ஏராளமாக வேலை இருக்கிறது. ஒரு நாளில் நாற்பது மணி நேரம் இருந்தால் தேவலாம் போல் இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் எழுதிக் குவித்ததையெல்லாம் தொகுக்க வேண்டும். நாவல், பயணக் கட்டுரை, அடுத்த பயணத்துக்கான ஏற்பாடு, உடல் நலம், இத்யாதி இத்யாதி.
இந்தக் கொடூர அவசர வாழ்வில் கண்ட கண்ட விவகாரத்தில் எல்லாம் ஈடுபட நேரம் இருப்பதில்லை. இந்த நிலையில் கார்ல் மார்க்ஸ் தனது பதிவு ஒன்றில் என்னையும் இழுத்து அவதூறு செய்திருக்கிறார். முன்பு போல் இருந்தால் வேறு மாதிரி பதில் சொல்லியிருப்பேன். ஆனால் இப்போது யார் யாரோ இதைப் படிக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் எழவு சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது. யார் யார் என்று சொன்னாலே பிரச்சினை வரும்.
ஒரு பெரிய சங்கீத மேதை தன் சீடனிடம் காண்டம் வாங்கி வரச் சொன்னார். சீடனுக்குத் தன் குரு பற்றி நன்கு தெரியும் என்பதால் நாலஞ்சு பாக்கெட்டாக வாங்கி வந்து கொடுத்தான். மறுநாள் சீடனிடம் குரு ரொம்ப ஜாலியாக நன்றி சொன்னார். ”நல்ல காரியம் செஞ்சேடா நீ. இப்போ கவலை இல்லாம இருக்கேன். யூஸ் பண்ணினதையும் ஒரு டப்பால போட்டு வச்சுருக்கேன். உன்னை அடிக்கடி தொந்தரவு பண்ண வேணாம் பாரு?”
சிஷ்யனுக்கு வாந்தி வந்து விட்டது. உவ்வே. உவ்வே. மேதை குழந்தை மாதிரி. இரு இரு இதோ காமிக்கிறேன் என்று டப்பாவையும் கொண்டு வந்தார். டப்பாவுக்குள் ஒரு காண்டம் நன்கு சுத்தமாக கிடந்தது. இதோ பார், இன்னோன்னை துவைச்சு காய வச்சுருக்கேன் என்று சொல்லிக் கொடியைக் காட்டுகிறார். அங்கே ஒரு காண்டம் நன்கு கழுவி சுத்தம் செய்யப்பட்டு க்ளிப் போட்டு காய்ந்து கொண்டிருந்தது.
இத்தனை ரகளையும் ஒரே நாளில். அந்த மேதை இப்போது இல்லை. சீடர் எனக்கு நெருங்கிய நண்பர். சார், நீங்க என் குரு மாதிரியே இருக்கிறீர்கள் என்பார் அவர் அடிக்கடி.
அது சரி, இந்தக் கூத்தெல்லாம் நடந்தது எப்போ என்றேன். சரியா 2010லே. அப்போ அவர் வயசு 80 என்றார் நண்பர்.
நான் கனிந்து விட்டேன் என்று அவதூறு பண்ணியிருக்கிறார் கார்ல். ஒரு பெண் ஆணைப் பார்த்து நீ impotent என்று சொன்னால் அந்த ஆண் பதிலுக்கு என்ன சொல்வான் கார்ல்? கனிந்து விட்டேன் என்றால் எல்லோருக்கும் ப்ளோஜாப் செய்வேன் என்று அர்த்தமா? என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? உங்களுக்கு அராத்துவோடு பஞ்சாயத்து என்றால் அங்கே வைத்துக் கொள்ள வேண்டியதுதானே மிஸ்டர்? ஒரு பெண்ணைப் பார்த்து நீ எல்லாரோடையும் படுப்பியா என்று கேட்பதற்கும் சாரு கனிந்து விட்டார், அதனால்தான் கண்ட குப்பையையும் பாராட்டுகிறார் என்று சொல்வதற்கும் என்னய்யா வித்தியாசம்?
உங்களுக்கு என் மீது பகை இருந்தால் ஏதாவது ஒரு மதுபான கேளிக்கையின் போது போதையில் என் கழுத்தை நெறித்துப் போடும். இப்படியெல்லாம் பொதுவில் வந்து கனிந்து விட்டார் அதனால்தான் ப்ளோஜாப் செய்கிறார் என்று எழுதாதீரும்.
என் வயிறு எரிகிறது. உங்களோடு பழகியதற்காக வெட்கப்படுகிறேன்…
இந்தப் பதிவை யார் சொன்னாலும் எடுக்க மாட்டேன். வயிறு பற்றி எரிகிறது…நெஞ்சு வலிக்கிறது…