தானாச்சூலி

சில வட இந்திய நண்பர்களின் அழைப்புக்கு இணங்க நவம்பர் 3 இலிருந்து 7 வரை உத்தர்காண்டில் உள்ள Dhanachuli என்ற கிராமத்தில் தங்க இருக்கிறேன்.  மொத்தம் 223 வீடுகள்.  அதுவும் ஒவ்வொரு மலையிலும் ஐந்தாறு வீடுகள் என்ற அளவில் விலகி விலகி இருக்கும் போல் தெரிகிறது.  மொத்த ஜனத்தொகை 1310.  எக்கச்சக்கமான பழத் தோட்டங்களும் உருளைக் கிழங்குப் பயிர்களும் நிரம்பிய இடம்.  தானாச்சூலியிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் முக்தேஷ்வர் என்ற பிரசித்தி பெற்ற சிவாலயம் உள்ளது.   நைனிட்டால், பீம்டால், அல்மோரா ஆகிய ஊர்களும் தானாச்சூலியிலிருந்து சில மணி தூரத்தில் தான் இருக்கின்றன.  ஆனால் நான் தானாச்சூலியிலேயே தங்கி பறவைகளோடும்  விருட்சங்களோடும் இருந்து விட்டு வரலாம் என்று இருக்கிறேன்.

Comments are closed.