புதிய இடம், புதிய சூழல்…

கடந்த ஒரு ஆண்டு காலமாக நான் சாந்தோம் வீட்டு மொட்டை மாடியில்தான் நடைப் பயிற்சி போய்க்கொண்டிருந்தேன். அதற்கு ஷூ போட வேண்டாம். உள்ளாடை அணிய வேண்டிய அவசியம் இல்லை. ஜட்டி என்று எழுத கூச்சமாக இருக்கிறது. இந்த ஜட்டி என்ற சிறிய துணி அய்ட்டம் இளம் வயதிலிருந்தே எனக்குப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. பதினாறு வயது வரை ஜட்டி கிடையாது. கோவணம் கூட கட்டியது இல்லை. பதினாறிலிருந்து இருபத்து மூன்று வயது வரை கோவணம். வேலைக்குப் போன பிறகுதான் ஜட்டி வாங்க ஆரம்பித்தேன்.

ஜட்டியின் பிரச்சினை, ஜட்டி போட்டால் குரல்வளையை நெறிக்கிறாற் போன்ற ஒரு துன்பமான உணர்வு ஏற்படுகிறது. என் கழுத்து பெரிது என்பதால் சலூன் கடைகளில் உடம்புக்கு மேலே துணி போட்டு கழுத்தில் இறுக்கும்போது விழி பிதுங்குவது போல் இருக்கும். நேற்றுதான் எழுதினேன், BDSM பற்றி. அந்த மாதிரி இருக்கும். நானோ யாரோடும் பேச மாட்டேன். கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்ப்பேன். பிறகு வாய் விட்டுச் சொல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும். சொற்ப சமயங்களில் சொல்லாமலேயே அந்தத் துன்பத்தை அனுபவித்து விட்டு வருவேன். ஜட்டி போட்டால் அப்படி ஒரு உணர்வு ஏற்படுகிறது. எனக்கு மட்டுமா, உங்களுக்குமா என்று நான் கள ஆய்வு செய்ததில்லை.
இத்தனைக்கும் நான் பயன்படுத்தும் ஜட்டி ஒரு சர்வதேச பிராண்டுதான். அதிலும் இறுக்கமாக இல்லாமல் கொஞ்சம் தளர்வாகத்தான் வாங்குவேன்.

எங்கே போனாலும் நண்பர்களோடு போவதுதான் என் வழக்கம். ஆனால் ஜட்டி மட்டும் மிகவும் ரகசியமாக, தனியாகப் போய்த்தான் வாங்குவேன். விலை அப்படி. பார்த்து கீர்த்து வைத்து விட்டால் அப்புறம் ஒரு ஆள் ஒரு பைசா அனுப்ப மாட்டான், ஆமாம்.
இந்த ஜட்டி துன்பம் ஒரு வருட காலமாக இல்லாமல் இருந்தது. ஆனால் பேண்ட் மட்டும் ஜட்டி போடாமல் போட முடியாது. தவறிப் போய் ஏதாவது கொட்டையில் பட்டு விட்டால் செத்தோம். உயிர் பாதி தூரம் நம்மை விட்டுப் பிரிந்து போய், பிறகு அதற்கே ’இன்னும் நமக்கு வேளை வரவில்லை’ என்ற உணர்வு வந்து மீண்டும் நம்மிடம் வந்து சேரும். கிட்டத்தட்ட after death experienceதான். ஆனால் வேட்டியில் மட்டும் ஜட்டி போடவில்லையானாலும் உயிர்ப் பிரச்சினை ஏற்பட அத்தனை வாய்ப்பு இல்லை. இதெல்லாம் உங்களுக்குப் புரியாது. அனுபவப்பட்டவர்களே நான் சொல்வதை உணர முடியும். இன்னும் விளக்கமாக எழுத முடியும். சிலர் சங்கடப்படலாம் என்பதால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.
எனக்கு ஒரு கோடீஸ்வர நண்பர். ஒரு ஜட்டி நூறு ரூபாய் என்று முப்பது ஜட்டி வாங்குவார். காட்டன். டாண்டெக்ஸ். ஒரு நாளைக்கு ஒன்று என முப்பதையும் போட்டுத் தீர்த்து விட்டு அடுத்த மாதம் முப்பது வாங்குவார். இப்போது சீனியும் அதே மாதிரிதான் ஏதோ சொன்னார். எனக்கு இம்மாதிரி பேச்சைக் கேட்டாலே எரிச்சல் உண்டாகும் என்பதால் சரியாகக் கேட்டுக் கொள்ளவில்லை.
சாந்தோமில் ஏன் மொட்டை மாடியில் நடைப் பயிற்சி? ஏன் சாலைகளிலோ பார்க்கிலோ இல்லை? உயிர்ப் பயம்தான் காரணம். நான் கழுத்தில் மூன்று சங்கிலி அணிந்திருக்கிறேன். மூன்று வாசகர்கள் கொடுத்த அன்பளிப்பு. சாந்தோமில் திருட்டு பயம் அதிகம். சாந்தோம் நெடுஞ்சாலையின் ஒரு பக்கம் மைலாப்பூர். கடலை ஒட்டிய பக்கம் சாந்தோம். இரண்டையும் பிரிப்பது ஒரு நெடுஞ்சாலைதான். மைலாப்பூரில் பயம் இல்லை. சாந்தோமில் பயம். அதனால்தான் மூன்று செயின் அணிய ஆரம்பித்ததிலிருந்து நடைப் பயிற்சிக்கு வெளியே போவதில்லை.

இப்போது ஒரு ஆண்டுக்குப் பிறகு முதல் முதலாக காலில் ஷூ அணிந்து கொண்டு வெளியே தெருக்களில் நடைப் பயிற்சிக்குப் போனேன். அட்டா, இந்த காந்தி நகர் கிட்டத்தட்ட போட் கிளப் மாதிரி இருக்கிறது. போட் கிளப்பாவது ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோவெனக் கிடக்கும். இங்கே ஆள் நடமாட்டமும் இருக்கிறது. வீட்டிலிருந்து பத்து கட்டிடம் தள்ளி மத்ஸ்யா என்று ஒரு உணவகம். மிக நல்ல உணவகம். காஃபி குடிக்கலாமா என்று போனேன். ஏழு மணி. தூங்கிக்கொண்டிருந்தார்கள். திரும்பி விட்டேன்.

இன்னொரு சாலையில் நடந்தால் கஸ்தூர்பா காந்தி நகர் வரும். அங்கே மெட்றாஸ் காஃபி கிளப் உள்ளது. வீட்டிலிருந்து முக்கால் கிலோமீட்டர்தான். நாளை போகலாம் என்று திட்டம்.
மைலாப்பூர்காரர்கள் மைலாப்பூரை விட்டுப் போவதே இல்லையே என்று பலரும் கேட்பார்கள். நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் அடையாறு காந்தி நகர் மைலாப்பூரை விட நன்றாக இருக்கிறது.

இங்கே காந்தி நகரில் ஒரு கிளப் உள்ளது. அதில் நானும் சேர்ந்து கொள்ள உங்களில் யாரேனும் சிபாரிசு செய்வீர்களா?

சந்தா/நன்கொடை விஷயம் நினைவூட்டுகிறேன்.

சந்தா மற்றும் நன்கொடையை ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)

ரேஸர்பே மூலமாகவும் அனுப்பலாம்.

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai.