”காமத்தைக் கருப்பொருளாகக் கொண்ட திரைப்படங்களில் சிறந்ததாக தெ ட்ரீமர்ஸ் படத்தைச் சொல்லலாம்” என்ற என்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. லாஸ்ட் டேங்கோ இன் பாரிஸ் திரைப்படத்தைத் திரும்பவும் ஒருமுறை பார்த்த பிறகு இந்த மாற்றம் கொண்டேன்.
இப்போது நாம் விவாதிக்கப் போகும் திரைப்படங்களை நீங்கள் குடும்பத்தோடு பார்க்க இயலாது.
லாஸ்ட் டேங்கோ இன் பாரிஸ், தெ ட்ரீமர்ஸ் இரண்டுமே பெர்னார்தோ பெர்த்தொலூச்சியின் திரைப்படங்கள். இந்த இரண்டும் முறையே 1972இலும் 2003இலும் எடுக்கப்பட்டவை. இங்கே இந்த காலகட்டம் முக்கியமானது.
இந்தத் திரைப்படங்களுக்குள் செல்வதற்கு முன்னால் அபிதாவில் லா.ச.ரா.வினால் எவ்வளவு தூரம் செல்ல முடிகிறது என்று பார்ப்போம்.
“காலடியில் குறுகுறு –
உடல் கூசி கையில் எடுக்கிறேன்.
புஷ்ப சரம்.
ஆ! நினைவு வந்தது. இது நேற்றுமாலை அபிதாவின் கூந்தலில் இருந்ததல்லவா?
“மாலையில் கூந்தலில் செருக்குடன் மகிழந்த மலரே, காலையில் உன்னை மண்ணில் சிதறுண்டு கிடக்கக் காண்பதென்ன?”
கன்னத்தில் ஒற்றிக் கொள்கிறேன். காதோடு அது மெத்தென்று என்ன பேசுகிறது?
***
”புடவையின் கோடி, ஜலத்தில் நனைந்து நீரோட்டத்தில் லேசாய் அலைந்தது. புடவையின் உடலும் அங்கங்கே நனைந்து, நனைந்த இடங்கள், உடலோடு ஒட்டிக்கொண்டு அங்கங்கள் பிதுங்கின. செளகரியத்திற்காக முழங்கால்களுக்கிடையே அள்ளிச் சொருகி, மடியில் அடைத்த சேலையின் நீலத்தை யடுத்து தொடைச் சதை
வெய்யில்படா தனி வெண்மையில் பளீரிட்டது.”
நதிக்கரையில் அபிதா துணி துவைக்கும் அழகை மேலே லா.ச.ரா. வர்ணிக்குமாறு பார்த்துவிட்டு நதிப்பக்கம் செல்லாமல் வேறு திசையில் போய் விடுகிறான் அம்பி. தமிழ் இலக்கியத்தில் அவ்வளவுதான் சொல்ல முடிகிறது. ஆனால் தஞ்சை ப்ரகாஷின் படைப்புகளை நீங்கள் நினைவு கூருங்கள். குறிப்பாக, கரமுண்டார் வூடு நாவல்.
***
இடுப்பில் குடத்துடன் அவள் (அபிதா) முன் ஏறுகையில் வேணுமென்றே என் நடை அவளை இரண்டு படிகள் முன் விட்டது.
இடுப்பில் குடத்திற்கு இடம், குடத்தின் செருக்கு.
இடையில் குடம் இடுப்பின் செருக்கு.
இடையின் வளைவுள் குடத்தின் வளைவு புதைந்ததும் கோடுகள் பூக்கும் மர்மப் புன்னகை இதயத்தில் ஒளி தட்டுகின்றது.
படியேறுகையில், அவள் உடலில் லேசான வளைவுகள் சுடராட்டம் போல் விளைகையில், முதுகுப்புறம், வலது தோளில் ரவிக்கை தையல் விட்ட இடத்தில் பளீரிட்ட சதை நெருப்பு நெஞ்சில் பற்றிக் கொள்கையில், இதுவரை சென்று போன வருடங்களில் அங்கு குவிந்து அழுகிய குப்பை கூளங்கள், வயதின் சருகுகள் எரிகின்றன. நானே லேசாகிக் கொண்டிருக்கிறேன்.
***
லா.ச.ரா.வின் அதிக பட்ச காமம் அபிதாவின் முதுகுப்புறம், வலது தோளில் ரவிக்கை தையல் விட்ட இடத்தில் பளீரிட்ட சதை நெருப்பு அம்பியின் நெஞ்சில் பற்றிக் கொள்கிறது. அவ்வளவுதான்.
அபிதாவிலிருந்து மேலும் கொஞ்சம்:
அற்ப விஷயம் சொற்ப சம்பவம் அடிவயிறு வெள்ளி வீச கடல் வயிற்றில் மீன்குட்டி துள்ளி விழுந்து தனிப்படுகையில், கடலென்றும் மீனென்றும் கண்ட தனிப்பேதம் பொருளா? பொருள் காட்டும் மருளா? அல்ல பொருள் காண்பதே மருளா?
அவிழ்த்து அவிழ்த்துப் போட்டு எடுத்தெடுத்துக் கட்டிக் கொள்ளும் பொருளே!
சமயமே சிற்பமாகிவிட்டபின் சிற்பத்தில் எது அல்பம் எது சொல்பம்?
ஆனால் சக்கு, நீ சக்குவா? அபிதாவா?
மலையேறுமுன் சக்கு. மலையிறங்கியதும் அபிதா.
ஆனால் நீ யாராயிருந்தால் என்ன? இனி உன்னைக் கவனிப்பதன்றி எனக்கு வேறு ஜோலியில்லை. நீ காத்த மலையாகிவிட்டாய். உன்னைக் கவனிக்கக் கவனிக்க உன் செயல், அசைவுகளின் நுணுக்கம் ஒவ்வொன்றும் நீ அபிதாவோ சக்குவோ, நீயெனும் கவிதையின் தனித்தனி அங்கமாய், ஒவ்வொரு தனிமையும் அதனதன் முழுமை பெற்று, அதன் இரக்கமற்ற கொக்கி என்மேல் விழுந்து கவ்வி, கழுவில் நான் நெளிகிறேன். தரிசனத்தின் பயங்கரம் இதுதான். தரிசனத்திற்கு இரக்கமில்லை. எந்த தரிசனமும் அஞ்சத் தக்கதே. என்னை எனக்கில்லாமல் எல்லாம் தனக்காக்கிக் கொண்டு விட்ட தரிசனி.
***
தாம்பு நுனியில் குடம் விடுவிடென இறங்கித் தொப்பென்று ஜலத்தில் விழுந்து மொண்டெழுந்த வேகத்தில் ஜலம் அதன் கண்ணாடி கலங்கி, சிற்றலை அதிர்ந்து அடங்கும் மிளிர்வில் அதோ சக்கு முகம் தோன்றிச் சிரித்து நலுங்குகிறது.
‘விர்’ரென்று மேலேறி வரும் குடத்தை வசியமுற்றவனாய்க் கவனிக்கிறேன்.
கழுத்தில் கயிறுடன் தொங்குவது குடமா? நானா? எனக்கு ஏன் இப்படித் தோன்றுகிறது.
பிடிச் சுவர்மேல் குடத்தை இறக்கி, சுருக்கைக் கழற்றி, அவள் குடத்தை இடுப்பில் ஏற்றிக்கொண்ட வேகத்தில், ஜலம் அவள் முகத்தில், உடல் முகப்பில் விசிறி நனைத்தது.
ஜலமா? நானா?
குடத்தை ஒரு கை அணைக்க, மறுகையால் முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள்.
சிரிக்கிறாள்.
அவள் நடக்கையில் குடத்தில் ஜலம் துளும்பிச் சிரிக்கிறது.
நானா? என்னைப் பார்த்து நானேயா?
வான் விளிம்பில் ஒரு நக்ஷத்ரம் அர்த்தத்துடன் பார்த்துக் கண் சிமிட்டுகிறது.
அவள் முன் செல்கிறாள்.
நான் பின் செல்கிறேன். அவள் நடையில் இடுப்பின் கடையலில் என் மனம் பறிபோகின்றது.
குடத்தின் நசுங்கலிலிருந்து ஜலம் மத்தாப்பூக் கொட்டிக் கொண்டே போகிறது.
அவள் நடக்கையில் ஜலம் தெளித்த இடம் பூமிக்குக் குளிர்ச்சி. ஆனால் அவள் நடை என் நெஞ்சுக்குத் தீ.
***
அபிதா, உன் வெளிச்சம் கண் கூசுகிறது.
உன்னோடு கண்ணைப் பொத்திக் கொண்டுதான் நடக்கிறேன். எனக்கு என்ன தோன்றுகிறது? ஏன் தோன்றுகிறது? என்ன புரிகிறது? புரிந்தால்தானே?
புரிவதற்கே எதுவுமில்லை என்பதுதான் புரிகிறது. அது அது அந்தந்த சமயம் எப்படி எப்படித் தோன்றுகிறதோ அதுதான் உண்டு. தொன்றுதொட்டு இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஒன்று என்று ஒன்று, நீயும் நானுமென இரண்டாய்ப் பிரிந்து, பிரிந்தபின், பிரிந்தது திரும்ப ஒன்ற நீயும் நானும் படும் ஓயாத வேதனையில், நீயும் நானும் வெட்டியும் ஒட்டியும் ஒவ்வியும் ஒருவரோடொருவர் ஒப்பிட்டுப் பார்ப்பதும் –
இதுதான் கண்டது!
***
கண்களை மெதுவாய்த் திறக்கிறேன்.
எதிரே, தம்ளரை என்னிடம் நீட்டிய வண்ணம், தன் புன்னகையில் திவ்யத்தில் ஒளி வீசிக்கொண்டு நிற்கிறாள்.
தம்ளரை வாங்கிக் கொள்கையில், என் விரல் அவள் மேல் படாதா?
எண்ணத்தையும் செயலையும் இம்மியிலிருந்து எல்லை வர, நம் அறிவுக்கெட்டாது தன் வழியில் ஆளும் ஆதிக்கத்தின் கட்டளையில், பாத்திரம் கைமாறும் தருணம், எங்கள் விரல்கள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டாற்போல் எவ்வளவு
நெருக்கமாய் தம்ளரைப் பற்றியும் –
தொட்டுக்கொள்ளவில்லை.
அவள் ஏந்தி வந்த ஜலமே, அவள் கன்னித் தூய்மையை, தன் சத்தியத்தின் சக்தி கொண்டு, அவளுக்குக் காப்பாற்றித் தருவதாய் எனக்குத் தோன்றுகிறது.
கானலின் நலுங்கல் போல் என் ஏக்கம், கண்கூடாய் என் முன் எழுகிறது. பற்று ஒன்றின் மேல் விழுந்துவிட்டால் –
பற்று, ஆசை, அன்பு, பாசம், பக்ஷம், காதல், காமம், வேகம், விரகம், ஏக்கம், இன்பம், வேதனை, சோகம், சுகம், சொர்க்கம், நரகம், உயிர், ஊசல், கூடல், பிரிதல் – இன்னும் எத்தனை எத்தனையோ.
அத்தனையும் ஒரே சாயம் பிடித்துக் கொண்ட கெட்டியின் ரகங்களைக் காட்டும் பெயர்கள்தானே! பற்று ஒன்றின் மேல் விழுந்துவிட்டால், தொடல் என்பது ஏன் அவ்வளவு அவசியமாகிவிடுகிறது?
தொடல்.
உடைமையின் முத்திரை.
உறவின் வழித் துணை.
உணர்வின் பழி ரேகைக்கு ரேகை பாயும் மந்த்ர சக்தி என்ன?
அவள் கொடுத்த ஜலம் தொண்டை அடியில் உவர்த்தது. அந்தக் கிணற்று ஜலம் கற்கண்டாய்த் தித்துக்குமே, இதற்கு இந்த உவர்ப்பு எப்படி வந்தது? ஒருவேளை என் தாபம்தான் கொடுமையோ?
சக்கு, நீ சாகவில்லை. உன்னையே பலிகொடுத்து என்னை வாங்கும் பழியைக் கரடிமலைக் கருவேலநாதனிடம் வரமாக வாங்கிக் கொண்டாயா?
நீ வாங்கும் பழி இவ்வளவு பயங்கரமா?
சக்கு என்னால் தாங்க முடியல்லேடி! சக்கு என்னை மன்னிச்சூடடி!
மன்னிப்பு.
இது ஒரு பெரும் பொய். மன்னித்ததால், தீங்கின் பங்கு குறைந்து விடுமா?
வேதனையிலிருந்து விடுதலை கிடைத்து விடுமா? நினைவால் இன்னும் கூடுதலேயன்றி குறைவு ஏது? மார் வெடிக்க அழுகை பீறிடுகிறது.
அபிதாவுக்குக் கேட்டுவிட்டால்?
***
மௌனி எழுதியதும் இதேதான். காமத்தைப் பொருத்தவரை மௌனியும் லா.ச.ரா.வும் ஒன்றுதான். பெண்ணின் கன்னித் தூய்மை. ஸ்பரிஸம் படாத காதல். இதுதான் அவர்களின் மையம்.
இப்போது லாஸ்ட் டேங்கோ இன் பாரிஸ் திரைப்படத்துக்குள் செல்வோம்.
பாரிஸ் நகரில் இருபது வயது Jeanne வாடகைக்கு வீடு தேடிக்கொண்டிருக்கும்போது ஒரு குடியிருப்பைக் காண்கிறாள். (Jeanne என்ற பெயரை தமிழில் எழுத்து வடிவில் கொண்டு வருவது சிரம்ம். J என்ற எழுத்தின் உச்சரிப்பு ஜ, ழ என்ற இரண்டு உச்சரிப்புகளுக்கும் நடுவில் வரும். கடைசி nne என்பதை ”ன்னு” என்று வரும். னு என்பதைத் தெலுங்குக்காரர்கள் உச்சரிப்பது போல் ரொம்பவும் அழுத்தக்கூடாது.
சில புகைப்படங்கள்:
https://www.alamy.com/stock-photo/maria-schneider-last-tango-in.html?sortBy=relevant
அதனால் இங்கே நான் வசதிக்காக ஜான் என்றே எழுதுகிறேன். இங்கே தமிழில் உள்ள ஃப்ரெஞ்ச் அறிந்தவர்கள், ஃப்ரெஞ்ச் ஆசிரியர்கள் எழுதும் ழான் என்பது மிகவும் தவறு.)
அந்த வீட்டின் உள்ளே ஏற்கனவே போய் அமர்ந்திருக்கிறான் பால் (மார்லன் ப்ராண்டோ). பாலின் வயது 45.
இருவரும் அந்தக் காலியான வீட்டில் சந்தித்துக் கொள்கிறார்கள். பார்த்த சில நிமிடங்களில் அவளைத் தன் இரு கரங்களாலும் தூக்கிக்கொண்டு போய் கலவி கொள்கிறான் பால். ஆனால் அதை வன்கலவி என்று சொல்ல முடியாது. காரணம், ஜான் அந்தக் கலவியை வெகுவாக ரசிக்கிறாள். ஆரம்பத் தருணங்களில் கூட, பால் அவளைத் தூக்கும்போது கூட அவள் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை.
இத்தனைக்கும் ஜானுக்கு ஒரு காதலன் இருக்கிறான். அவன் ஒரு திரைப்பட இயக்குனர். இருவருக்கும் விரைவில் திருமணம் ஆகப் போகிறது.
ஜானும் பாலும் திரும்பத் திரும்ப அந்தக் காலியான வீட்டில் சந்தித்துக் கொள்கிறார்கள். திரும்பத் திரும்ப கலவி கொள்கிறார்கள்.
பால் பாரிஸில் வசிக்கும் ஒரு அமெரிக்கன். ஜானிடமும் தன் தாயிடமும் அவன் ஒரு மிருகத்தைப் போல் நடந்து கொள்கிறான். இங்கே உள்ள பெண்ணியவாதிகள் பார்த்தால் பாலை ஒரு ஆணாதிக்கவாதி என்று முத்திரை குத்தி விடுவார்கள். ஆனால் பாலின் கதாபாத்திரம் மிகவும் சிக்கலானது. அவனுடைய ஃப்ரெஞ்ச் மனைவி ரோஸா பாரிஸில் ஒரு மட்டமான ஓட்டலின் உரிமையாளர். ரோஸாவும் பாலும் அதே ஓட்டலில் ஒரு அறையில் வசிக்கிறார்கள். ரோஸா பாலுக்குத் தெரியாமல் அதே ஓட்டலில் வசிக்கும் மார்சல் என்ற முதியவனோடு உறவு கொண்டிருக்கிறாள். இது தெரியாமல் பால் ரோஸாவை உயிருக்குயிராய் காதலித்து வருகிறான்.
