25. மார்க்கி தெ ஸாத்: Philosophy in the Bedroom

எனக்கு ஞாபக சக்தி மிகவும் குறைவு என்பதே என் எண்ணம்.  ஆனாலும் இலக்கிய சமாச்சாரங்கள் எதுவும் மறப்பதில்லை.  அதில் மட்டும் அபார ஞாபகமுண்டு.  மற்ற லௌகீக விஷயங்கள் எல்லாமே நினைவிலிருந்து காணாமல் போய் விடும்.

சுமார் முப்பத்தைந்து நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மார்க்கி தெ ஸாத்-இன் ஃபிலாஸஃபி இன் தெ பெட்ரூம் நாவலை வாசித்த போது மார்க்கி, உலகில் தன் அன்னையின் யோனியை ஊசி நூலால் தைக்கக் கூடிய பெண்களுக்கு இந்த நாவலை சமர்ப்பணம் செய்வதாக எழுதியிருந்ததும், அதே சம்பவம் நாவலிலும் வருவதும், அதற்கான காரணங்களும் என் நினைவுப் பெட்டகத்திலிருந்து அகலாமல் இருந்து கொண்டிருக்கிறது.    

இப்போது இந்தத் தொடருக்காக நான் Deepak Narang Sawhney தொகுத்த Must We Burn Sade? என்ற நூலை வாசித்த போது அது பற்றி இங்கே உரையாடலாம் என நினைத்தேன்.

கவனியுங்கள், இந்த நூல் கேத்தி ஆக்கருக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.  (ஸீரோ டிகிரி ஆங்கிலப் பதிப்பையும் நான் கேத்தி ஆக்கருக்கே சமர்ப்பித்தேன்.)

இந்தத் தொகுப்பில் கேத்தி ஆக்கர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  அதில் எழுத்து என்றால் என்ன என்று கேத்தி குறிப்பிடுகிறார்.  எழுத்து என்பது வாசகரை ஒரு புதிர்வட்டப் பாதையில் (Labyrinth) கொண்டு விட்டு விட வேண்டும்.  அந்தப் புதிர்வட்டத்திலிருந்து வாசகர் வெளியே வருவதற்கு ஒரே ஒரு சாத்தியம்தான் இருக்கிறது.  அது, இந்த உலகை அழிப்பது (Destroying the world).  (நான் நடத்திய ஒரு சிறுபத்திரிகையின் பெயர் சிதைவு.)  என்னுடைய நேநோ, பிணந்தின்னிகளும் நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும், கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் போன்ற சிறுகதைகளை இந்த அடிப்படையில் மீண்டும் வாசித்துப் பாருங்கள்.  உலகை சிதைவுக்குட்படுத்தும் பிரதிகள் அவை என்று புரியும்.

1794ஆம் ஆண்டு ஸாத் rue de Vaugirard என்ற சிறையில் ஆறு கைதிகளோடு அடைக்கப்படுகிறார். அவர்கள் அனைவருக்கும் அப்போது விஷ ஜுரம் இருந்தது.  அதில் இரண்டு பேர் ஒரே வாரத்தில் இறந்து விட்டனர்.  அதனால் ஸாத் Saint Lazare சிறைக்கு மாற்றப்பட்டார்.  அந்தச் சிறை அதற்கு முன்னால் குஷ்டரோகிகளின் இல்லமாக இருந்தது. 

ஃபிலாஸஃபி இன் தெ பெட்ரூம் நாவலில் வரும் சீமாட்டி ஆங்ஷ் அவளுடைய பன்னிரண்டு ஆண்டு திருமண வாழ்வில் பன்னிரண்டாயிரம் ஆண்களுடன் பாலுறவு வைத்துக்கொண்டவள். 

இதற்கு மாறாக, நாவலில் வரும் பதினைந்து வயது கன்னிப் பெண்ணான யூஜீனீ நாவலின் இறுதியில்தான் தன் கன்னித்தன்மையை இழக்கிறாள் – அதுவும் குதப் புணர்ச்சியின் வாயிலாக.  யூஜீனீயின் இந்த முடிவை எட்டுவதற்காக நாவலில் ஸாத் நூற்றைம்பது பக்கங்களைச் செலவிடுகிறார்.  ஏனென்றால், ஸாதைப் பொருத்தவரை, பௌதீகரீதியாக கன்னித்தன்மையை இழப்பதை விட உளவியல் ரீதியாக அதற்குப் பக்குவப்படுவதுதான் முக்கியமானது.  Now she can do whatever she pleases: fuck and get fucked in every possible way, blaspheme God,… disobey, fuck and sew up her mother’s cunt to ensure that her mother will no longer interfere in Eugenie’s affairs. 

மார்க்கி தெ ஸாதும் ஆட்டோஃபிக்‌ஷன் எழுதியவர்தான் என்பதால், இந்த யூஜீனீ யார் என்று பார்த்தால் அவள் மார்க்கியின் மனைவியின் இளைய சகோதரி ஆன்.  ஆன் மீது மிகத் தீவிரமான காதல் கொண்டிருந்தார் மார்க்கி.  ஆனும் அதே அளவு தீவிரத்துடன் மார்க்கியைக் காதலிக்கிறாள்.  இவர்களின் காதலை முறியடிக்கவும், தன் இளைய மகளின் கன்னித்தன்மையைக் காப்பாற்றவும் ஆனின் தாய் (மார்க்கியின் மாமியார்) பல சதிகள் செய்து மார்க்கியை சிறையில் அடைக்கிறாள்.  மார்க்கி சிறையில் இருக்கும்போதே ஆன் திருமணம் ஆகாமலேயே இறந்து போகிறாள்.  இந்தப் பின்னணியில், தன் மாமியாரின் மீது கொண்ட வெஞ்சினத்தின் காரணமாகத்தான் அவள் யோனியை ஊசி நூலால் தைப்பதற்கு தன் நாவலின் நாயகி யூஜீனீயைப் பயன்படுத்துகிறார் மார்க்கி.  நாவலின் மற்றொரு இடத்தில் யூஜீனீ தன் தாயைக் கொல்ல விரும்புவதாகக் கூறுகிறாள். 

நாவலில் வரும் ஒரு கதாபாத்திரமான தொல்மான்ஸ் தன் மாணவியான யூஜீனீயிடம் சொல்கிறான்: ”பெண்களுக்கு இரண்டே வழிகள்தான் உள்ளன.  ஒன்று, விபச்சாரம்.  இரண்டு, திருமணம். நீயோ சீமாட்டி என்பதால் விபச்சாரியாக ஆக முடியாது.  மனைவியாகத்தான் ஆக முடியும்.  மனைவியாக ஆனால் நீ வாழ்நாள் முழுவதும் உன் கணவனுக்கு அடிமையாகத்தான் இருந்தாக வேண்டும்.  இப்படிப்பட்ட ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண் தனக்கான இன்பத்தையும் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் அடைய வேண்டுமானால் அவள் ஏமாற்றுக்காரியாகவும் வஞ்சகக்காரியாகவும்தான் மாற வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பெண் சுதந்திரம் என்பது ஒரே ஒரு இடத்தில்தான் இருக்கிறது.  அது உன் குதம்.  யோனிக்குப் பதிலாக குதத்தையே உன் சுதந்திரத்தின் பிறப்பிடமாகக் கொள்.”

இப்போது சீமாட்டி ஆங்ஷ் உரையாடலைத் தொடர்கிறாள்: ”பெண்களின் அடிமைத்தனம் பெண் கர்ப்பமாவதிலிருந்துதான் தொடங்குகிறது.  ஆகவே, நீ கர்ப்பமாவதைத் தடுப்பதன் மூலமாகத்தான் நீ உன் சுதந்திரத்தை அடைய முடியும்.   இந்த ஒரு விஷயத்தில்தான் உன் சுதந்திரமே அடங்கியிருக்கிறது.  பெண்ணாகிய உன்னுடைய உடலின் சுதந்திரம் உனக்கு மட்டுமே உரித்தானது.  உன் தாய்க்கோ, கடவுளுக்கோ, மதத்துக்கோ, அரசுக்கோ வேறு எந்த நிறுவனங்களுக்குமோ உன் உடல் மீது எந்த அதிகாரமும் கிடையாது. உன் உடல் உன் சொத்து.  உன் உடலை நீ என்ன விதமாகப் பயன்படுத்த வேண்டும் என்பது உன்னுடைய தனிப்பட்ட உரிமை.  அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.

அப்போது யூஜீனீ குறுக்கிடுகிறாள்.  பிறக்கப் போகும் தருணத்தில் உள்ள என் குழந்தையைச் சிதைப்பதற்கும் எனக்கு உரிமை இருக்கிறதா?

நிச்சயமாக இருக்கிறது.  கருக்கலைப்பு என்பது நிச்சயமாகக் கொலைதான்.  ஆனால் சிசு உன் உடம்பிலிருந்து இன்னும் தனித்து இயங்கும் நிலைமையில் இல்லை.  அப்படி இருந்தால் மட்டுமே அதன் உரிமையில் நீ குறுக்கிடுவதாக ஆகும்.  குழந்தை உன் வயிற்றுக்குள் இருக்கும் வரை அதைக் கொல்லும் உரிமையும் உனக்கு உண்டு.  மேலும், கடவுள் என்ற கருத்தாக்கம்தான் உன்னுடைய உடம்பை விட உன் வயிற்றுக்குள் இருக்கும் சிசுவைக் கொல்வதிலிருந்தும் உன்னைத் தடுக்கிறது.  கடவுளை நிராகரித்து விட்டு அந்த இடத்தில் இயற்கை என்று வைத்தால் உன் சிசுவைக் கொல்வது உன்னுடைய உரிமைதான் என்று நீ புரிந்து கொள்வாய்.   

ஆணாதிக்க சமூகத்தில் பெண்களே இல்லை; அங்கே இருப்பது பலி கொடுக்கப்பட்டவர்களும், ஆண்களும் மட்டுமே; அங்கே பெண்களுக்கான அடையாளம் என்பதே ஆண்கள் பெண்களைப் பார்ப்பதிலிருந்துதான் (male gaze) உருவாகிறது.  ஆணாதிக்க சமூகத்தில் ஆண்களின் பார்வை இல்லையென்றால் பெண்களே இல்லை.

Lucy Irigaray says: “Of course what matters is not the existence of an object – as such it is indifferent – but the simple effect of a representation upon the subject, its reflection, that is, in the imagination of a man.”   

அதாவது, ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கான இருப்பே இல்லை; பெண்களைப் பற்றிய ஆண்களின் கற்பனையும் அதன் பிரதிபலிப்புமே பெண்களின் இருப்பாக ஆகிறது. 

கேத்தி ஆக்கர் இந்த அத்தியாயத்தை இப்படி முடிக்கிறார்:

”ஸாத் ஆணாதிக்கத்தை வெறுக்கும் ஒரு ஆணாதிக்கவாதி.  அவர் செல்வதற்கு வேறு இடம் இல்லை.  சிறையில் அடைக்கப்பட்ட ஸாத் என்ற எலி தன் கூண்டுக்குள் அல்லது புதிர்வட்டத்துக்குள் இருந்தபடி கடும் சீற்றமடைகிறது.  நம்முடைய கன்னித்தன்மையைத் தூக்கி எறிவதற்கு அந்த எலி தன்னுடைய பிரதியைப் பயன்படுத்துகிறது.  அந்த எலி தூக்கியெறிய முனைவது நம்முடைய உடலின் கன்னித்தன்மையை அல்ல; நம்முடைய மரபார்ந்த சிந்தனையினால் உருவாக்கப்பட்ட கன்னித்தன்மையை.  தன்னுடைய எழுத்தின் மூலமாக அந்த சிறைப்படுத்தப்பட்ட எலி தர்க்கங்களினால் உருவான நம்முடைய அடையாளத்தைத் தூக்கியெறிவதற்காக நம்மை வசியத்துக்குள்ளாக்குகிறது.  இதில் பெண்களும் தப்பவில்லை.  ஆண்களும் தப்பவில்லை.” 

நாளை தொடரும்…

சந்தா/நன்கொடை வரத்து சுத்தமாக நின்று விட்டது. இதுவரை அனுப்பாதவர்கள் அனுப்பி வையுங்கள். குறைந்த பட்ச சந்தா 300 ரூ. அதற்கு மேலும் அனுப்பலாம். அது உங்கள் விருப்பத்தைப் பொருத்தது.

ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai