அடுத்த ஆட்டம் ஆரம்பம்…

இவரைப் பற்றி யாரும் உங்களுக்குச் சொல்லப் போவதில்லை.  இவரைப் பற்றி எந்த விமர்சகரும் விமர்சித்தோ பாராட்டியோ எழுதியதில்லை.  இவரது நூல்கள் பல ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் அமெரிக்க வாசகர்கள் இவர் பெயரை அறிந்திருக்க மாட்டார்கள். 

ஜார்ஜ் பத்தாயின் (Georges Bataille) நண்பர்.  மிஷல் ஃபூக்கோ (Michel Foucault) இவரைப் பற்றிப் பெரிதும் சிலாகித்திருக்கிறார்.  நீட்ஷே (Nietzsche), மார்க்கி தெ ஸாத் (Marquis de Sade) இருவரும் இவரது எழுத்தைப் பெரிதும் பாதித்திருக்கிறார்கள்.  ஆரம்ப காலத்தில் விட்ஜென்ஸ்டைன் (Wittgenstein), ஹெடேக்கர் (Heidegger), காஃப்கா போன்றவர்களை ஃப்ரெஞ்சில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார்.  சிறிது காலம் ஆந்த்ரே ஜீத் (André Gide) இன் செயலாளராக இருந்தார்.  ஜீத்-இன் ஒரு நாவலில் ஒரு பாத்திரமாக வருகிறார்.  ஓவியர்.  தத்துவவாதி.  பலருக்கும் இவர் எழுத்து புரியவில்லை என்பதால் அவ்வளவு பிரபலம் இல்லாதவராக இருந்தார்.  ஆனால் இவருடைய சகோதரர் Balthus எல்லோராலும் அறியப்பட்ட ஓவியர். 

பெயர் Pierre Klossowski.  96 வயது வரை வாழ்ந்தார். 

நான் எந்த ஒரு நாவலை எழுதத் தொடங்கினாலும் அதன் போக்கோடு சேர்ந்து பத்து இருபது நாவல்களை வாசிப்பது வழக்கம்.  இப்போது க்ளொஸோவ்ஸ்கியை வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.