நேற்று நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் ஈடி என்ற மலையாளப் படத்தைப் பார்க்க முயன்றேன். பத்து நிமிடம்கூட பார்க்க முடியவில்லை. சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. பத்தே நிமிடத்தில் (கக்கூஸில் ஒளிந்து கொள்ளும் காட்சி) ஓடி விட்டேன். இத்தனை சிறுபிள்ளைத்தனமாக தமிழ் சினிமாகூட இருப்பதில்லை.
ப்ளூசட்டை மாறனின் பரிந்துரையில் இன்று டௌன்ரேஞ்ஜ் என்ற படம் பார்த்தேன். இப்படி ஒரு த்ரில்லரை இதுவரை பார்த்ததில்லை. மை நேம் இஸ் டெவில் அளவுக்கு இருந்தது. மை நேம் இஸ் டெவிலில் கதை இருந்தது. அதனால் அதை எடுப்பது சுலபம். ஆனால் டௌன்ரேஞ்ஜில் கதை இல்லை. இதை ஒன்றரை மணி நேரம் இத்தனை திகிலாகக் கொண்டு போவது மிகவும் கடினம்.