இந்தத் தொடரின் அத்தியாயம் 26, ”மார்க்கி தெ ஸாத்: உடலும் ஆன்மாவும்” என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக இதை வாசிக்கவும்.
ஜப்பானிய இயக்குனர் அகிரா குரஸவா (1910 – 1998) உலகப் புகழ் பெற்றவர். ஆனால் குரஸவா அளவுக்குப் பிரபலமாகாத இன்னொரு ஜப்பானிய இயக்குனர் Nagisa Ōshima (1932 – 2013). சென்ற கட்டுரையில் குறிப்பிட்ட உடல் மற்றும் ஆன்மா பற்றிய குறிப்புகளை நினைவு கூருங்கள். ஓஷிமாவின் சினிமாவுக்கு அடிப்படை, உடல். குரஸவாவின் படங்களில் வன்முறையும் போரும் பிரதானமாக இருந்தாலும் அவை மனிதனின் ஆன்மீக வறட்சி பற்றிப் பேசுபவை.
நான் ஜப்பான் சென்றிருந்த போது என் நண்பர் ஒருவர் ஒரு நள்ளிரவில் மிஷ்கினை அழைத்து அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தருவதற்காக தொலைபேசியை என்னிடம் கொடுத்தார். ஆனால் நடந்தது என்னவென்றால், இன்ப அதிர்ச்சிக்குப் பதிலாக அது ஒரு துன்பவியல் சம்பவமாக மாறி விட்டது. காரணம், நான் சினிமாக்காரர்களின் காலை நக்குவதில்லை என்பதுதான். அப்படி ஒன்றும் மிஷ்கின் தவறாகப் பேசிவிடவில்லை. அவருக்குத் தெரிந்த அன்பையும் நட்பையும் அவருக்குத் தெரிந்த விதத்தில் என் மீது பொழிந்தார்.
நான்தான் வேறு மாதிரி ஆள் ஆயிற்றே? எனக்கு அது மூத்திரத்தைத் தலையில் ஊற்றியது போல் ஆயிற்று.
“சாரு, குரஸவா சமாதியைப் பார்த்தீர்களா?”
“இல்லையே?”
(”நான் என்ன மயிருக்குக் குரஸவா சமாதியைப் பார்க்க வேண்டும்? குரஸவாவை விட பெரும் மேதைகள் ஜப்பானிய சினிமாவில் இருக்கிறார்களே? உனக்குத் தெரிந்தது குரஸவா என்றால் அதை உன்னோடு வைத்துக் கொள்ள வேண்டியதுதானே நண்பா? ஜப்பானிய சினிமாவையும் ஜப்பானிய இலக்கியத்தையும் கரைத்துக் குடித்திருக்கும் ஒருவனிடம் – உன்னுடைய குரு ஸ்தானத்தில் இருக்கும் ஒருவனிடம் பேச வேண்டிய பேச்சையா நீ பேசுகிறாய்?” – இதெல்லாம் என் மனதில் க்ஷண நேரத்தில் ஓடிய எண்ணங்கள்.)
ஆனால் அடுத்து நடந்தது இன்னும் கொடுமையான துன்பவியல் நாடகம்.
“என்னது, இன்னும் பார்க்கலியா? (குரலில் நான் ஒரு குற்றச் சம்பவத்தை நிகழ்த்தி விட்டது போன்ற பாவம்.) சரி, எப்போ சென்னை திரும்பறீங்க?”
“நாளை மறுநாள் மிஷ்கின்.”
”சரி, அப்போன்னா நாளைக்கே குரஸவா சமாதியைப் போய்ப் பார்த்துடுங்க.” (குழந்தையைக் கோபித்துக் கொள்ளும் கண்டிப்பான, அன்பான குரல்.)
இந்த அறிவுரைக்குக் காரணம், காலம் காலமாக தமிழ் சினிமாவில் எழுத்தாளர்கள் என்றால் சினிமாக்காரனுக்கு blow job செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டிருப்பதால்தான். கஷ்டமாக இருந்தால் கால் கழுவி விடுவது என்று வாசித்துக் கொள்ளுங்கள்.
யாருக்கு யார் அறிவுரை சொல்வது?
எழுத்தாளன் எப்பேர்ப்பட்ட மேதையாக இருந்தாலும் தமிழ்நாட்டில் சினிமாக்காரன்தான் எழுத்தாளனுக்கு அறிவுரை சொல்லும் நிலையில் இருக்கிறான். காரணம், சினிமாவில் புகழ் வருகிறது. கோடிகளில் பணம் வருகிறது. எழுத்தாளனுக்கு ஒரு மயிரும் கிடைப்பதில்லை. அவன் தனக்கு வரும் பிச்சைக்கார ராயல்டியிலும் அல்லது என்னைப் போல் வாசகர்களின் ஆதரவிலும்தான் வாழ வேண்டும். என்னிடம் உள்ள பத்தாயிரம் நூல்களில் ஐயாயிரம் நூல்களை அடுக்கியாயிற்று. மீதி ஐயாயிரம் மூட்டைகளாகவே கிடக்கின்றன. இதுதான் எழுத்தாளனின் நிலை.
மிஷ்கினுடன் நடந்த அந்தத் துன்பவியல் சம்பவத்துக்குப் பிறகு நண்பர்களிடம் அரை மணி நேரம் கெட்ட வார்த்தை கலந்து இந்த விஷயத்தில் விளங்கும் அராஜகத்தை விளக்கினேன். என்னால் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் போன்ற ஒரு கல்வி நிறுவனத்தில் ஜப்பானிய சினிமா மற்றும் ஜப்பானிய இலக்கியம் பற்றி ஒரு வருட காலம் மாணவர்களைப் பயிற்றுவிக்க முடியும். அது தெரியாமல் சினிமா என்ற பொழுதுபோக்கு சாதனம் கொடுத்த புகழினாலும் பணத்தினாலும் செல்வாக்கினாலும் ஒரு இயக்குனர் ஒரு எழுத்தாளனுக்கு அறிவுரை சொல்லக் கூடிய துயரம் இங்கே தமிழில் மட்டும்தான் நடக்க முடியும்.
இதை விடத் துயரமான சம்பவம் என்று கமல்ஹாசன் – ஜெயமோகன் உரையாடலைச் சொல்லுவேன். உரையாடலா அது? கமல்ஹாசனிடம் ஜெயமோகன் எடுத்த பேட்டி. இந்த நிலையை ஆரம்பத்திலிருந்தே நான் மூர்க்கமாக எதிர்த்து வருவதால்தான் சினிமாக்காரர்களுக்கு என்னைக் கண்டால் காண்டு வருகிறது.
போகட்டும். விஷயத்துக்கு வருவோம்.
நகீஸா ஓஷிமாவின் In the Realm of the Senses 1976இலேயே எடுக்கப்பட்டு விட்டது என்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பு. காத்ரீன் ப்ரேயாவின் ரொமான்ஸ் எடுக்கப்பட்டது 1999. ரொமான்ஸ் படத்துக்கு உத்வேகமாக இருந்தது In the Realm of the Senses என்கிறார் காத்ரீன் ப்ரேயா.
ரொமான்ஸ் படம் பற்றி ப்ரேயா பேசும்போது “இது பார்வையாளர்களின் காம உணர்வுகளைத் தூண்டக்கூடிய படம் அல்ல; மாறாக, காமம் பற்றி சிந்திக்க வைக்கும் படம்” என்கிறார். அது உண்மைதான். இதில் நடிக்க வைப்பதற்காக ப்ரேயா ஐரோப்பாவின் புகழ் பெற்ற செக்ஸ் பட நடிகர் Rocco Siffrediயை அழைத்து வந்தார். படத்தில் நேரடியான உடலுறவுக் காட்சிகள் பல உண்டு. ஆனாலும் எந்தக் காட்சியும் பார்வையாளரின் காம உணர்வுகளைத் தூண்டும்படி இருக்காது.
கதையின் நாயகி மாரி. பள்ளி ஆசிரியை. அவளுடைய காதலன் பாலுக்கு மாரி மீது பாலியல் ஈர்ப்பு இல்லை. ஒருநாள் காலையில் மாரி ஒரு மதுபான விடுதிக்குச் சென்று பாவ்லோ என்ற யாரோ ஒருவனோடு உடலுறவு கொள்கிறாள். பாவ்லோவாக நடித்திருப்பவர் ரோக்கோ சிஃப்ரேதி. மாரி திரும்பி வீட்டுக்குச் செல்லும்போது மாடிப்படிக்கட்டுகளில் வைத்து அவளை ஒருவன் வன்கலவி செய்கிறான். மிகவும் கொடூரமான காட்சி அது. படத்தில் வரும் எல்லா காட்சிகளுமே நடிப்பாக இல்லாமல் த்த்ரூபமாகவே எடுக்கப்பட்டன என்கிறார் ப்ரேயா.
இன்னொரு காட்சிதான் உலக சினிமா வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று. மாரியை அவளுடைய பள்ளியின் முதல்வர் ரோபர்த் தன் வீட்டுக்கு அழைத்து வந்து அவளை BDSMக்கு உட்படுத்துகிறார். BDSM என்பதன் விரிவு, Bondage, Dominance, Submission and Sadomasochism. மேற்கு நாடுகளில் BDSM கிளப்புகளே உண்டு. இங்கே இந்தியாவில் எல்லா வீடுகளுமே BDSM கிளப்புகள்தான் என்பதால் தனியாக கிளப்புகள் இல்லை. சமயங்களில் கோவில்களுமே அவ்வகை கிளப்புகளாக மாறுவது உண்டு. சில கோவில்களில் பெண்கள் வரிசையாகக் குப்புறப் படுத்துக்கொள்ள, பூசாரி ஆணி பதித்த மர மிதியடிகளோடு அப்பெண்களின் புட்டங்களின் மீது நடந்து செல்வார். சிலர் கோவில்களில் பலர் அங்கப்பிரதக்ஷணம் செய்வார்கள். எல்லாமே மேலே சொன்ன BDSMதான். ஆனால் டாமினன்ஸ் ரோல் செய்வது கடவுள். வீடுகளில் கணவனோ மனைவியோ அந்தப் பாத்திரத்தைச் செய்வார்கள். கடந்த பல நூற்றாண்டுகளாக அந்த ரோல் செய்தது கணவர்கள் என்பதால் இப்போது சேர்த்து வைத்து மொத்து வாங்குகிறார்கள்.
பள்ளி முதல்வர் ரோபர்த் மாரியை முழு நிர்வாணமாக்கி ஒரு பிடிஎஸ்எம் கருவியில் கட்டிப் போடுகிறார். (பார்க்க சிலுவை மாதிரி இருக்கும்.) வாயில் துணியை வைத்துக் கட்டுகிறார். முலைக்காம்புகளில் கிளிப்புகள். சவுக்கடிகள். கடைசியாக ஏதோ மயிலிறகு என்று நினைக்கிறேன், பார்த்து பல ஆண்டுகள் ஆகின்றன – அந்த இறகினால் மாரியின் யோனிக் குமிழில் வருடுகிறார். யோனியிலிருந்து குபுக் குபுக் என்று மதன நீர் கொட்டுகிறது.
இந்தக் காட்சியில் நடித்த Caroline Ducey இது பற்றி விரிவாகவே பேசியிருக்கிறார். இது எல்லாமே ஆவணப் பட பாணியில் எடுக்கப்பட்டவை. எதுவுமே நடிப்பு அல்ல.
ஆனால் நகீஸா ஓஷிமாவின் In the Realm of the Senses படம் ரொமான்ஸ் மாதிரி அல்ல. படம் முழுக்கவே நீலப்படம் போன்றே எடுக்கப்பட்டிருக்கிறது. காட்சிகளின் நோக்கம் அது அல்ல என்றாலும், காட்சிகளின் நிஜத்தன்மையால் நம்முடைய காம உணர்வுகள் தூண்டப்படுகின்றன.
சதா என்பவள் ஒரு முன்னாள் விபச்சாரி. தற்சமயம் ஒரு தங்கும் விடுதியில் வேலைக்குச் சேர்கிறாள். அந்த விடுதியின் காப்பாளன் கிச்சிஸோவின் வேலை எல்லா பெண்களோடும் படுத்துக்கொண்டே இருப்பதுதான். பல்வேறு விதமான காமக் களியாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறான். (படம் முழுவதும் திரும்பத் திரும்ப இதே மாதிரி காட்சிகள்தான்.) ஒரு கட்டத்தில் சதாவுக்கும் அவனுக்குமான காம உறவு தீவிர நிலையை அடைகிறது. எப்போது பார்த்தாலும் இருவரும் உடலுறவிலேயே ஈடுபட்டிருக்கிறார்கள். அதோடு கூட இருவரும் கூட்டுக் கலவியிலும் ஈடுபடுகிறார்கள். அவர்களின் நடுவே நின்றபடி ஒருவன் இசைக்கருவி வாசிக்கிறான். எல்லாமே மனித உடலின் இச்சைகளை முழுமையாகத் திருப்தியுறச் செய்யும் நோக்கத்திலேயே நடக்கின்றன.
மனித உடலின் இச்சை எப்போது முழுமையடையும்? முழுமையடையுமா, இல்லையா? அதுதான் இந்தப் படத்தின் நோக்கம் என்று நினைக்கிறேன்.
இங்கே மார்க்கி தெ ஸாதை நினைவு கூருங்கள். அவர் நினைத்திருந்தால் சிறைவாசத்தைத் தவிர்த்திருக்கலாம். பிரபுவாகவே வாழ்ந்திருக்கலாம். அரசாங்கத்தில் பெரும் பதவிகள் கிடைத்திருக்கும். மனைவியும் மார்க்கியை விட செல்வம் மிகுந்தவள். ஒரு பேரரசன் போல் வாழ்ந்திருக்கலாம். ஆனால் மார்க்கி தெ ஸாத் தன் சரீர இச்சைகளுக்கு செவி சாய்த்தார். தன் சரீரம் எது எதனால் திருப்தியுறுகிறது, எது எதனால் முழு இன்பத்தைத் துய்க்கிறது என்று சோதனைகள் செய்தார். அதன் பொருட்டு சிறைத் தண்டனை பெற்றார். அப்படியும் அவர் கவலைப்படவில்லை. பெரும்பாலான அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் தங்கள் கொள்கைகளுக்காக சிறைத் தண்டனை பெற்றார்கள். அந்தக் கொள்கைகள் இதுவரையிலான மானுட சரித்திரத்தில் ஒழுக்கம், நீதி, நேர்மை என்ற வரையறைக்குள் வருபவை. உடல் – ஆன்மா என்ற ஜார்ஜ் பத்தாயின் கோட்பாட்டை நினைவு கூர்க. தேச பக்தி, சர்வாதிகாரத்தை எதிர்த்தல், கருத்துச் சுதந்திரம், தேச விடுதலை, இன விடுதலை, மனிதர்களிடையே பாகுபாடுகளையும் சுரண்டலையும் ஒழித்தல் என்ற பல்வேறு உயரிய கொள்கைகளுக்காக அவர்கள் சிறைத்தண்டனை பெற்றார்கள். பலர் உயிரையும் நீத்தார்கள். ஆனால் இந்த மானுட சரித்திரத்தில் தன் உடலின் துய்ப்புக்காக சுமார் முப்பது ஆண்டுகள் சிறையிலும் மனநோய் விடுதியிலுமாக அடைக்கப்பட்டவர் மார்க்கி தெ ஸாத் ஒருவர்தான்.
சதா கிச்சிஸோவுடன் சதா நேரமும் உடலுறவிலேயே ஈடுபட்டுக்கொண்டிருக்கிறாள். ஒரு கட்டத்தில் அவன் சொல்கிறான், ”நான் சிறுநீர் கழிக்கும் நேரத்தைத் தவிர வேறு எல்லா நேரமும் என் குறி யாராவது ஒரு பெண்ணின் யோனிக்குழிக்குள்ளேயே கிடக்கிறது.”
ஆனால் ஒரு சமயம் சதா அதற்குக் கூட தடை விதிக்கிறாள். சிறுநீரைக் கூட என் யோனிக்குள்ளேயே விடு, அது எப்படி இருக்கும் என்று பார்த்து விடலாம், எனக்கு அதில் அனுபவமே இல்லை என்று அவனை வற்புறுத்துகிறாள்.
பெரும்பாலான உடலுறவுக் காட்சிகள் க்ளோஸப்பில்தான் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு காட்சியில் கிச்சிஸோவின் குறி சதாவின் வாய்க்குள் இருக்கிறது. (க்ளோஸப்). வாய்ப் புணர்ச்சி முடிந்து அவள் தன் வாயை எடுக்கும்போது அவள் வாயிலிருந்து விந்து கொட்டுகிறது. (க்ளோஸப்).
சதாவுக்கு ஒரு பழக்கம், உடலுறவின்போது கிச்சிஸோவின் கழுத்தை நெறிப்பது.
ரியூ முராகாமியின் டோக்யோ டிகேடன்ஸ் படத்தில் வரும் சில காட்சிகள் பற்றி எழுதியிருக்கிறேன். ஜப்பானில் இப்படிப்பட்ட பணிகளுக்கென்று இப்போது சில நிறுவனங்கள் செயல்படுகின்றன. எத்தனை மணி நேரம் சேவை தேவை என்று சொன்னால் பெண்கள் உங்கள் வீட்டுக்கு வருவார்கள். எத்தனை பெண் வேண்டும் என்றும் சொல்ல்லாம். எஸ்ஸா எம்மா என்று கேட்பார்கள். இரண்டில் ஒன்றோ அல்லது இரண்டையுமோ சொல்ல வேண்டும். எஸ் என்றால் ஸேடிஸம். எம் என்றால் மஸாக்கிஸம்.
எஸ்ஸுக்கு (ஸேடிஸம்) ஒரு உதாரணம்: அந்தப் பெண்ணைக் கட்டி வைத்து, வாயில் துணியைத் திணித்து விட்டுப் புணரலாம்.
பெண்ணுக்கு ஏதாவது நேர்ந்தால் அழைத்தவரே பொறுப்பு ஏற்க வேண்டும்.
எம்முக்கு (மஸாக்கிஸம்) ஒரு உதாரணம்: வந்திருக்கும் பெண்ணுடன் வாடிக்கையாளன் உறவு கொள்ளும் நேரத்தில் அவள் அவன் கழுத்தை நெறிக்க வேண்டும். அவன் வேண்டாம் வேண்டாம், போதும் நிறுத்து என்று கத்தினாலும் விடாமல் நெறிக்க வேண்டும். அவன் கத்துவதைப் பார்த்து பயந்து நெறிப்பதை நிறுத்தி விட்டால் அவள் மீது அவன் நிறுவன மேலாளரிடம் புகார் செய்வான். அப்படிப் புகார் போனால் அவளை அடுத்த முறை எஸ் அண்ட் எம் மேட்டருக்கு அனுப்ப மாட்டார்கள். எஸ் அண்ட் எம்மில்தான் பைசா அதிகம் கிடைக்கும். வந்தது இரண்டு பெண்கள். அதில் முதலாமவள் அவன் கத்துவதைப் பார்த்து பயந்து போய் நெறிப்பதை நிறுத்தி விடுகிறாள். அவளைத் தள்ளி விட்டுவிட்டு அடுத்தவளுடன் உறவு கொள்கிறான் வாடிக்கையாளன். அவள் பயம் கொள்ளாமல் கழுத்தை நெறித்துக்கொண்டே இருக்கிறாள். ஒரு கட்ட்த்தில் அவனுக்கு மூச்சு நின்று போய் அசைவற்று ஆகி விடுவான். ஐயோ, செத்து விட்டானே என்று இரண்டு பெண்களும் தங்கள் பொருட்களை பையில் அள்ளிப் போட்டுக்கொண்டிருக்கும்போது அவனுக்குத் திரும்பவும் மூச்சு வருகிறது.
என் வாழ்விலேயே இதுதான் மகத்தான க்ளைமேக்ஸ் என்று சொல்லி அவளுக்கு அதிகமான தொகையைக் கொடுக்கிறான் வாடிக்கையாளன்.
அவன் ஏற்கனவே எஸ் அண்ட் எம் என்று இரண்டையும் கேட்டிருப்பான். அதனால் அந்தப் பெண்கள் வந்தவுடன் எம்மில் ஈடுபடுவான். அது என்னவென்றால், அவர்களை ஒரு பேஸினில் மூத்திரம் பெய்யச் செய்து அதைக் குடிக்கிறான். இன்னும் பல உண்டு. நீங்களே படத்தைப் பார்த்து விடுங்கள்.
அப்படியே In the Realm of the Sensesக்கு வருவோம். கிச்சிஸோவுடன் உறவு கொள்ளும்போது அவனுடைய கழுத்தை நெறிப்பது சதாவின் பழக்கம். இப்படியே போனால் அவள் ஒருநாள் உன்னைக் கொன்று விடுவாள், உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் இங்கிருந்து ஓடி விடு என்று கிச்சிஸோவிடம் சொல்கிறாள் விடுதியில் இருக்கும் ஒரு கிழவி.
அந்தக் கிழவியோடும் ஒருநாள் அவனை உறவு கொள்ளச் செய்து வேடிக்கை பார்க்கிறாள் சதா.
ஒருமுறை கிச்சிஸோவுடன் உறவு கொள்ளும் போது அவன் கழுத்தை நெறிக்கிறாள் சதா. கிச்சிஸோ இறந்து விடுகிறான். உடனே சதா அவனுடைய ஆண் குறியை அறுத்து வைத்துக்கொண்டு நான்கு தினங்கள் அதனுடனேயே அலைகிறாள்.
காத்ரீன் ப்ரேயாவின் ரொமான்ஸை விட In the Realm of the Senses படம்தான் உலகில் உள்ள எல்லா சினிமா விமர்சகர்களாலும் கிளாஸிக் என்று கொண்டாடப்பட்டது. நீலப்படங்களைப் போலவே எடுக்கப்பட்டிருந்தாலும், இந்தப் படத்துக்கு இப்படி ஒரு வரவேற்பும் பாராட்டும் கிடைத்ததற்கு ஒரே காரணம், படத்தின் உண்மைத்தன்மை. மனித மனதின் திறக்கப்படாத பக்கங்களை இந்தப் படம் பச்சையாகப் பேசுகிறது.
இது ஏன் நீலப்படங்களைப் போல் எடுக்கப்பட்டிருக்கிறது, இத்தனை பச்சையாகவும் வெளிப்படையாகவும் எடுப்பது ஆபாசம் இல்லையா என்ற கேள்விக்கு நகீஸா ஓஷிமா சொன்ன பதில்: எது மறைக்கப்படுகிறதோ, அதுவே ஆபாசம். எது வெளிப்படையாக இருக்கிறதோ அது ஆபாசம் இல்லை.
இப்போது என்னை அகிரா குரஸவாவின் சமாதியைப் பார்க்கச் சொன்ன மிஷ்கினுக்கும், டீச்சரின் கைக்குட்டையை முகர்ந்து பார்க்கும் சிறுவனை வைத்து கீரிப்பிள்ளை பாம்பு சண்டை காண்பித்துக்கொண்டிருக்கும் மாரி. செல்வராஜுக்கும் என் கோரிக்கை என்னவென்றால், நீங்கள் இருவரும் காத்ரீன் ப்ரேயாவின் ரொமான்ஸ் மற்றும் நகீஸா ஓஷிமாவின் In the Realm of the Sensesஐயும் பார்த்து விடுங்கள்; பார்த்து விட்டு, ஃபூ, வெறும் செக்ஸ் படம் என்று ஒதுக்கி விடக் கூடாது. ஏனென்றால், உலகின் முக்கியமான சினிமா விமர்சகர்கள் ஓஷிமாவின் படத்தை கிளாஸிக் என்று வகைப்படுத்துகிறார்கள். Beware. எத்தனைக் காலத்துக்கு நீங்கள் கைக்குட்டையை வைத்துக்கொண்டு பஜனை செய்வீர்கள் மாரி. செல்வராஜ்? எத்தனைக் காலத்துக்கு பிரேதங்களைக் காட்டி பார்வையாளர்களை அழ விடுவீர்கள்? ட்ராஃபிக் சிக்னல்களில் குழந்தைகளைக் காண்பித்து பிச்சை எடுக்கும் பெண்களுக்கும் இப்படி பிரேதங்களைக் காண்பித்து எல்லோரையும் தேம்பத் தேம்ப அழ வைக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று நீங்கள் சொல்லுங்கள். நான் கேட்டுக் கொள்கிறேன்.
மாரி செல்வராஜுக்கு இன்னொரு விவரம். பாபெல் படத்தில் வரும் ஒரு பத்து வயதுச் சிறுவன், தன்னை விட சற்றே பெரியவளான தன் சகோதரி குளிப்பதைப் பார்த்து கர மைதுனம் செய்வான். அந்தப் பட்த்தைப் பார்த்திருக்கிறீர்களா செல்வராஜ்? அதுதான் வாழ்வின் நிஜம். நீங்கள் சொல்வது பொய். ஆனால் தமிழ்நாட்டில் பொய்தான் விலை போகும். ஏனென்றால், நிஜத்தைச் சொன்னால் கலாச்சாரக் காவலர்கள் உங்கள் நிம்மதியைக் கெடுத்து விடுவார்கள். நிம்மதி கெட்டால் கல்லா கட்டுவது கெட்டு விடும்.
பின்குறிப்பு: In the Realm of the Senses படம் 1936இல் தோக்யோவில் நடந்த ஒரு நிஜமான சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்தப் படம் அமெரிக்கா, ஜெர்மனி, போர்ச்சுகல், பெல்ஜியம், கனடா போன்ற பல நாடுகளில் தடை செய்யப்பட்டது. ஜப்பானில் இன்றளவும் இந்தப் படத்துக்குத் தடைதான். ஃப்ரான்ஸில் மட்டுமே இது எந்தத் தடையும் இல்லாமல் பல லட்சக்கணக்கான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது இந்தப் படம். இதன் போஸ்ட் ப்ரொடக்ஷன், வெளியீடு எல்லாமே ஃப்ரான்ஸில்தான் நடந்தது.
இந்தப் படத்தின் பெயர் ரொலாந் பார்த் ஜப்பான் பற்றி எழுதிய Empire of Signs என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
சந்தா/நன்கொடை நினைவூட்டுகிறேன்.
சந்தா மற்றும் நன்கொடையை ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)
ரேஸர்பே மூலமாகவும் அனுப்பலாம்.
***
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
வங்கி விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai.