பூச்சி – 8

இந்தத் தொடருக்கு பூச்சி என்று தலைப்பிட்டிருக்கிறேன். தொடர்ந்து வாசியுங்கள்…

இந்த கொரோனா தொடரில் இது எட்டாவது அத்தியாயம்.  தொடர்ச்சியில் குழப்பம் நேர்ந்தால் முந்தின ஏழு அத்தியாயங்களையும் படித்து விடுங்கள்.  முதலில் உச்சரிப்பு.  கொரோனா என்ற வார்த்தையின் மூலம் லத்தீன்.  லத்தீனில் one or more circles of light seen around a luminous object என்று பொருள்.  ஒளிரும் தன்மை கொண்ட வட்டமான பொருளைச் சுற்றித் தெரியும் வட்டம்.  இன்னொரு பொருள், முடி.  அரசர்களுக்கு முடி சூட்டுவார்களே, அந்த முடி.  அதனால்தான் முடிசூட்டுதலுக்குப் பெயர் coronation.  லத்தீனிலும் கொரோனாவின் உச்சரிப்பு கொரோனாதான்.  அப்படி இருக்கும் போது ஏன் பிரிட்டிஷ்காரர்கள் கரோனா என்று சொல்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.  போகட்டும். 

வெப்சீரீஸ் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன்.  இன்று கூட ஒரு இளம் தோழி ரொம்ப போர் அடிக்கிறதே என்று சொன்னார்.  நான் பார்த்த ஐந்தாறு வெப்சீரீஸின் பெயர்களை அனுப்பி வைத்தேன்.  இந்த இளைஞர்களை எண்ணி நான் பரிதாபப்படுகிறேன்.  வெப்சீரீஸ் பற்றிக் கூட எப்படித் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் இவர்கள்?  அப்படியே தெரிந்தாலும் வெறும் மொக்கை சீரீஸாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  அதில் கூட இவர்கள் பார்ப்பது எனக்குப் பிடிக்கவில்லை.  நான் பார்ப்பதை இவர்கள் கேள்விப்பட்டதே இல்லை. 

இப்போது அந்தப் பட்டியலைத் திரும்பச் சொல்கிறேன்.

1.Game of Thrones

2. The Inmate (இவ்வளவு விறுவிறுப்பான தொடரைப் பார்ப்பது அரிது.  வெறும் 13 எபிசோடுகள்தான்.  ஆரம்பித்தால் முடித்து விட்டுத்தான் எழுந்து கொள்ள முடியும்.  ஒரு மெக்ஸிகோ சிறையில் நடக்கும் கதை. மெக்ஸிகோ சிறைகள் எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு சான்று.)

3. La Reina Del Sur

The Queen of the South என்று பொருள்.   இதே ஆங்கிலத் தலைப்பில் இதே கதை வேறொரு தொடராகவும் உள்ளது.  லா ரெய்னா தெல் சூர் ஸ்பானிஷ் தொடர்.  க்வீன் ஆங்கிலத் தொடர்.  இதை ஸ்பானிஷில் பார்ப்பதே உசிதம் என்று நினைக்கிறேன்.   Arturo Pérez-Reverte எழுதிய லா ரெய்னா தெல் சூர் என்ற தலைப்பிலான நாவலை அடிப்படையாகக் கொண்ட தொடர்.  இத்தனை விறுவிறுப்பாகக் கூட ஒரு நாவல் இருக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருந்தது.  ஒரு பெரும் நவீன காவியத்தைப் பார்த்தது போல் இருந்தது.  இந்தத் தொடரைப் பார்ப்பதாக இருந்தால் நீங்கள் கொரோனாவையும் உங்கள் புற உலகத்தையும் முழுமுற்றாக மறந்து விட நேரிடும்.  இப்படிப்பட்ட தொடர்களெல்லாம் உங்கள் அலைபேசியிலேயே இருக்கும்போது போரடிக்கிறது போரடிக்கிறது என்று சொல்லும் உங்களை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.  ஏன் தெரியுமா?  லா ரெய்னா தெல் சூர்- இன் முதல் சீஸன் 63 எபிசோடுகளையும் இரண்டாவது சீஸன் 60 எபிசோடுகளையும் கொண்டது.  அத்தனை எபிசோடுகளும் உங்களை இருக்கை முனையில் இருக்கச் செய்யும் சுவாரசியமும் விறுவிறுப்பும் கொண்டது.  இரண்டாவது சீஸனில் இருபது எபிஸோடைத் தாண்டியபோது என்னால் பரபரப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போனது.    

இதய பலவீனம் உள்ளவர்கள் இதைப் படிக்க வேண்டாம் என்று விளம்பரத்துக்காக எழுதுவார்கள் இல்லையா, அது நிஜமாகவே எனக்கு நடந்தது.  இதயத்தின் துடிப்பு அதிகமானது.  அதனால் மரியாதையாக கடைசி எபிசோடைப் பார்த்து விட்டுத்தான் திரும்பவும் இருபதாவது எபிசோடுக்கு வந்தேன்.  அந்த அளவு விறுவிறுப்பு கொண்டது.  முதலில் கதை கொலம்பியாவில் ஆரம்பித்து பிறகு மொராக்கோ – ஸ்பெய்ன் எல்லைப் பகுதியில் உள்ள Melilla என்ற ஊரில் நடக்கிறது.  கலாச்சார ரீதியாக ஸ்பெய்ன் மற்றும் மொராக்கோ பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது.  எனக்கு மிக நெருக்கமான கதையும் நிலவியலும் கொண்ட தொடர். 

4. Lucifer

நான்கு சீஸன்களைக் கொண்ட லூசிஃபர் படு ஜாலியான தொடர்.  இது பற்றி ஏற்கனவே நிறைய எழுதியிருக்கிறேன்.  லூசிஃபர் பாத்திரத்தை என்னால் எப்போதுமே மறக்க இயலாது.  அமெரிக்கத் தொடர். 

5. Gotham

இதுவும் அமெரிக்கத் தொடர்தான்.  தலா 22 எபிசோடுகளைக் கொண்ட நான்கு சீஸன்கள்.  ஐந்தாவது சீஸன் மட்டும் 12 எபிசோட்.  நான் ஐந்தாவது சீஸன் பார்க்கவில்லை.  அமெரிக்க வாழ்க்கை பற்றித் தெரிந்து கொள்ள உதவியது.  படு விறுவிறுப்பான தொடர். 

6. Narcos

நார்கோஸ் பற்றி சொல்லவே தேவையில்லை.  இந்தத் தொடரைப் பார்க்காவிட்டால் நீங்கள் ஒரு வேஸ்ட்.  அவ்வளவுதான்.

7. Breaking Bad

முழுசாகப் பார்த்தேன்.  நான் பார்த்த முதல் வெப் சீரீஸ் இதுதான்.  படு பாப்புலரான சீரீஸ்.  இதைப் பார்க்காதவர்களே இல்லை.  ஆனால் எனக்கு இந்த சீரீஸ் பிடிக்கவில்லை.  இதன் அடிச்சரடான எதிக்ஸ் எனக்குப் பிடிக்கவில்லை. 

8. Narcos (Mexico)

இதுவும் அதகளமான சீரீஸ்தான். 

இதெல்லாம் நான் பார்த்து ரசித்தவை.  இன்னும் ஏராளம் உண்டு.  எழுதுகிறேன். 

***

பூனை உணவுக்கான ஏற்பாடுகளில் பங்கேற்க விரும்புபவர்கள் பூனை உணவாகவோ பணமாகவோ அனுப்பலாம். Whiskas cat food ocean flavour or tune. Adult or kitten. விபரம் தேவையெனில் எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai