பிழை திருத்தம்

சாரு, வணக்கம்!

ஒரு கவளம் எடுத்தவுடனேயே மிச்ச சோறு புழுவாகிவிடும் என்ற சாபம் திருதராஷ்டிரனுக்கு. துரியோதனனுக்கு இல்லை. துரியோதனனுக்கு தொட்டதெல்லாம் விளங்கும் நல் வரம் உண்டு. கையில் சொர்ண ரேகை உள்ளவன் என்பார்கள் அவனை. திருதராஷ்டிரனுக்கு இருந்த இந்த சாபம் கர்ணனால் நீங்கியதாம். அதாவது தேரோட்டி குழந்தை கர்ணனை எடுத்துக்கொண்டு கௌரவர்களின் அரண்மனைக்கு வந்ததாகவும் அப்போது திருதராஷ்டிரன் ஒரு தட்டில் இருந்த சோற்றிலிருந்து ஒரு கவளத்தை மட்டும் எடுத்துத் தின்றுவிட்டு (மீதி சோறு புழுவாகப் போனதால்), அடுத்த தட்டுக்கு நகர்ந்தபோது கர்ணன் தவழ்ந்துசென்று புழு இருந்த தட்டைத் தொடும்போது அத்தனையும் சோறாக மீண்டும் மாறியதாகவும் ஒரு கதை வழக்கில் உண்டு. அதனால் கர்ணனை கலப்புழு நீக்கிய கர்ணன் என்பார்கள்.

பெருந்தேவி

சுட்டிக் காட்டியதற்கு நன்றி பெருந்தேவி

சாரு