மகிழ்ச்சிக்கான திறப்பு உங்கள் பாக்கெட்டிலேயே இருக்கிறது!

இப்போது நான் எழுதப் போகும் இந்தக் கட்டுரை பணத்துக்கும் மனிதனுக்கும், பெண்ணுக்கும் மனிதனுக்குமான உறவு பற்றிய என் மேனிஃபெஸ்டோ என்று சொல்ல்லாம்.  பணம் பற்றி இதுபோல் நான் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியிருந்த போதும், இந்தக் கட்டுரை அவற்றின் சாரம் என்று கொள்ளவும்.  

”காலை ஒன்பதரை மணியிலிருந்து மாலை ஆறரை வரை பயிலரங்கில் கலந்து கொண்ட இருநூறு பேரில் இரண்டே இரண்டு பேர் தவிர வேறு ஒருவர் கூட இடையில் எழுந்து போகவில்லை.  நம்ப முடியாத அதிசயம்.”

சென்ற குறிப்பில் மேற்படி வாக்கியத்தை எழுதியிருந்தேன்.  அந்த இரண்டு பேர் யார்?  ஒருவர் என் நீண்ட கால நண்பரின் மகன்.  வயது இருபத்தாறு.  பொறியியல் படித்தவன்.  நிறுவனங்களில் சேர்ந்து மாத வருமானத்துக்குப் போகாமல் சுயதொழில் செய்கிறான்.   இப்போதுதான் தொடங்கியிருப்பதால் பெரிதாக வருமானம் இல்லை.  வரவுக்கும் செலவுக்குமே சரியாகப் போய் விடுகிறது.  ஆனால் எதிர்காலத்தில் பெரும் பணம் கிடைக்கும் வாய்ப்புக்குரிய தொழில்.  போக்குவரத்துக்கு சொந்தமாகக் கார் வைத்திருக்கிறான். 

திருவண்ணாமலைக்கு வரலாமா அங்கிள் என்றான்.  தாராளமாக வா என்றேன்.  என் நண்பனையும் அழைத்து வரவா என்றான்.  தாராளமாக என்றேன். 

ஏற்கனவே அவனிடம் பணத்தை ஒருவர் எப்படிக் கையாள வேண்டும் என்று ஒரு நீண்ட லெக்சர் அடித்திருக்கிறேன்.  அதாவது, யாருக்கும் கடன் படாதே, அப்படியிருந்தால் உன் வாழ்வு அமோகமாக இருக்கும் என்பது அந்த அரை மணி நேர லெக்சரின் சாரம்.  இதை அவனுக்குச் சொன்னதற்கு ஒரு பின்னணி இருக்கிறது.

மற்றவர்களுக்குக் கடன் பட்டு, அது பற்றி எள்ளளவும் கவலைப்படாத கபோதிகளின் வாழ்க்கை புழுவாய்ப் புழுத்து நாறுவதை நான் அன்றாடம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  எனக்கு மிகவும் தெரிந்த ஒரு தம்பதியின் மகன், அவனுக்காகத் தம் குருதியையும் சதையையும் பிய்த்துப் படிக்க வைத்த பெற்றோருக்கு சூத்தைக் காண்பித்து விட்டு பத்து லட்சம் ரூபாய் சம்பளத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான்.  அவன் பெற்றோர் இன்னமும் தெருத்தெருவாகப் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இதில் இன்னொரு நகைமுரண் என்னவென்றால், அந்தப் பத்து லட்ச ஊதியக்காரன் இப்பவும் அவன் பெற்றோரிடம் கடன் கேட்டுக்கொண்டிருக்கிறான்.  அப்படி வாங்கின கடனையும் திருப்பித் தருவதில்லை.  இப்படிப்பட்ட ரத்தம் உறிஞ்சும் அட்டையான அவனுடைய குடும்ப வாழ்க்கையோ புழுத்து நாறிக்கொண்டிருக்கிறது.  பிச்சைக்காரர்களிடமே திருடும் புதல்வர்களின் வாழ்க்கை பிறகு எப்படி இருக்கும்?

இந்தக் கதையையும் என் நண்பரின் மகனுக்கு விலாவாரியாக எடுத்துரைத்தேன்.  ஆனால் அப்போதே எனக்குத் தெரிந்து விட்டது.  நான் சொன்னது எதுவுமே அவனுக்குப் புரியவில்லை.  புரிந்தாலும் ஒப்புக்கொள்ளும் நிலையில் அவன் இல்லை.  அவன்  தலைமுறையும் இல்லை. 

காரணம், இந்தியப் பெற்றோர் பெரும்பாலும் அடுத்தவர் ரத்தத்தை உறிஞ்சுவதுதான் உன் தர்மம் என்று சொல்லியே தம் குழந்தைகளை வளர்க்கிறார்கள்.  அதற்கு எடுத்துக்காட்டாக, பிள்ளைகளுக்குத் தங்கள் ரத்தத்தையும் சதையையும் தின்னக் கொடுக்கிறார்கள்.  அப்படித் தன் பெற்றோரின் ரத்த்த்தையும் சதையையும் தின்று வளரும் இப்பிள்ளைகள் பின்னாளில் தங்கள் பெற்றோரின் ரத்தத்தை உறிஞ்சுவதைப் போலவே, ஊராரின் ரத்தத்தை உறிஞ்சுவதும் மானுட தர்மம் என்று நினைத்துக்கொள்கிறார்கள். 

இதைத்தான் நான் அந்த இளைஞனிடம் விலாவாரியாகச் சொன்னேன்.  உன் மகிழ்ச்சியின் சாவி உன் சட்டைப் பாக்கெட்டில் இருக்கிறது தம்பி. 

என்ன அது என்றான். 

அடுத்தவருக்குக் கடன் படாதே.  குறிப்பாகப் பெற்றோருக்குக் கடன் படாதே.

மனதில் அவன் “போய்யா சுன்னி” என்று நினைத்திருப்பான் என நினைக்கிறேன்.  அவனுடைய இப்போதைய திருவண்ணாமலைப் பயிலரங்கு நடவடிக்கை அப்படித்தான் இருக்கிறது.   

”அடுத்தவருக்குக் கடன்படாதே; அதிலும் பெற்றோருக்குக் கடன்படாதே!” என்ற ஞானத்தை நான் என்னுடைய எழுபது ஆண்டு வாழ்வில் கண்டடைந்தேன்.  அதைத்தான் அவனுக்கு நான் இலவசமாக வழங்கினேன்.  இந்த ஞானத்தை அளித்ததற்காகவே அவன் எனக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் தர வேண்டும்.  குறைந்த பட்சம்.  ஏனென்றால், ஒரு மகத்தான வாழ்வுக்கான பெரும் திறப்பு நான் வழங்கியது.

ஆனால் நான் சொன்ன போது அதைக் கேட்டுக் கொண்டிருந்த அவன் தோழி நான் சொன்னதைக் கேட்டு பெரும் சினம் அடைந்து விட்டாள் என்பதை அவளுடைய முகக் குறிப்பிலிருந்து உணர்ந்து கொண்டேன்.  ஆனாலும் நான் நிறுத்தவில்லை.  பெரும்பாலான இளைஞர்கள் தம் மகிழ்ச்சிக்கான திறப்பைத் தம் பாக்கெட்டிலேயே வைத்துக்கொண்டு புழுவாய் நாறிக்கொண்டிருப்பதைப் பார்த்த துக்கத்திலேயே ’என் நண்பரின் மகனாவது நன்றாக இருக்க வேண்டுமே’ என்ற அக்கறையில் அதைச் சொன்னேன்.

சொந்தமாக்க் கார் வைத்திருக்கிறான்.  சென்னையிலிருந்து திருவண்ணாமலை வருவதற்கு பெட்ரோல் போட வேண்டும்.  பெட்ரோல் பங்க்கில் போய், “சொந்தமாகத் தொழில் செய்கிறேன், இன்னும் போதுமான வருமானம் வரவில்லை, அதனால் இலவசமாகப் போடுங்கள்” என்று சொல்வானா? 

”பெட்ரோல் பங்க்காரரும் நீங்களும் ஒன்றா அங்கிள், நீங்கள் என் தந்தையின் இருபது ஆண்டுக் கால நண்பர் அல்லவா?” என்று அவன் என்னைக் கேட்கலாம்.  சரி.  உன் தந்தையின் நண்பர் ஒரு மருந்துக் கடை வைத்திருக்கிறார்.  அவரிடம் போய் நீ “தொழிலில் இன்னும் லாபம் வரவில்லை.  நீங்கள் என் தந்தையின் நண்பர்தானே?  அதனால் இலவசமாகக் காண்டம் கொடுங்கள்” என்று கேட்பாயா?

அல்லது, தாய்லாந்து விபச்சாரியிடம் போய் மேட்டர் பண்ணி விட்டு, ”தொழிலில் லாபம் இல்லை, ஃப்ரீ பஜனை என்று எடுத்துக் கொள்” என்று சொல்வாயா?

என்னடா நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?  எல்லா இடத்திலும் அதற்குரிய பணத்தைக் கொடுப்பீர்கள்?  அம்மா, அப்பா என்றாலும், அம்மா அப்பாவின் நண்பர் என்றாலும் இலவசமாக ரத்தம் உறிஞ்சுவீர்களா?  அல்லது, எழுத்தாளன் என்றால் மட்டும் ஓசி ஓல் ஞாபகம் வந்து விடுமா?

