உல்லாசம் உல்லாசம் பற்றி…

K.K. Saman Kumara
picture by maya

உல்லாசம் உல்லாசம் நாவல் இதுவரை நான் எழுதியவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும். அநேகமாக அதில் உள்ள சம்பவங்களை யாராலும் நம்ப இயலாது. Anarchism & eroticism இரண்டும் கலந்த நாவல். இந்த இரண்டுமே நம் வாழ்வுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். ஆனால் எல்லாமே நாம் ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்களிடம் கண்டதுதான். வான்கோ ஒரு பெண்ணிடம் காதை அறுத்துக் கொடுத்ததைப் படித்திருக்கிறோம். ஆனால் அதை இன்றைய காலகட்டத்தில் ஒரு கலைஞன் செய்தான் என்றால் நம்ப மாட்டோம் இல்லையா? யேசுவின் கதை நமக்குத் தெரியும். ஆனால் இப்போது யேசு வந்தால் நீங்கள் போலி என்று திருப்பி அனுப்பி விடுவோம். போலியாகவே வாழ்ந்து நிஜம் நமக்குப் போலியாகத் தெரிகிறது. பஸோலினியின் Salo என்ற படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அல்லது, ஜார்ஜ் பத்தாயின் மை மதர் என்ற நாவலைப் படித்திருக்கிறீர்களா? அப்படித்தான் இரண்டு வாரம் வாழ்ந்தேன். கேகேயிடம் சொன்னேன், இதையெல்லாம் நாவலாக எழுதப் போகிறேன், வெளியிடுவதற்கு முன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உங்களுக்கு அனுப்புகிறேன், எது எதெல்லாம் நீக்கப்பட வேண்டியதோ அதையெல்லாம் சொல்லி விடுங்கள்.

அதற்கு கேகே சொன்னார், என்ன இது பைத்தியக்காரத்தனம்? நாம் கலைஞர்கள். நமக்குள்ளேயே தணிக்கையா? என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள். வெளிவரட்டும். நாம் எல்லாம் காபாலிகக் கூட்டம் இல்லையா? நிர்வாணமாக அலையும் அகோரிகள் இல்லையா?

நாவலை அச்சு வடிவில் கொண்டு வருவது சாத்தியமே இல்லை. ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் தடை சொல்ல மாட்டார்கள். ஆனால் தமிழ்ச் சமூகம் என்னைக் காலி பண்ணி விடும். ஆனால் என்.எஃப்.டி.யிலும் கொண்டு வர விரும்பவில்லை. ஏற்கனவே என் நண்பர்களுக்கு பெட்டியோவின் மூலம் கடும் செலவு வைத்து விட்டேன். அதனால் என்.எஃப்.டி.யில் விற்க மாட்டேன். ஒரு வருடம் கழித்து என்.எஃப்.டி.யில் கொண்டு வரலாமே என்றார் சீனி. அத்தனைக் காலம் என்னால் காத்திருக்க முடியாது. ஏனென்றால், ஒரு வருடத்தில் ரொப்பங்கி இரவுகள் வரும். ரொப்பங்கி இரவுகளுக்காக நான் கடுமையாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். ஜப்பானிலேயே இருபத்தைந்து ஆண்டுக் காலம் வாழ்ந்த ஒருவனாக மாறி அந்த நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். உல்லாசம் உல்லாசம் அப்படி இல்லை. அதில் சமூகம் இல்லை. பத்துப் பதினைந்து பேர் கொண்ட ஒரு குழுவின் அனார்க்கிஸ வாழ்வே உல்லாசம் உல்லாசம். அந்தப் பத்துப் பதினைந்து பேரில் பாதிப் பேர் பெண்கள் என்பதுதான் அந்நாவலின் சிறப்பு. பொதுவாக அனார்க்கிஸ நாவலில் எல்லோரும் ஆண்களாக இருப்பார்கள். உல்லாசம் உல்லாசம் நாவலில் அப்படி இல்லை. பெண்கள் அதிகம்.

ரொப்பங்கி இரவுகளைப் போல் ஒரு நாவலை இருபத்தைந்து ஆண்டுகள் ஜப்பானில் வாழும் ஒரு தமிழரால் எழுதி விட முடியும். ஆனால் உல்லாசம் உல்லாசம் நாவலை என்னால் மட்டுமே எழுத முடியும். அந்த நாவலின் முக்கியக் கதாபாத்திரமான கேகேவினால் கூட எழுத முடியாது. ஏனென்றால், அவர் எல்லா லௌகீகச் செயல்பாடுகளையும் காவிய ரீதியாகவும் தத்துவார்த்தமாகவும் மாற்றுபவர். உதாரணமாக, பசிக்கிறது என்றால், அன்னமய கோசம் என்று ஆரம்பித்து அரை மணி நேரம் இந்தியத் தத்துவத்தில் பசி எந்த இடத்தை வகிக்கிறது என்று பேருரை ஆற்றுவார். அனார்க்கிஸ்டாக வாழ்கிறார். ஆனால் அவர் எழுத்து எழுத்தாளர்களின் எழுத்து. ஆதலால், உல்லாசம் உல்லாசம் நாவலை நான் மட்டுமே எழுத முடியும். அது மட்டும் அல்லாமல் அந்த அனார்க்கிஸ வாழ்வில் ஊடுபாவு செய்வதும் கூட யாருக்கும் சாத்தியம் இல்லை. உதாரணமாக, நீங்கள் சாப்பிடும்போது தவளையும் மரவட்டையும் டஜன் கணக்கான கரப்பான் பூச்சிகளும் தரையில் விளையாடிக் கொண்டிருந்தால் உங்களால் சாப்பிட முடியுமா? நான் சாப்பிட்டேன்.

நான் ஏற்கனவே நூறு முறை எழுதியிருக்கிறேன். வூடி ஆலன் படத்தில் வரும் ஸெலிக் மாதிரியானவன் நான். நீங்கள் அக்ரஹாரம் என்றால் நானும் அக்ரஹாரமாக இருப்பேன். நீங்கள் விளிம்பு நிலை என்றால் நானும் விளிம்பில் அமர்ந்திருப்பேன். நீங்கள் மஹா பெரியவரை வணங்கினால் நானும் வணங்குவேன். நீங்கள் கஞ்சா குடித்தால் நானும் குடிப்பேன். நான் கண்ணாடி. அந்த மனோபாவத்தினால்தான் கேகேயின் அனார்க்கிஸ்ட் வாழ்வில் என்னால் பொருத்திக் கொள்ள முடிந்தது.

சரி, உல்லாசம் உல்லாசம் நாவலை அச்சிலும் கொண்டு வர இயலாது. என்.எஃப்.டி.யிலும் கொண்டு வந்து உங்களுக்கு செலவு வைக்க விருப்பம் இல்லை. கிண்டிலில் விற்கலாமா அல்லது பிடிஎஃப்பில் விற்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ராம்ஜியிடமும் சீனியிடமும் இது பற்றிக் கலந்து ஆலோசிக்க வேண்டும். எப்படியும் நாவல் ஒரு மாதத்தில் வந்து விடும். முழுக்க முழுக்க நான் பார்த்த, அனுபவித்த, சுயசரிதை என்று சொல்லத்தக்க நாவல். எதுவுமே கற்பனை அல்ல. கதை அல்ல. பாத்திரங்களின் பெயர்களை மட்டும் மாற்றியிருக்கிறேன். சிங்களத்தில் வந்தால் அதகளமாக இருக்கும். ஏனென்றால், அதில் வரும் முக்கியப் பாத்திரங்கள் யாவரும் சிங்களத்தில் மிகவும் பிரபலம் ஆனவர்கள்.

நம்ப முடியாத கதை என்றேன். நம்புவதற்கு ஒளிப்பதிவு ஆதாரம் உள்ளது. அதன் சில பகுதிகள் என்னைப் பற்றிய கேகேயின் ஆவணப்படத்தில் இருக்கும்.

கேகே வெறும் அனார்க்கிஸ்ட் மட்டும் அல்ல. ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்தார். அவரே கேமராமேன். அவரே லைட் பாய். அவரே இயக்குனர். எல்லாம் அவரே. எங்கள் செயல்பாடுகளை, எங்கள் நேர்காணல்களை எப்படித் தொகுக்கப் போகிறார் என்று எனக்கு ஒரு குறிப்பு அனுப்பியிருந்தார். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

Lit bit & chats

The master plan of podcast-
Season 1 with Charu Nivedita

1- Gihan with Charu about pain
2- Anusara with Charu about Bataille
3- Kavya Thatsara with Charu about transgressive literature
4- Discussion with Sujith Akkarawatta, K.K, Charu interpreted by Thumbelina
5- Inoka with Charu
6- Comparative reading Nano & Monara Biththara, Artaud monaloge & about The Theatre of Cruelty by Antonin Artaud and Ullasa Vishada by NadeekaBandara, with Charu- interpreted by Thumbelina
7- Mohan with Charu
8- Gihan with Charu about childhood, etc
9- Thumbelina with Inoka about translation – English
10- Thumbelina with Charu about Mahabharatha
11- Thumbelina with Inoka about translation – Sinhala
12- Anusara with Charu about literary hegemony
13- Closing the season – Charu Nivedita’s journey in Sri Lanka with readings soial media narrow casting plan with campining –

-one pod cast per ten days

  • one teasor, two youtube shorts/ fb stories/ 1 tiktok for a pod cast

-six trailers before chanel launch
-one magazine per two weeks

-After the season live streaming podcast forum in zoom in four months
Two documentaries

1- ‘The man who see life as a text’
About charu Nivedita and transgressive literature
2- ‘Theatre of Double in South Asia’
based on Charu & Nadeeka’s work