அடுத்த இதழ் ArtReview Asia இதழில் தமிழ் சினிமாவின் நடிப்புச் சிகரங்கள் சிலரைப் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். தமிழில் எழுதியதாலேயே உலக அளவில் தெரியாமல் போய் விட்ட பாரதி, க.நா.சு., சி.சு.செ., எம்.வி.வெங்கட்ராம், தி.ஜா., தி.ஜ.ர., ஆதவன், கோபி கிருஷ்ணன், கு.ப.ரா. போல தமிழ் சினிமா என்ற வியாபார சினிமாவில் புழங்கியதாலேயே உலகில் தெரியாமல் போய் விட்ட டி.எஸ். பாலையா, சந்திர பாபு, எம்.ஆர். ராதா, சிவாஜி கணேசன் போன்றவர்கள் பற்றி யாருக்குமே தெரியாமல் போய் விட்டது. காட்ஃபாதரின் மார்லன்ப்ராண்டோவின் நடிப்பை உலகமேவியந்து வியந்து பாராட்டுகிறது. ஆனால் புதிய பார்வையில் சிவாஜியின் நடிப்பை உலகின் எந்த மகா நடிகனின் நடிப்பையும் தூக்கி அடிக்கக் கூடியது. ஒரு பாடல் காட்சியில் அவர் சிகரெட் குடிக்கும் ஸ்டைல். ஆஹா மெல்ல நட மெல்ல நட என்ற பாடலில் ஆரம்ப முதல் நிமிடத்தில் அவர் நடக்கும் ஸ்டைல், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அவர் நடித்த படங்களெல்லாம் சாதாரணமானவை. ஆனால் அவர் நடிப்பு உலகத் தரம். அவருடைய ஓவர் ஆக்டிங் performanceஐக் கொண்ட உயர்ந்த மனிதன் போன்றவற்றை இங்கே பேசக் கூடாது. அதாவது, சச்சினின் டக் அவுட் பற்றி அல்ல; அவர் அடித்த செஞ்சுரிகளைப் பற்றி. அதேபோல். இது பற்றி எனக்குக் கொஞ்சம் feed back கொடுத்தீர்களானால் நலம். எனக்குத் தமிழ் சினிமா பற்றி அதிகம் தெரியாது. சில காட்சிகளை மட்டும் எனக்குச் சொல்லுங்கள். மெயில் அனுப்பினாலும் நலம். charu.nivedita.india@gmail.com
எப்போதும் தமிழ் சினிமா பற்றித் திட்டிக் கொண்டே இருப்பதாக என் மீது ஒரு புகார் இருக்கிறது. தமிழ் சினிமாவின் அருமை பெருமைகளைப் பற்றியும் ஆங்கிலேயர்களுக்குச் சொல்லலாம்.