மேலை நாடுகளில் பதினெட்டு வயதிலேயே சொந்தமாகப் பணம் சம்பாதித்துக்கொண்டு, தங்கள் சொந்தக் காலில் நின்று படிக்கிறார்கள் இளைஞர்கள்.  ஒப்புக்கொள்கிறேன், இந்தியாவில் அந்த வசதி இல்லை.  அதற்காக இருபத்தைந்து வயது, முப்பது வயது வரையிலும் பெற்றோரின் ரத்தத்தையும், பெற்றோரின் நண்பரின் ரத்தத்தையும் உறிஞ்சுவீர்களா, தூமைகளா?

இதையெல்லாம் படித்து என் நண்பருக்குக் கோபம் வரலாம்.  வரக் கூடாது.  ஏனென்றால், என் குடும்ப உறுப்பினர்களையே இப்படித்தான் நான் நார் நாராகக் கிழித்துத் தொங்கப் போட்டிருக்கிறேன் அன்பு நாவலில்.  எனக்கு சொந்தக்காரன், நண்பன் என்றெல்லாம் எந்தப் பாகுபாடும் கிடையாது.  அன்பு நாவலை அதில் சம்பந்தப்பட்டவர்கள் படித்தால் அதற்குப் பிறகு என் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டார்கள்.  அது பற்றியும் எனக்குக் கவலை இல்லை.  என்னை assfuck பண்ணுபவர் யாராக இருந்தாலும் அது பற்றி எழுதுவேன்.  அது என் ரத்தமாக இருந்தாலும் சரி, என் நண்பரின் ரத்தமாக இருந்தாலும் சரி. 

என்ன கொடுமை என்றால், கலந்து கொண்ட இருநூறு பேருமே கட்டணம் கட்டியிருந்தார்கள்.  எனக்காகத் தம் நேரத்தையும் உழைப்பையும் தரும் என் நெருங்கிய நண்பர்களும் கூட கட்டணம் கட்டினார்கள்.  மாணவர்களுக்குக் கூட சில நண்பர்கள் ஸ்பான்ஸர் செய்தார்கள்.  ஆக, அந்த ஒட்டு மொத்த பங்கேற்பாளர்களில் என் நண்பரின் மகனும் அவனுடைய நண்பனும் மட்டும்தான் கட்டணம் கட்டவில்லை.  அதைவிடக் கொடுமை, பணத்தைப் பற்றி நண்பரின் மகன் ஒரு வார்த்தை கூடப் பிரஸ்தாபிக்கவில்லை.

இத்தனைக்கும் அந்த இருவரும் இரவு தங்குவதற்கு அறை, காலை உணவு, இடையில் தேநீர், மதியம் வடை பாயசத்துடன் கல்யாண விருந்து என்று தடபுடல் உபசாரம்.  எல்லாவற்றையும் ஓசியிலேயே அனுபவித்து விட்டு, மூன்று மணி அளவில் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டார்கள் இரண்டு பேரும்.  வந்திருந்த இருநூறு பேரில் கட்டணம் கட்டாதவர்களும் அந்த இருவர்தான்.  வந்திருந்த இருநூறு பேரில் இடையிலேயே ஓடியவர்களும் அந்த இருவர்தான்.   

இதைப் படித்து விட்டு என் நண்பரோ நண்பரின் மகனோ எனக்கு இரண்டாயிரம் ரூபாயை அனுப்பினால் அதை நான் திருப்பி அனுப்பி விடுவேன்.  அப்படிக் கொடுப்பதாக இருந்தால் ஒரு லட்சம் ரூபாய் அனுப்பினால்தான் ஏற்றுக் கொள்வேன்.  அதுவும் என் நண்பர் அனுப்பக் கூடாது.  நண்பரின் மகன்தான் அனுப்ப வேண்டும்.  எத்தனைக் காலத்துக்கு அப்பன் முதுகிலேயே சவாரி செய்வான் பிள்ளை?  இப்போது அப்பன் முதுகை விட்டு விட்டு அப்பனின் நண்பன் முதுகிலும் சவாரி செய்யத் துணிகிறானே? 

இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா?  இங்கே நான் நண்பரின் மகனை விமர்சிக்கவில்லை.  பணத்துக்காகப் புலம்பவில்லை.  பணம் இங்கே பிரச்சினையே இல்லை.  அந்த இளைஞனின் மனோபாவம் பற்றியே பேசுகிறேன்.  சந்து கிடைக்கும் இடத்திலெல்லாம் ஓசி ஓல் போடலாம் என்ற மனோபாவம்.  சரி, அதைக் கூட விமர்சிக்கவில்லை.  மாற்றிக் கொள் என்கிறேன்.  அதையும் ஏன் சொல்கிறேன் என்றால், அவனுடைய வாழ்வின் நலனுக்காக.  உன் மகிழ்ச்சிக்கான திறப்பு உன் பாக்கெட்டில் இருக்கிறது, தம்பி.  அடுத்தவனைச் சுரண்டாதே.  அடுத்தவனின் உழைப்பில் குளிர் காயாதே.  அதிலும் நான் ஞானி.  எப்படியென்றால், நான் சமூகத்துக்காகவே வாழ்கிறேன்.  என் மொழிக்காகவும் என் கலாச்சாரத்துக்காகவும் மட்டுமே வாழ்கிறேன்.  மரணம் எனக்கு ஒரு பொருட்டு அல்ல.  என் சக உயிர்களுக்காக என் மனம் வாடுகிறது.  அதனாலேதான் நான் ஞானி.

பயிலரங்கை முடித்து விட்டு, அன்றைய இரவு நண்பர்களோடு அதிகாலை வரை பேசிக்கொண்டிருந்து விட்டு மறுநாள் நானும் சீனியும் ராஜா வெங்கடேஷும் ஓசூர் போகும் வழியில் உள்ள அய்யூர் என்ற வனத்துக்குச் சென்றோம்.  மூன்று நாள் அங்கே நான் ஓய்வெடுத்தேன்.  அய்யூர் பெரும் வனம்.  அங்கே ஒரு குறைந்த வசதியுள்ள ஒரு வன விடுதி.  சப் ஜெயிலில் கூட கொஞ்சம் நல்ல உணவு கிடைக்கும்.  அதை விட மட்டமான உணவு.  ஆனாலும் வனத்துக்காக என்ன வேண்டுமானாலும் தாங்கலாம்.  பக்கத்துக்கு ஊருக்குப் போய் அற்புதமான கோழிக்கறி வறுவல் வாங்கி வந்தார் சீனி. 

அந்த வன விடுதியில் ஒரு பெண் நாய்.  அது ஏழு குட்டிகளை ஈன்றெடுத்திருந்தது.  அந்தக் குட்டிகள் நாள் முச்சூடும் தன் தாயின் குருதியைப் பாலாக உறிஞ்சிக்கொண்டிருந்தன.  அந்தத் தாய் நாய் உணவுக்கு எங்கே போகும்?  என் பங்கையெல்லாம் அந்தத் தாய் நாய்க்குத்தான் போட்டேன்.  அந்தத் தாய் நாயை நினைத்து என் மனம் கசிந்தது.  இப்போதும் கசிகிறது.  மற்ற நாள்களில் அது உணவுக்கு எங்கே போகும்?  பசியில் அது வேர்க்கடலையையெல்லாம் தின்றது.  ஆனால் கோழிக்கறியைத் தின்ற பிறகு வேர்க்கடலையை ஒதுக்கி விட்டது. 

எவனொருவன் பிறர் வலியைத் தன் வலியாக உணர்கிறானோ அவனே வைணவன் என்றார் உடையவர்.  அந்தணர் என்போர் அறவோர்.  இதன் பொருள், எவனொருவன் அறம் சார்ந்து வாழ்கிறானோ அவனே ஞானி.  அதனானேதான் நான் ஞானி என தைரியமாகச் சொல்லிக் கொள்கிறேன்.  ஞானியிடம் திருடினால் வாழ்க்கை எப்படி இருக்கும்?  அதனால்தான் ஞானியிடம் திருடாதே என்கிறேன்.  நான் வெங்கடாசலபதி சாமி மாதிரி.  எனக்குப் பணம் கொடுத்தால் உன் செல்வம் பெருகும்.  எனக்கு நீ ஒன்றும் தானம் கொடுக்க வேண்டாம்.  என் ஞானத்துக்கான தட்சிணையைக் கொடு என்று மட்டுமே கேட்கிறேன்.  சுருக்கமாகச் சொல்கிறேன் தம்பி, உன் வாழ்க்கையில் வளம் பெருக வேண்டுமானால் ஞானியிடம் திருடாதே.  ஞானியின் குருதியை உறிஞ்சாதே.

நான் ஞானி என்று சொல்லிக் கொள்வது பற்றி சிலருக்கு முகம் சுளிக்கும்.  இன்னும் ஒரு உதாரணம் தருகிறேன்.

எத்தனையோ பேர் என் மனைவிக்கு உடம்பு சரியில்லை, மகனுக்கு உடம்பு சரியில்லை, மாமியாருக்கு உடம்பு சரியில்லை என்று திருவண்ணாமலை வரவில்லை.  அவர்களெல்லாம் கட்டணம் கட்டியவர்கள்.  அவர்கள் சூழலைப் புரிந்து கொள்கிறேன்.  அவர்கள் வாழ்வைத் துறந்தவர்கள் இல்லை.  குடும்பஸ்தர்கள்.  ஆனால் நானோ குடும்பத்தைத் துறந்தவன்.  உறவு பந்தம் பாசம் ஆகியவற்றைத் துறந்தவன்.  நான் திருவண்ணாமலைக்குக் கிளம்பும்போது அவந்திகா சுயநினைவற்று உடம்பு சரியில்லாமல் கிடந்தாள்.  கசாயத்தைப் போட்டு வைத்து விட்டு நான் கிளம்பி விட்டேன்.  நான் நல்ல கணவன் இல்லை.  ஆனால் ஞானி.  நான் சமூகத்துக்காக மட்டுமேதான் வாழ்கிறேன். 

நான் கட்டணம் பற்றிக் குறிப்பிட்டிருப்பது பற்றி மற்றவர்கள் யாரும் மனம் புண்பட்டு விடாதீர்கள்.  மிகக் குறைவான வருமானம் உள்ளவர்கள் கூட ஆயிரம் ரூபாய் கட்டி விட்டுத்தான் வந்தார்கள்.  ஒரு நண்பர் 2000 ரூ. கட்டி விட்டு நான்கு நண்பர்களோடு வந்தார்.  பரவாயில்லை, நல்ல காரியம் என்கிறேன்.  பணமே கட்ட முடியாதவர்களுக்கும் மாணவர்களுக்கும் மற்ற நண்பர்கள் பணம் கட்டினார்கள்.  ஆக, ஒருவர் கூட பணம் கட்டாமல் வரவில்லை. 

ஆனால் என் நண்பரின் மகன் தன் நண்பனோடு வந்தவன் பணம் பற்றிப் பேசவே இல்லை என்பதுதான் இந்தக் குறிப்புகளை எழுதுவதன் காரணம்.  கவனியுங்கள்.  பணம் முக்கியம் அல்ல.  பணம் குறித்த மனோபாவம் முக்கியம்.  நான் ஏற்கனவே நூறு முறை எழுதி விட்டேன்.  ஒரு மனிதனை நான் எப்படி மதிப்பிடுவேன் என்றால், அவன் பணத்தை எப்படிக் கையாள்கிறான் என்பதை வைத்துத்தான். 

ஒரு மதுபானக் கச்சேரி நடக்கும்.  அதில் ஒருத்தன் மட்டும் தான் எடுத்துக் கொள்ளும் சரக்கு பற்றிக் கண்டு கொள்ளாமலேயே இருப்பான்.  ஏதோ அந்த விஷயம் ஞாபகத்திலேயே இல்லாதது போல.  அப்படியென்றால் மற்றவரெல்லாம் கேணையர்களா?

இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.  தேகம் வெளியீட்டு விழா.  அந்த விழாவில் என் பங்கும் இருக்க வேண்டும் என்று தானாக சொல்லிக்கொண்டு வந்தார் ஒரு இளைஞர்.  அவரை நாங்கள் கேட்கவில்லை.  அவராக ஆஜரானார்.  எவ்வளவு தர முடியும் என்றார் சீனி.  பத்தாயிரம் தருகிறேன் என்றார் இளைஞர்.

விழாவும் வந்தது.  பணம் வரவில்லை.  விழாவின் போது வந்த இளைஞர் சீனியிடம் வந்து தேங்காய் சீனிவாசனின் உடல் மொழியுடன் நெளிந்து கோணி, “தல, நீங்க இன்னும் உங்க அக்கவுண்ட் நம்பர் கொடுக்கல” என்று சொல்லிவிட்டுப் போனார்.

அக்கவுண்ட் நம்பரை அந்தக் கணமே அனுப்பி வைத்தார் சீனி. 

பணம் வரவில்லை.  சீனி மெஸேஜ் அனுப்பினார். 

பணம் வரவில்லை.  சீனி வாரம் ஒருமுறை என்று மெஸேஜ் அனுப்பிக்கொண்டே இருந்தார்.  மூன்று மாதம் கழித்து 1500 வந்தது.  சீனியும் விடாமல் மெஸேஜ் அனுப்பிக்கொண்டே இருந்தார்.  கடைசியில் 1500, 1000, 2000 என்று பிட்டு பிட்டாக பத்தாயிரமும் வருவதற்கு மூன்று ஆண்டுகள் ஆயின.  எல்லாம் சீனியின் விடாமுயற்சிதான் காரணம்.  மூன்று ஆண்டுகள் மெஸேஜ் அனுப்பினார் சீனி.

அந்த இளைஞரை விட மிகக் கேவலமான ஒரு கிரிமினலை பயிலரங்கம் முடிந்த அன்றைய இரவுக் கச்சேரியில் சந்திக்க நேரந்த்து. 

பயிலரங்கம் முடிந்து கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பலருக்கும் கையெழுத்துப் போட்டு, புகைப்படம் எடுத்துக்கொண்டதில் எட்டு மணி ஆகி விட்டது.  அதற்கு மேல் எங்கே தூங்குவது? 

அறையில் நண்பர்கள் கூடினோம்.  இருபது பேர் இருப்போம்.  அதில் இரண்டு பேர் பெண்கள்.  உரையாடல் மிக நன்றாகப் போய்க்கொண்டிருந்தது.  அதில் ஒருவர் கத்தரிலிருந்து வந்திருந்தார்.  முப்பத்தைந்து வயது இருக்கலாம்.  நான் உங்களுக்காக ஹென்னஸி கோனியாக் கொண்டு வந்திருக்கிறேன் என்று சொல்லி சீனியிடம் கொடுத்தார்.  அப்போதே அவரை நான் வெளியே அனுப்பியிருக்க வேண்டும்.  சீனி என் மாணவர்.  அவருக்கு ஹென்னஸி என்றால் எனக்கு என்ன மயிரா?  சீனிக்குக் கொடுக்கி வேண்டுமானால் அவரைத் தனியே சந்தித்துக் கொடு.  நடந்தது என் நிகழ்ச்சி.  அதற்காக நான் ஒரு மாத காலம் இரவு பகலாக உழைத்திருக்கிறேன். அதில் எங்கிருந்து வந்ததடா சீனிக்கு ஹென்னஸி? ஆனால் இதையெல்லாம் இப்போதுதான் எழுதுகிறேனோ ஒழிய அப்போது ஒன்றும் தோன்றவில்லை.

சொன்ன கத்தர் நபர் ஹென்னஸி போத்தலைத் திறந்து சீனிக்கும் தனக்குமாக ரவுண்டைப் போட்டார். 

(இதுவே மேஜை நாகரீகம் இல்லை.  ஒருவருக்குப் பரிசாக அளித்ததை எடுத்துப் பங்கு போடக் கூடாது.  சரி, இதற்கு மேல் ஏகப்பட்ட கிரிமினல் திருப்பங்கள் உள்ளன.  தொடர்ந்து படியுங்கள்…)

இடையில் என் தோழி ஒருத்தி – மாணவி – தன்னுடைய மேற்படிப்புக்காக என்னை ஆலோசனை கேட்ட போது என்னுடைய நண்பர் ஒருவரிடம் கேட்கச் சொல்லியிருந்தேன்.  நண்பர் மூத்த விஞ்ஞானி.  அதனால் – என் அறையில் கூட்டமாக இருந்ததால் – என் தோழி அறைக்கு வெளியே போய் என் நண்பரிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டிருந்தார். 

அப்போது சம்பந்தமே இல்லாமல் வெளியே போன கத்தர் ஆசாமி என் தோழியிடம் போய் அனாவசியமாகப் பேசிப் பேசித் தொந்தரவு செய்திருக்கிறார்.  இதெல்லாம் எனக்கு மறுநாள்தான் தெரிந்தது.  தெரிந்த கதைகள் ஏராளம்.  சொல்கிறேன்.

எங்கள் சபையில் இன்னொரு பெண் இருந்தார் என்று சொன்னேன் அல்லவா?  அந்தப் பெண் பெரும் தைரியசாலி.  இரவு ஒரு மணிக்கு அவருக்கு அவர் ஊருக்கு பஸ் ஏற வேண்டும்.  அவர் பாட்டுக்குக் கிளம்பிப் போய் விட்டார்.  அவரிடம் போய் இந்தக் கத்தர் ஆசாமி தொலைபேசி எண்ணைக் கேட்டிருக்கிறார்.  முன்பின் தெரியாத, பெயர் கூடப் பரிச்சயம் இல்லாத ஒரு பெண்ணிடம் தொலைபேசி எண்ணைக் கேட்பது என்ன ஒரு கயவாளித்தனம்?  அந்தப் பெண் பார்ப்பதற்கு பயந்தாங்குளி போல் இருந்தாலும் நடத்தையில் புரட்சிக்காரி.  கத்தர் ஆசாமி நம்பர் கேட்டதும் தயங்காமல் கொடுத்து விட்டார்.  (வாடா மவனே, உனக்குக் கெட்ட காலம்தான் என்று அவர் நினைத்திருக்கலாம்!)

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கத்தர் ஆசாமியிடமிருந்து அந்தப் பெண்ணுக்கு ஒரு மெஸேஜ்.  பஸ் கிடைத்ததா?  சௌகரியமாக ஏறி விட்டீர்களா?

இந்த ஆளை மட்டும் நான் அடுத்த முறை பார்த்தால் செருப்பால் அடிக்கலாம் என்று இருக்கிறேன்.

ராஸ லீலாவில் இதே போல் ஒரு சம்பவம் உள்ளது.  உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

பெருமாளும் அவன் தோழியும் டென் டௌனிங் பப்புக்குப் போவார்கள்.  அப்போது அங்கே இருக்கும் பெருமாளின் நண்பன் ஒருவன் பெருமாளுக்குத் தெரியாமல் அவன் தோழியின் தொலைபேசி எண்ணைக் கேட்கிறான்.  அவளோ ஒரு பயந்தாங்குளி.  கொடுக்கவில்லை.  திரும்பி வரும்போது பெருமாளிடம் சொல்கிறாள்.  வீட்டுக்கு வந்த பெருமாள் நண்பனை அழைத்து, வேசி மகனே என விளித்து, “டேய் எனக்கும் க்ரூப் செக்ஸ் பிடிக்கும்டா.  ஒன்று செய், உன் மனைவியையும் மகளையும் அழைத்துக்கொண்டு வா, நானும் தோழியோடு வருகிறேன்.  க்ரூப் செக்ஸ் பண்ணுவோம்” என்கிறான்.  இதையே திருப்பித் திருப்பி இருபது நிமிடத்துக்கு நண்பனிடம் சொல்கிறான்.

ஏன் இத்தனைக் காட்டமாகச் சொல்கிறேன் என்றால், இப்போதுதான் பெண்களே பயந்து பயந்து வெளியே வருகிறார்கள்.  அப்படி வருபவர்களிடம் இப்படி அத்துமீறல் செய்யும் அயோக்கியர்களை என்ன செய்யலாம்?  அதிலும் என் தோழி ஏழு ஆண்டுகள் வீட்டுச் சிறையில் அடைபட்டிருந்தவள்.  அதைச் செய்தவர் அவளுடைய தந்தை.  நீ அழகாக இருக்கிறாய், வெளியே போனால் ஆண் கயவர்கள் உன்னைக் கொத்திக்கொண்டு போய் விடுவார்கள் என்று சொல்லியே வீட்டுச் சிறையில் அடைத்து வைத்தவர் தந்தை.  அதனாலேயே பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு படிப்பு இல்லை.  இப்போதுதான் கணவனின் தயவில் கல்லூரிப் படிப்பு நடக்கிறது.  வெளியுலகைக் கண்டாலே நடுங்கும் மனம்.  அப்படிப்பட்ட பெண்ணிடம் போய் அத்துமீறியிருக்கிறார் இந்தக் கத்தர் கயவாளி. 

மேலும், நான் என் நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும் அறையில் இது போன்ற கிரிமினல்களை யார் அனுமதிப்பது?  ஆனால் ஒன்று.  யார் கிரிமினல், யார் சாதாரணம் என்று யாருக்குத் தெரியும்?

அதனால்தான் ஒரு திட்டம் செய்தேன்.  என்னோடு எந்தத் தொடர்பும் இல்லாதவர்களை இனிமேல் என் அறையில் அனுமதிக்கக் கூடாது. 

ஒன்று சொல்கிறேன்.  எனக்கு ஏராளமான தோழிகள் உண்டு.  ஆனால் இந்த எழுபது வயது வரை நான் எந்தப் பெண்ணிடமும் நானாகச் சென்று பேசியது இல்லை.  தொலைபேசி எண் கேட்டதில்லை.  அத்துமீறியது இல்லை.  

அந்தக் கத்தர் கிரிமினல் இதுவரை எனக்கு எந்த மின்னஞ்சலும் அனுப்பியது இல்லை.  அவர் பெயர் கூட எனக்கு அன்றைய இரவுதான் தெரியும்.  ஆனால் அந்த ஆள் எத்தனை பெரிய அறிவுச் சுரண்டல் செய்து கொண்டிருக்கிறார் என்பதை அவரே சொன்னார். 

தாஹர் பென் ஜெலோன் எழுதிய The Blinding Absence of Light என்ற நாவலைப் படித்திருக்கிறார் கத்தர் கிரிமினல்.  தாஹர் பென் ஜெலோன் மொராக்கோவின் மிகப் புகழ் பெற்ற எழுத்தாளர்.  கத்தரில் மொராக்கோ தூதரைச் சந்தித்த கத்தர் நபர் அவரிடம் மேற்படி எடுத்து விட்டால் தூதர் மிரண்டு போவாரா இல்லையா?  உடனே மொராக்கோ தூதருடன் நட்பு.

இதேபோல் நான் எந்தெந்த நாடுகளின் இலக்கியம் பற்றி எழுதியிருக்கிறேனோ அந்தந்த நாட்டுத் தூதர்களோடெல்லாம் நட்பு.  அதனால் எல்லாம் தன் சொந்த்த் தொழிலுக்கும் மற்றவைகளுக்கும் பலன்.  ஆனால் என்னோடு தொடர்பே கொண்ட்தில்லை.  ஒரு மின்னஞ்சல் கூடப் போட்டதில்லை.  நேரில் வந்து என்னோடு மது அருந்தும்போது என் தோழியிடம் போய் கடலை போட முயற்சி.  இன்னொரு பெண்ணிடம் போய் தொலைபேசி எண்ணைக் கேட்டு உடனடியாக மெஸேஜ்.  டேய், நீ என்ன அந்தப் பெண்ணின் பாய் ஃப்ரெண்டா?  அண்ணனா?  யாரடா நீ?  இப்படிப்பட்ட கிரிமினல்கள் உலவிக்கொண்டிருக்கும் சமூகத்தில் பெண்கள் எப்படிப் பொதுவெளிக்கு வர முடியும்? 

இதில் பெரிய வேடிக்கையைக் கேளுங்கள்.  இவ்வளவுக்கும் அந்தக் கிரிமினல் என்னிடம் தொலைபேசி எண் கேட்கவில்லை!  ஆனால் நண்பர்கள் சந்திப்புக்கு வந்த பெண்ணிடம் தொலைபேசி எண்ணைக் கேட்டு, பிரச்சினையில்லாமல் பஸ் பிடித்தீர்களா என்று மெஸேஜும் அனுப்பியிருக்கிறார்.  இந்தக் கிரிமினலைப் போல் நான் என் வாழ்வில் எத்தனை பேரை பார்த்திருப்பேன்? 

எல்லாவற்றையும் விட ஒரு வேடிக்கைக் கதையை இப்போது நான் சொல்லப் போகிறேன்.

கத்தர் கிரிமினலும் சீனியும் ஹென்னஸியைக் குடித்தார்கள்.  குடித்து முடித்த பிறகு போத்தலில் மூன்றில் ஒரு மடங்கு கோனியாக் இருந்தது.  சீனி தன் அறைக்குப் போய் விட்டார்.  நான் இசை கேட்டுக்கொண்டிருந்தேன்.  ராஜா வெங்கடேஷ் இன்னொரு நண்பரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.  அப்போது ராஜா கவனித்ததை மறுநாள் என்னிடமும் சீனியிடமும் சொன்னார்.  அந்தக் கத்தர் ஆசாமி தன் அறைக்குப் போகாமல் என் அறைக்கும் வாசலுக்குமாகக் குட்டி போட்ட பூனை போல் நடந்து கொண்டிருந்தாராம்.  பிறகு நைஸாக வந்து கட்டிலுக்கு அடியில் இருந்த மீதி ஹென்னஸியை எடுத்துக்கொண்டு போய் விட்டாராம்.  இதை ராஜா சீனியிடம் சொன்னபோது சீனி சொன்னார், அட அற்பப் பதரே, என்னிடம் கேட்டிருந்தால் நானே எடுத்துக் கொடுத்திருப்பேனே? 

கொஞ்ச நேரத்தில் கத்தர் நபரிடமிருந்து சீனிக்கு ஒரு மெஸேஜ் வந்த்து.  “மீதியிருந்த ஹென்னஸியை எடுத்துக்கொண்டு வந்து விட்டதற்காக என்னைத் தவறாக நினைக்க வேண்டாம். நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை.  பாத்ரூம் போய் விட்டு வந்த போது அந்த பாட்டில் மேஜை மேல் இருந்தது.  நானும் என் நண்பனுக்கு ஹென்னஸி வாங்கி வருவதாகச் சொல்லியிருந்தேன்.  அது ஞாபகம் வந்து எடுத்து வந்து விட்டேன்.  தவறாக நினைக்க வேண்டாம்.”

மனிதன் வீழ்ச்சி அடையும் இடங்கள் இரண்டு: ஒன்று, பணம்.  இரண்டு, பெண்.  ஹென்னஸி விஷயம் அற்பத்தனமான நகைச்சுவை. ஆனால் அந்தக் கத்தர் ஆசாமி அங்கே வந்திருந்த இரண்டு பெண்களிடமும் நடந்து கொண்ட விதம் கிரிமினல் செய்கை. 

என் விஷயத்தில் அவர் செய்தது, நன்றி கெட்டத்தனம்.  அறிவுத் திருட்டு. 

இப்படிப்பட்ட அல்பங்களை நான் என் வாழ்வில் ஒருபோதும் சந்திக்க விரும்ப மாட்டேன்.  அதற்கான சூழலை ஏற்படுத்தித் தரும்படி என் நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

***

ரெக்கார்டிங்கை இப்போதே அனுப்பினால் நான் காண்பித்த திரைப்படங்கள் தெளிவாக இருக்காது.  நான் பேசுவது மட்டுமே தெளிவாக இருக்கும்.  அதனால் சரவணனிடமிருந்து திரைப்படத்தின் பகுதிகளை வாங்கி என் பேச்சோடு இணைக்க வேண்டும்.  அதனால் இன்னும் ஒரு வாரம் எடுக்கும்.  தயவு செய்து காத்திருக்கவும்.