முழுக் கட்டுரையையும் இன்று முடிக்க முடியாது என்று தோன்றுவதால் பகுதி ஒன்று என்று கொடுத்திருக்கிறேன். இன்றும் வீடு தேடி அலைய வேண்டியிருக்கிறது. பார்ப்போம்.
***
உலக இலக்கியத்தில் ட்ரான்ஸ்கிரஸிவாக எழுதியவர்கள் யாரும் தனியாக, ஒற்றை ஆளாக இல்லை. உதாரணமாக, கேத்தி ஆக்கர் என்ற பெயரைத் தட்டினால் அதன் கூடவே வில்லியம் பர்ரோஸ் பெயர் வரும். வில்லியம் பர்ரோஸ் யார் யார் மூலம் அந்த இடத்துக்கு வந்தடைந்தார், அவர் எழுத்தில் யார் யாருடைய பாதிப்பு இருக்கிறது என்ற பட்டியலைப் பார்த்தால் அதில் தவறாமல் மார்க்கி தெ ஸாத்-இன் பெயர் இடம் பெற்றிருக்கும். அதேபோல் கேதரீன் ப்ரேயாவின் (Catherine Breillat) திரைப்படங்கள் பற்றி நாம் தெரிந்து கொள்ள முயன்றால் அவர் பெயரோடு பெர்த்தொலூச்சியின் பெயர் சேர்ந்திருக்கும். ஏனென்றால், லாஸ்ட் டேங்கோ இன் பாரிஸ் படத்தில் கேதரீன் ப்ரேயா நடித்திருக்கிறார்.
ஆக, எல்லோருமே ஒரு குழுவாகத்தான் செயல்பட்டிருக்கிறார்கள். அதாவது, ஒருவருக்கொருவர் தெரியாமல் கூட இருக்கலாம். ஆனாலும் அவர்களின் படைப்புகள் மூலமாக ஒருவருக்கொருவர் கண்ணுக்குப் புலனாகாத தொடர்பு இருந்திருக்கிறது. இல்லாவிட்டால் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் வசிக்கும் – சங்க இலக்கியத்தைத் தவிர வேறு எதுவுமே உலகம் அறியாமல் வைத்திருக்கும் ஒரு தீவைப் போன்ற தமிழ்நாட்டில் இருந்து கொண்டு 1998இல் ஸீரோ டிகிரி என்ற ஒரு நாவலை எழுதி அதை அமெரிக்காவில் இருந்த கேத்தி ஆக்கர் என்ற யாருமே அறியாத ஒரு எழுத்தாளருக்கு நான் சமர்ப்பணம் செய்வேனா?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்தோனின் ஆர்த்தோவை மறுவாசிப்பு செய்த போது எனக்கு அறிமுகம் ஆன எழுத்தாளர் Pierre Klossowski (1905 – 2001). இந்த க்ளோஸோவ்ஸ்கி யார் என்று பார்த்தால், மார்க்கி தெ ஸாத் பற்றியும் நீட்ஷே பற்றியும் பல தொகுதிகள் எழுதியவர். மட்டுமல்லாமல், மிஷல் ஃபூக்கோ மற்றும் ஃபூக்கோவுக்குப் பிறகு வந்த பின்நவீனத்துவத் தத்துவவாதிகளான Gilles Deleuze, Jean-François Lyotard போன்றவர்களின் சிந்தனைப் போக்குக்குக் காரணமாக இருந்தவர், அவர்களின் தத்துவத்தை பெருமளவு பாதித்தவர்.
ஆக, இப்போது ஒருவர் சாரு நிவேதிதா என்ற எழுத்தாளரைப் பற்றி ஆராயத் தொடங்கினால் தவர்க்க முடியாமல் கேத்தி ஆக்கர், வில்லியம் பர்ரோஸ் போன்றவர்களைத்தான் சென்றடைய வேண்டும். பின்நவீனத்துவ, ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்து என்றால் சுமார் இருபது பேர் அடங்கிய குழுவில் சாரு நிவேதிதாவின் பெயரும் இருக்கும். க்ளோஸோவ்ஸ்கியின் பெயரும் இருக்கும். ஸேர்ஜ் துப்ரோவ்ஸ்கியின் (Serge Doubrovsky) பெயரும் இருக்கும். எதற்குச் சொல்கிறேன் என்றால், இது எல்லாமே ஒரு குழு அல்லது ஒரே சிந்தனைப் பள்ளி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இன்னொன்றையும் இங்கே ஞாபகப்படுத்துகிறேன். ஸேர்ஜ் துப்ரோவ்ஸ்கி ஒருமுறை ஸீரோ டிகிரி நாவலைப் படித்து விட்டு எனக்கு எழுதிய கடிதம்.
இந்த யோசனையெல்லாம் எனக்கு பஸோலினியின் Salò, or the 120 Days of Sodom படத்தைப் பார்த்தபோது தோன்றியது. உதாரணமாக, இந்தப் படத்துக்கு உதவியாக இருந்த நூல்கள் என்று பஸோலினி ஒரு பட்டியலை டைட்டிலில் தருகிறார். அவை:
ரொலாந் பார்த்தின் “Sade, Fourier, Loyola”.
ஸிமோன் தெ பூவாவின் Must We Burn Sade?
Pierre Klossowski : Sade my neighbor and The scoundrel philosopher.
இவற்றுள் நான் க்ளோஸோவ்ஸ்கியின் Sade My Neighbour பற்றி ஏற்கனவே எழுதியிருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
என் கட்டுரைகளில் குறிப்பிடப்படும் புத்தகங்களை நான் படித்து விட்டுத்தான் எழுதுகிறேன் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. என் எழுத்தின் தீவிர வாசகர்களாக இருக்கும் ஈஷ்வர், அப்துல், தார்வேஷ் போன்றவர்கள் இங்கே குறிப்பிடப்படும் நூல்களைப் படிப்பார்கள் என்று நம்புகிறேன். உதாரணமாக, Sade My Neighbour.
இப்போது நாம் பஸோலினியின் திரைப்படத்துக்குள் நுழைவோம்.
(கடந்த சில தினங்களாக சந்தா/நன்கொடை வரத்து சுத்தமாக நின்று விட்டது. ஒரு நாளில் ஒருவர் அனுப்புகிறார். அவரும் என் நெருங்கிய நண்பராக இருக்கிறார். மற்றவர்களும் இது விஷயத்தை கவனியுங்கள். ஒரு நண்பர் ஒரு கட்டுரைக்குப் பத்து ரூபாய் வீதம் முந்நூறு ரூபாய் சந்தா வைத்திருப்பது பற்றி மிகவும் வருத்தப்பட்டார். அவ்வளவு குறைவாக வைத்துமே என் நண்பர்கள் மட்டும்தான் நன்கொடை அனுப்புகிறார்கள். தெரியாத வாசகர்கள் பலரும் சந்தா அனுப்புவதில்லை என்பதை அவரிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.)
இதுவரை சந்தா அனுப்பாதவர்கள் அனுப்பி வையுங்கள். குறைந்த பட்ச சந்தா 300 ரூ. அதற்கு மேலும் அனுப்பலாம். அது உங்கள் விருப்பத்தைப் பொருத்தது.
ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)
***
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
வங்கி விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai