அத்தாகாமா பாலைவனம்
வாஸ்தவத்தில் இந்த அத்தியாயத்துக்கு 17-ஆம் எண் கொடுத்திருக்க வேண்டும். ஏனென்றால், இதுவரை தென்னமெரிக்கப் பயணக் குறிப்புகளாக 16 அத்தியாயம் எழுதியிருக்கிறேன். சில அத்தியாயங்களில் புகைப்படங்கள் மட்டுமே இருக்கும். ஆனாலும் இதை நாம் இந்தப் பயணத் தொடரின் எண் 1-ஆகவும் இதுவரை எழுதியவற்றை இத்தொடரின் முன்னுரையாகவும் கொள்வோம். தென்னமெரிக்கப் பயணக் குறிப்புகள் என்பது கூட இப்போதைக்கு ஒரு தற்காலிகத் தலைப்புதான். வேறு நல்ல தலைப்பு நீங்கள் சொன்னால் அதற்கு மாற்றிக் கொள்வோம். பனியும் நெருப்பும் என்று வைக்கலாமா என்று பார்த்தேன். அராத்து கிண்டல் பண்ணுவார். ரொம்பக் கர்னாடமாகத் தெரிகிறது. பின்நவீனத்துவம் மிஸ்ஸிங். தலைப்பு கேட்டுக் கேட்டு நேசமித்திரனையே எத்தனைதான் டார்ச்சர் செய்வது? சரி, இனி தென்னமெரிக்கவுக்குள் – குறிப்பாகச் சொன்னால் சீலேவுக்குள் – செல்வோம்.
அது ஒரு பாலைவனப் பகுதி. இந்த பூமி தோன்றிய காலத்திலிருந்தே அங்கே மழைத்துளி விழுந்ததில்லை. சஹாரா பாலைவனத்தை விட சிறியதுதான். சஹாரா பாலைவனத்தை விட வெப்பம் குறைவுதான். சொல்லப் போனால் அந்தப் பாலைவனம் குளிர்ச்சியானது. பக்கத்தில் உள்ள பசிஃபிக் பெருங்கடல்தான் அந்தக் குளிர்ச்சிக்குக் காரணம். ஆனால் உலகிலேயே அதிக வறட்சியான பகுதி அதுதான். அண்டார்க்டிகா பனிப்பாலையை விட வறட்சியான பாலைநிலம் அது. தண்ணீரே கிடையாது. ஏரி கிடையாது. ஆனால் வறண்ட உப்பு ஏரிகள் உண்டு. அந்த உப்பு ஏரிகளால் எந்தப் பயனும் இல்லை. பல இடங்களில் எரிமலைகளினால் ஏற்படும் வெப்ப ஊற்றுக்களைப் பார்க்க முடியும். அந்தக் கொதிக்கும் அமில ஊற்றுக்களில் விழுந்து அவ்வப்போது மனிதர்கள் மாண்டது உண்டு. மழை என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் அதிசயம் என்னவென்றால், அப்படிப்பட்ட பாலைவனத்தில் பத்து லட்சம் பேர் வசிக்கிறார்கள். ட்ரக்குகளின் மூலமும் குழாய் வழியாகவும் தண்ணீர் செல்கிறது. அப்படி எத்தனை ட்ரக்குகள் செல்ல முடியும்? எத்தனை குழாய்கள் செல்ல முடியும்? செல்ல முடிந்த அளவுக்குத் தண்ணீர் கிடைக்கும். கிடைக்காதவர்கள் ஒரு எந்திரத்தின் மூலம் மேகக் கூட்டங்களிலிருந்தும் பனித் திரள்களிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீரைச் செகரித்துக் கொள்கிறார்கள். ரொம்ப அல்ல. துணியில் தோய்த்து வாயில் விட்டுக் கொள்ளலாம். இந்தப் பாலைவனத்தில்தான் நைட்ரேட் கிடைக்கிறது. நிறைய சுரங்கங்கள் உள்ளன. அதனால் சுரங்கத் தொழிலாளிகளும் உள்ளனர். அந்தத் தொழிலாளிகளின் காலில் செருப்பு கூட கிடையாது. நினைவு தெரிந்த நாளிலிருந்தே அவர்கள் காலர் வைத்த சட்டை போட்டதில்லை. டை, கோட்டு ஆகியவற்றை ஜெர்மன் மற்றும் ஆங்கிலேய சுரங்க முதலாளிகள் அணிந்து பார்த்ததோடு சரி. இன்று நிலைமை மாறி விட்டது. ஆனால் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இதுதான் சுரங்கத் தொழிலாளிகளின் நிலை. அவர்கள் கண்ணீர் கூட விட்டதில்லை. அந்த அளவுக்கு அந்த நிலத்தைப் போலவே அவர்களின் தேகம் காய்ந்து கிடந்தது. அந்தப் பாலைநிலத்தின் பெயர் அத்தாகாமா (Atacama). தாராபாக்கா (Tarapaca) மாநிலத்தில் உள்ள அத்தாகாமா பாலைவனத்தின் அப்போதைய மக்கள் தொகை 1,10,000. இதில் 40,000 பேர் நைட்ரேட் சுரங்கத் தொழிலாளர்கள். இச்சுரங்கங்களின் முதலாளிகள் பிரிட்டிஷ்காரர்கள். ஒரு நாளில்18 மணி நேரம் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்தத் தொழிலாளர்களுக்கு எந்த ஊதியமும் கிடையாது. அவர்களுக்குக் கொடுக்கப்படும் டோக்கனை எடுத்துக் கொண்டு போய் முதலாளிகள் நடத்தும் ஸ்டோர்களில் கொடுத்தால் சமையல் சாமான்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் பல சாமான்கள் அக்கடைகளில் இருப்பதில்லை. வேறு கடைகளில் வாங்கலாம் என்றால் இந்த டோக்கன்கள் அங்கே செல்லாது. பட்டினியில் செத்துக் கொண்டிருந்த தொழிலாளிகள் இக்கீக்கே (Iquique) என்ற ஊரில் ஒன்று கூடினார்கள். அது 1907-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி. எங்களுக்கு இந்த செல்லாத டோக்கன் வேண்டாம்; 18 பென்ஸ் ஊதியம் கொடு என்று கேட்டார்கள். இப்படியான போராட்டம் 1902-ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து கொண்டிருந்து அன்றைய தினம் ஒரு உச்சக்கட்டத்தைத் தொட்டிருந்தது. காரணம், இந்தப் போராட்டம் தேசத்தின் வட மாகாணம் பூராவுமே பரவி விட்டிருந்தது. அரசு ஜெனரல் ரொபர்த்தோ சில்வா ரெனார்ட் என்பவரை வேலை நிறுத்தத்தை அடக்கும் பொறுப்பில் நியமித்தது. ரொபர்த்தோ போராட்டம் செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். 6 தொழிலாளர்கள் மரணமடைந்தனர். மறுநாள் நடந்த அவர்களின் இறுதி ஊர்வலத்தில் 15000 சுரங்கத் தொழிலாளர்கள் குழந்தைகளோடும் தங்கள் குடும்பத்துப் பெண்களோடும் கலந்து கொண்டார்கள். அவர்கள் அனைவரும் ஸாந்த்தா மரியா பள்ளியில் கூடியிருந்தார்கள். அங்கே வந்த ரொபர்த்தோ எல்லோரையும் கலைந்து போகும்படி சொன்னார். கூட்டத்தினர் அசையவில்லை. சுட்டுத் தள்ளுவேன் என்றார் ரொபர்த்தோ. கூட்டம் அசையவில்லை. தன் பட்டாலியனைக் கொண்டு சுட்டார் ரொபர்த்தோ. 7000 பேர் – குழந்தைகளும் பெண்களுமாக – அன்றைய தினம் துப்பாக்கிச் சூட்டில் இறந்தார்கள்.
அந்தப் பள்ளி மைதானத்தில் விழுந்து நான் புரள விரும்பினேன். அந்த மண்ணை எடுத்து என் தேகத்தில் பூசிக் கொள்ள விரும்பினேன். இதைத் தட்டச்சு செய்யும் போது எழுத்துக்கள் தெரியவில்லை. கை நடுங்குகிறது.
நான் தங்கியிருந்த சந்த்தியாகோ நகரிலிருந்து 1800 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இக்கீக்கே (Iquique). கையிலிருந்த பணமெல்லாம் தீர்ந்து விட்டது. திட்டமிட்ட 6 லட்சத்திலிருந்து 12 லட்சம் ஆகி விட்டது செலவு. இன்னும் 1000 டாலர் இருந்தால் அங்கே சென்றிருக்க முடியும். இன்னும் ஒரு ஆண்டுக்குள் மீண்டும் சீலே செல்வேன்.
***
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai