1
நானும் மனையாளும்
இன்று வெளியே சென்றோம்
இப்படிச் சென்று
ஆண்டு மூன்றாயிற்று
மிக்ஸி வாங்க வேண்டும்
பழைய மிக்ஸி போய் விட்டது
ஒவ்வொரு சட்டையாய் மாற்றினேன்
எதிலும் திருப்தியில்லை
கடைசியில்
இருப்பதிலேயே ஆக உசத்தியான
ஒன்றைத் தேர்ந்தேன்
எதற்கும் கேட்டு விடுவோமென்று
மனையாளிடம் காண்பித்தேன்
உற்சாகமாய்த் தலையை ஆட்டி
ஓகே என்றாள்
2
பாத்திரக் கடையில்
விற்பனைப் பிரிவில்
பத்து இருபது பெண்கள்
எலும்புக்கூடுகளாய்
காலணி அணியாமல் நின்றார்கள்
ஒருத்தி மட்டும்
சினிமா நட்சத்திரம் போலிருந்தாள்
கலகலப்பாய் சிரித்தபடி அவள்
மிக்ஸி வகைகளைக் காண்பித்தாள்
எனக்கு அவள் மீது ஆர்வம் மிகுந்தது
அவள் ஏன் இந்தப் பாத்திரக் கடையில்?
மேற்கத்திய நாடுகள் போலில்லை இது
அங்கென்றால் ஒருத்தி
கடையில் பணி செய்தபடி
சட்டம் படிக்கலாம்
வணிகம் படிக்கலாம்
பேராசிரியராகலாம்
உலகம் சுற்றலாம்
இங்கே
வாழ்நாள் பூராவும்
இந்தப் பாத்திரக் கடைதான்
இனிமேல்தான் மணமாகும்
வருபவன் எப்படியிருப்பானோ
குடிகாரனென்றால்
அடி உறுதி
குழந்தைகளும் பிறக்கும்
பாத்திரக் கடையோடு
வீட்டு வேலையும் சேர்ந்து கொள்ளும்
ஐந்தே ஆண்டுகளில்
உருவம் சிதைந்து போகும்
இந்தச் சிரிப்பும் மறைந்து போகும்
அவள் ஏன் என் பேத்தியாக இருந்திருக்கக் கூடாது?
அவள் பெயரென்ன?
என்ன படித்தாள்?
ஏன் மேலே படிக்கவில்லை?
கூடப் பிறந்தவர்கள் யார்?
தாய் தகப்பன் யார்?
கல்வி இலவசம் என்கிறார்கள்
அப்புறம் ஏன் இந்தப் பாத்திரக் கடையில்
பணி புரிகிறாள்?
மிக்ஸியை எடுத்துக்கொண்டு கிளம்பியபோது
அவள் வேறோர் வாடிக்கையாளரிடம்
சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தாள்
பத்து இருபது நிமிடங்களில்
என் வாழ்விலிருந்து மறைந்து போனாள்
3
இல்லம் திரும்பினோம்
மனையாள் சொன்னாள்
’நீ இன்று அணிந்திருந்த சட்டை
குப்பையிலே போட வேண்டியது
தாத்தா மாதிரி இருந்தது
என்னுடன் வரும்போது மட்டும்தான்
இப்படி நீ ஆடை அணிகிறாய்’
’உன்னிடம் கேட்டேனே?’
‘நேரமாகி விடும் என்றுதான்
சொல்லவில்லை’
‘இன்னொரு சட்டை போட அரை நிமிடம்
ஆகாது’ என்றவன்
’உன் அம்மையைப் புணர்ந்தது
உன் அப்பனா
அல்லது
பன்றியா?’
என்றேன்.
மற்ற பெண்ணாயிருந்தால்
விவாகம் ரத்தாகும்
இவள்
’அடப் போடா லூசு’
எனச் சொல்லியபடி அகன்றாள்
பெண்கள் வேற்றுக்கிரகவாசிகள் என
மீண்டும் ருசுவாயிற்று