வாசுகி
நட்சத்திரங்களைக்கூட எண்ணி விடலாம்
நான் கேட்ட மன்னிப்புகளை எண்ண முடியாது
மற்றவர் கண்ட தவறை நானும் கண்டேன்
உணர்ந்தேன்
மன்னிப்புக் கோரினேன
ஆனால்
எவரொருவரும் என்னிடம் மன்னிப்புக்
கோரியதில்லை
நான் கண்ட தவறை
அவர் கண்டாரில்லை
அவர்கள் கண்டிராத மௌனத்தில் ஈகோ தூங்குகிறது
காற்றில் அலையும் நிழலாய் மறைகிறது
நதியின் நுரையில் மறைகிறது மன்னிப்பு
ஒவ்வொரு மனதும் ஒரு மூடிய கண்ணாடி
புழுதியில் புதைந்த வார்த்தைகள்
எரிமலையின் சாம்பலாய் கனமாகின்றன
மன்னிப்பு— பறக்க மறந்து வீழ்ந்த ஒரு பறவை