சீலே குறிப்புகள் (15)

14.7.19

The most beautiful city in the world – Valparaíso. ஒவ்வொரு வீடுமே இப்படிப்பட்ட ஓவியங்களால் நிரம்பியிருக்கின்றன. ஒரு வீடு பாக்கியில்லை.

***

படிக்கட்டுகள், கம்பங்களைக் கூட விட்டு வைக்கவில்லை. ஓவியங்கள்தான். Temperature is 0 Degree to 6 degrees Celsius. They know Indians well. They love Indian food.

***

வால்பரைஸோ. நெரூதாவின் வீட்டில். கடற்கரையில் sea lions.

***


In a coffee shop. இந்த கஃபேவில் மது சிகரெட் செக்ஸ் மூன்றுக்கும் அனுமதி இல்லை. ஆனால் இப்படி ‘உடை’ அணிந்த பெண்கள்தான் காஃபி கொடுப்பார்கள். ஒரு பதினைந்து பக்கம் வரும் அளவுக்குக் கதை சொன்னார்கள் இந்தப் பெண்கள். புகைப்படத்துக்கும் அனுமதி இல்லை. ஆனால் எஸ்க்ரித்தோர் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

***

16.7.19

இதுவே சீலேயில் என் கடைசி இரவு. PDI போலீஸ் அனுமதி அட்டை. இது இல்லாமல் சீலேயின் உள்ளே யாருக்கும் அனுமதி இல்லை. சீனி ஆடிக்கடி சொல்வார் உங்களுக்கென்றே கடவுள் பிரத்தியேகமாக பிரச்சினைகளை அனுப்புகிறார் என்று. அந்தப்படி PDI இல்லாமலேயே என்னை சீலேவுக்குள் அனுமதித்து விட்டார்கள். எனக்கும் இன்றுதான் இந்த PDI பற்றியே தெரியும். PDI இல்லாமல் உள்ளே வர முடியாது என்பதைப் போலவே வெளியேவும் போக இயலாது. ஆக நாளை என்னை விமான நிலையத்தில் நீ சீலேயை விட்டு வெளியே போக முடியாது என்று சொல்லி விடுவார்களோ என்றும் தோன்றுகிறது. பார்ப்போம்.

***

At Santiago airport leaving for São Paulo.

Kannan P Samy: Did you get out of immigration?

சாரு: yes. They said no need of PDI.

சமஸ்: என்ன சார், வெளிநாடு போய் எடை கொறைஞ்ச மாதிரி ஆயிட்டீங்க?

சாரு: 20 நாளா காந்தி சாப்பாடு. பழம். நம்மால உப்பு கூட போடாத அவிச்ச மாட்டுக் கறியை சாப்பிட முடில சமஸ்.

சமஸ்: ஊர்க்கு வாங்க சார்… ஜமாய்ச்சுடலாம்.