இட்லி (14)

11.7.19

“ஆவி பறக்கும் இட்லி – தொட்டுக்கொள்ள கார சட்னிக்கு மனம் ஏங்குகிறது. “

முகநூலில் எழுதிய இந்தக் குறிப்புக்கு வந்த எதிர்வினைகள் சில:

வளனரசு: I think you are kidding. If it’s true really unbelievable.

அடியேன்: Horrible food in South America. Ppl say Mexican food is good.

அகிலா ஸ்ரீதர்: பயணங்களில் அந்த ஊர் சாப்பாடும் சேர்த்து தான் enjoy செய்யணும்.. hv great dinner.. ஆனாலும் நம்மூரு இட்லிய எதுவும் அடிச்சுக்க முடியாது .. indian restaurantnu oru photo pathene.. Idly kidaikuma parunga

காயத்ரி: that’s what Charu always says..to enjoy the local food and he always does that…But now he cannot as he has to follow lot of food restrictions.

அடியேன்: true. But no one can eat hot dogs and steak for three times. It’s terrible. Who can eat boiled meat all the time. the Chilean village food is really nice but we can’t get it in cities. I had a real Chilean food in a village. Excellente.

South American சாப்பாட்டில் நான் தோல்வி. இதை எந்த இந்தியனாலும் சாப்பிட முடியாது.

அப்துல் கரீம்: இதுதான் அசல். சீலேயனாக விரும்பினாலும், மனதால் தமிழரே!!!

அடியேன்: இல்லிங்க நான் மனதால் தமிழன் அல்ல. எந்த இன மத அடையாளத்தையும் நான் வெறுப்பவன். அரை கிலோ அவித்த மாமிசத்தையே நாளில் ரெண்டு முறை என்னால் சாப்பிட முடியவில்லை.

***

12.7.19

என் இட்லி பதிவு தெளிவாக இல்லை. இப்போது கொஞ்சம் தெளிவாக. சீலேயின் நகரத்து உணவை எந்த இந்தியனாலும் உண்ண முடியாது. It’s not abt my food restrictions. I can forget abt my food restrictions for two weeks. ஆனால் எவரால் காலையில் hot dogs உம் மதியமும் இரவும் அரை கிலோ அரை கிலோ அவித்த மாட்டுக் கறியும் தின்ன முடியும். உப்பு காரம் போடாமல் அவித்தது. ஆனால் சீலேயின் கிராமத்து உணவு அமர்க்களம். அது நகரில் கிடைக்காது. நான் தாய்லாந்தில் 15 நாட்கள் தமிழ் உணவு பற்றி யோசிக்கவே இல்லை. கரப்பான் பூச்சி தேள் தவளை பாம்பு வறுவல் சாப்பிட்டு ஜாலி பண்ணினேன். கூடவே அராத்துவும். தாய்லாந்தின் தோம்யாம் சூப்புக்கு இணை உலகத்தில் கிடையாது. இங்கே சீலேயில் நான் காலையில் பழ ரசம். வாந்தி வருது. மதியம் ஒரே ஒரு துண்டு அவித்த மாமிசம். அதுவும் வாந்தி வருது. இரவில் வறுத்த வேர்க்கடலை. இதுதான் என் உணவு. பழத்தைக்கூட தொட முடியவில்லை. ஆப்பிள் முதல்கொண்டு தெவிட்டத் தெவிட்ட இனிக்கிறது. பசிக்கு சீனியை உண்ண முடியுமா.

உணவு மட்டும்தான் ஒத்து வரவில்லை. மற்றபடி சீலே ஒரு சொர்க்கம். விரிவாக பயணக் கட்டுரையில் எழுதுவேன்.