Berserk என்ற மனநிலை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். நடுரோட்டில் நின்று கொண்டு கையிலிருக்கும் கத்தியால் எதிரே வருவோரையெல்லாம் குத்துபவன் பெர்செர்க் மனநிலையில் இருப்பவன் எனலாம்.
அம்மாதிரி மனநிலையில் நின்று ஒரு கதை எழுதினால் எப்படி இருக்கும்? அதைத்தான் காலையிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்தக் கதைக்காக என் குடும்பம் குலையலாம். பல உறவுகள் என்னிடமிருந்து நிரந்தரமாக விலகிப் போகலாம். என் மீது வழக்குத் தொடுக்கப்படலாம். என் உயிருக்கே கூட பங்கம் வரலாம். அப்படிப்பட்ட ரத்தவிளாறுக் கதை அது. கதையில் முதல் பலி அராத்து. அராத்து என்றே பெயர் போட்டிருக்கிறேன். மற்ற கதாபாத்திரங்களுக்குப் பெயர் இல்லை.
குருதியில் தோய்ந்து எழுதப்பட்ட கதை. காத்திருங்கள். இத்தனை வன்மத்துடன் நான் சமீப காலத்தில் எழுதியதில்லை. முழு வன்மம்.
தமிழ்க் கதைதான். தலைப்பு மட்டுமே ஆங்கிலம்.