துக்கம் பரவசம்

Adagio for Strings கேட்டு
உங்கள் கதைநாயகி
மீளாத் துயரில் தோய்ந்தாளென
எழுதியிருக்கிறீர்கள்.
எனக்கோ அதைக் கேட்டால்
ஆன்மாவில் பரவசம்
அருவியெனப் பொங்கி வழிகிறது
என்றாள் என் தோழி.
நான் சொன்னேன்:
ஆனந்தமும், துக்கமும், பரவசமும்—
ஒன்றே, வேறு இல்லை.
பனிமலைகளின் பாதாள மௌனத்தில்,
ஒரு நொடியின் நிழல்
வாழ்க்கையின் நித்தியப் பொறியைத் தீண்டுகிறது.