நாட்டு நடப்பு என்ன என்பதற்காக ஒரு எட்டு முகநூல் பக்கம் எட்டிப் பார்த்தேன். கார்ல் மார்க்ஸ் எழுதியிருந்ததைப் படித்து அங்கேயிருந்து இங்கே போனேன். இலக்கிய உலகம் பரபர என்று இருக்கிறது. அரசியலே தோற்று விடும் போல் உள்ளது. சரி, அரசியலில் காசு பார்க்கலாம். இலக்கியத்தில் ஒன்னுமே மிஞ்சாதே? புகழ் கூட கிடைக்காதே? அதிகாரமும் இல்லையே? போன வாரம் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரி மாதிரி ஒரு பெரிய வண்டியில் வீட்டுக்கு வந்தார். வண்டியின் முன்னே Fortuner என்று இருந்தது. எங்கள் வீட்டு வாசலிலேயே ஒரு கார் ஒரு வாரமாக நின்றிருந்தது. அதில் வெடிகுண்டு ஏதும் இருக்கிறதா என்று அவந்திகா போலீஸுக்கு போன் போட்டதும் பார்க்க வந்த இன்ஸ்பெக்டர். கடைசியில் பார்த்தால் அந்தக் கார் பக்கத்துத் தெருவைச் சேர்ந்த ஒருவருடையதாம். போகும் போது இன்ஸ்பெக்டர் நீங்க ரைட்டர்னு சொல்றீங்க… ரைட்டர்னா பணமே குடுக்க மாட்டாங்களே, அப்புறம் எப்டி இவ்ளோ பெரிய வீட்ல இருக்கீங்க? என்று கேட்டார். என் வீட்டு ஓனரின் கருணை என்றேன். ஆனால் எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. எழுத்தாளன் என்றால் பிச்சைக்காரப் பயல் என்று ஒரு இன்ஸ்பெக்டருக்குத் தெரிந்திருக்கிறதே? தமிழ்நாடு போலீஸ் வளர்ந்து விட்டது என்று நினைத்துக் கொண்டேன். சரி, இப்பேர்ப்பட்ட எழுத்து உலகில் ஏன் இந்த அடிதடி?
சரி, இந்த அடிதடியிலும் எனக்குப் பிடித்த வரி இதோ:
இக்குறிப்பை நீளமாக எழுதுவதே கூட அவர் மீதான மதிப்பினால்தான். அர்.அபிலாஷ் இன்னும் பத்துவருடம் சத்தம்போட்டால்கூட ஒருவரிக்குமேல் எழுதமாட்டேன். கலைக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை.அவர் மிஞ்சிப்போனால் இன்னொரு யமுனா http://custom-papers-online.com/ ராஜேந்திரன்.
மேலே உள்ள குறிப்பை எழுதியவர் ஜெயமோகன். அது எப்படி என் மனசில் இருந்தது அவருக்குத் தெரியும் என்று ஆச்சரியமடைந்தேன்.
Comments are closed.