பின்நவீனத்துவ போலி – 2

அந்த சுரேஷ் கண்ணன் என்ற குஞ்சு ஜெயமோகனின் தீவிர வாசகர் என்று இப்போதுதான் கேள்விப்பட்டேன். அது ஏன் ஜெயமோகனின் தீவிர வாசகர்கள் என் மீது எப்போதும் சாக்கடையையும் சேற்றையும் வாரி இறைத்து வருகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.  இதைத்தான் அவர்கள் ஜெயமோகன் அடிக்கடி எழுதி வரும் அற உணர்வு என்று எடுத்துக் கொள்கிறார்களா?  இது விஜய் ரசிகர், அஜீத் ரசிகர் ஆகியோர் போட்டுக் கொள்ளும் சண்டை போல் அல்லவா உள்ளது?  அந்தக் காலத்தில் சிவாஜி ரசிகன் எம்ஜியார் போஸ்டரில் சாணி அடிப்பான்.  எம்ஜியார் ரசிகன் சிவாஜி போஸ்டரில் சாணி அடிப்பான்.  எழுத்தாளர்களையும் ஏன் இந்தத் தரத்தில் வைக்கிறார்கள் ஜெயமோகனின் வாசகர்கள்?  கடலூர் சீனு என்பவர் எனக்கு வேலைமெனக்கெட்டு ஃபோன் செய்து ஜெயமோகன் பூஜையறை; சாரு கக்கூஸ்; ஆனால் ஒரு வீட்டுக்கு ரெண்டும் தேவைதான் என்று சொன்னார்.

ஜெயமோகனின் எழுத்திலிருந்து நீங்கள் இதைத்தான் கற்றுக் கொள்கிறீர்கள் என்றால் ஜெயமோகனின் வாசகர்களை எண்ணி நான் பரிதாபப்படுகிறேன்.  ஒரு சக எழுத்தாளனை போலி என்று எழுத ஒரு இலக்கிய வாசகனுக்கு எப்படி மனம் வருகிறது?  எக்ஸைல் என்ற நாவலை எழுத எந்தத் தமிழ் எழுத்தாளராலும் கற்பனை கூட செய்ய முடியுமா?  அந்த ஆள் – அந்தக் குஞ்சு தினமணி போன்ற பாரம்பரியப் பத்திரிகையில் சாரு நிவேதிதா போன்ற ஆபாச எழுத்தாளருக்கு எப்படி இடம் கொடுக்கலாம் என்று பழுப்பு நிறப் பக்கங்களைப் பற்றி கருத்து எழுதியதாம்!  ம், எப்படி இருக்கிறது கதை?  ஜெயமோகன் அந்தக் கட்டுரைத் தொடரை பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கலாம் என்கிறார்.  ஆனால் அவரைப் படிக்கும் விசிலடிச்சான் குஞ்சோ இப்படிச் சொல்கிறது!

திட்டுங்கள், திட்டுங்கள், திட்டிக் கொண்டே இருங்கள்.  நான் செத்தால் வெடி வெடித்துக் கொண்டாடுங்கள். ஆனால் ஜெயமோகனின் வாசகன் என்று சொல்லிக் கொள்ளாதீர்கள்.  அது ஜெயமோகனுக்கு அவமானம்.  நான் பழுப்பு நிறப் பக்கங்களை எனக்காகவா எழுதுகிறேன்?  எனது முன்னோடிகளுக்கு நான் செய்யும் அஞ்சலி அது.  அதையா நிறுத்தப் பார்க்கிறீர்கள்?  நீங்களா ஜெயமோகனின் வாசகர்?  வெட்கக்கேடு!

சுரேஷ் கண்ணன் போன்ற இலக்கிய வாசகர்கள் இருக்கும் சூழலில் எழுத உண்மையிலேயே எனக்குத் தயக்கமாகவும் சங்கடமாகவும் இருக்கிறது.  சே…  உயிர்மையில் அந்தக் கட்டுரையைப் படித்தது மலத்தை மிதித்தது போல் இருக்கிறது.  ஹமீதிடம் கேட்டேன்.  பொதுவாக எழுத்தாளர்களைத் திட்டி எழுதும் கட்டுரைகளை அவர் பிரசுரிக்க மாட்டார்.  ஆனால் எப்படியோ அது அவரை மீறி வந்து விட்டது என்று தெரிந்தது.  மேலும் குஞ்சு அந்தக் கட்டுரையில் என் பெயரைப் போடாமல் திட்டியிருக்கிறது.  என்ன செய்ய?

இப்படிப்பட்ட ஆபாசச் சூழல் இருப்பதால்தான் எவனும் தமிழ் பக்கமே எட்டிப் பார்க்க மாட்டேன் என்கிறான். தமிழ் நண்டு கதைதான்!  எல்லா எழுத்தாளனும் போலி.  நான் படிக்கும் எழுத்தாளன் மட்டுமே நிஜம்!!! எப்பேர்ப்பட்ட ஃபாஸிஸம் இது!  இதைத்தானே ஐயா மதவெறி ஃபாஸிஸ்டுகளும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?  என் கடவுளே கடவுள்.  உன் கடவுள் போலி.  உன்னை உதைக்கிறேன் பார்!!!