ஔரங்ஸேப் ஆங்கில மொழிபெயர்ப்பு பற்றி…

ஹார்ப்பர்காலின்ஸ் உலகின் மிகப் பிரபலமான பதிப்பகம். இந்தியாவிலும் அப்படியே. இருந்தாலும் இந்தியாவில் ஹார்ப்பர்காலின்ஸில் பிரசுரம் ஆனாலும் அமெரிக்காவிலோ யு.கே.யிலோ நம் புத்தகம் பிரசுரம் ஆக வேண்டுமானால் அந்த நாடுகளில் உள்ள ஏதேனும் ஒரு பதிப்பகம்தான் பிரசுரம் செய்ய வேண்டும். அதற்கு நமக்கு ஒரு லிடரரி ஏஜெண்ட் தேவை. மற்றபடி வெளிநாடுகளில் ஔரங்ஸேப் கிண்டில் எடிஷன் கூடக் கிடைக்காது.

இந்த நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் வளன் Conversations with Aurangzeb நாவலை இருபது பிரதிகள் வாங்கி தன் அமெரிக்க நண்பர்களிடம் கொடுக்கப் போவதாகச் சொன்னான். தமிழ்நாட்டில் வசிக்கும் என் நண்பர்கள் ஸ்ரீராம், அருணாசலம், புவனேஸ்வரி, ராமசுப்ரமணியன் போன்ற பல நண்பர்களும் அப்படிச் செய்யப் போவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

நாவல் பற்றிய மதிப்புரைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நாவலை வாங்குவதற்கு:

Conversations with Aurangzeb : A Novel : Nivedita, Charu, Krishnan, Nandini: Amazon.in: Books