ஒரு கதை அல்ல, ஒரு நூறு லக்ஷ்மி கதைகள்…

முதல் அட்மின் “மிகவும் வருந்துகிறேன், இனிமேல் இப்படி நடக்காது” என்று எனக்கு எழுதியிருந்தாள். நல்லவேளை, ”முதல் அட்மின் என்றால் யார் என்று உலகத்துக்கே தெரியும், முச்சந்தியில் வைத்து என்னை அசிங்கப்படுத்தி விட்டீர்கள்” என்று என்னைக் குற்றம் சாட்டவில்லை. இல்லாவிட்டால் அதற்கு வேறு ஆயிரம் மன்னிப்புக் கேட்டு, முந்நூறு (காதல்!) கவிதைகள் எழுதித் தொலைக்க வேண்டும். முதல் அட்மின் பற்றி எனக்கு நன்கு தெரியும் என்பதால்தான் அதை நான் தைரியமாக எழுதினேன்.

முதல் அட்மின் “இனிமேல் அப்படி நடக்காது” என்று மட்டும் எழுதவில்லை. ஒரு பெரிய கதையையும் எழுதியிருந்தாள். நேற்று நடந்த கதை. நம் பிரியத்துக்குரிய லக்ஷ்மி அவர்களின் கதையிலிருந்து ஒரு அத்தியாயம். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட லக்ஷ்மி கதை. அதை அப்படியே மொழிபெயர்த்துப் போடலாமா என யோசித்தேன். ஆனால் “ஏர்லி மார்னிங்கில் என் மூடை ஸ்பாயில் பண்ணி விட்டீர்கள்” என்று சீனி அவருடைய ஸ்வீட் லாங்குவேஜில் எழுதி என் மூடை ஸ்பாயில் பண்ணி விடுவார் என்பதால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த லக்ஷ்மி கதையை மொழிபெயர்த்து உங்கள் முன் வைக்கவில்லை.

ஆனால் ஒன்று, இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் இந்தியப் பெண்கள் லக்ஷ்மி கதையுலகிலிருந்து விடுபட முடியாது போல் இருக்கிறது. பிய்த்துக்கொண்டு வர வேண்டியதுதானே என்று சுலபமாகச் சொல்லி விடுவார்கள் குறியாட்டிகளான ஆண்கள். பிய்த்துக்கொண்டு வந்தால் தெருவில்தான் நிற்க வேண்டும் என்ற எதார்த்தம் பெண்களுக்குத்தான் தெரியும்.

சமீபத்தில் சவீதாவின் சிறுகதைகளை செல்வேந்திரன் லக்ஷ்மி கதைகள் என்று பங்கம் செய்து, அது எரிந்த கட்சி எரியாத கட்சியாக மாறி ஃபேஸ்புக்கே பற்றி எரிந்தது நாம் அறிந்த கதை. (நான் அது பற்றி வாய் திறக்காததன் காரணம், எனக்கு சவீதா சொல்வதும் நியாயமாக இருந்தது, செல்வேந்திரன் சொல்வதும் நியாயமாக இருந்ததுதான்!)

ஷோபா சக்தியின் புகழ் பெற்ற கதையான ராணி மஹால் கூட லக்ஷ்மி கதைதான். ஆனால் இரண்டு காரணங்களால் அது இலக்கியமாகி விட்டது. ஒன்று, அவருடைய அனாயாசமான இலக்கிய மொழி. இரண்டு, கதையில் இறுதியில் அவர் வைத்த ட்விஸ்ட். ஆனாலுமே அது ஒரு ‘ச்சீட்டிங்’ கதை என்பது என் கருத்து. இருந்தாலும் ஹாருகி முராகாகி எல்லாம் ச்சீட்டிங் கதை எழுதி, அது நியூயார்க்கரிலும் வரும்போது ஷோபா சக்தி ச்சீட்டிங் கதை எழுதலாம், தப்பில்லை.

நான் எழுதிய எக்ஸைல் நாவலில் வரும் அஞ்சலியின் கதையும் லக்ஷ்மி கதைதான். ஆனால் அதை நான் ட்ரான்ஸ்கிரஸிவ் கதையாக மாற்றி, ட்ரான்ஸ்கிரஸிவ் மொழியில் எழுதியதால் அது இலக்கியமாயிற்று. ஆனாலுமே என் வாசகர் வட்டத்தின் ஆணாதிக்கவாதிகள் அனைவரும் “நாவலில் அஞ்சலி வரும் இடங்கள் மட்டும் லக்ஷ்மி கதைதான்” என்கிறார்கள்.

இப்போது இந்த விஷயத்தை அட்மின் ஒன் எப்படி லகுவாக எடுத்துக்கொண்டாளோ அப்படி எடுத்துக்கொண்டால்தான் என்னோடு பழக முடியும். இப்படியெல்லாம் மிரட்டினால் யார் உங்களுக்கு அட்மினாக வருவான் என்று கேட்கிறார் சீனி. அட்மின் ஒன்னே ரீ எண்ட்ரி கொடுத்து விட்டாள்.

டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொண்டால்தான் என்னோடு பழகவே முடியும். இதையெல்லாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறதே என்று தன்னிரக்கத்தில் வீழ்ந்தால் முடிந்தது கதை.

எல்லாம் முடிந்த பிறகு அட்மின் ஒன்னுக்கு என் கதையைச் சொன்னேன். என் கதை என்ன? செல்லம்மாள் கதையில் வரும் பிரம்மநாயகம் பிள்ளை நான்தான். பிள்ளைவாள் ஜவுளிக்கடையில் வேலை செய்கிறார். நான் எழுத்தாளன். தொழிலில்தான் வித்தியாசம். வாழ்க்கை அதேதான். அவந்திகாதான் செல்லம்மாள். கீழே உள்ள புகைப்படம் இன்று நான் தேய்த்த பாத்திரங்கள். கிட்டத்தட்ட தினமும் நூற்றுக்குக் குறையாத பாத்திரங்களைத் தேய்க்கிறேன். நூற்றைம்பது பாத்திரங்கள் இருக்கும். நாளைதான் தேய்க்கத் தேய்க்க எண்ணி விடலாம் என்று இருக்கிறேன். சுமார் நான்கு வருடங்களாகத் தேய்த்துக்கொண்டிருக்கிறேன். பால் பாத்திரங்களைத் தேய்க்கும்போது கை நரம்புகள் தெறித்து விடும்போல் வலிக்கின்றன. சில சமயங்களில் மயக்கம் வந்து விடுவது போல் இருக்கிறது. ஆனாலும் எங்களுக்குப் பணிப்பெண்கள் கிடைக்கவில்லை. எந்தப் பணிப்பெண் வந்தாலும் கீழே உள்ள மேனேஜர் இல்லாததும் பொல்லாததும் சொல்லி அவர்களைத் துரத்தி விடுகிறார். மேனேஜருக்கும் அவந்திகாவுக்கும் ஆகாது. அதுதான் காரணம். பலி, நான். இந்த வீட்டை விட்டுக் காலி பண்ண அதுவும் ஒரு காரணம்.

கீழே புதுமைப்பித்தனின் செல்லம்மாள் சிறுகதையின் இணைப்பு:

செல்லம்மாள் – புதுமைப்பித்தன் (dinamani.com)

கீழே உள்ளது இன்று நான் தேய்த்த பாத்திரங்கள்:

ஆனாலும் நான் பலமுறை எழுதியது போல இந்த லௌகீக விஷயங்கள் எதுவுமே என்னைப் பாதிப்பதில்லை.

***

கடந்த சில தினங்களாக ஒருவர் அல்லது இருவர்தான் சந்தா அனுப்புகிறார்கள். மாதத்தின் கடைசி வாரத்தில் கூட சந்தா வரத்து நன்றாக இருந்தது. சந்தா அனுப்புவதற்கு முதல் வாரம், கடைசி வாரம் என்றெல்லாம் இல்லை போல் தெரிகிறது. முதல் தேதியிலிருந்தே ஒருவர் இருவர்தான்.

எனவே, இதுவரை சந்தா அனுப்பாதவர்கள் அனுப்பி வையுங்கள். குறைந்த பட்ச சந்தா 300 ரூ. அதற்கு மேலும் அனுப்பலாம். அது உங்கள் விருப்பத்தைப் பொருத்தது.

ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai