தென்னமெரிக்க பயணக் குறிப்புகள்: சீலே (13)

11.7.19


In a rare Tamil restaurant in Santiago city.

***

At Pablo Neruda‘ house La Chascona. He owned three bungalows.

***

இன்று நெரூதாவின் இன்னொரு அரண்மனைக்குப் போயிருந்தேன். வேறு என்ன சொல்ல? அரண்மனைதான் சரியான வார்த்தை. திரும்பும் வழியில் பல கிராமங்களுக்குப் போனேன். ஒரு கிராமத்தில் ஒரு ரெஸ்தாரந்த்தில் ஒரு பெண் வியலத்தா பார்ரா, நிகானோர் பார்ரா, விக்தொர் ஹாரா பாடல்களைப் பாடி கிதார் வாசித்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு பாடலையும் சென்னையில் என் அறையில் ஆயிரம் முறை கேட்டிருப்பேன். இன்று நேரில். கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத அனுபவம். க்ரூப் டூரில் இது சாத்தியமே இல்லை. என் டிரைவர் அந்தப் பாடல்களைக் கேட்டு அழுது விட்டார். நான் அவளோடு சேர்ந்து சில வரிகளை பாடினேன். அவள் அடைந்த ஆச்சரியத்தை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. பல வரிகள் எனக்கு மனப்பாடம். க்ராஸியாஸ் மி விதா என்ற பாடல் வியலத்தா பார்ரா உருவாக்கிப் பாடியது.

அருமையான உணவும் கிடைத்தது. மறக்கவே முடியாத நாள்.

***

நல்ல தண்ணி குடிச்சே ரெண்டு வாரம் ஆகுது. தண்ணி கேட்டா சோடா தான் தர்றான். சான்ஸே இல்லை. சோடாவை விட வைன் மலிவு. இங்கே உள்ளவன்லாம் சாப்பிடும் போது வைன் தான் குடிக்கிறான். காலைல மட்டும் போனாப் போகுதுன்னு பழரசம் குடிக்கிறான். வைன் பிடிக்கும்தான். அதுக்காக தண்ணி தாகம் எடுக்கும் போதெல்லாம் வைன் குடிக்க முடியுமா? ஈஸ்லா நேக்ரா போற வழியில – அதான் நெரூதாவோட அரண்மனைக்குப் போற வழில – ஒருத்தன் போரான் வாரவனுக்கெல்லாம் எங்க தோட்டத்தில பறிச்ச திராட்சையில எங்க வீட்டில தயாரிச்சதுன்னு சொல்லி பேரல் பேரலா வைனை இலவசமா குடுக்குறான் நம்மூர் திருவிழாவில பானகம் குடுக்குற மாதிரி. நான் ரெண்டு மூணு காலி பாட்டிலை நீட்டினேன். வாசகர் வட்ட நண்பர்களுக்காக. அவுங்களையும் இங்கே வரச் சொல்லுங்கன்னு சொல்லி சிரிக்கிறான். எவ்ளோ வேணும்னாலும் குடிங்கன்னு சொல்லி எல்லாருக்கும் ஊத்தி ஊற்றிக் கொடுக்கிறான். அவங்க டாடி ப்ரஸீல்ல மிகப் பெரிய ஸாக்கர் ப்ளேயராம். கிட்டத்தட்ட மாரதோனா அளவுக்குப் பிரபலமாம். ரெண்டாவது போட்டோ போஸ்டர்ல இருப்பது இவரொட டாடி. பிரபல ஸாக்கர் ப்ளேயர்.

***