நேற்றைய சிறுகதையில் இரண்டு வாக்கியங்களைச் சேர்த்திருக்கிறேன். நடுவில் ஒரு வாக்கியம். கதையின் இறுதியில் ஒரு வாக்கியம். இரண்டையும் இங்கே தந்திருக்கிறேன்.
1.
இரண்டு நூல்களை பதிப்பகத்துக்கு அனுப்பி விட்டேன். மாயமான் வேட்டை என்ற சிறுகதைத் தொகுப்பு. இஞ்சி சுக்கு கடுக்காய் என்ற கட்டுரைத் தொகுதி. அதற்கு நான் எழுதிய முன்னுரையில் 2021 என்று வந்திருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதிய முன்னுரை. இப்போது மயன் மாளிகை என்ற கட்டுரைத் தொகுதியை செப்பனிட்டுக்கொண்டிருக்கிறேன். (இந்த நூல்களையெல்லாம் எப்போதும் போல் அறுபது பிரதிகள் வாங்கி எனக்குப் பேராதரவு நல்குவீர்கள் என்று நம்புகிறேன்.) இந்த வேலையினால்தான் உடனடியாக நன்றி தெரிவிக்க முடியாமல் போனது.
2.
(சே, ஸ்டாலின் காலத்து ருஷ்ய எழுத்தாளர்களைப் போல் இலக்கியத்துக்காக என்னென்ன தகிடுதத்தம் எல்லாம் பண்ண வேண்டியிருக்கிறது! அது என்ன தகிடுதத்தம் என்கிறீர்களா? வேறு என்ன, பெண்பாலையெல்லாம் ஆண்பாலாக மாற்றி எழுத வேண்டியிருக்கிறது. எல்லாம் என் தலையில் ஓத்த விதி! எனக்கே என்னை நினைத்தால் அவமானமாக இருக்கிறது.)