சீலே, பெரூ பயணக் கட்டுரைக்காக Frontera verde (Green Frontier) என்ற கொலம்பியன் வெப்சீரீஸ் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது த்ரில்லர் வகை சீரீஸ் அல்ல; ஒரு பொழுதுபோக்கு சீரீஸ் அல்ல என்றாலும் த்ரில்லர் genreஇல் எடுக்கப்பட்ட படு சீரியஸான சீரீஸ். நோட்ஸ் எடுத்துக் கொண்டேதான் பார்க்க வேண்டியிருக்கிறது. சில சமயங்களில் பார்த்த எபிசோடையே திரும்பப் பார்க்க வேண்டியிருக்கிறது. டாக்யுமெண்ட்ரியாக நான் பார்த்த பல விஷயங்களை இதில் புனைவாகப் பார்க்கும் போது அது தரும் அனுபவமே வேறாக இருக்கிறது. இதுவரை நான் பார்த்த சீரீஸிலேயே ஜிஓடிக்கு அடுத்த இடத்தில் இந்த சீரீஸைத்தான் வைப்பேன். மூன்றாவது இடம், இன்மேட். கடைசி இரண்டுமே கொலோம்பியன் சீரீஸ் என்பது ஒரு ஆச்சரியம்.