில் கொட்டி மோதிரத்தைத் தேடுகிறாள்.  விதவிதமான கயிறுகள், வாயையும் கையையும் கட்டும் கறுப்புத் துணிகள், எனிமா கொடுக்கும் சாதனம் (ஆம், சிலருக்கு fetish விருப்பங்கள் உண்டு!), இரண்டு மூன்று வைப்ரேட்டர் எல்லாவற்றையும் கொட்டித் தேடும் போது ஒரு பெரிய மெழுகுவர்த்தியைப் போல் இருந்த ரப்பர் டில்டோ உருண்டு ஓடி கழிப்பறையின் கீழ் இடைவெளி வழியாக வெளியே போய் விடுகிறது. 

அய் எல்லா சாதனங்களையும் பையில் அள்ளிப் போட்டுக் கொண்டு வெளியே வந்தால், வெளியே இருபது பெண்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.  ஒருத்தி கையில் அய்யின் வைப்ரேட்டர்.  எல்லோரும் கல்லூரி மாணவிகள்.  வைப்ரேட்டரைத் திருப்பிக் கொடுத்தபடி அந்தப் பெண் அய்யிடம் “ஓ, ஆண்களின் வக்கிரத்துக்குத் தீனி போடும் ‘அந்த’ மாதிரி பெண்ணா நீ?” என்று கேட்டுச் சிரிக்கிறாள்.

அப்படிக் கேட்ட பெண்ணை அய் ஒருநாள் எழுத்தாளனோடு ஒரு உணவு விடுதியில் பார்த்திருக்கிறாள்.  அவனோடு இரண்டு மணி நேரம் சிரித்துப் பேசி விட்டு அவன் தரும் விலை உயர்ந்த பரிசுப் பொருளோடு வீட்டுக்குப் போகும் செல்வச் சீமாட்டி!

அது மட்டுமல்லாமல், டில்டோவைத் திருப்பிக் கொடுத்த பெண் அய் தன்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறாள்.  அப்போது அய் அவளுடைய கையைக் கடித்து விட்டு ஓடி, டாக்ஸியில் ஏறித் தப்புகிறாள்.  அந்தப் பெண்கள் ஓட்டல் காவலாளியிடம் புகார் செய்கிறார்கள். 

அந்த டாக்ஸியில் ஒரு முக்கியமான சம்பவம் நடக்கிறது.  அய்யின் கண்கள் கலங்கி கண்ணீர் வழிவதைப் பார்த்ததும் டாக்ஸி டிரைவர் “நான் பொதுவாக என் வாடிக்கையாளர்களின் விஷயங்களில் தலையிடுவதில்லை.  ஆனால் நீ என் மகளைப் போல் இருக்கிறாய்.  எதற்கும் கவலைப்படாதே.  காலம் மாறி விட்டது என்கிறார்கள்.  ஆனால் அடிப்படைகளும் மதிப்பீடுகளும் ஒருபோதும் மாறாது…” என்ற ரீதியில் பேசிக் கொண்டே போகிறான்.  ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் போய் அய் தன் வசமிழந்து வாயை மூடு என்று கத்தி விடுகிறாள்.  உடனே டாக்ஸியை நிறுத்தும் டிரைவர் “பன்றி போல் மூஞ்சியை வைத்துக் கொண்டிருக்கும் நாயே, வண்டியை விட்டு இறங்குடி கீழே” என்று கத்தி அவளை விரட்டி விட்டு காறித் துப்புகிறான்.  (அன்பு நாவலில் இம்மாதிரி ‘நல்ல’ மனிதர்களைப் பற்றித்தான் எழுதியிருக்கிறேன்.  தஸ்தயேவ்ஸ்கி அவருடைய An indecent incident (தமிழில்: அழையா விருந்தாளி) என்ற கதையிலும் இம்மாதிரி ’நல்லவர்களைப்’ பற்றித்தான் விளாசியிருக்கிறார்.)

அன்றைய தினம் அலுவலகத்தில் மேனேஜர் அம்மா அய்யை மிகவும் பாராட்டுகிறாள்.  இரண்டு மணி நேரத்தை நான்கு மணி நேரமாக நீட்டித்திருக்கிறாளே? 

கையிலிருந்த மோதிரம் விலை உயர்ந்தது என்பதை விட அவள் காதலிக்கும் எழுத்தாளனின் ஞாபகமாக இருந்தது என்பதுதான் அய்யின் மனதை நோகச் செய்தது.  மீண்டும் நியூ ஒத்தானி டவர் ஓட்டலுக்கு வந்து டாக்டர் யமாகிஷிக்கு ஃபோன் செய்கிறாள்.  யமாகிஷி ஃபோனை எடுக்கவில்லை.  அங்கே உள்ள மதுக்கூடத்தில் அமர்ந்து ஜின்னும் டானிக்கும் சொல்கிறாள்.  சில இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்த ஒரு ஆடவன் அவள் அருகில் காலியாக இருந்த இருக்கையைக் காட்டி, அங்கே அமரலாமா என்று கேட்கிறான்.  அவள் பதில் எதுவும் சொல்லாததால் அவன் அங்கே வந்து அமர்கிறான்.

பிறகு ஐந்து நிமிடம் அமைதியாக இருந்த அவன் அவளுடன் உரையாடலைத் தொடங்கும் நிமித்தமாக “இன்று எனக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்திருக்கிறது; அதைக் கொண்டாடுவதற்காக உங்கள் நான் ஒரு ட்ரிங்க் ஆர்டர் கொடுக்கலாமா?” என்று கேட்கிறான்.

(உலகம் பூராவுமே உள்ள மதுபானக் கூடங்களில் தனியாக அமர்ந்திருக்கும் பெண்களிடம் ஆண்கள் இப்படித்தான் உரையாடலைத் தொடங்குகிறார்கள்.  அப்படித்தான் கொழும்பில் ஒரு மதுபானக் கூடத்தில் தனியாக அமர்ந்திருந்த ஒரு அழகியை அணுகிக் கேட்கலாம் என்று எழுந்தேன்.  அன்று எனக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி இருந்தது.  ஆனால் என் பக்கத்தில் இருந்த நண்பன் “அவள் இந்த மதுக்கூடத்தின் முதலாளியின் மனைவி” என்றான்.  முதலில் என் ஆர்வத்தைத் தடுப்பதற்காகப் பொய் சொல்கிறானோ என்று நினைத்தேன்.  ஆனால் கொஞ்ச நேரத்தில் முதலாளி வந்தார்.  ர் விகுதி தப்பு.  முதலாளி இளைஞன். கணவன் வந்ததும் மனைவி கணவனிடம் ரெண்டு வார்த்தை பேசி விட்டுக் கிளம்பி விட்டாள். பிறகு அந்த முதலாளி இளைஞனோடு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்க வேண்டிய துர்ப்பாக்கியம் எங்களுக்கு ஏற்பட்டது.)

அய் மௌனமாக இருக்கிறாள்.  மௌனம் சம்மதத்தின் அறிகுறி. அவன் அணிந்திருக்கும் வாசனைத் திரவியம் அவளுக்குப் பிடிக்கவில்லை.  அவன் அவளுக்காகச் சொன்ன ட்ரிங்க் வருகிறது.  அப்போது அவன் “குடித்தால் இனிப்பாக இருக்கும், ஆனால் டக்கீலா கலந்து இருக்கிறது, அதிகம் குடித்தால் ஆளைக் கவிழ்த்து விடும், இதை எந்த வயதானவனாவது உங்களுக்கு அதிகமாக ஊற்றிக் கொடுத்தால் அவனுக்குக் கெட்ட எண்ணம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள், இதை அளவாகக் குடிக்க வேண்டும்” என்று சிரித்தபடி கூறுகிறான். 

அவன் ஒரு இசைப் பத்திரிகையில் பணியாற்றுகிறான்.  அப்போது வெளிவந்த இதழை அவளிடம் காண்பிக்கிறான்.  அதில் அவளுடைய கனவு நாயகன் சமீபத்தில் வெளியிட்ட ஆல்பம் பற்றிய குறிப்பு வந்திருக்கிறது.  இவரை உங்களுக்குப் பிடிக்குமா என்று கேட்கிறான்.  ஓ, இவர் என் உயிர் என்கிறாள்.

”ஓ, உங்களைப் போன்ற இளைஞர்கள் இவரைப் போன்ற வயதானவர்களைக் கேட்பது ஆச்சரியம்.  ஆனாலும் இவர் ஒரு பெரிய ஸ்டார் என்பதில் சந்தேகம் இல்லை.” 

(எழுத்தாளனின் வயது 44)

“உங்களுக்கு இவரைத் தெரியுமா?” 

”இவர் என் நெருங்கிய நண்பர், அடிக்கடி சந்திப்போம், கால்ஃப் விளையாடுவோம்.  வித்தியாசமான மனிதர்…”

பிறகு அவன் எழுத்தாளனை அழைத்து அவளை அவனுடைய நிஜமான குரலைக் கேட்கச் செய்கிறான்.  அந்தக் குரலைக் கேட்டதும் அவளுடைய இதயமே வெடித்து விடுவது போல் ஆகி விடுகிறது.  கண்களிலிருந்து கண்ணீர் கொட்டுகிறது.  உடல் நடுங்குகிறது. 

பிறகு என்ன?  வழக்கமாக நடப்பதுதான்.  இதை கதையில் உள்ளபடியே தருகிறேன். ”So I go with him to his room and suck his thing, which is even paler than his face, and let him stick it inside me and everything.”

பிறகு அவள் டாக்டர் யமாகிஷியின் அறைக்கே சென்று அழைப்பு மணியை அழுத்துகிறாள்.  யமாகிஷி கதவைத் திறந்து வெளியே வந்து தான் எடுத்து வந்த அவளுடைய மோதிரத்தை அவள் கையில் கொடுக்கிறார்.

தொலைந்தே போய் விட்டது என்று நினைத்திருந்த மிக விலை உயர்ந்த, தன் கனவு நாயகனின் ஞாபகம் தாங்கிய அந்த மோதிரத்தைப் பார்த்ததும் அய்க்கு அழுகை வந்து விடுகிறது. 

”சே, என்ன இது, உள்ளே வா” என்று அழைக்கும் யமாகிஷி அவளுக்கு ஒரு கிளாஸ் பியர் கொடுக்கிறார். 

“மோதிரம் இன்னும் கொஞ்சம் சிறிய அளவில் இருக்க வேண்டும், வாங்கிய கடையிலேயே போய் சரி பண்ணிக் கொள்” என்கிறார். 

“நான் இன்று இரவு இங்கே தங்க விரும்புகிறேன்.  நீங்கள் எனக்குப் பணம் எதுவும் தர வேண்டாம்” என்கிறாள் அய்.

“இல்லை பெண்ணே, எனக்கு அதிகாலையில் வேலை இருக்கிறது, நீ கிளம்பு” என்று சொல்லும் யமாகிஷி அவள் நெற்றியிலும் கன்னத்திலும் முத்தமிட்டு அனுப்பி வைக்கிறார்.

மதுபானக் கூடத்தில் அய்க்கு நடக்கும் சம்பவம் எனக்குள் ஒரு நூறு ஞாபகங்களைக் கிளர்த்துகின்றன. உலகம் பூராவுமே இளைய சமுதாயம் இப்படித்தான் இருக்கிறது.  யார் என்றே தெரியாத ஒருவனிடம், அவன் தனக்குப் பிடித்த பாடகன் மற்றும் எழுத்தாளனின் நண்பன் என்ற ஒரே காரணத்தினால் அவனுடைய அறைக்குப் போய் அவனுடைய சாதனத்தை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு, பிறகு யோனியில் விட்டுக் கொண்டு – and everything – செயல்பட முடியும் என்றால், பெரூவில் என் நண்பர் சொன்னது ஞாபகம் வருகிறது.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தனது மகளின் வகுப்புத் தோழி நிறைமாத கர்ப்பிணியாகத் தன் வீட்டுக்கு வந்ததைத் தாங்க முடியாத பதற்றத்துடன் கூறினார் அந்த நண்பர். ஆனால் எனக்கு ஆச்சரியமாக இல்லை.  என் பயணத்தின்போது தென்னமெரிக்கா முழுவதுமே இப்படித்தான் இருக்கிறது என்பதைக் கண்டு கொண்டேன்.

ஏற்கனவே குறிப்பிட்டேன்.  இளைஞர்களின் இந்த வாழ்க்கை முறை பற்றி ஆட்சேபிக்க எனக்கு எந்த அவசியமும் ஆர்வமும் இல்லை.  ஆனால் மஸாக்கி கோபயாஷியின் திரைப்படங்களில் நாம் கண்ட மதிப்பீடுகளும், யசுநாரி கவாபாத்தாவின் ஒரு நாவலும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கவே முடியவில்லை. 

தோக்கியோ டிகேடன்ஸ் வெளிவந்தது 1988.  கவாபாத்தாவின் நாவல் ஸ்நோ கண்ட்ரி வந்தது 1948.  ஆனால் இந்த நாவலின் ஆரம்பப் பகுதிகள் முப்பதுகளின் ஆரம்பத்திலேயே வெளிவந்து விட்டன.  ஆக, இரண்டு புதினங்களுக்கும் இடைவெளி ஐம்பது ஆண்டுகள்.

ஸ்நோ கண்ட்ரி ஜப்பானிய சமகால நாவல் இலக்கியத்தில் ஒரு கிளாஸிக்காகக் கருதப்படுகிறது.  கவாபாத்தாவுக்கு நோபல் விருது அளிக்கப்பட்ட போது அவரது மூன்று நாவல்கள் நோபல் கமிட்டியால் குறிப்பிடப்பட்டன.  அதில் ஒன்று ஸ்நோ கண்ட்ரி.  மோக முள் மாதிரியான ஒரு காதல் கதைதான்.  ஆனால் ஸ்நோ கண்ட்ரியால் மோக முள்ளின் நிழலைக் கூடத் தொட முடியாது. 

ஸ்நோ கண்ட்ரியின் நாயகன் ஷிமாமுரா நாயகி கொமாகோவிடம் ஒரு உரையாடலின் தொடக்கத்தில் நீ ஒரு நல்ல பெண் என்கிறான்.  உரையாடலில் முடிவில் நீ ஒரு நல்ல பெண்மணி என்கிறான்.  அதாவது, கொமாகோ அவனுடைய காதலியாக ஆக முடியாது, அவளுக்கு ஏற்கனவே ஒரு மண வாழ்வு இருக்கிறது என்பதை ’பெண்மணி’ என்ற வார்த்தையின் மூலம் சூகசமாகக் குறிப்பிட்டு விடுகிறான், எப்பேர்ப்பட்ட இலக்கிய நயம் என்று இலக்கிய விமர்சகர்கள் ஆகாயத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கிறார்கள்.  இப்படிப்பட்ட நயங்கள் மோகமுள்ளில் இருநூறு இடங்களில் உண்டு. 

தோக்கியோ டிகேடன்ஸ் தொகுப்பில் உள்ள தோப்பாஸில் வரும் அய்யின் பழைய வடிவம்தான் ஸ்நோ கண்ட்ரியில் வரும் கெய்ஷாவான கொமாகோ.  ஆனால் இடையில் வரும் ஐம்பது ஆண்டுகளில்தான் எத்தனை பெரிய வித்தியாசம்!  நீங்கள் ந. முத்துசாமியின் நீர்மை சிறுகதையைப் படித்திருந்தால் அவளையும் அடல்ட் நடிகை சன்னி லியோனியையும் ஒப்பிடலாம்.  ஐந்து வயதிலேயே விதவையாகி வாழ்நாள் பூராவும் விதவையாகவே வாழ்கிறாள் நீர்மை நாயகி.  சன்னி லியோனி பற்றி நமக்குத் தெரியும்.  அதேதான் ஸ்நோ கண்ட்ரி நாவலில் வரும் கொமாகோவும் தோக்கியோ டிகேடன்ஸில் வரும் அய்யும்.