பூச்சி – 9

9. El Dragon: Return of a Warrior

இது சீனப் படம் அல்ல.  மெக்ஸிகன் ட்ரக் கார்ட்டெல் தொடர்.  ஒரு சீஸன் தான் வந்துள்ளது.  இரண்டாவது சீஸனுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கும் பல லட்சம் மெக்ஸிகர்களோடு அடியேனும் சேர்கிறேன்.

10. Money Heist

எல்லோருக்கும் பிடித்த இந்த சீரீஸ் எனக்கும் பிடித்ததுதான்.  இல்லையென்று சொல்ல மாட்டேன்.  ஆனால் பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார் ரகம்தான்.  அதற்கு மேல் ஒன்றுமில்லை.  செம விறுவிறுப்பு.  நான் மேலே குறிப்பிட்ட சீரீஸ் எல்லாமே ஜனரஞ்சகமானவை என்றாலும் அதில் வரும் nuances எல்லாம் காவியத்தன்மை கொண்டதாக இருக்கும்.  உதாரணமாக, லா ரெய்னா தெல் சூர் தொடரில் வரும் நாயகியும் போதைப் பொருள் கடத்தல் ராணியுமான தெரேஸா மெந்தோஸாவுக்கும் மற்றொரு கடத்தல் மன்னனான ஒலேக் யாஸிகோவுக்குமான நட்பு காவியங்களில் மட்டுமே காணக் கூடியது.  தெரேஸாவின் முதல் காதலன் கொல்லப்படுகிறான்.  அதனால் காதல் மீதே அவளுக்கு அச்சம் ஏற்படுகிறது.  அவள் யாரைக் காதலித்தாலும் அவன் எதிர் கோஷ்டியால் கொல்லப்படுவான்.  அந்த நிலையிலும் அவளை விடாமல் காதலிக்கிறான் மற்றொருவன்.  அவனும் கொல்லப்படுகிறான்.  அந்த வலியும் தனிமையுமாக அவள் யாசிகோவை சந்திக்கிறாள்.  அவளுடைய வலி அத்தனையையும் உணர்கிறான் யாசிகோவ்.  இந்தத் தொழிலில் நாம் தனியர்களாக மட்டுமே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறோம் தெரேஸா என்கிறான்.  அப்போது காதல் பற்றிப் பேச்சு வருகிறது.  ”நான் உன்னைக் காதலித்திருந்தால் நீ இத்தனை கஷ்டப்பட்டிருக்க மாட்டாய் இல்லையா?” என்கிறான் யாசிகோவ்.  அவன் குரலில் காதல் இல்லை; உண்மையான துயரமும் கருணையும்தான் இருக்கிறது.  அதற்கு தெரேஸா ”நான் அப்படி நினைக்கவில்லை. நம்முடைய நட்பை ஆயிரம் காதல்களால் கூட ஈடு செய்ய முடியாது”  என்கிறாள்.  அந்தத் தருணத்தை நான் எந்த இலக்கியத்திலும் வாசித்ததில்லை. அது போன்ற தருணங்கள் Breadking Bad, Money Heist போன்ற பலருக்கும் பிடித்த தொடர்களில் காண முடிவதில்லை. 

11. El Chapo

இதுவும் ஒரு மெக்ஸிகன் தொடர்தான்.  நார்க்கோஸ் மாதிரி.  பார்க்க வேண்டிய ஒன்று.

12. The Blacklist

நான் இந்தத் தொடர்களையெல்லாம் பார்க்கும் முறை எப்படியென்றால், காலையிலிருந்து மதியம் வரை வீட்டு வேலை இருக்கும்.  அது பற்றிப் பிறகு.  அல்லது, வீட்டு வேலையைச் செய்து கொண்டே எழுதிக் கொண்டிருப்பேன்.  வீட்டு வேலை.  எழுத்து.  வீட்டு வேலை. எழுத்து.  வீட்டு வேலை என்றால் பெரிதாக ஒன்றுமில்லை.  எடுபிடி வேலைதான்.  எழுதிக் கொண்டிருப்பேன்.  சாரு சாரு என்ற அலறல் சப்தம் கேட்கும்.  அலறிப் பிடித்துக் கொண்டு ஓடுவேன்.  அப்படி ஓடும்போது குமுதம் ஆசிரியருடனோ சீனியுடனோ பேசிக் கொண்டும் இருந்திருப்பேன்.  அல்லது, டாய்லட்டில் கூட இருப்பேன்.  அலறல் கேட்டதும், போனில் இருந்தால் இதோ பேசுகிறேன், அவசரம் என்று அவர்களிடமும் அலறி விட்டு ஓடுவேன்.  டாய்லட்டில் இருந்தால், பாதியிலேயே சுத்தம் செய்து கொண்டு ஓடுவேன்.  பார்த்தால் நான் பயந்தபடியே முழு வெந்நீர்த் தவளையை இரண்டு கைகளிலும் பிடித்தபடி இன்னொரு குண்டானை கீழே வை என்பாள்.  கரணம் தப்பினால் மரணம் தருணம்.  கிட்டத்தட்ட அவள் அழைக்கும் எல்லா தருணங்களுமே அப்படித்தான் இருக்கும்.  மதியத்துக்கு மேலேதான் தடைகள் இல்லாமல் தொடர்ந்து எழுத நேரம் கிடைக்கும்.  அதாவது மூன்று மணிக்கு மேல்.  அப்படி எழுதிக் கொண்டே இருக்கும் போது இரவு ஒன்பது மணிக்கு மேல் ஒரு அலுப்பு தட்டும்.  அப்போது சீரீஸ் பார்க்க ஆரம்பிப்பேன்.  பத்து ஆகும் போது குற்ற உணர்ச்சி பீறிடும்.  ஐயோ.  வாழ்க்கையே போச்சே.  ஒரு மணி நேரம் வீணாகி விட்டதே.  அவ்வளவுதான்.  மூன்று தினங்களுக்கு சீரீஸின் பக்கம் வர மாட்டேன்.  இப்படித்தான் ப்ளாக்லிஸ்ட் என்ற இந்த சீரீஸை ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு பதினைந்து எபிசோட் பார்த்து வைத்திருந்தேன்.  நேற்று அதைத் தூசி தட்டி எடுத்துப் பார்த்தேன்.  ரெண்டே ரெண்டு எபிசோட்.  வைத்து விட்டேன்.  இனி ஒரு மூன்று மாதம் ஆகும். ஆனாலும் சூப்பர் சீரீஸ்.  இதில் வரும் James Spader மாதிரி நடிகர்கள் உலகத்தில் ரொம்பக் கம்மி என்றுதான் சொல்வேன்.  அறுபது வயது இருக்கும்.  நம் சிவாஜி மாதிரி பின்னி எடுக்கிறார்.  பிறகு இவர் கலந்து கொள்ளும் பின்னிரவு டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்தேன்.  அமெரிக்காவில் இவர் ரொம்பப் பிரபலம் போல.  நேரிலும் திரையில் தோன்றுவது போலவேதான் இருக்கிறார்.  அவரது மேனரிஸம், உடல் மொழி எல்லாம் தனி ரகம்.  அவருக்காகவே இந்த சீரீஸைப் பார்க்கலாம்.

இது தவிர இன்னும் பலது இருக்கிறது.

பலரும் நேரம் போகவில்லை நேரம் போகவில்லை என்று துக்கப்பாட்டு பாடுகிறார்கள்.  நானோ இதைப் பேய் வேகத்தில் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன்.  மணி 10.50.  பதினோரு மணிக்குத் தூங்கப் போக வேண்டும்.  அவசரம். அவசரம்.  காலையிலிருந்தே இப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறது கடிகாரம்.  இரண்டு தினங்களாக ராகவன் போனில் அழைத்துக் கொண்டிருக்கிறார்.  எடுத்துப் பேச நேரமில்லை.  நாளை தொடர்கிறேன். 

***

பூனை உணவுக்கான ஏற்பாடுகளில் பங்கேற்க விரும்புபவர்கள் பூனை உணவாகவோ பணமாகவோ அனுப்பலாம். Whiskas cat food ocean flavour or tune. Adult or kitten. விபரம் தேவையெனில் எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai