A Story of a Berserk Mind

முன்குறிப்பு: இந்தக் கதை நான் எழுதிக்கொண்டிருக்கும் வீடு என்ற நாவலில் வரும் ஒரு அத்தியாயம்.  வீடு என்பது தற்போதைய தலைப்புதான்.  நாவல் வெளிவரும்போது தலைப்பை மாற்றி விடலாம் என்று இருக்கிறேன்.  இந்தக் கதை என் உறவினர் பலரையும் புண்படுத்தும்.  மன உளைச்சலுக்கு உள்ளாக்கும்.  அவர்கள் என்னை எப்படிப் பழிவாங்க நினைக்கிறார்களோ அப்படிப் பழிவாங்குவது அவர்களின் உரிமையும் சுதந்திரமும் ஆகும்.  அதில் நான் குறுக்கிட முடியாது.  சட்டப்படி என் மீது நடவடிக்கை எடுக்கலாம்.  மான நஷ்ட வழக்குத் தொடுக்கலாம். (மாரியோ பர்கஸ் யோசா மீது அப்படித்தான் அவருடைய சித்தி வழக்குத் தொடுத்தார்.)  அல்லது, அவர்களுக்கு எது ப்ரீதியோ அந்தப்படி என்னைப் பழி வாங்கலாம்.  இத்தனை பிரச்சினைகளையும் மீறி நான் இந்தக் கதையை எழுதுவதற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு.  இதுவரை – இந்த எழுபது வயது வரை – ஒரே ஒரு நாள் கூட இரவில் உறக்கம் வராமல் புரண்டதில்லை.  இன்றைய காலகட்டத்தில் உறக்கமின்மைதான் பெரும் பிரச்சினையாக இருக்கிறதென்று மருத்துவர்களும் என் நண்பர்கள் பலரும் குறிப்பிடுகிறார்கள்.  ஆனால் எனக்கு ஒரு நாள் கூட அந்தப் பிரச்சினை இருந்ததில்லை.  பத்தரைக்குப் படுத்தால் அடித்துப் போட்டது போல் தூங்கி விடுவேன்.  நேற்று இரவு அப்படி இல்லாமல் போயிற்று.  காரணம், எனக்கு என் தங்கை மகள் அனுப்பியிருந்த ஒரே ஒரு வாட்ஸப் குறுஞ்செய்தி.  அந்தக் குறுஞ்செய்தியில் அப்படி ஒன்றும் மலையைப் புரட்டும் விஷயமெல்லாம் இல்லை. சப்பை மேட்டர்தான்.  ஆனால் அதிலிருந்து தொடங்கி, ஒன்றைத் தொட்டு ஒன்றாக சங்கிலி போல் கோர்த்துக் கோர்த்துக்கொண்டு ஓடியது யோசனை.  நித்திரை காலி.  மூன்று மணி வரை உறக்கம் இல்லை.  என்ன செய்யலாமென்று ஃபேஸ்புக்கைப் புரட்டினேன்.  ஃபேஸ்புக் என்றாலே மன உளைச்சல்தான் என்று எல்லோரும் புலம்புவார்கள்.  ஆனால் எனக்கு ஒருபோதும் அப்படி ஆனதில்லை.  ஏனென்றால், நான் ஆயிரக்கணக்கான நபர்களை ரத்து செய்திருப்பதால் எனக்கு என் மனதுக்குப் பிரியமான விஷயங்கள் மட்டுமே ஃபேஸ்புக்கில் வரும்.  உதாரணமாக, மகா பெரியவரின் அருள் வாக்கு, அந்த மாதிரி. 

ஆனால் நேற்றுதான் நான் நித்திரா தேவியின் கோபத்துக்கு ஆளாகியிருந்தேனே?  ஃபேஸ்புக்கில் பார்த்தால் ஏதோ ஒரு படத்துக்கு அராத்து எழுதியிருந்த விமர்சனம்.  படித்தவுடன் பெரிய பட்டாக்கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு சாகலாம் போல் இருந்தது.  அப்படி ஒரு தமிழ்.  என் தாயை நாலைந்து பேர் சேர்ந்து வன்கலவி செய்வதை நான் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க நேர்ந்தால் எப்படி இருக்கும்?  சரி, தாய் என்றால் புனிதம்.  நீயோ ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தாளன்.  நீ எப்படி புனித உதாரணங்களைப் போடலாம் என்கிறீர்களா?  அப்படியானால் இப்படி வைத்துக்கொள்ளுங்கள்.  ஒரு ஐந்து வயதுச் சிறுமியை ஒருவன் வன்கலவி செய்வதை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்க நேர்கிறது.  உங்கள் கைகால்கள் கட்டிப்போடப்பட்டிருக்கின்றன.  அராத்துவுக்கும் எனக்கும் இடையே என் கைகால்கள் கட்டிப் போடப்பட்டிருப்பது எப்படி என்கிறீர்களா?  நட்புதான்.  இல்லாவிட்டால் எத்தனையோ பேர் எப்படியெப்படியெல்லாமோ தமிழை வன்கலவி செய்துகொண்டிருக்கிறார்கள்.  அதையெல்லாம் பார்த்து நான் மன உளைச்சல் அடைந்திருக்கிறேனா என்ன? 

நானோ எதற்கும் கலங்காதவன்.  ஹிரோஷிமா அருங்காட்சியகத்தில் ஆயிரக்கணக்கான பிரேதங்களின் புகைப்படங்களைப் பார்த்து எனக்கு ஒரு அணுவளவு கூட மனச் சலனம் ஏற்படவில்லை.  எப்படி ஏற்படும்?  மானுட இனமே இப்படித்தானே குருதியில் குளித்துக்கொண்டிருக்கிறது?  இப்போது கூட பாங்ளா தேஷ் வன்முறைகள் பற்றிப் பலரும் எனக்கு செய்தி அனுப்பினார்கள்.  ஆனால் எனக்கு ஈராக்கில் பெண்களின் திருமண வயது ஒன்பது என்பதாக புதிய சட்டம் அமுலாவதை எண்ணித்தான் மனம் பதைபதைத்த்து.  ஆனாலும் ஒரு க்ஷணம்தான்.  மனிதர்களே அரக்க இனம்தானே என்று தேற்றிக்கொண்டு விட்டேன்.  அப்படியிருக்கும்போது அராத்துவின் தமிழ் வன்கலவிக்கு நான் ஏன் உறக்கமின்றித் தவிக்க வேண்டும்? 

சுயநலம்தான் காரணம்.  என் எழுத்தை நான் என் சுவாசத்தை விட முக்கியமாகக் கருதுகிறேன்.  ஏனென்றால், நான் எழுதுவதை இந்த உலகில் உள்ள வேறு எந்த எழுத்தாளனாலும் எழுத முடியாது.  நான் ஒருவன்தான்.  அப்படிப்பட்ட என் எழுத்தை செப்பனிடத் தகுதியான ஒரே ஆள் அராத்துதான்.  அப்படிப்பட்டவரின் நட்பு எனக்கு முக்கியம் இல்லையா?  இன்னொரு காரணம், எனக்கு எத்தனையோ நண்பர்கள் உண்டு.  அவர்களில் அராத்துவோடு பழகிய இந்தப் பதினைந்து ஆண்டுகளில் என்னை ஒரே ஒரு முறை கூட மன உளைச்சலுக்கு ஆளாக்காத ஒரே ஆடவர் அவர் மட்டுமே.  இத்தனைக்கும் அடுத்தவருக்கு மன உளைச்சல் தருவதற்கு எந்தத் தயக்கமும் இல்லாதவர் அவர்.  அதிலெல்லாம் எந்த மென் உணர்வும் கொள்ள மாட்டார்.  அப்படிப்பட்டவர் எனக்கு எந்த மன உளைச்சலும் தந்ததில்லை.  அதற்காக அவர் என் மீது விசேஷமான அன்பு கொண்டிருக்கிறார் என்றெல்லாம் அர்த்தமில்லை.  அவர் மன உளைச்சல் கொள்ளும் அளவுக்கு நானும் நடந்து கொண்டதில்லை.  அல்லது, இந்த விஷயத்துக்கு அராத்து வேறு நல்ல விளக்கமும் கொடுக்கக் கூடும். 

சரி, அராத்து தமிழை வன்கலவி செய்தால் என் மயிருக்கு என்ன போச்சு என்று இருப்பதுதான் இந்த விஷயத்தில் தர்க்கரீதியானதாக இருக்கும்.  ஏனென்றால், மனித இனத்தின் வயது மூன்று லட்சம் ஆண்டுகள்.  இந்த லட்சணத்தில் தமிழ், சம்ஸ்கிருதம் போன்ற மொழிகள் தோன்றி வெறும் ஐந்தாயிரம் ஆண்டுகளே இருக்கும்.  இதில் இன்னும் பத்து லட்சம் ஆண்டுகளில் உலகமே அழிந்து விடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.  அதையெல்லாம் விடுங்கள்.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத் தமிழையே இப்போது வாசிக்க முடியவில்லை; உரை தேவைப்படுகிறது.  அப்படியிருக்கும்போது இன்னும் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் எப்படி இருக்கும் என்று யார் சொல்ல முடியும்? 

’யோவ், உன் வயதே எழுபது.  இன்னும் அதிக பட்சம் நீ இருபது ஆண்டுகள் வாழலாம்.  இந்த நிலையில் தமிழ் எப்படிப் போனால் உனக்கென்ன?’ என்று ஓடியது இன்னொரு யோசனை.  ”’எந்த ஒரு மொழியும் இனமும் கலாச்சாரமும் அழிந்து போகிறது என்றால் அதன் அழிவின் கூறுகள் வெளியிலிருந்து வருவதில்லை; அதற்குள்ளேயே இருக்கின்றன’ என்கிற போது நீ யாரடா சுன்னி?” என்பதோடு அந்தப் பிரச்சினையிலிருந்து விலகினேன்.  அப்போதும் உறக்கம் வரவில்லை. 

மணி மூன்று. கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன்.  உறக்கம் வருகிறாற்போலவே தெரியவில்லை.  எப்படி வரும்?  சிந்தனை முழுவதும் என் தங்கை மகளின் வாட்ஸப் குறுஞ்செய்தியைத் தொடர்ந்த கதைகளில் ஓடிக்கொண்டிருந்தது. 

பிறகு ஒருமணி நேரம் பாலியல் தளங்களில் படம் பார்த்து கதை படித்து நேரத்தை ஓட்டினேன்.  

மணி நான்கு. அதற்கு மேல் அரைத் தூக்க நிலையில் ஏகப்பட்ட கொடுங்கனாக்களோடு ஏழரை வரை படுக்கையில் கிடந்தேன். 

முன்குறிப்பு முற்றும்.  இனி கதை.

என் தங்கை மகள் ஜாடையில் என்னைப் போலவே இருப்பாள்.  ஐந்தாறு வயது வரை என் தோளிலும் மார்பிலும் கிடந்தவள்.  என்னைப் போலவே புத்திசாலி.  நல்ல படிப்பாளி.  என் தங்கைக்கு ரொம்பப் பெருமை, ரவி அண்ணன் போலவே இருக்கிறாள் என்று. ஜாடையில் மட்டும் அல்ல.  படிப்பிலும் சூட்டிகையிலும்.  எல்லாவற்றிலும் முதல் மதிப்பெண்.  மட்டுமல்ல.  ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதினாள்.  நன்றாகப் போயிற்று.  இரண்டாவதாக ஒரு நாவல் எழுதினாள்.  ஆங்கிலத்தில்தான்.  அதுவும் நன்றாகப் போயிற்று.  இப்போது மூன்றாவதாக ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறாள்.  அது பற்றியதுதான் அவள் அனுப்பிய வாட்ஸப் குறுஞ்செய்தி. அதை அப்படியே தருகிறேன். 

When I know very well that people will not easily buy and read my book, I am finding it really hard to write my third book. I have started it, but all the way wailing. Emotionally exhausting. My reading has also reduced due to the academic work. Still somehow managing. I can’t say I am busy knowing how busy you are… just falling apart without discipline I guess. Hope I will have your perseverence if not the literary knowledge. Thanks for being an all time motivation, mama.

இந்தக் குறுஞ்செய்திதான் என்னை நேற்று இரவு பூராவும் உறங்கவிடாமல் செய்து விட்டது.  அப்படி இந்தச் செய்தியில் என்ன இருள் புதிர் இருக்கிறது? 

எனக்கும் என் பெற்றோருக்கும், என் தம்பி தங்கைகளுக்கும் எந்த செய்திப் பரிவர்த்தனையும் மற்ற சொந்த பந்தத் தொடர்புகளும் இல்லை.  என் தம்பிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்த போதுகூட நான் அவனைப் போய்ப் பார்க்கவில்லை.  அவனாக என்னைத் தொடர்பு கொண்டு பார்க்க வேண்டும் என்று சொல்லியும்.  அவனுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் என் தீவிர வாசகர் என்றும் சொன்னான்.  பிறிதொரு சமயத்தில் அந்த மருத்துவரை சென்னை புத்தக விழாவில் சந்தித்த போது மிகவும் ஆச்சரியமாகவே அந்த விஷயத்தைப் பிரஸ்தாபித்தார்.  “நீங்கள் உங்கள் தம்பியைப் பார்க்க வருவீர்கள் என்று மிகவும் எதிர்பார்த்தேன்.  என் பள்ளி நாள்களிலிருந்து நான் மிக விரும்பிப் படிக்கும் எனக்குப் பிடித்த எழுத்தாளரை அப்போதாவது நேரில் பார்த்து விட வேண்டும் என்று விரும்பினேன்.” 

பரவசமான தொனியில்தான் பேசினார்.

ஏன் போய்ப் பார்க்கவில்லை என்பதற்கான காரணம் எளிது.  நான் இப்போது நூற்று நாற்பது நூல்கள் எழுதியிருப்பேன்.  எழுபது புத்தகங்களாக வந்து விட்டன.  எழுபது இன்னும் வர வேண்டும்.  எல்லாம் ஸ்ரீராமிடம் தொகுக்கப்பட்ட நிலையில் இருக்கின்றன.  நான் அவற்றை ஒருமுறை வாசித்துப் பார்க்க வேண்டும் என்பதால் அப்படியே நிற்கின்றன.

இப்படி தம்பி மரணத்திலிருந்து தப்பிப் பிழைத்ததைப் போய்ப் பார்க்காமல் இருப்பது, தங்கை பெண் வீடு கட்டியதைப் போய்ப் பார்க்காமல் இருப்பது என்று உங்களுக்கும் ஆயிரம் சம்பவங்கள் இருக்கும் இல்லையா?  நீங்கள் போயே ஆக வேண்டும்.  நான் ஒரு துறவி.  உறவு பந்தம் பாசம் அறுத்தவன்.  ஏன்?  எழுத்துக்காக.  அதனால் மட்டுமே என்னால் இந்த நூற்று நாற்பது நூல்களை எழுத முடிந்தது. 

ஆனாலும் என் தங்கை பெண் பற்றி எனக்குள் ஒரு ஆதங்கமும் கோபமும் இருந்தது.  அவள் மீது மட்டும்.  அவள் மற்றவர்களைப் போல் அல்ல.  படிப்பவள்.  ஆங்கிலத்தில் எழுதுபவள்.  நான் யார் என்று தெரிந்தவள்.  அவள் கூட என்னைத் தொடர்பு கொண்டதே இல்லை.  உறவுக்காரியாக அல்ல.  என் வாசகியாகத் தொடர்பு கொண்டிருக்கலாம் இல்லையா?  சரி, தொடர்புதான் கொள்ளவில்லை.  நான் என் ஜீவனத்துக்காகப் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறேன்.  ஒரு பேரரசனின் வீட்டைப் போல் ஒரு வீட்டைக் கட்டியிருப்பவள் என் பிச்சைப் பாத்திரத்தில் ஒன்றிரண்டு நாணயங்களை விட்டெறிந்திருக்கலாமே? 

பிச்சை என்றதும் மனம் சுருங்காதீர்கள் நண்பர்களே, இந்த தேசத்தில் ஆசான்கள் எப்போதும் அடுத்த நாள் உணவைத் தங்கள் இல்லத்தில் சேமித்து வைத்திருக்கலாகாது என்ற வழமை இருந்து வந்தது.  அதனால்தான் தியாகராஜர் உஞ்சவிருத்தி செய்தார்.  ஒருநாள் கடும் மழை என்று வைத்துக்கொள்ளுங்கள்.  அன்றைய தினம் உஞ்சவிருத்திக்குச் செல்ல முடியாது.  பட்டினிதான்.  அன்றன்றைக்குப் பிச்சை எடுத்து உண்ண வேண்டும்.  நான் அப்படியில்லைதான்.  ஆனால் நாளை பற்றிய எந்த நிச்சயமும் என்னிடம் இல்லை.  அராத்து அடிக்கடி கேட்பார்.  ”பூனைகளுக்காக   மாதம் அறுபதாயிரம் ரூபாய் செலவு செய்கிறீர்கள், பயணம் செல்கிறீர்கள், இத்தனை அநியாய வாடகை கொடுத்து மைலாப்பூரிலேயே வாழ்கிறீர்கள், எல்லாம் உங்கள் வாசகர்கள் கொடுப்பது.  சரி.  நாளையே அவர்கள் கொடுக்காவிட்டால் என்ன செய்வீர்கள் சாரு?  அவர்கள் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள் என்பது என்ன நிச்சயம்?  கொஞ்சமாவது சேர்த்து வைத்துக் கொள்ளுங்களேன்.  எனக்கே உங்கள் நிலையை நினைத்தால் வயிறு கலங்குகிறது.”

சேர்த்து வைப்பது ஆசான்களின் வழக்கம் இல்லை.  இப்போது இந்த க்ஷணம் கடவுள் என் கண் முன் தோன்றி, “பிள்ளாய், என்ன வரம் வேண்டும் கேள்” என்று கேட்டால், “ஒரு பாட்டில் சீலே வைன் வேண்டும் அப்பனே” என்றுதான் சொல்வேன்.  இன்றைய இரவுக்கு அதுதான் தேவை.  அதுவும் சென்னையில் என் வீட்டில் வைத்துக் குடிக்க முடியாது.  ”அராத்துவுக்கு அனுப்பி விடுங்கள்.  நான் பெங்களூர் போகும்போது குடித்துக் கொள்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும்.”

நடந்திருக்கிறது.  ஒரு கோடீஸ்வர நண்பர் ஆறு மாதங்களுக்கு முன்பு என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “மாதாமாதம் உங்களுக்குப் பணம் அனுப்ப விரும்புகிறேன், எவ்வளவு வேண்டும்?” என்று கேட்டார். 

இருபதாயிரம் என்றேன்.

போதுமா?

போதும்.

மறுநாள்தான் தோன்றியது, அடக் கடவுளே, என் நாவில் தீயை வைத்துப் பொசுக்க… ஒரு லட்சம் என்று கேட்டிருக்கலாமே?  அவர் கோடீஸ்வரர் அல்ல.  பில்லியனர்.  அவருக்கு ஒரு லட்சமெல்லாம் கால் தூசு.  ஆனால் என்னுடைய அப்போதைய மாதாந்திர பட்ஜெட்டில் துண்டு விழுந்தது இருபதாயிரம்தான்.  அதைத்தான் கேட்டேன்.  இப்போது இன்னும் இருபதாயிரம் ரூபாய் துண்டு விழுகிறது.  இன்னொரு புதிய நண்பர் மாதம் இருபதாயிரம் கொடுக்கிறார். 

ஆசான்களால் சொத்து சேர்க்க முடியாது.  சேர்த்தால் ஞானம் சேர்க்க முடியாது.  இப்படி ஒரு நம்பிக்கை இந்த தேசத்தில் இருந்து வருகிறது.

அதனால்தான் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

தஞ்சாவூர் சர்ஃபோஜி மஹாராஜா தியாகராஜரை அரசவைக் கவியாக அழைத்துக்கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் தியாகராஜரின் தந்தை சர்ஃபோஜியிடம் அரசவைக் கவியாக இருந்தவர்.  ஆனால் அங்கே போனால் அரசரைப் பாட வேண்டும்.  தியாகராஜரோ மானிடரைப் பாட மாட்டார்.  அதனால் தினந்தோறும் பிச்சை எடுத்து உண்டார்.  இது பொறுக்காத மஹாராஜா ஒருநாள் தியாகராஜரின் உஞ்சவிருத்திப் பையில் தன் சேவகனைக் கொண்டு சில பொற்காசுகளைப் போடச் சொன்னார்.  அவனும் போட்டான்.

இல்லம் வந்த தியாகராஜர் அரிசிப் பையில் அரிசியோடு பொற்காசுகளும் இருப்பதைக் கண்டு அதைக் கொண்டுபோய் தெருவில் போட்டு விட்டு வந்தார். 

கட்டுக்கதை அல்ல.  இந்தியாவின் ஒப்பற்ற ஆட்டோஃபிக்‌ஷன் எழுத்தாளரான தியாகராஜர் இந்தச் சம்பவத்தைப் பாடியும் இருக்கிறார். 

நானும் சினிமாவுக்குப் போனால் பொற்காசுகள் கிடைக்கும்.  ஆனால் அதற்கு நான் கமலையும் ரஜினியையும் பாட வேண்டுமே?  முடியுமா?

என் நண்பர் ஒருவர் மாதம் பத்தாயிரம் ரூபாய் அனுப்பிக்கொண்டிருந்தார்.  என் ஆயுள் உள்ள வரை வந்து கொண்டிருக்கும் என்றார்.  இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென்று ஆளைக் காணோம்.  பணத்தையும் காணோம்.  நான் ஃபோன் பண்ணினால் பதில் இல்லை. 

ஒரு ஆண்டு கழிந்தது.  ஆள் வந்தார்.  மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பேச முடியாமல் போய் ஒரு ஆண்டு சிகிச்சையில் இருந்தாராம்.  அடுத்து அவர் சொன்னதுதான் நம்ப முடியாதது.  கந்தசாமி என்பவர் உங்களுக்கு மாதாமாதம் பத்தாயிரம் அனுப்பினாரா என்றார்.  என் வங்கிக் கணக்கைப் பார்த்தேன்.  ஆமாம். 

அவர் என் கணக்கப்பிள்ளை.  அவரிடம் சொல்லியிருந்தேன். 

இன்னொரு சம்பவம்.  ஆனந்தி.  இதோ ஆறேழு ஆண்டுகளாக எனக்கு மாதம் நான்காயிரம் (அல்லது, ஐயாயிரம், சரியாகத் தெரியவில்லை) பெறுமானமான அலோபதி மருந்துகளை அனுப்பிக்கொண்டிருக்கிறாள்.  அவள்தான் அனுப்புகிறாள் என்பதே எனக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் தெரிந்தது.  தெரிந்ததும் ஐயோ என்று பதறி விட்டேன்.  ஏனென்றால், அவள் உடல் மற்றும் மனம் பழுதுபட்ட குழந்தைகளின் செவிலியாகப் பணி புரிகிறாள்.  அந்த வேலைக்கு என்ன, இருபதாயிரம் இருக்குமா?  இனி அனுப்ப வேண்டாம் என்று கட்டாயமாகச் சொன்னேன்.

இல்லை சாரு, நான் மாலை நேரத்தில் ட்யூஷனும் எடுக்கிறேன், அதில் ஒரு இருபதாயிரம் வருகிறது.  மறுக்காதீர்கள்.  என் வாழ்வில் ஒளியேற்றித் தந்த ஆசானுக்குத் தருகிறேன்.

வாயை மூடிக் கொண்டேன்.

இப்போதும் எனக்கு மாதம் நூறு ரூபாயிலிருந்து ஐநூறு ரூபாய் வரை அனுப்பும் பத்து ஆட்டோ டிரைவர் வாசகர்கள் உண்டு.

ஆனால் அரண்மனை போல் சென்னையில் வீடு கட்டியிருக்கும் என் தங்கை மகள் எனக்கு இனிக்க இனிக்கக் குறுஞ்செய்தி அனுப்புகிறாள். 

மட்டுமல்ல.  இந்த சந்தா/நன்கொடைத் திட்டத்தை ஆரம்பித்ததிலிருந்து சுமார் நூறு பேர் சந்தா/நன்கொடை அனுப்பியிருக்கிறார்கள்.  அதில் அதிக பட்சம் பத்து பேர்தான் பெண்கள். 

மனசில்லையா?  பணமில்லையா?  பொருளாதாரச் சுதந்திரம் இன்னும் அடையவில்லையா?  அல்லது, ஈராயிரம் ஆண்டுகளாக அடிமைகளாகக் கிடந்ததால் பணம் கிடைத்ததும் அதை இறுக்கி வைக்கத் தோன்றுகிறதா?  தெரியவில்லை.  இதற்கு மேல் ஒரு வார்த்தை இது பற்றி நான் எழுத விரும்பவில்லை. 

என் தங்கை மகள் என்னைப் போலவே இருப்பாள் என்று சொன்னேனா?  தோற்றத்தில் மட்டுமல்ல, பழக்க வழக்கங்களிலும் தொற்றிக்கொண்டிருக்கிறது மரபணு.  நான் பச்சை மிளகாய் ரசிகன்.  முன்பெல்லாம் நான் எப்போது சாப்பிட்டாலும் இரண்டு பச்சை மிளகாய் கடித்துக் கொள்வேன்.  இப்போது வயதாகி விட்டதால் ஒன்று.  ராயர் கஃபேயில் இட்லி படுமோசமாகி விட்டாலும் அங்கிருந்துதான் நான் இட்லி வாங்கிச் சாப்பிடுவதன் ஒரே காரணம், இந்த உலகத்திலேயே இட்லிக்குப் பச்சை மிளகாய் சட்னி கொடுக்கும் ஒரே உணவகம் ராயர் கஃபேதான்.  பச்சை மிளகாயை மைய அரைத்து அதில் அளவாக உப்பிட்டால் அது பச்சை மிளகாய் சட்னி. 

படு குஷியான குரலில் என் தங்கை மகள் ஒருநாள் என்னை ஃபோனில் அழைத்து தான் வீடு கட்டிய கதையைச் சொன்னாள்.  அதுதான் அவளுடைய முதல் நாவலின் கரு.  பழைய பாரம்பரிய வீடு.  ஒவ்வொரு பொருளும் நூறு ஆண்டுகள் வயதானவை.  தோட்டம் போட்டிருப்பதையும் சொன்னாள்.  நான் கேட்ட முதல் கேள்வி, பச்சை மிளகாய்ச் செடி வைத்தாயா?

மரபணு பேசியது.  “மாமா, என்னைப் பற்றி எனக்கே பெருமையா இருக்கு.  தோட்டத்தில் நான் வைத்த முதல் செடியே பச்சை மிளகாய்ச் செடிதான்.  அது மட்டும் அல்ல.  நானும் உங்களைப் போலவே பச்சை மிளகாய் இல்லாமல் சாப்பிட மாட்டேன்.  அம்மா சொல்லிக்கொண்டே இருப்பார்கள்,  அப்படியே ரவி அண்ணனை உரித்து வைத்திருக்கிறாள் என்று.”

இவளை நான் ஆறு ஆண்டுகளுக்கு முன் சென்னை புத்தக விழாவில் பார்த்தேன்.  அப்போதெல்லாம் அவளுடன் பேச்சு வார்த்தை இல்லை.  பல ஆண்டுகளாகத் தொடர்பு இல்லை.  வந்தாள்.  ஸீரோ டிகிரி நூலை நீட்டினாள்.  எப்போதும் துலங்கும் புன்சிரிப்பு.  நானும் சிரித்தபடி கையெழுத்திட்டேன்.  என்னுடைய புனைப்பெயரின் ஒரு பாதிதான் அவளுடைய நிஜப்பெயர்.  மற்றபடி நான் ஒரு வார்த்தை பேசவில்லை. 

சற்று குரூரமாகத்தான் இருக்கும்.  பத்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் பார்த்து, பேசி.  அதனால்தான் நான் பேசவில்லை.  ஏய், நீ இலக்கியம் தெரிந்தவள்.  யார் யாரோவெல்லாம் என்னோடு பேசும்போது நீ ஏன் பேசவில்லை?  அந்தக் கோபத்தில்தான் அன்றைய தினம் பேசவில்லை.  பார்த்துக்கொண்டிருந்த நண்பர்களால் என் செய்கையை நம்பவே முடியவில்லை.

ஆனால் என் வயது அப்போது அறுபத்திரண்டு.  ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்து சாகப் பார்த்தேன்.  செத்திருந்தால் நீ என்னோடு பேசியே இருந்திருக்க மாட்டாய்தானே? – அதுதான் என் தர்க்கம்.

ஆனால் அடுத்த ஆண்டு புத்தக விழாவில் பேசினேன்.  தொலைபேசி எண்களை மாற்றிக்கொண்டோம். 

அவள் பிஸினஸ் மேனேஜ்மெண்ட்டில் டாக்டரேட் வாங்கி, தமிழ்நாட்டுக்கு அண்டை மாநிலம் ஒன்றில் உலகப் புகழ் பெற்ற ஒரு கல்வி நிறுவனத்தில் பேராசிரியையாகப் பணி புரிகிறாள்.  ஏகப்பட்ட செமினார்கள் அது இது என்று ஒரே அதகளம்.  அதற்கிடையில்தான் முதல் நாவல்.

நான் முதல் நாவலில் சில அத்தியாயங்களைப் படித்து என் இணைய தளத்தில் எழுதினேன்.

அதற்கு வந்த இரண்டு குறுஞ்செய்திகள்:

Mama, this is so generous! How could you???! I am speechless mama… I didn’t even request you considering the epitome of your status… this is completely unaccepted, can’t thank you more…

This is beyond my dream. I don’t know, feeling like some thousand people bought my book. Thank you so much mama. I don’t know how to convey how emotional this is. But truly truly thank you so much. I hope one day I will live up to the support you just poured in.

படித்தீர்களா?

சென்ற ஆண்டு அவள் பேராசிரியையாகப் பணி புரியும் ஊருக்கு ஒரு இலக்கிய விழாவுக்காகச் சென்றேன்.  வருவதாகவும் சொல்லி விட்டேன்.  நான் தங்கியிருந்த ஓட்டலுக்கும் அவள் வீட்டுக்கும் அரை மணி நேர தூரம் என்று எழுதியிருந்தாள்.

நான் மாலை எட்டு மணிக்குப் போய்ச் சேர்ந்தேன்.

அவளிடமிருந்து ஒரு அழைப்பு இல்லை.  எங்கே சாப்பிடுவீர்கள்? வந்து அழைத்துக்கொண்டு போகட்டுமா?  ஒரு கேள்வி இல்லை. 

நானாக அழைக்க விரும்பவில்லை.  நான் அவளுடைய ஊருக்கு வந்திருக்கிறேன்.  அவள் சென்னையில் இருந்த போது ஒரு பத்து முறையாவது வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்திருக்கிறாள்.  நான் அதற்காக நேரம் செலவிட முடியாது.  இப்போது நான் அவளுடைய ஊரில் இருக்கிறேன்.  கொள்ளை நேரம் இருக்கிறது.  அவளிடமிருந்து அழைப்பு இல்லை.  அவள் கணவனாவது வந்து என்னை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு சென்றிருக்கலாம்.

ஓட்டலில் சாப்பாடு நன்றாக இல்லை.  அதனால் சாப்பிடவில்லை.  ஓட்டலில் பாரும் இல்லை.  பக்கத்தில் பார் எங்கே இருக்கிறது என்று மேனேஜரைக் கேட்டேன்.  வெளியே போய் வலது பக்கம் திரும்பினால் உடனே இருக்கிறது ஒரு நாகரீகமான பார் என்றார்.

போனேன்.  புதிய ஊர்.  நல்ல இருட்டு.  என் கழுத்தில் மூன்று செயின்.  அச்சமாக இருந்தது.  கழுத்தை சட்டையால் மூடியபடி நடந்தேன்.  ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது மேனேஜர் சொன்ன பார்.  உள்ளே போனால் நம் டாஸ்மாக்கை விடக் கொஞ்சம் தேவலாம் போல பார்.  ஒரே ஒரு பியரை மட்டும் தனியாக அமர்ந்து குடித்து விட்டு பயந்து கொண்டே ஓட்டலுக்குத் திரும்பி வந்து தனியாகவே படுத்துத் தூங்கினேன்.  சாப்பிடவில்லை. 

ங்கோத்தா, அது எப்பிர்ரீ ஆம்பள பொம்பள எல்லாரும் ஒரே மாதிரி இருக்கீங்க?  நீங்கள்ளாம் உங்க ஆத்தாவோட யோனிலேர்ந்து பொறந்தீங்களா, இல்ல, எல்லாருமே ரோபாட் மாதிரி தயாரிக்கப்பட்ட எந்திரங்களா? 

என் மகன், என் நண்பரின் மகன், என் தங்கை மகளான நீ, இன்னும் நான் பார்க்கும் இளைஞக் கூதிகள் அத்தனை பேருமே ஒரே வார்ப்பில் எடுத்த ரோபாட் மாதிரியே இருக்கிறீர்களே, அது எப்பிர்ரீ?

மறுநாளும் நான் ஓட்டலில் தனியாகவே இருந்தேன்.  தனியாகவே சாப்பிட்டேன்.  பாடாவதி சாப்பாடு.  குறிப்பாக அந்த மாநிலத்தில் சாப்பாடு பிரமாதமாக இருக்கும்.  கடல்கரை ஊர் வேறு.  நான் மீன் உணவாகவே தின்னலாம் என்று நினைத்திருந்தேன்.  ஆனால் நான் எதிர்பார்த்த அந்த மாநிலத்து உணவு கிராமங்களில்தான் கிடைக்கும் என்று பிற்பாடு ஒருமுறை நான் அந்த மாநிலத்துக்குச் சென்ற போதுதான் தெரிந்தது. 

மதிய உணவும் தனியாகவே. 

மாலை வரை என் தங்கை மகளிடமிருந்து ஒரு அழைப்பும் வரவில்லை.  மாலைக்குப் பிறகு என் நண்பர் ஒருவர் என் அறைக்கு வந்தார்.  என் பேச்சைக் கேட்பதற்காக மதுரையிலிருந்து வந்திருந்தார்.  அவர் ஒன்பது மணிக்கு அவர் அறைக்குக் கிளம்பினார்.  பிறகு சென்னையிலிருந்து என் நண்பர் வந்தார்.  அவர் என்னோடே தங்கினார்.

மறுநாள் காலை பத்து மணிக்கு என் பேச்சு.  அது வரையும் என் தங்கை மகளிடமிருந்து ஒரு அழைப்பு இல்லை.

அரங்கத்தில் பத்து மணி வரை என் தங்கை மகள் இல்லை.  பேசி முடித்து என் புத்தகங்களில் கையெழுத்திடும் படலம்.  பக்கத்தில் இருந்த வில்லியம் டால்ரிம்பிள் முன்னே ஐம்பது பேர் நின்றிருந்தார்கள்.  என் முன்னே நின்றவள் என் தங்கை மகளும் அவள் கணவரும் அவர்களின் ஆறு வயது மகனும் மட்டுமே.  கையெழுத்துப் போட்டு விட்டு, எங்கே உன்னை ஆரம்பத்தில் காணோம் என்று கேட்டேன். 

இடம் கண்டு பிடிப்பது சிரமமாகி விட்ட்து மாமா, அதுதான் கொஞ்சம் தாமதமாகி விட்டது என்றாள்.

என்னுடைய ராஜ்ஜியத்தில் இதற்கு மரண தண்டனை மட்டுமே கொடுக்கப்படும். 

ஏன்டி, உன்னுடைய செமினாருக்கு நீ இப்படிப் போவாயா?  பத்து மணிக்கு என் பேச்சு என்றால், ஒன்பது மணிக்கே அரங்கில் வந்து அமர்ந்திருக்க வேண்டாமா? நான் மேடையில் பேசுவதை நீ உன் வாழ்வில் எத்தனை முறை கேட்க முடியும்?  அது எல்லாவற்றையும் விட நான் உன் ஊருக்கு வந்திருக்கிறேன்.  நீ அரை மணி நேரம் முன்கூட்டியே வந்திருந்தால் நான் உன்னோடு பேசிக்கொண்டிருந்திருக்க முடியும்.  இரண்டு நாளாக வேறு நீ என்னைத் தொடர்பே கொள்ளவில்லை.

அந்த இரண்டு தினங்களும் ரத்தக் கண்ணீர் விட்டேன். ஏனென்றால், என் தங்கை மகளுக்கு இப்போது முப்பது வயது இருக்கலாம்.  அவள் கையால் நான் ஒரு வேளை கூட சாப்பிட்டது இல்லை.  அவள் ஊருக்கு வந்து நான் மலம் போன்ற உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.  ங்கோத்தா, என்னாங்கடி நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? உங்களுடைய இனிய இனிய இனிய குறுஞ்செய்தி என் வயிற்றை ரொப்பி விடுமா?  என் தங்கை மட்டும் அந்த ஊரில் இருந்திருந்தால் நான் போய்ச் சேர்ந்த அன்றைய மாலையே அழைத்திருக்கும்.  வீட்டுக்கும் அழைத்திருக்கும்.  மணக்க மணக்க மீன் குழம்பும் சோறும் கிடைத்திருக்கும்.  மறுநாளும் அங்கேயே சாப்பிட்டிருப்பேன்.

இப்போது புரிகிறதா, தலைமுறை இடைவெளி?

ங்கோத்தா, இன்றைய தலைமுறை சுன்னிகளும் புண்டைகளும் எல்லாம் வாட்ஸப் குறுஞ்செய்தியிலேயும், இன்ஸ்டாகிராமிலுமே ஓத்துக்கொண்டிருக்கிறீர்கள்.  அதனால்தான் சமூகம் இப்படி நாறிப் போய்க் கிடக்கிறது.

அதோடு என் தங்கை மகளுடன் பேச்சை நிறுத்திக்கொண்டேன்.  அதற்குப் பிறகு தொடர்பு கொள்ளவே இல்லை.  இதைக் கூட நான் எழுதியிருக்க மாட்டேன்.  நேற்று இரவு வந்த குறுஞ்செய்தியால் என் உறக்கம் கெட்டு விட்டதால் மட்டுமே இதை எழுதுகிறேன்.

என் மகனுக்கு வருகிறேன்.  அச்சு அசல் என் தங்கை மகளேதான்.  இவளாவது குறுஞ்செய்தியில் இனிக்கிறாள்.  அவன் அதுவும் இல்லை.  ஆண்டுக்கு ஒருமுறை ஹேப்பி பர்த்டே டாடி.  அதோடு சரி. 

ஒரு உலகப் புகழ் பெற்ற கப்பல் கம்பெனியில் சீனியர் ப்ராஜக்ட் எஞ்ஜினியர்.  வசிப்பது துபய்.  மாதச் சம்பளம் பத்து லட்சம் ரூபாய் இருக்கும்.  பதினைந்து ஆண்டுகளாக மரீன் எஞ்ஜினியர்.  ஆரம்பத்தில் இத்தனை இருந்திருக்காது.

ஆனால் இன்றைய தேதி வரை அவன் எனக்கு ஒரு சல்லிப் பைசா தந்தது கிடையாது.  சல்லிப் பைசா என்றால் சல்லிப் பைசா.  நானும் கேட்பது இல்லை.  அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.  

என் பெற்றோர் வீட்டில் என்னை ஒரு பேரரசன் போல் வளர்த்தார்கள்.  கொடூரமான வறுமையிலும் அப்படித்தான் என்னை வளர்த்தார்கள்.  ஒரே ஒரு உதாரணம் தருகிறேன்.  வீட்டில் பட்டினி கிடந்து எனக்கு மட்டும் சாப்பாடு தருவார்கள்.  ஒரு தேநீர் போட்டு அதை எனக்குத் தருவார்கள்.  அதில் ஒரு கால் டம்ளரை அம்மா என் தம்பிக்குக் கொடுத்தால் அவன் பதறி அடித்துக்கொண்டு, “ஐயோ, அண்ணனுக்குக் கொடுங்கள்” என்று சொல்லி என் டம்ளரில் ஊற்றி விடுவான்.  இப்படி என் அம்மா, நைனா மட்டுமல்லாமல் என் ஐந்து தம்பி தங்கைகளும் கூட என்னைக் கொண்டாடிக் கொண்டாடி வளர்த்தார்கள்.

இருபத்து நாலு வயதில் நான் வேலைக்குப் போனேன்.  ஒரு ஆண்டு சென்னையில்.  பிறகு தில்லியில்.  மாதம் 560 ரூ. சம்பளம் வாங்கி அதில் 250 ரூபாயை என் தங்கையின் திருமணத்துக்குப் பட்ட கடனுக்காக அனுப்புவேன்.  கேள் என் தங்கை மகளே, உன் அம்மாவின் கதையைத்தான் சொல்கிறேன். 

இத்தனைக்கும் என் தங்கை அரசு வேலையில் இருந்த பெண்.  அதன் கணவரும் அரசு வேலை.

இருநூற்றைம்பதை வீட்டுக்கு அனுப்பி விட்டு, ரொட்டி வாங்கிச் சாப்பிட காசு இல்லாமல் வெறும் கச்சோடியை சாப்பிட்டு காலம் கழித்தேன்.  கச்சோடி என்றால் சமோசா மாதிரி ஒரு பண்டம்.

இந்த நிலையில் தங்கைக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தாள்.  இந்தக் கதையின் நாயகி இல்லை.  இவளுக்கும் மூத்தவள்.  அவளுக்கு ஒரு ஆண்டு வந்ததும் என் நைனா எனக்கு ஒரு கார்டு எழுதினார்கள்.

ரவி, இன்ன மாதிரி குழந்தைக்குத் தாய் மாமாதான் காது குத்துவுக்குத் தோடு வாங்கிப் போட வேண்டும்.  நீ வராவிட்டாலும் பரவாயில்லை.  பணம் அனுப்பினால் நாங்களே தோடு வாங்கிப் போட்டு விடுவோம்.

இதற்குத்தான் நான் அந்த உலகப் புகழ் பெற்ற கடித்த்தை எழுதினேன்.  அது என்னுடைய முதல் நாவலான எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலில் வருகிறது.  நான் எழுதிய பதில்:

”என் வயது இருபத்தேழு.  இந்த வயதில் நீங்கள் மூன்று குழந்தை பெற்று விட்டீர்கள்.  நானோ இன்னும் திருமணமே ஆகாமல் கையடித்துக்கொண்டிருக்கிறேன்.  இந்த நிலையில் எவனோ எவளையோ ஓத்துக் குழந்தை பிறந்தால் அதற்கு நான் தோடு வாங்கிப் போட வேண்டுமா?”

அதோடு பணம் அனுப்பு கடிதம் வருவது நின்று விட்டது.

அதனால்தான் நானும் என் மகனுக்குப் பணம் அனுப்பு கடிதம் எழுதியதே இல்லை.  ஆனால் என்ன கொடுமை பாருங்கள், அவன் எழுதுகிறான்.  அம்மா மூலமாக.

அம்மா, நான் புதிதாகக் கார் வாங்கப் போகிறேன்.  நீங்கள் கொஞ்சம் பணம் கொடுத்தால் ராசியாக இருக்கும்.

என் மனைவி உடனே என்னை அணுகினாள்.  ஒரு அஞ்சாயிரம் அனுப்பலாமா என்று கேட்டேன்.  கண்களில் தீப்பொறி பறக்க என்னைப் பார்த்தாள்.  முப்பது லட்சம் ரூபாய் காருக்கு அஞ்சாயிரம் பணமா?  ஒரு அம்பதாயிரம் அனுப்பு.

நான் என் வாசகர்களிடம் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்பது என் மகனுக்குத் தெரியாதா என்ன?  நன்றாகத் தெரியும்.  இருந்தாலும் கேட்கிறான்.  அம்பதாயிரம் அனுப்பினேன்.

அந்த அம்பதாயிரம் ஏது தெரியுமா?

அதற்கு முந்தின தினம்தான் அமெரிக்காவில் பாதிரியாக இருக்கும் என் வளர்ப்பு மகன் – பள்ளிப் பருவத்திலிருந்து என் வாசகன் – எனக்குத் தன் முதல் மாத ஊதியத்திலிருந்து 75000 ரூ. அனுப்பியிருந்தான்.  அதிலிருந்து அம்பதாயிரத்தை அஃபிஷியல் மகனுக்கு அனுப்பினேன்.  இத்தனைக்கும் பாதிரிகளுக்கெல்லாம் சரியான ஊதியமே கிடையாது.  அது ஒரு சேவை என்பதால்.  ஒரு லட்சம் சம்பளம் வாங்கி அதில் எழுபத்தைந்தாயிரத்தை அனுப்பியிருக்கிறான்.  அவனுடைய அங்கியில் நாலு பெயர்களைப் பொறிக்கலாம்.  அம்மா, அப்பா, இயேசு, சாரு நிவேதிதா என்று நாலு பெயர்களைப் பொறித்திருக்கிறான். 

நாணயத்துக்கு இரண்டு பக்கம் இருக்கிறது என்கிறார்களே, அது தப்பு.  ஒரே ஒரு பக்கம்தான் இருக்கிறது.

என் மகனின் நியாயம் என்ன?  ம்? ங்கோத்தா, நான் இங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன்.  நீ ஒரு மரீன் எஞ்ஜினியர்.  நீ என்னிடம் பிச்சையா? 

அது மட்டும் அல்ல, தன் அம்மாவுக்கு ஒரு கிரேட் டேன் நாயையும் வாங்கிக் கொடுத்து விட்டு சுன்னி மயிராச்சு என்று போய் விட்டான்.  நாய்ப் பராமரிப்புக்காக நான் இங்கே தெருத் தெருவாகப் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தேன்.  மாதம் இருபதாயிரம் ஆயிற்று.  இருபது ஆண்டுகளுக்கு முன்.  இரண்டு நாய்கள்.  ஒன்று, லாப்ரடார்.

என் நண்பர் ஒருவர் ”சாரு, இனிமேல் நீங்கள் காசு இல்லாததால் உலகப் பயணம் செல்லவில்லை என்று சொல்லக் கூடாது” என்று சொல்லி மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் கொடுத்தார்.  கவனியுங்கள்.  இருபது ஆண்டுகளுக்கு முன்பு மாதம் பதினைந்தாயிரம் ரூபாய்.  க்ரேட் டேன் மட்டும் இல்லாதிருந்தால் இந்நேரம் நான் மூன்று வீடு வாங்கியிருப்பேன்.  எல்லா பணமும் நாய்களுக்குச் செலவாகி இன்று வாடகை வீட்டுக்குத் தெருத் தெருவாகத் தெருநாய் போல் அலைந்து கொண்டிருக்கிறோம் நானும் என் மனைவியும். 

நாய்களுக்கு செலவு இருபதாயிரம் ஆயிற்று.  எனக்கோ பதினைந்தாயிரம் வந்தது.  ஒரே ஒரு முறை மகனிடம் ஐயாயிரம் துண்டு விழுகிறது, அனுப்பி வை என்றேன்.  ஒரு பைசா அனுப்பவில்லை. 

அது மட்டும் அல்ல. நாலு ஆண்டுகளுக்கு முன் அம்மாவிடம் நாலு லட்சம் கடன் கேட்டான்.  அவள் என்னிடம் வந்து அனுப்பச் சொன்னாள்.  வேறு வழியில்லாமல் அனுப்பினேன்.  ஒரு லட்சத்துக்கு இரண்டு ஏசி மெஷின்கள் வாங்கிக் கொடுத்தான்.  ஒரு லட்சம் தீர்ந்தது.  இன்னொரு லட்சத்தை கல்லில் நார் உரிப்பது போல் உரித்து வாங்கினேன்.  இன்னும் இரண்டு லட்சம் பாக்கி.  வரவே வராது போல் தெரிந்தது.  வீட்டில் சண்டை வரும் போதெல்லாம் குருட்டுப் பிச்சைக்காரனிடம் ஜேப்படித் திருட்டு செய்தவன் உன் மகன் என்று என் மனைவியிடம் திட்ட ஆரம்பித்தேன்.  அவளுடைய சேமிப்பிலிருந்து இரண்டு லட்சத்தைக் கொடுத்து விட்டு, “இனிமேல் ஒரு வார்த்தை நீ நம் மகன் பற்றிப் பொல்லாங்கு சொல்லக் கூடாது” என்று சொல்லி விட்டாள்.  நானும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.  ஆனாலும் மகனின் கடன் கணக்குத் தீரவில்லை.  என் மனைவி என்னிடம் கொடுத்த ரெண்டு லட்சம் நான் அவளுக்குக் கொடுத்ததுதானே?

ஒருமுறை என் மகன் மரீன் எஞ்ஜினியரிங் படித்துக்கொண்டிருந்த போது கட்டணம் கட்டக் காசு இல்லாமல் – அப்போதே பன்னிரண்டு லட்சம் செலவு – படிப்பை நிறுத்தி விடலாம் என்று யோசிக்கும்படி ஆயிற்று.  அப்போதெல்லாம் கட்டணம் கட்டியவர்கள் என் வாசகர்கள்தான். ஒரு அமெரிக்க வாசகி மூன்று மாதத்துக்கு ஒருமுறை நாற்பதாயிரம் ஐம்பதாயிரம் என்று அனுப்புவார்.  இத்தனைக்கும் அவர் அங்கே ஒரு மருத்துவ மாணவி.  இதையெல்லாம் யார் திருப்பிக் கொடுப்பது?

மேற்கத்திய நாடுகளின் பஜனையெல்லாம் இங்கே இந்தியாவில் செல்லுபடி ஆகாது.  இங்கே பிள்ளைகளின் படிப்புக்காக பெற்றோர் பிச்சை எடுக்கிறார்கள்.  ரத்தத்தை விற்கிறார்கள்.  நீ இதைத் திருப்பிக் கொடுத்தே ஆக வேண்டும். 

அந்த அமெரிக்க வாசகி வருவதற்கு முன்னால் ஒரு சம்பவம்.  கட்டணம் கட்ட வேண்டும்.  இரண்டு லட்சம்.  அப்போதுதான் நான் விருப்ப ஓய்வு பெற்று இரண்டு லட்சம் கைக்கு வந்தது.  அதே சமயம், மருத்துவர்கள் என்னை சோதித்து விட்டு, மிக விரைவில் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும், அதற்குள் சர்ஜரி செய்து கொண்டு விடுங்கள் என்று கடுமையாக எச்சரித்தார்கள். 

நான் என் மகனுக்குக் கட்டணம் கட்டி விட்டேன்.  செத்தால் மயிரே போச்சு, என் மகனாவது என்னைப் போல் பிச்சை எடுக்கக் கூடாது என்று நினைத்தேன்.  ஆறே மாதத்தில் எனக்கு ஹார்ட் அட்டாக்.  மூன்று லட்சம் எங்கிருந்து வந்தது தெரியுமா?  கடவுள் அனுப்பி வைத்தார்.  அதுதான் ஐயா, ஒரு வாசகர் கொடுத்தார். 

***

என் தங்கை மகளின் அரண்மனை போன்ற வீடு சென்னையில் பூட்டிக் கிடக்கிறது.  அவளும் குடும்பமும் சென்னை வந்தால் தங்குவார்கள்.  அது என்ன, ஒரு ஆண்டில் ஒரு வாரம். 

என் மகனின் சொந்த வீடு மும்பையில் பூட்டிக் கிடக்கிறது.  அவனோ குடும்பத்தோடு துபயில் இருக்கிறான்.

நான் இதுவரை குறைந்த பட்சம் நூற்றைம்பது வீடு பார்த்தேன்.  இவற்றின் உரிமையாளர்களில் நூறு பேராவது அமெரிக்காவில் இருக்கிறார்கள்.

என் தங்கையின் அண்ணன் வீடு – 2500 சதுர அடி – சின்மயா நகரில் பூட்டிக் கிடக்கிறது.  அவர்கள் மடிப்பாக்கத்தில் வசிக்கிறார்கள்.  சின்மயா நகர் வீடு இன்னும் இருபது ஆண்டுகளாவது பூட்டிக் கிடக்கும்.

என் மனைவியின் அக்காள் மகன் ஆஸ்திரேலியாவில் சொந்த பங்களா வாங்கிக்கொண்டு வசித்து வருகிறான்.  அவனுக்கு இங்கே வளசரவாக்கத்தில் ஒரு வீடும் போரூரில் ஒரு வீடும் உள்ளன.  இரண்டுமே பூட்டிக் கிடக்கின்றன. 

நானும் என் மனைவியும் ஒவ்வொரு வீட்டு உரிமையாளரையும் நக்கிக்கொண்டிருக்கிறோம்.  என் மகன் மும்பையில் வாங்கிய வீட்டை இங்கே சென்னையில் வாங்கியிருக்கலாம்.  முடியாது.  அவன் மனைவி மும்பைக்காரி.  அவள் பேச்சையும் கேட்க வேண்டும்.  அவனாகத் தீர்மானிக்க முடியாது.  சரி, திருமணத்துக்கு முன்பாவது சென்னையில் வாங்கியிருக்க வேண்டும்.  இதோ என் தங்கை மகள் அனுப்புகிறாள் அல்லவா, இனிமை வார்த்தைகள், அதுவே அம்மா அப்பாவுக்குப் போதும் என்று நினைத்து விட்டான் போலும் செல்ல மகன். 

சந்தா/நன்கொடை வரத்து சுத்தமாக நின்று விட்டது. இதுவரை அனுப்பாதவர்கள் அனுப்பி வையுங்கள். குறைந்த பட்ச சந்தா 300 ரூ. அதற்கு மேலும் அனுப்பலாம். அது உங்கள் விருப்பத்தைப் பொருத்தது.

ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai