அம்ஷன் குமாருக்கு விருது : தமிழ் ஸ்டுடியோ அருண்

கீழே உள்ள குறிப்பு தமிழ் ஸ்டுடியோ அருண் முகநூலில் எழுதியிருப்பது:

 

தேசிய விருது பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த கலைஞர்கள்…

வெகுஜனத் திரைப்படங்கள் இல்லாத பிரிவில் இந்த முறை மூன்று தமிழர்கள் தேசிய விருது பெற்றிருக்கிறார்கள். வெகுஜனத் திரைப்படப் பிரிவில் விருது பெற்றவர்களை முன்வைத்து ஒட்டுமொத்த தமிழ் ஊடகங்களும் முகநூல் நண்பர்களும், பெரும் பதிவுகள் எழுதி குவித்தனர். எங்காவது ஒரு செய்தியாவது இவர்கள் குறித்து வெளியானதா என்றால் இல்லவே இல்லை, பலருக்கும் மூன்று தமிழர்கள் விருது வாங்கியிருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. தமிழில் மாற்று ஊடகம் வேண்டும் என்பதற்காகவே, தமிழ் ஸ்டுடியோ குறும்படம், ஆவணப்படம், மாத இதழ், இணைய இதழ் என தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தினசரி இதழ்களில் கூட ஒரு உருப்படியான மாற்று இதழ்கள் இல்லை என்பது பெரும் அயர்ச்சியைக் கொடுக்கிறது. சினிமாவை பொறுத்தவரை தமிழ் இந்துவும் ஒரு சராசரி நாளிதழைக் காட்டிலும் வேறெந்த வகையிலும் சிறந்த ஒன்றல்ல. சினிமா என்றாலே தமிழ் ஊடகங்களுக்கு போதிய தெளிவு ஏற்படுவதில்லை. அல்லது எது விற்பனை ஆகுமே அதனை முன்வைத்தே தங்கள் செய்திகளை தீர்மானிக்கிறார்கள். தேசிய விருது அறிவித்த அடுத்த நாளே, இத்தகைய வெகுஜன சினிமா அல்லாத பிரிவில் விருது பெற்றவர்களையும் சேர்த்தே கொண்டாடியிருக்க வேண்டியது ஊடகங்களின் கடமையல்லவா? தமிழ் ஊடகங்கள் மீது எதிர்கால சந்ததி பெரும் வெறுப்பை உமிழும். அதற்கு இப்போதே உங்களை தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள்.

பாகிஸ்தானில் பிறந்து பிரிவினையின்போது இந்தியாவுடன் இணைந்த ஓவியர் கிருஷ்னென் கண்ணா பற்றிய ஆவணப்படத்திற்காக இயக்குனர் ஸ்ருதி ஹரிஹர சுப்பிரமணியன் அவர்களும், அதே ஆவணப்படத்திற்கு இசையமைத்ததற்காக அரவிந்த் – ஷங்கர் ஆகியோர் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும், யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி பற்றிய ஆவணப்படத்திற்காக அம்ஷன் குமாரும் தேசிய விருதை பெற்றிருக்கிறார்கள். இந்த நால்வருக்கும் எதிர்வரும் ஞாயிறுக்கிழமை சென்னை வடபழனியில் உள்ள தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெறவிருக்கிறது. இதில் எடிட்டர் பி. லெனின், இயக்குனர் & தேசிய விருது குழுவில் இடம்பெற்றிருந்த கங்கை அமரன் ஆகியோர் கலந்துக்கொள்கிறார்கள். கங்கை அமரனிடம் உங்களுக்கு கேட்க கேள்விகள் இருக்கிறதா? அவசியம் கலந்துகொள்ளுங்கள். மேலதிக தகவல் விரைவில்…

Arun Mo's photo.
Arun Mo's photo.