தென்னமெரிக்க பயணக் குறிப்புகள்: லீமா (6)

ஜூன் 29, 2019

Wrote about Jorge Chávez, the legendary aviator already. Lima airport is named after him.

***

லீமாவில் எங்கள் கைட் யுலிஸஸிடம் ஸான் ஹுவான் தெ மீராஃப்ளோரெஸ் போக வேண்டும் என்றேன். யோசித்தார். எந்த இடம் என்று புரியவில்லை. விவரித்த பிறகு புரிந்து கொண்டார். ஐயோ அது ஆபத்தான இடம் ஆயிற்றே. அங்கே போய் என்ன செய்யப் போகிறீர்கள் என்றார். நான் எழுத்தாளன் என்றேன். தமிழனைப் போல் முழிக்கவில்லை உடனே புரிந்து கொண்டார். அங்கே இருக்கும் 10 கிலோமீட்டர் சுவரைப் பார்க்க வேண்டும் என்றேன். அவர் கேள்விப்பட்டதில்லை. ஸான்ஹுவான் தெரியும் சுவர் தெரியாதே. படத்தைக் காண்பித்தேன். நான் லீமாக்காரன் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு அங்கே போய் விட்டு சேதம் இல்லாமல் திரும்பி வர ஒரு வழியும் சொன்னார்.

பிறகு எழுதுகிறேன்.

***

11.6.19

Posh area Miraflores in Lima where I am staying now.

***

View from my hotel el tambo. Miraflores.

***

This is how San Juan de Miraflores lives. எங்கே பார்த்தாலும் மனித மலம் நாய்ப் பீ. லட்சக் கணக்கான மனிதர்களுக்கு இங்கே கழிப்பறை கிடையாது. ஒரு தகர ஷெட்டில் ஒரு குடும்பமும் அரை டஜன் நாய்களும் வாழ்கின்றன. ஒவ்வொரு வீட்டுக்கும் அரை டஜன் நாய்கள் இரண்டு மூன்று பூனைகள். உயிரோடு திரும்ப முடியாது என்றார்கள். காரிலிருந்தே புகைப்படம் எழுத்துக் கொண்டு ஓடி வந்து விடுங்கள் என்பதுதான் உலிஸெஸ் சொன்ன யோசனை. எஸ்பஞோலில் யு கிடையாது. ஆனால் அந்த ஏழைகளின் வீட்டில் எங்களைப் பேரன்போடு எதிர்கொண்டனர். ஒரு தொழிலாளி என்னை அவர் வீட்டுக்குள் அழைத்தார். அந்தக் கள்ளமற்ற சிரிப்புக்குக் கோடி கொடுக்கலாம். என்னைச் சுற்றிக் கொண்டு குலைத்த நாய்களைப் பார்த்து சும்மா பயமுறுத்தும் கடிக்காது என்றார். அப்போதும் சிரிப்புதான். ஒரு பாட்டி பியர் விற்றுக் கொண்டிருந்தாள்.

***

மொராக்கோவைப் போல என் தாய்நாடுகளில் ஒன்று பெரூ. இன்று லீமாவில் மதியத்துக்குமேல் ஊரடங்கு போட்டது போல் இருந்தது. ஈ காக்கா இல்லை. எல்லோரும் மளிகைக்கடைகளில் கார்ட்டன் கார்ட்டனாக பியர் வாங்கி கொண்டு வீட்டுக்குள் ஓடினார்கள். பப்புகளிலும் பார்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. 2 மணிக்கு மேல் பெரூவுக்கும் உருகுவாய்க்கும் கால்பந்தாட்டப் போட்டி. ஊரே டிவிக்கு முன்னால் இருந்தது. நாங்கள் மீராஃப்ளோரெஸின் பிரபலமான உணவகமாக புந்த்தோ அஸூலில் இருந்தோம். நாங்களும் கூட்டத்தோடு கூட்டமாக பெரூவுக்காகக் கை தட்டினோம். உணவகமே ரகளை மயம். கடைசியில் பெரூ வென்றது. கால்பந்து இங்கே மதம்.