எங்கோ மிச்சமிருக்கும் காதல்

1

சில மொழிகளைப் போல
சில இசைக்கருவிகளைப் போல
சில நாகரீங்களைப் போல
சில தேசங்களைப் போல
சில பேரரசுகளைப் போல
சில நதிகளைப் போல
சில வீடுகளைப் போல
சில நட்சத்திரங்களைப் போல
சில வனங்களைப் போல
சில அருவிகளைப் போல
சில மலைகளைப் போச்
சில உயிரினங்களைப் போல
சில உணவு வகைகளைப் போல
சில தாவர வகைகளைப் போல
சில ஆடை அலங்காரங்களைப் போல
சில பழக்கவழக்கங்களைப் போல
சில தத்துவங்களைப் போல
சில கடவுள்களைப் போல
சில நம்பிக்கைகளைப் போல
சில ஞாபகங்களைப் போல
கடந்த காலத்தைப் போல
காதலும் அழிந்து விட்டது
இலக்கியத்தில் மட்டும்
மங்கிய சுவடுகளை விட்டு விட்டு

2

ஏன் இந்தப் பைத்தியக்காரக்
கவிதைகள் என்றான்
இளைஞனொருவன்

’அவளைப் பார்க்காமல்
நித்திரை கொள்ளவில்லை
உன்மத்தம் கொள்கிறது மனம்
அதை விலக்கவே கவிதை’
என்றேன்
அதோடு விட்டிருக்கலாம்
மாமூலனின் முல்லைத்திணைப்
பாடலையும் சொன்னேன்
நீர்நிலையில் தாவரம் குறுக்கிட்டதால்
அன்றில் ஜோடி
வலப்பக்கம் இடப்பக்கம்
பிரிந்து சென்று
மீண்டும் ஒருங்கு சேரும்
அந்தப் பிரிவு
இரண்டுக்கும்
யுகம் போல் தோன்றும்…

கேட்டு விட்டுத்
தலையிலேயே அடித்துக்கொண்டு
கேட்டான்:
’காதல் பற்றி உனக்கென்ன தெரியும்?
காதல் எங்கே இருக்கிறது?
காதல் பற்றியெழுத உனக்கென்ன தகுதி?’

எழுபது வயது வரை முத்தமறியா வாழ்க்கை
முத்தத்தை அறிந்து கொள்ள
பாங்காக் சென்றேன்
அந்தக் காதல் தொழிலாளியோ
வாய்க்கு இன்னும் காண்டம் வரவில்லை
முத்தம் தடையென்றாள்

முத்தம் அறியாமல் முக்தியாவென
விசனம் கொண்டேன்
அப்போதுதான் அவள் வந்தாள்
ஏழு ஜென்மத்துக்கான முத்தம் கிடைத்தது

என்னை விட நாற்பத்தைந்து வயது
சிறியவள்
ஆனால்
காதலுக்கு வயதில்லை
இருபத்தைந்திலும்
எழுபத்தைந்திலும்
காதல் ஒன்றுதான்

யூ ஆர் எ க்ரேட் ஃபக்கர்
என்றவர் பலருண்டு
கலவி முடிந்ததும் களைத்து விடுகிறாய்
அது என்னை பீதி கொள்ளச் செய்கிறது
எனவே இனி செக்ஸ் வேண்டாம்
எனச் சொன்னவரும் பலருண்டு

வீட்டில் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்
நீ வீட்டுப் பக்கம் வர வேண்டாம்
வேண்டுமானால் வெளியே சந்திப்போமெனச்
சொன்னவரும் உண்டு

காதல் பற்றி உனக்கு என்ன தெரியும்,
அதைச் சொல் முதலில்…
பசி வாதையில் நாய் மூத்திரமடிக்கும்
அருகம்புல் சாப்பிட்டிருக்கிறேன்
அழுகல் தக்காளி உண்டு
உயிரைப் பிடித்து வைத்திருக்கிறேன்
எழுபது வயது வெண்பன்றி ஒருத்தியோடு
கலவி கொண்டிருக்கிறேன்
தூரத்துணி துவைத்துப் போட்டிருக்கிறேன்
கரமைதுனத்திலேயே ஆயுளைக் கழித்திருக்கிறேன்
பெண்களினால் அவமானம் அடைந்திருக்கிறேன்
பெண்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டிருக்கிறேன்
காசுக்காகக் குதத்தைக் காட்டியிருக்கிறேன்
வளர்ப்புப் பிராணிகளுக்காகப் பிச்சை எடுத்திருக்கிறேன்
இளம் பெண்களோடு பப்களில் மூன்று நான்கு மணி நேரம் சளைக்காமல் நடனமாடியிருக்கிறேன்
காதலியின் அந்தரங்கத்தில் அத்துமீறாமலும்
அவள் மீது அதிகாரம் செலுத்தாமலும் இருந்திருக்கிறேன் இன்னமும் படுக்கையில் ஏழு தெருவுக்குக் கேட்கிறாற்போல் காதலியைக் கதற அடித்திருக்கிறேன் அவளுக்காக உயிரை விடவும்
சிறை செல்லவும் தயாராயிருக்கிறேன்

3

ஆகவே
காதல் பற்றியெழுத
என்னைவிடத் தகுதி
எவருக்குண்டு?