ஒருநாள் ரோஸா தன் மணிக்கட்டை ரேஸரால் அறுத்துக்கொண்டு மிகவும் குரூரமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறாள். பாலுக்கு ரோஸாவின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. ஆனால் மார்ஸலுக்கும் ரோஸாவுக்கும் இருந்த உறவு பற்றித் தெரிகிறது. ரோஸாவின் குரூரமான தற்கொலை, அவள் அவனை ஏமாற்றியது ஆகிய இரண்டும் அவனை ஒரு மனநோயாளியைப் போல் ஆக்குகிறது.
ரோஸாவின் உடலுக்கு முன்னே அமர்ந்து பால் பேசும் வசனங்கள் உலகப் பிரசித்தமானவை. அந்தக் காட்சியில் மார்லன் ப்ராண்டோவின் நடிப்பு குறித்து ரோஜர் எபெர்ட் “இந்த உலகில் எந்த நடிகராலும் இப்படி நடித்திருக்க முடியாது” என்று எழுதுகிறார். (ரோஜருக்கு சிவாஜி பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.)
பால் ரோஸாவின் பிரேதத்தின் முன்னே அமர்ந்து பேசும் வசனம் இது:
You look ridiculous in that makeup. Like a caricature of a whore. A little touch of mommy in the night. (Sits in a chair next to his dead wife’s body) Fake Ophelia drowned in the bathtub. (scoots closer) I wish you could see yourself. You’d really laugh. You’re your mother’s mastepiece. (scoots closer again) There’s too many fucking flowers in this place. I can’t breathe. You know, in the top of the closet, cardboard box, I found all your — I found all your little goodies. Pens, key chains, foreign money, French ticklers, the whole shot. Even a clergymen’s collar. I didn’t know you collected all those little knick-knacks left behind.
Even if a husband lives … 200 fucking years, he’s never gonna be able to discover his wife’s true nature. I mean, I — I might be able to comprehend the universe … but I’ll never discover the truth about you. Never. I mean, who the hell were you?
Remember that day, the first day I was there? I knew I couldn’t get into your pants unless I said, uh… What did I say? Oh, yes. Uh, “May I have my bill, please? I have to leave.” Remember?
Last night, I ripped off the lights on your mother and the whole joint went bananas. All your guests, as you used to call them. Well, I guess that includes me, doesn’t it? Huh? It does include me, doesn’t it? For five years I was more a guest in this fucking flophouse than a husband. With privileges, of course. Then, to help me understand, you let me inherit Marcel, the husband’s double whose room was the double of ours. And you know what? I didn’t even have the guts to ask him, didn’t even have the guts to ask him if the same numbers you and I did were the same numbers you did with him. Our marriage was nothing more than a… a foxhole for you and all it took for you to get out was a 35-cent razor and a tub full of water. You cheap, goddamn fucking, godforsaken whore, I hope you rot in hell. You’re worse than the dirtiest street pig that anyone could find anywhere, and you know why? You know why? Because you lied. You lied to me and I trusted you. You lied, you knew you were lying. C’mon, tell me you didn’t lie. Haven’t you got anything to say about that? You can think up something, can’t you? Huh? Go on, tell me something. Go on, smile, you cunt. Go on. Tell me something sweet. Smile at me and say that I just misunderstood. (starting to cry) Go on, tell me… you pig fucker. You goddamn fucking, pig-fucking liar.
(Openly sobbing) Rosa, I’m sorry — I … I just can’t– I can’t stand it… to see these goddamn things on your face. (Removes her false eyelashes) You never wore makeup, all this fucking shit. I’m gonna take this off your mouth. Lipstick. (Wipes off her lipstick with a flower petal) Rosa. Oh, God. I’m sorry. I, I don’t know why you did it. I’d do it too, if I knew how. I just don’t know– I just have to find a way.
ஒரு காட்சியில் பால் ஜானிடம் வெண்ணெய் பாக்கெட்டை எடுத்து வரச் சொல்கிறான். எடுத்து வந்து கொடுக்கும் ஜானை குப்புறப் படுக்க வைத்து அவளை அவளுடைய விருப்பத்துக்கு மீறி குதப்புணர்ச்சி செய்கிறான். ஆயிரக்கணக்கான பார்வையாளர்களாலும், சினிமா ஆர்வலர்களாலும் கண்டிக்கப்பட்ட, ஏசப்பட்ட, விவாதிக்கப்பட்ட ஒரு வன்கலவிக் காட்சி இது. ”பட்டர் சீன்” என்று குறிப்பிடப்படும் இந்தக் காட்சி தத்ரூபமாகவே எடுக்கப்பட்டிருக்கிறது.
இங்கே கொஞ்சம் சினிமாவுக்கு வெளியே நின்று பேச வேண்டியிருக்கிறது. கலையும் வாழ்க்கையும் கட்டுரையை மீண்டும் நினைவு கூர்ந்து கொள்ளுங்கள்.
ஜானாக நடிப்பது Maria Shneider (1952 – 2011). லாஸ்ட் டாங்கோதான் அவருடைய முதல் படம். அதற்கு முன் அவர் நாடகத்தில் நடித்திருக்கிறார். லாஸ்ட் டாங்கோவில் அவர் இருபது வயதுப் பெண்ணாக வந்தாலும் படத்தில் நடிக்கும்போது அவர் வயது பத்தொன்பது. இரண்டு மணி நேரம் ஆறு நிமிடங்கள் ஓடும் டாங்கோவில் அவர் பாலுடன் இருக்கும் காட்சிகளிலெல்லாம் முழு நிர்வாணமாகவே இருக்கிறார். அதுவும் முன் நிர்வாணம்.
வெண்ணெய் கலவி குரூரமான வன்கலவி என்றாலும், அடுத்த காட்சியிலேயே ஜான் பாலுக்கு ஏதோ பணிவிடை செய்து கொண்டிருக்கிறாள்.
வெண்ணெய் காட்சியில் நடிக்கும்போது மரியா ஷ்னீடரின் வயது பத்தொன்பது என்பதாலும், அந்தக் காட்சி நடிப்பாக இல்லாமல் தத்ரூபமாக எடுக்கப்பட்டிருப்பதாலும் கடும் சர்ச்சைக்கு உள்ளானபோது ஷ்னீடரும் அந்த சர்ச்சையில் சேர்ந்து கொண்டார். இயக்குனர் பெர்த்தொலூச்சி அந்தக் குறிப்பிட்ட காட்சி பற்றி என்னிடம் முன்கூட்டியே சொல்லவில்லை என்றார் ஷ்னீடர். காட்சி படமாக்கப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்புதான் தன்னிடம் அது பற்றி சொல்லப்பட்டது என்றும், திரைக்கதையில் இக்காட்சி இல்லை என்றும், தான் நிஜமாகவே வன்கலவி செய்யப்பட்டதாகவும் ஷ்னீடர் பிறகு நேர்காணல்களில் குறிப்பிடுகிறார்.
காட்சி தத்ரூபமாக வர வேண்டும், ஜானின் அதிர்ச்சியை உண்மையாகவே காட்சிப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் ஷ்னீடரிடம் அக்காட்சி பற்றி முன்கூட்டியே சொல்லவில்லை என்று அப்போது தெரிவித்தார் பெர்த்தொலூச்சி.
படம் முழுவதுமே ஜான் ஒரு மஸாக்கிஸ்டாகத்தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள். வன்கலவி – அதுவும் குதப்புணர்ச்சி – நடந்த அடுத்த காட்சியிலேயே அவள் பாலுக்குப் பணிவிடை செய்யும் காட்சி அதற்கு ஒரு உதாரணம்.
ஜான் அப்படி ஒரு மஸாக்கிஸ்டாக இருந்து, அதை ரசிப்பதற்குக் காரணம், அவளைத் திருமணம் செய்ய இருக்கும் இயக்குனர் அவளுக்கும் தனக்குமான காதலை ஒரு சினிமாவாகத்தான் பார்க்கிறான். அவள் அவனைக் காதலுடன் முத்தமிடுவதைக் கூட தன் ஒளிப்பதிவாளனைக் கொண்டு படமாக்குகிறான்.
அதன் காரணமாக, ஜானுக்கு இயக்குனருடனான காதல் போலியாகத் தெரிகிறது. அது வாழ்க்கை அல்ல, அது ஒரு திரைப்படம் என்று தோன்றுகிறது. ஆனால் பாலுடனான காமக்களியாட்டங்களை அவள் நேரடி வாழ்க்கையாகக் காண்கிறாள், அனுபவிக்கிறாள்.
அதே சமயம், தன்னுடைய மென்மையான வாழ்வு மிகக் குரூரமாக முடிந்து போனதைத் தாங்கிக் கொள்ள முடியாத பால் குரூர இச்சைகளின் மூலம், ஜானைத் தன்னுடைய குரூரங்களுக்கான கருவியாக, பண்டமாக மாற்றிக்கொள்வதன் மூலம் அந்த குரூரத்திலிருந்து வெளியே வர முயற்சிக்கிறான்.
ஆரம்பத்திலிருந்தே ஜானுக்கு பாலின் பெயர் தெரியாது. பாலுக்கு ஜானின் பெயர் தெரியாது. இருவருக்குமே இருவரையும் பற்றிய எந்த ஒரு விவரமும் தெரியாது. ”தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமே இல்லை, வெளியுலகத்தின் அபத்தங்களை இந்த அறைக்குள் கொண்டு வராதே” என்று ஜானைத் தடை செய்து விடுகிறான் பால்.
ஆனால் நாள்கள் செல்லச் செல்ல பாலின் மனைவி தற்கொலை செய்து கொண்டாள் என்ற ஒரே ஒரு விவரத்தை மட்டும் அவளிடம் சொல்கிறான் பால். மற்றபடி பால் பேசும் ஃப்ரெஞ்சை வைத்து ஆரம்பக் காட்சியிலேயே நீ ஒரு அமெரிக்கன்தானே என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறாள் ஜான். இது தவிர அவர்களுக்கு அவர்களைப் பற்றி எந்த விவரமும் தெரியாது.
படத்தின் இறுதிக் காட்சியில் பாலும் ஜானும் ஒரு டேங்கோ நடனப் போட்டிக்குப் பார்வையாளர்களாகச் செல்லும்போது நடக்கும் நிகழ்ச்சிகள் உலகத் திரைப்படங்களின் முக்கியமான காட்சிகளில் ஒன்று எனச் சொல்ல முடியும். வணிகப்படமாக இருந்தால் அவர்கள் இருவரும் அந்த டேங்கோ போட்டியில் கலந்து கொண்டு வெற்றியாளர்களாக வருவார்கள் (சாட்டர்டே நைட் ஃபீவர்). ஆனால் இந்தப் படத்தில் நடக்கும் சம்பவங்களை நீங்களேதான் பார்த்து அனுபவிக்க வேண்டும். அனார்க்கிஸத்தின் உச்சம் என்று சொல்லத்தக்க காட்சி அது.
எழுத்தாளன் என்றால் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று விதிகள் சொல்லும் தமிழ் ஒழுக்கவாதிகளின் நினைவே அந்தக் காட்சியின் போது எனக்கு ஞாபகம் வந்தது.
ஆனால் இறுதியில் ஜானுக்கு பாலின் அனார்க்கிஸம் தனக்கு ஒத்து வராது என்று தோன்றுகிறது.
“அவன் பெயர்கூட எனக்குத் தெரியாது. அவன் யார் என்றும் தெரியாது. அவன் என்னை ரேப் பண்ணினான். அவன் என்னை ரேப் பண்ணினான்” என்று தனக்குள் பலமுறை சொல்லியபடி தன் காதலனிடம் செல்கிறாள்.
படத்தில் இடம் பெறும் கலவிக் காட்சிகளை விட இதில் ஷ்னீடரின் முன் நிர்வாணம்தான் பெரும் அதிர்ச்சியைத் தருவதாக இருந்தது எனக்கு. அதை நீங்கள் படம் பார்க்கும்போது உணர்வீர்கள்.
படத்திலிருந்து சில புகைப்படங்களை எடுத்து இங்கே வெளியிடலாம் என்று பார்த்தால் இந்தியாவில் உள்ள ஆபாசத் தடை சட்டம் என்னைப் பதம் பார்த்து விடும் என்பதால் நீங்களே படத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று விட்டு விடுகிறேன். இந்தப் படத்துக்கு ரோஜர் எபர்ட் எழுதிய இரண்டு மதிப்புரைகள் மிக முக்கியமானவை. ஒன்று, படம் வெளிவந்தவுடன் எழுதியது. இரண்டு, படம் வெளிவந்து இருபத்து மூன்று ஆண்டுகள் சென்று எழுதியது. இரண்டாவது மதிப்புரை முன்னதை விடச் சிறந்த ஒன்று.
2003இல் ட்ரீமர்ஸ் படம் எடுக்கப்பட்ட போது அதில் நடித்த ஈவா க்ரீனின் வயது இருபத்து இரண்டு. கிட்டத்தட்ட படத்தின் முக்கால்வாசிப் பகுதியில் ஈவா க்ரீன் முழு நிர்வாணமாக நடிக்க வேண்டும். உடலுறவுக் காட்சிகள் அப்பட்டமாக, தத்ரூபமாக இருக்கும். இது பற்றி ஈவா க்ரீனிடம் முன்கூட்டியே சொல்லி விட்டார் பெர்த்தொலூச்சி.
ஈவாவிடம் அவர் பெற்றோரும் நண்பர்களும் இந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று அறிவுரை சொன்னார்கள். ஈவாவுக்கும் இதுவே முதல் படம். உன் நிலைமை ஷ்னீடர் மாதிரி ஆகி விடும் என்று பயமுறுத்தினார்கள்.
இங்கே இன்னொரு விஷயம். ஷ்னீடர் தன்னுடைய டேங்கோ படத்தின் அனுபவங்களை நேர்காணலில் சொன்னாலும், பெர்த்தொலூச்சியிடம் அவர் கடைசி வரை நட்பாகவே இருந்தார் என்பதும் முக்கியமானது.
ஆனாலும் ஈவா பெர்த்தொலூச்சியின் ட்ரீமர்ஸ் படத்தில் நடித்தார். அதில் இஸபெல்லுக்கு (ஈவா க்ரீன்) இரண்டு காதலர்கள். ஒருவன் அவளோடு பிறந்த சகோதரன் தியோ. இன்னொருவன், ஒரு அமெரிக்க மாணவன் மேத்யூ. மூவரும் பாரிஸில் உள்ள கல்லூரியில் படிக்கும் பதின்பருவ மாணவர்கள்.
மூவரும் அடிக்கடி Truth or Dame Gameஇல் ஈடுபடுவார்கள். படத்தில் இரண்டு காட்சிகள் வருகின்றன. முதல் ஆட்டத்தில் சகோதரன் தியோ தோற்கிறான். இஸபெல் அவனிடம் நீ எங்கள் எதிரில் கர மைதுனம் செய்ய வேண்டும் என்கிறாள். அவன் செய்கிறான்.
இரண்டாவது ஆட்டத்தில் மேத்யூ தியோவிடம் தோற்கிறான். இப்போது மேத்யூ தியோவிடம் நீ இஸபெல்லை என் கண்ணெதிரே புணர வேண்டும் என்கிறான்.
மீதி நாளை.
பின்குறிப்பு: 1. பலமுறை சொல்லியும் அராத்து உலக சினிமாவின் பக்கம் திரும்பாமல் இருப்பதால் இப்போது அவருடைய பாத்திரத்தையும் நானே நடிக்க வேண்டியிருக்கிறது.
2. இன்றும் நேற்றும் ஒன்றிரண்டு பேர்தான் சந்தா/நன்கொடை அனுப்பியிருக்கிறார்கள். மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
இதுவரை சந்தா அனுப்பாதவர்கள் அனுப்பி வையுங்கள். குறைந்த பட்ச சந்தா 300 ரூ. அதற்கு மேலும் அனுப்பலாம். அது உங்கள் விருப்பத்தைப் பொருத்தது.
ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)
***
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
வங்கி விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai