3. மஹாத்மாவின் மிமிக்ரி

1 நரகத்திலிருந்து ஓர்அழைப்புசிறப்பு விருந்தினராகஅங்கே சில காலம் தங்கிநரகம் பற்றி ஓர்நாவல் எழுத வேண்டும் சிறப்பு விருந்தினனாகஎங்கே அழைத்தாலும்செல்வேனென்பதால்அழைப்பை ஏற்றுக்கொண்டேன் நரகத்திலெனக்குப் பிரச்சினைஇருள்அதிலென்ன பிரச்சினைஇருண்மை பற்றி எழுதியவர்தானேநீரென்றார் சாத்தான் வெளிச்சத்திலிருந்துதான் இருள்குறித்து எழுத முடியும்இருளிலிருந்தே இருள் குறித்தெழுதிப்பழக்கமில்லை தேவரீரென்றேன் வேறெப்படி வேண்டுமானாலும்அழையுங்கள் தேவரீர் மட்டும்வேண்டாமென்றார் சாத்தான் பெயரில் ன் வந்தது கடவுளின்சதிஅதற்காக விருந்துக்குஅழைத்தவரை அவமதிப்புசெய்யலாமா?லூசிஃபரில் ர் இருக்கிறதென்றுதானேன் போட்டுப் பேர் மாற்றம் செய்தார்கடவுள்? மது விருந்தில் எனக்குஅளிக்கப்பட்டது சீலே வைன்தானென்பதையதன் ருசியிலிருந்துஅறிந்து கொண்டேன் சாத்தான் தன் கதை … Read more

2. இரண்டு பைத்தியக்காரர்கள்

ஜான் ஜெனேயை உங்களுக்குத் தெரியும்அந்த அளவுக்கு லூயி ஃபெர்தினாந் செலின்பிரபலம் இல்லைஜெனேயை விட செலினை எனக்குப்பிடிக்கும் ஜெனே அதிர்ஷ்டசாலிஇடதுசாரிகளுக்கும் மற்றபலஇலக்கிய ஆர்வலர்களுக்குமானடார்லிங் செலின் சபிக்கப்பட்டவன்அவனேதான் அவனை சபித்துக்கொண்டான்ஏழைகளோடே வாழ்ந்தான்மருத்துவனாக இருந்தும் ஏழ்மையையேதேர்ந்தெடுத்துக்கொண்டான்ஃபாஸிஸ்டுகளை ஆதரித்ததும்யூத வெறுப்பும்அவனை அவன் தேசத்தில்தீண்டத்தகாதவனாக்கியது பாரிஸ் ரெவ்யூவில் அவனதுநேர்காணலைப் படித்தால்அவனைப் போல் சபிக்கப்பட்டஒரு எழுத்தாளன் இருக்க முடியாதென்றேதோன்றுகிறதுகாலிமார் பதிப்பகத்துக்கு நான்ஆறு மில்லியன் கடன்பட்டிருக்கிறேன்என்கிறான் அதற்காகத்தான் எழுதித்தொலைக்க வேண்டியிருக்கிறதுபணம் மட்டும் இருந்தால்இந்த எழுத்துத் தொல்லையே இருக்காதுஒரு கடற்கரை கிராமத்தில்அமர்ந்து செய்தித்தாளைப் படித்துக்கொண்டுஅக்கடா என்று இருப்பதே சுகம்என்கிறான் … Read more

1. பேசும் மைனா

1 அப்படியொரு மைனாவைப்பலரும் பார்த்திருக்க முடியாது.மைனா என்று உணர்ந்துகொள்வதற்கேநீண்ட காலமாயிற்று.“பேசும் மைனாக்கள் அரிதினும் அரியவை”என்றுதான் அது பேசத் தொடங்கிற்று. “அடுத்த முறை உன்னை எப்போது சந்திக்கலாம்?”என்று கேட்டதற்குஎதுவும் பேசாமல் பறந்து போய்விட்டது. 2 நீண்ட காலத்துக்கப்பால் மீண்டும்அதே மைனா என் வீட்டுச் சாளரத்தில்வந்தமர்ந்ததுஎதுவும் பேசாமல் ஏன் சென்றாய்எனக் கேட்டேன். பறவைகளுக்குத் தர வேண்டியகுறைந்த பட்ச மரியாதையைக் கூடத் தரத் தெரியாமல் இருக்கின்றாயேஎன்று கடிந்து கொண்டது. அமைதியாக இருந்தவனிடம்“அடுத்த முறை எப்போது உன்னை எதிர்பார்க்கலாம்? என்றல்லவா நீ வினவி … Read more

ஆலயம்

பவா செல்லதுரைபாஸ்டன் வந்திருப்பதாகஅங்கே வசிக்கும் வளன்சொன்னான் மறுநாள்பவா பேசினார்வளன் பாதிரியாகஊழியம் செய்யும்ஆலயத்துக்கு அழைத்துச்சென்றானாம்ஒவ்வொரு இடமாகக் காண்பித்தவன்ஒரு அறையில் நின்றான்Sacristy என்றார் பவாபிற்பாடு அகராதியில்பார்த்து பாதிரிகளின்ஒப்பனை அறையென அறிந்துகொண்டேன்பாதிரிகள் அணியும்பத்துப் பதினைந்து அங்கிகளில்ஒன்றை எடுத்துக் காண்பித்தான்அதில் வளனின் தாய் பெயரும்தந்தை பெயரும் அடுத்துஉங்கள் பெயரும் இருந்ததுபவா சொன்னபோதுஅவர் குரலிலிருந்த உணர்ச்சியைஎன்னால் இங்கே கொண்டுவரமுடியவில்லைவேறெந்தப் பெயரும் இல்லையாஎன்றேன்இன்னொரு பெயரும் இருந்ததுஅது ரகசியமென்றார் பவா

ஞானம்

வித்யா ஒரு காணொலிஅனுப்பியிருந்தாள் ‘அப்பா, இதைப் பார்த்ததும்உங்களுக்கு அனுப்ப வேண்டுமென்றுதோன்றியது’ காணொலியிலொருவர்தன் வீட்டுமொட்டைமாடியில்பட்சிகளுக்கு உணவளிக்கிறார் அங்கே வருகிறதொரு குரங்குஅந்த உணவிலொரு கையள்ளிவாயில் போட்டு மென்றுஅதைத் தன் மடியிலிருக்கும்குட்டியின் வாயில் கொடுக்கிறதுகுட்டியல்லஅதுதாயைப் பிரிந்து விட்டவொருமைனாக்குஞ்சு 2 கு.ப.ரா.வின் கதை ஒன்றுசித்தார்த்தன் ஞானம் தேடிஅலைகிறான்எத்தனையெத்தனையோஞானிகளைப் பார்க்கிறான்என்னென்னவோ தவங்களைப்புரிகிறான்தேடிய ஞானம்கிட்டுவதாயில்லைசலித்துப் போய்ஞானம் கிட்டும் வரைசோறு தண்ணியில்லையென்றமுடிவோடு ஒருமரத்தடியில் அமர்கிறான்நாற்பத்தேழு தினங்கள்கடந்தன இப்படி ஒருவன்மரத்தடியில் இருப்பதைப்பார்த்துக்கொண்டேதினமும் அந்தப் பக்கம்போகிறாள் ஒரு பெண் நாளுக்கு நாள் அவனுடல்சதை வற்றி எலும்பும்தோலுமாய் உருகுவதைக்கண்டு நாற்பத்தெட்டாம் நாள்பாலன்னம் … Read more

விநோதமடைதல்

1 விழிகளடிக் கருவளையம்நீங்க ஒரு பசைதோற்சுருக்கம் போக்கவொரு பசைகறை-மரு-தேமல் போக்குகின்ற தைலங்கள்தோல் மின்ன-மிளிர-மினுமினுக்கப்பல களிம்புகள்எல்லாமும் தேடித் தேடி வாங்கும்எனக்கு அதைப்பயன்படுத்தும் வேகமில்லைஅதனதன் ஆயுட்காலம் முடியமுடியஎல்லாம் குப்பைத் தொட்டியில்போய்ச்சேரும் நூறாண்டுகளைத் தாண்டியும்ஜீவிக்கும் உயிர்களும் ஓரிடத்தில் உண்டு.அதன் பெயர் விநோத நூலகம் கன்னிகளின் பெருமூச்சுபசியின் கதறல்போர்களின் குருதிவாடைகடவுளருகே சென்றோரின்புதிர்மொழிகள்பாணர்களின் பாடல்கள்காதலர்களின் கனவுமொழிஅரச குலத்தோரின் அதிகாரக் கூச்சல்அடிமைகளின் ஓலங்கள்இசைஞர்களின் ராகசஞ்சாரம்துறவிகளின் மௌனம்துரோகிகளின் துர்வாடைகணக்கற்ற யோனிகளின் தாபம்கரமைதுனங்களால் நிரம்பியகழிவறைக் கோப்பைகளின் அபத்தம்கொலைகாரர்களின் ஆசுவாசம்பைத்தியங்களின் சிரிப்பொலிம்அழுகையொலியானைகளின் வாஞ்சைபூனைகளின் மர்மம்நாய்களின் விஸ்வாசம்தாவரங்களின் கருணைஅரசியல்வாதியின் தந்த்ரம்மூடர்களின் கூச்சல்அசடர்களின் … Read more