Wim Mertens உருவாக்கிய Struggle for Pleasure என்ற இசைக் கோர்வையைப் பற்றி பலமுறை எழுதியிருக்கிறேன். விம் மெர்ட்டென்ஸைக் கேட்க முனையும் போதெல்லாம் ஸ்ட்ரக்ள் ஃபர் லைஃபோடு முடிந்து விடும். அதே பாடலை திரும்பத் திரும்ப ஐம்பது முறை கேட்டு அந்த இரவே முடிந்து விடும். இன்று விம் மெர்ட்டன்ஸின் வேறு ஏதாவது கேட்கலாம் என்று தேடியபோது இந்தப் பாடல் கிடைத்தது. Birds for the Mind. இது ஸ்ட்ரகிள் ஃபர் லைஃபை விட என்னைக் கவர்ந்தது. இந்தப் பாடலில் விம் மெர்ட்டன்ஸின் கதறலைக் கேளுங்கள். ஆன்மா அதிர்ந்து விடும். நூறு பேர் வாத்தியங்களில் இருக்கிறார்கள். ஐந்து நிமிடப் பாடலுக்கு மூன்றரை நிமிடம் கரகோஷம் செய்கிறார்கள்.
ஏற்காட்டில் நிசப்தமான ஒரு இரவில் கேம்ப்ஃபயர் போட்டு அதன் அருகில் அமர்ந்தபடி கையில் வைனுடன் இந்தப் பாடலைக் கேட்பதற்காக மனம் ஏங்குகிறது. இலக்கியம் அறிவோடு உரையாடுகிறது என்றால் இசை ஆன்மாவுடன் கொஞ்சி விளையாடுகிறது.
இந்தப் பாடலை என் இளம் கண்மணிகள் ரூபாஸ்ரீ, ஷ்ருதி, சக்திவேல், குரு ஆகியோருக்கு டெடிகேட் செய்கிறேன்.
Struggle for Pleasureஇன் வேறோரு சிறப்பான வடிவம். இதில் விம் மெர்ட்டன்ஸ் அதிகம் பாடுகிறார்.