பெட்டியோ முதல் விற்பனை

பெட்டியோ நாவலின் இருபத்திரண்டாவது பிரதியும் எழுபதாவது பிரதியும் விற்று விட்டன. ஒவ்வொன்றும் பத்தாயிரம் ரூபாய்.

இப்போது என்.எஃப்.டி.யில் விற்பனைக்கு வைத்திருக்கும் பத்தாயிரம் ரூபாய் பிரதிகளின் எண்கள்:

29 மற்றும் 18.

இதை முன்பதிவு செய்த நண்பர்கள் உடனடியாக வாங்கி விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மற்ற பிரதிகள் தேவையென்றால் எனக்கு உடனடியாக எழுதுங்கள். விற்பனைக்கு வைக்கிறேன். ஒவ்வொரு பிரதியையும் விற்பனைக்கு வைக்கும்போது நான் என்.எஃப்.டி.யில் பணம் செலுத்த வேண்டும்.

இது தவிர முதல் பிரதி (இரண்டு லட்சம் ரூபாய்), இரண்டாவது பிரதி (ஒரு லட்சம் ரூபாய்), இருபத்தைந்தாவது பிரதி (ஒரு லட்சம் ரூபாய்), நூறாவது பிரதி (ஐந்து லட்சம் ரூபாய்) ஆகிய நான்கும் விற்பனையில் உள்ளன. இருபத்தைந்தாவது பிரதியை ஒரு நண்பர் முன்பதிவு செய்திருக்கிறார்.

மற்றபடி பத்தாயிரம் ரூபாய் பிரதிகள் தேவை என்று பல நண்பர்கள் என்னைத் தொடர்பு கொண்டார்கள். அவர்கள் பணம் செலுத்திவிட்டு என்னை உடனடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்.

மீண்டும் விலை விவரத்தைச் சொல்கிறேன்.

முதல் பிரதி : இரண்டு லட்சம் ரூபாய்.

இரண்டாவது பிரதியிலிருந்து பத்தாவது பிரதி வரை: ஒரு லட்சம் ரூபாய்.

11இலிருந்து 24 வரை பத்தாயிரம் ரூபாய்.

25 – ஒரு லட்சம் ரூபாய்.

26இலிருந்து 49 வரை – பத்தாயிரம் ரூபாய்.

50 – ஒரு லட்சம் ரூபாய்.

51இலிருந்து 74 வரை – பத்தாயிரம் ரூபாய்

75 – ஒரு லட்சம் ரூபாய்.

76இலிருந்து 89 வரை பத்தாயிரம் ரூபாய்.

90இலிருந்து 99 வரை ஒரு லட்சம் ரூபாய்.

நூறு – ஐந்து லட்சம் ரூபாய்.

இதை என்.எஃப்.டி.யில் வாங்குவதில் ஏதாவது சிக்கல் இருந்தால் உடனே எனக்கு எழுதுங்கள். அல்லது, வினித்தைத் தொடர்பு கொள்ளுங்கள். வினித் எண்: 84384 81241

வினித்தின் வயது இருபத்தாறோ இருபத்தேழோ. அதனால் அந்த வயதுக்காரர்களைப் போல்தான் இருப்பார். ஒரு நண்பர் இருபத்தைந்தாவது பிரதியை முன்பதிவு செய்தார். ஆனால் பல தினங்கள் ஆகியும் ஒன்றும் நகரவில்லை. ”என்ன வினித், இதன் பொருட்டு பத்தாயிரம் ரூபாய் பிரதிகளை இறக்க முடியவில்லை. நண்பரிடம் கேட்டு சொல்லுங்கள்” என்றேன். வினித் கேட்டார். கேட்டதும் எனக்குத் தெரியாது. கொஞ்ச நேரம் பார்த்து விட்டு நானே வினித்தைத் தொடர்பு கொண்டேன்.

என்ன வினித், கேட்டீர்களா?

ஆ, ஆ, ஆ, ஆ, ஸாரி சாரு. தப்பு என் மேல தான். அவர் அப்பவே வங்கிக் கணக்கு எண்ணைக் கேட்டிருந்தார். நான்தான் அனுப்ப மறந்து விட்டேன்.

இந்த மறதியின் காரணமாக, என் திட்டத்தில் சிறிய மாற்றம் நிகழ்ந்தது. முதல் பிரதியை – அதாவது முதல் விற்பனை – இருபத்தைந்தாவது பிரதி ஒரு லட்சத்துக்கு விற்க வேண்டும் என்பது என் திட்டம். ஆனால் இது சற்று சுணங்கி விட்டதால் பத்தாயிரம் பிரதிகள் இரண்டை விற்று விட்டேன். காரணம் கீழே:

அதற்கும் மேலே பொறுமையாக இருக்கலாம். ஆனால், கையில் ஒரு காசு இல்லை. இன்று ஒரு நண்பர் வீட்டுக்குப் போக வேண்டும். “கையில் நூறு ரூபாயை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், நான் வந்ததும் ஆட்டோவுக்குக் கொடுக்க வேண்டும்” என்று நண்பரிடம் சொன்னேன். நண்பரும் எடுத்து வைத்துக் கொடுத்தார். கூடவே ஒரு இருபதாயிரம் பணமும் கொடுத்தார். (அதில் 3500 ரூபாய்க்கு ஒரு செலவு செய்தேன். கேட்டால் தாங்க மாட்டீர்கள். அடிக்க வருவீர்கள். அதனால் வேண்டாம்.)

இப்போது பத்தாயிரம் ரூபாய் பிரதிகள் சிலவற்றை லிஸ்ட் பண்ணி விட்டோம். லிஸ்ட் பண்ணி சில நிமிடங்களிலேயே இரண்டு பிரதிகளை என் அருமை நண்பர் அருணாசலம் வாங்கி விட்டார். இலக்கம் எண் 22 மற்றும் இலக்கம் எண் 70. மற்ற இலக்கங்கள் உள்ளன. உடனே வாங்கி விடுங்கள். அல்லது, எனக்கு எழுதுங்கள். எடுத்து வைக்கிறேன்.

பெட்டியோ பிரதியை நீங்கள் படித்து விட்டு பத்தாயிரம் ரூபாய்க்கோ அல்லது அதற்கு மேலேயோ விற்க முடியும். நூறு பிரதிகளும் விற்றால்தான் இதன் மதிப்பு உங்களுக்குப் புரியும். விரைந்து செயல்படுங்கள்.

charu.nivedita.india@gmail.com