அமெரிக்கப் பயணம் – அக்டோபர் – சில முன்குறிப்புகள் (4)

என்னுடைய உள்வட்ட நண்பர்களாக இருப்பதற்கான முதல் தகுதி நான் விமர்சனம் செய்தால் அதை சகித்துக் கொள்ளும் மனத்திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.  ஒரே ஒருவருக்கு மட்டும் விதிவிலக்கு.  அவரை நான் விமர்சிப்பதில்லை.  தப்பித் தவறி விமர்சித்து விட்டால் நூறாயிரம் முறை மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கிறது.  அதற்குப் பயந்து கொண்டே வாயை மூடிக் கொண்டு இருந்து விடுகிறேன்.  ஓ மை காட், இதையே கூட அவர் தன் மீதான விமர்சனமாக எடுத்துக் கொள்ளக் கூடுமே?  ம்ம்ம்… பரவாயில்லை.  யார் என்று இங்கே சூசகமாகக் கூட குறிப்பிடவில்லை.  அதனால் ’நீங்கள் இல்லை, உங்களைத்தான் எத்தனையோ விமர்சனம் செய்திருக்கிறேனே, உங்களிடமெல்லாம் நான் எப்போதாவது ஆமாஞ்சாமி போட்டிருக்கிறேனா?’ என்று கேட்டு சமாளித்து விடலாம்.  பொய் நமக்கு ரொம்ப சகஜமாக வரும்.  ரவி ஷங்கர் பரீட்சையில் தேறி விட்டார்.  பொதுவாக நான் அப்படி எழுதினால் சம்பந்தப்பட்டவர் வெகுண்டெழுந்து என் மீது தாக்குதல் நடத்துவதே வழக்கம்.  ”உம்மோடு வர வேண்டும் என்று ஏழு லட்சம் ரூபாய் செலவு செய்து வந்தேன்.  பதிலுக்கு நீர் என்னைத் திட்டுகிறீர்?  உம்மைப் பற்றி மற்றவர்கள் சொல்வது சரிதான்; இனி உங்கள் எழுத்தை நான் படிக்கப் போவதில்லை.  குட் பை” என்றுதான் மின்னஞ்சல் வரும்.   ஆனால் ரவி ஷங்கர் is a cool dude.  ”கற்றுக் கொண்டேன்.  இனி அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வேன்.  உங்களோடு பயணம் செய்வதற்காகவே பணம் சேர்க்க வேண்டும்.  உங்களோடு பயணம் செய்த போது ஒரு பிரபலத்தோடு இருப்பதாகவே தோன்றவில்லை.  ஒரு நண்பனோடு இருந்தது போலவே இருந்தது” என்று எழுதியிருந்தார்.  உண்மையில் நான் அப்படி ஒரு நண்பரைப் பற்றி எதிர்மறையாக எழுதும்போது ரொம்பவே பயந்து கொண்டுதான் எழுதுவேன்.  எழுதி விட்டு ஸ்ரீராமுக்கு ஃபோன் போட்டு கோபித்துக் கொண்டீர்களா என்று கூட கேட்டேன்.  அவர் பெரிதாகச் சிரித்தபடி கோபமா, உங்கள் மீதா, never ever என்றார்.   நிம்மதியாயிற்று.  ஆனால் ஸ்ரீராமிடம் ஒரு நல்ல பழக்கம்.  செய்ததையே திரும்பவும் செய்வார்.  ஆனால் புகாரியாக இருக்காது.  வேறொரு ஓட்டலாக இருக்கும்!  கர்ச்சீஃபாக இருக்காது.  சட்டையாக மாறும்.

***

அமெரிக்கப் பயணத்தின்போது மூன்று இடங்களை நான் தங்குவதற்கான மையங்களாகக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்.  இதில் எது முதலில் என்பதை இனிதான் திட்டமிட வேண்டும்.  இப்போதைக்கு மூன்று இடங்கள்.  அட்லாண்ட்டா, Dallas, Sacramento.  நியூயார்க், நியூஜெர்ஸி, வாஷிங்டன் போன்ற இடங்களை எஸ்.ஓ.டி.சி. மூலம் ஐந்து நாளில் பார்த்து விடலாம்.  மீதி இரண்டு வாரத்தை மேற்கண்ட மூன்று ஊர்களில் பிரித்துக் கொள்ளலாம்.  ஸாக்ரமெண்ட்டோவிலிருந்து Utah 13 மணி நேரப் பயணம் என்று அஸ்வினி குமார் எழுதியிருக்கிறார்.  ஆனாலும் போய்த்தான் ஆக வேண்டும்.  இரவில் காரில் பயணிப்பது எனக்கு ஆகாது என்பதால் பகலில்தான் பயணம் செய்ய வேண்டும்.  இந்தப் பயணத்தில் எங்கள் இருவரோடும் (அஸ்வினி குமார் மற்றும் அடியேன்) வேறு யாரும் சேர்ந்து கொள்ள விருப்பம் உண்டா?  (அக்டோபர்.  இன்னும் தேதி முடிவாகவில்லை.)  ஆனால் கார் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.  அதுதான் நிபந்தனை.  (கவனம்:  எனக்கு யாரும் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில், என் சொந்த விஷயங்களில் தலையிட்டு ஆலோசனைகள் வழங்கக் கூடாது.  ஏன் கோக் குடிக்கிறீங்க சாரு, அது உடம்புக்கு ஆகாதே?  இந்த பெர்ஃப்யூம் சென்னை ரங்கநாதன் தெருவிலேயே ரொம்ப சீப்பாகக் கிடைக்கிறது; அங்கேயே போய் வாங்கிக் கொள்ளலாமே? இன்னும் இதுபோல் நூறு ஆலோசனைகளை இங்கே எழுதுவேன்… வேண்டாம் நண்பர்களே, தயவுசெய்து வேண்டாம்.)  

இன்னொரு விஷயம்.  என் நண்பர்களோடு நான் பேச விரும்பவில்லை.  அவர்களிடமிருந்து அமெரிக்கா பற்றித் தெரிந்து கொள்ளக் கூடிய விஷயங்கள் யாவும் எனக்கு ஏற்கனவே தெரியும்.  ஆனால் அவர்களின் குழந்தைகளோடு – பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் – பேசவும் உரையாடவும் விரும்புகிறேன்.  தமிழ்க் குடும்பங்களில் வளரும் பெண் குழந்தைகள் – என்னதான் அமெரிக்காவில் வளர்ந்தாலும் – என்னோடு சகஜமாக பேச மாட்டார்கள்.  அதனால் ஆண் குழந்தைகளோடு பேச விரும்புகிறேன்.  எப்படித் தெரியும் என்றால், துலூஸில் (ஃப்ரான்ஸ்) என் நண்பரோடு அவர் வீட்டில் மூன்று தினங்கள் இருந்தேன்.  அவருக்கு மூன்று பெண் குழந்தைகள்.  12, 16, 18 வயது.  மூன்றுமே என்னிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.  சிறு பிராயத்திலிருந்தே ஃப்ரான்ஸில் வளர்ந்த குழந்தைகள்.   வெட்கத்தோடு கெக்கே பிக்கே என்று சிரித்தபடி ஓடி ஒளிந்து கொண்டதுகள்.  பக்கா ஃப்ரெஞ்சுக் குழந்தைகள் என்றாலும் தமிழ்ப் பெற்றோர்.  தமிழ்ச் சூழல்.  அமெரிக்கா அந்த அளவுக்கு இருக்காது என்றாலும் பேச மாட்டார்கள்.  ஆனால் ஃப்ரான்ஸில் ஆண் பிள்ளைகளோடு – பள்ளி, கல்லூரி மாணவர்கள் – நாட்கணக்கில் பேசிக் கொண்டிருந்தேன்.   அவர்களோடு ஃப்ரான்ஸிலிருந்து காரில் ஜெர்மனி வந்தேன்.   ஐரோப்பிய வாழ்க்கை பற்றி அவர்களிடமிருந்துதான் நான் அதிகம் கற்றுக் கொண்டேன்.  அவர்களின் பெற்றோர் வீட்டில் சன் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  அமெரிக்க வாழ்க்கை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால் 15 வயதிலிருந்து 21 வயது வரை உள்ள இளைஞர்களிடம்தான் பேச வேண்டும்.  பேசுவேன்.  ஆனால் அவர்களின் உச்சரிப்புதான் என்னால் புரிந்து கொள்ள முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது.  ஒரே ஒரு நம்பிக்கை இருக்கிறது.  எல்லா அமெரிக்க சீரியல்களும் பார்த்திருக்கிறேன்.  அதனால் அமெரிக்க உச்சரிப்பு புரியக் கூடும்.  Gotham என்ற ஒரு சீரியல் போதும்.  அமெரிக்க உச்சரிப்பு பழகி விடும்.  ஐந்து சீஸன்கள்.  ஆனால் பிரிட்டிஷ் உச்சரிப்பு புரியாது.  ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவின் எடிட்டர் மார்க் ரேப்போல்ட் இங்கே சென்னை வந்த போது என்னை சந்தித்தார்.  அவர் பேசியதில் 20 சதவிகிதம்தான் புரிந்தது.  ஆனால் ராம்ஜி அவரோடு ரொம்ப சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தார்.  பார்க்கலாம். 

மூன்று பேரைத் தவிர வேறு யாரிடமிருந்தும் எனக்கு பதில் வரவில்லை.  என் அமெரிக்க நண்பர்கள் யாரும் என் ப்ளாகைப் படிப்பதில்லை என்று தெரிகிறது.  வாட்ஸப்பில் தொடர்பு கொள்வதோடு சரி போல் இருக்கிறது.  ஸாக்ரமெண்ட்டோ, டாலஸ், அட்லாண்ட்டா  ஆகிய மூன்று நகரங்களும் அமெரிக்க வரைபடத்தில் மூன்று முக்கிய புள்ளிகளில் இருக்கின்றன.  ஸாக்ரமெண்ட்டோ மேற்கு மூலை.  அங்கிருந்து டாலஸ் 2300 கி.மீ. தூரம்.  அமெரிக்காவின் மத்தியில் உள்ளது.  அட்லாண்ட்டா கிழக்கு மூலை.  டாலஸிலிருந்து அட்லாண்ட்டா 1200 கி.மீ.  ஆனால் ஸான் ஹோஸே நகரில் வசிக்கும் ஒரு நண்பர் என்னைச் சந்திக்க விரும்பினால் ஸாக்ரமெண்ட்டோ வந்து பார்க்கலாம்.  வெறும் 140 கி.மீ.தான்.  இப்படியாக நம் சந்திப்புகளைத் திட்டமிடலாம்.  ஆனால் கத்தார் நண்பர்களைப் போல் ஒதுங்கிக் கொள்ளலாம் என்றும் பலர் நினைக்கலாம்.  உங்கள் விருப்பம். 

charu.nivedita.india@gmail.com

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai