கல்லெறியும் கிழக் கூட்டம்…

முன்பெல்லாம் எனக்கு அடிக்கடி ஒரு மாதிரியான கடிதங்கள் வரும்.  பொதுவாக எனக்கு வரும் மின்னஞ்சல்களை அதிகாலையில் பார்க்கும் வழக்கமுடையவன் நான்.  இன்னும் நீ சாகவில்லையா?  இன்னுமா உயிரோடு இருக்கிறாய்?  சீக்கிரம் செத்துத் தொலையேன்.  உன்னை மாதிரி சமூக விரோதிகளுக்கெல்லாம் தண்டனையே கிடையாதா?  உன்னைக் கட்டி வைத்து உதைக்க வேண்டும்.  இப்படியாகப்பட்ட அஞ்சல்கள் அவை. 

இதையெல்லாம் பார்த்து எனக்குள் ஒருவித கருணையுணர்வு சுரக்கும்.  உங்கள் காலணிக்குக் கீழே நீங்கள் அறியாமல் ஒரு பூரான் சிக்கித் துடிக்கும்போது ஒரு பரிதாப உணர்வு தோன்றும் இல்லையா?  அந்த மாதிரி.  அல்லது, இப்படிச் சொல்லலாம்.  தெரியாத்தனமாக ஒருவர் அமிலத்தைக் குடித்து விட்டார்.  எப்படித் துடிப்பார்?  அவரைக் கண்டு உங்களுக்கு என்ன தோன்றும்?  அதே உணர்வுதான் எனக்கும் தோன்றும்.  ஏனென்றால், சராசரிகளுக்கு என் எழுத்து அமிலம்.  இலக்கிய வாசனை உள்ளவர்களுக்கு என் எழுத்து அமிர்தம்.  ஒரே பொருள்தான்.  சிலருக்கு விஷம்.  சிலருக்கு அமிர்தம்.  உன் எழுத்தைப் படித்தால் பைத்தியம் பிடித்து விடும் என்று ஒருமுறை அவந்திகா சொன்னாள்.  ராஸ லீலாவில் ஒரு பக்கத்தைப் படித்து விட்டுச் சொன்னாள்.  ஆனால் எத்தனையோ பேருக்கு என் எழுத்தால் பைத்தியம் தெளிந்திருக்கிறது.  அப்படிப்பட்டவர்கள் என்னை ஓஷோவைப் போல் கருதுகிறார்கள்.

அதை விடுங்கள்.  எனக்கு மன உளைச்சல் தர நினைக்கும் மனிதர்களைக் கண்டு எனக்குப் பரிதாப உணர்வு வருவதற்கு மற்றொரு முக்கியக் காரணம், என் மீது கல்லெறிந்தால் அவர்களைப் பெரும் துயரம் சூழப் போகிறது என்று பொருள்.  ஏனென்றால், நான் யார் வம்புக்கும் போவதில்லை.  ஒரு கர்ம யோகியைப் போல் எழுதிக்கொண்டிருக்கிறேன்.  காசு வேண்டுமானால் உங்களிடம் யாசிக்கிறேன்.  உங்களிடம் என் ஞானத்தை அளித்து விட்டு, திருவோட்டை நீட்டுகிறேன்.  இதற்கு எத்தனை பெரிய மனோபலம் வேண்டும்?  எந்த அளவுக்கு அகங்காரத்தை விட்டொழிக்க வேண்டும்?  எந்த அளவுக்கு வாழ்க்கையிலிருந்து விலகியிருக்க வேண்டும்?  எந்த அளவுக்குத் துறவு நிலையை அடைந்திருக்க வேண்டும்?  அப்படிப்பட்ட ஒருவனைக் காயப்படுத்திக் கொண்டேயிருந்தால் காயப்படுத்துபவனுக்கு என்ன நடக்கும்?

இன்னொரு விஷயம், என்னைக் காயப்படுத்தவே முடியாது என்பது.  நான் வலிகளைக் கடந்தவன்.  அப்படிப்பட்டவன் மீது மோதினால் அது சுவர் மீது முட்டிக் கொள்வதைப் போல. 

பால சுப்ரமணியன் என்ற முதியவர் தன்னுடைய அடிமுட்டாள்தனமான கடிதங்கள் மூலம் என்னைத் தொடர்ந்து எரிச்சலூட்டிக்கொண்டேயிருந்த போது இனிமேல் எழுதாதீர்கள் என்று அவரை எச்சரித்தேன்.  ஆனாலும் அவர் நிறுத்தாமல் எனக்கு எழுதிக்கொண்டேயிருக்கிறார்.  அதற்கு அவருடைய வியாக்கியானம், நீ என் கடிதத்தைக் குப்பையிலே போடு என்பது. 

எப்பேர்ப்பட்ட தடித்தனம் பாருங்கள்.  இத்தனைத் தடித்தனம் இருந்தால் இவருடைய மனைவி, மக்கள், பேரர்கள் எல்லோருக்கும் பைத்தியம் பிடித்து விடாதா?  குடும்பத்தில் இவர் ஒரு ஹிட்லராகத்தான் இருக்க முடியும். 

யோவ், நீர் சிகரெட் புகைத்து என் மூஞ்சியில் விடுவதை நிறுத்து, தூரமாகப் போய் குடி என்று சொன்னால், நீ போ அந்தாண்டை என்று சொல்வீரா?  யோவ், இது என் வீடு என்கிறேன்.  ஆனாலும் தொடர்ந்து என் வீட்டுக்குள் வந்து வாந்தி எடுத்துக்கொண்டிருக்கிறது கிழம்.  என்னுடைய மின்னஞ்சல் பெட்டி என்னுடைய இடம், என் வீடு.  அதில் வந்து வாந்தி எடுத்து விட்டுப் போனால் உம்மை இறை சக்தி தண்டிக்கும். 

கிழம் இப்படி ஒரு கடிதம் எழுதியிருக்கிறது. 

Sir,

Your writings and expressions are direct and no nuances euphemisms as suggested in this know your English articles

It is a slap on the face of the reader, a punch.

https://epaper.thehindu.com/ccidist-ws/th/th_international/issues/97212/OPS/GQSD8PRVO.1.png?cropFromPage=true

நான் ஆங்கிலத்தில் எழுதுவது என்பது ஊம்புவதற்கு ஒப்பான செயல்.  தமிழில் எழுதினால் தமிழுக்கு வெளியே ஒரு பயல் மதிக்க மாட்டேன் என்கிறான்.  அந்தக் காலத்தில் இருந்த தீண்டாமையை நினைவு கொள்ளுங்கள்.  அதே நிலைமைதான் பிராந்திய மொழி எழுத்தாளர்களுக்கு.  நீங்களே யோசியுங்கள்.  அருந்ததி ராய் என்ற மூன்றாந்தர எழுத்தாளர் ஒரே ஒரு நாலாந்தர நாவலை எழுதி விட்டு முப்பது ஆண்டுகளாக இலக்கியத்தில் பஜனை பண்ணிக்கொண்டிருக்க முடிந்தது எதனால்?  அவர் ஆங்கிலத்தில் எழுதியதனால்தானே?  அவரே அந்தக் குப்பையை மலையாளத்தில் எழுதி அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் அவர் இந்த அளவு பிரபலம் ஆகியிருப்பாரா?

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஸீரோ டிகிரி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.  அமெரிக்காவில் இரண்டு பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டது.  அதைப் படித்த ஆங்கில விமர்சகர்கள் சிலர் என்னை இந்தியன் ஜேம்ஸ் ஜாய்ஸ் என்றார்கள்.  சர்வதேசப் பத்திரிகைகளில் பத்தி எழுதினேன்.  சல்மான் ருஷ்டியின் சிறுகதையும் என் சிறுகதையும் ஒரே தொகுப்பில் (சமீபத்தில் வெளிவந்திருக்கும் அந்தத் தொகுப்பின் பெயர்: Human Brains) வந்தது. இத்தனைக்குப் பிறகும் பதினைந்து ஆண்டுகளாக என்னுடைய அடுத்த நாவல் ஆங்கிலத்தில் பிரசுரம் ஆக முடியவில்லை.  எந்த ஆங்கிலப் பதிப்பகமும் என்னைப் பதிப்பிக்கத் தயாராக இல்லை.  என் கடிதத்துக்குப் பதில் கூட தருவதில்லை.  ஏனென்றால், நான் ஒரு தமிழ் எழுத்தாளன்.  An untouchable.  பிறகுதான் ஔரங்ஸேப் ஆங்கிலத்தில் வந்தது.  சுமார் நாற்பது மதிப்புரைகள் வந்தன.  கொண்டாடினார்கள்.  இந்தியாவின் நம்பர் ஒன் ஆங்கிலப் பதிப்பகம் வெளியிட்டது.  ஆனால் யூ.கே.விலும் அமெரிக்காவிலும் நாவல் கிடைக்காது.  காரணம், அது ஒரு மொழிபெயர்ப்பு.  ஆங்கிலத்தில் எழுதப்படவில்லை. 

அதற்குப் பிறகுதான் “போங்கடா cuntகளா” என்று சொல்லிவிட்டு நானே ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தேன். 

இந்தியாவில் மிகச் சிறப்பான ஆங்கிலம் எழுதும் இரண்டு பேரில் ஒருவர் தருண் தேஜ்பால்.  அவர் நான் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் சுயசரிதையான My Life, My Text ஐப் படித்து விட்டு என் ஆங்கிலத்தைப் புகழ்கிறார்.  பிரமாதமான ஆங்கிலம் என்று அல்ல.  மொழிபெயர்ப்பாளர்களின் மூலம் கிடைக்கும் சாருவை விட இந்த எளிமையான ஆங்கிலத்தின் மூலம் கிடைக்கும் சாரு படு சுவாரசியமாக இருக்கிறார் என்பது தருணின் அவதானம்.  தருண் என்னோடு பழகியவர்.  அவருக்கு என்னைத் தெரியும்.  அதனால் இந்த என்னுடைய ஆங்கில சுயசரிதை என்னையே நேரடியாகப் படிப்பதாகவும், பழகுவதாகவும் இருக்கிறது என்கிறார்.  ஏனென்றால், என் மொழிபெயர்ப்பாளர்களுக்கு என்னைத் தெரியாது.  நான் எழுதிய பலவற்றையும் அவர்கள் படித்ததில்லை.  எதை மொழிபெயர்க்கிறார்களோ அது மட்டுமே அவர்களுக்குத் தெரியும்.

நான் ஒன்றும் பிரிட்டிஷ் கான்வெண்டுகளில் படித்தவன் இல்லை.  என் மொழி தமிழ்.  தமிழில் நான் பாரதிக்கு நிகரான மொழியை எழுதிக்கொண்டிருப்பவன்.  காரணம், தி.ஜா.வும் லா.ச.ரா.வும்.  நான் அவர்களின் தோள் மீது ஏறி நிற்கிறேன்.  தமிழில் நான் எப்படி ஒரு சிகரமோ அப்படியெல்லாம் என்னால் ஆங்கிலம் எழுத முடியாது.  எழுத வேண்டிய எந்த அவசியக் cuntஉம் இல்லை.  யோவ் பெரியவரே, மார்க்கேஸிடமும் மற்ற ஸ்பானிஷ் எழுத்தாளர்களிடமும் ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்களிடமும் போய் இப்படிச் சொல்வீரா?  முதலில் அவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுத வேண்டிய அவசியக் cuntஏ இல்லை.  அரபி எழுத்தாளர்களுக்குக் கூட அந்த அவசியம் இல்லை.  ஹிந்தி எழுத்தாளர்களுக்கும் இல்லை.  மலையாள எழுத்தாளர்களுக்கும் இல்லை.  கன்னட எழுத்தாளர்களுக்கும் இல்லை.  தமிழ் எழுத்தாளக் cuntகளுக்கு மட்டும்தான் அந்த அவசியம் ஏற்பட்டிருக்கிறது.  ஏனென்றால், இங்கே மட்டும்தான் intelligentia என்ற ரகத்தினர் சினிமாக்காரர்களை நக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.  உதாரணமாக, சுந்தர் பிச்சைக்கு யாரைத் தெரியும்?  கமல்ஹாசனைத் தெரியும்.  ஒரு தமிழ் எழுத்தாளனைத் தெரியுமா?  அப்துல் கலாமுக்கு யாரைத் தெரிந்தது?  காமெடியன் விவேக்கையும் வைரமுத்துவையும்.  தமிழ் எழுத்தாளனை உலகுக்கு எடுத்துச் சொல்ல எந்த son of a cunt இருக்கிறான்?  நாங்களேதான் பேச வேண்டியிருக்கிறது.  அதனால்தான் நான் ஆங்கிலக் cuntஇல் எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. 

இதில் வந்து இடியம் ஏன் இல்லை, இடியாப்பம் ஏன் இல்லை என்று நொட்டு வேறு சொல்கிறது இந்தக் கிழம்.  இது கொடுத்திருக்கும் லிங்கைப் போய்ப் பார்த்தேன்.  அது ஒரு மலக்கிடங்கு.  அம்மாதிரி ஆங்கிலம் எழுதுபவர்களால் தமிழிலிருந்து ஒரு நாவல் கூட ஆங்கிலத்தில் போய் செல்லுபடி ஆனதில்லை.  இவர்களெல்லாம் தமிழ்ப் புலவர்கள் மாதிரி.  அவர்களுக்கும் இலக்கியத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  இப்படி ஒரு ஆங்கிலப் பண்டிதரால்தான் சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை என்ற நாவல் குப்பை மாதிரி மொழிபெயர்க்கப்பட்டது. 

இனிமேலும் இந்தக் கிழம் இப்படிப்பட்ட கடிதங்களை எழுதிக்கொண்டிருந்தால் அதற்குப் பதில் தராத மனநிலை எனக்கு வர வேண்டும் என்று என் குரு மகாப் பெரியவரைப் பிரார்த்திக்கொண்டு இதை முடிக்கிறேன். 

சந்தா மற்றும் நன்கொடையை ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)

ரேஸர்பே மூலமாகவும் அனுப்பலாம்.

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai.