பத்தாயிரம் ரூபாய், ஐயாயிரம் ரூபாய் அனுப்பிய இரண்டு நண்பர்களும் தங்கள் பெயரைத் தெரிவிக்கவில்லை. நேரில் திருவண்ணாமலைக்கு வர முடியாவிட்டால், பயிலரங்கு முடிந்ததும் என் பேச்சு அடங்கிய காணொலியை அனுப்பி வைக்க முடியும். அதற்கு உங்களின் மின்னஞ்சல் முகவரி தேவை.
அமெரிக்காவில் வசிக்கும் சில நண்பர்கள் ”இரவு கண் விழித்து உங்கள் பேச்சைக் கேட்பது சாத்தியம் இல்லை, இருந்தாலும் இதை பயிலரங்குக்காக வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி நூறு நூறு டாலர் அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கும் நான் பயிலரங்கு முடிந்து அதன் காணொலிகளை அனுப்பலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.
அமெரிக்காவில் வசிக்கும் ஒரு நண்பர் “இங்கே வசிக்கும் இந்தியர்கள் பத்து டாலருக்கே கணக்குப் பார்ப்பார்கள். தொண்ணூறு டாலர் என்றால் ஓடியே போய் விடுவார்கள். எனவே, ஐம்பது டாலர் வைத்தால் போதும்” என்றார். அவர் சொன்னதுபோல் வெளிநாட்டு நண்பர்களுக்குக் கட்டணம் அல்லது நன்கொடை: 50 டாலர்.