பூச்சி 66

பாதாள் லோக் என்று ஒரு சீரீஸ் வருகிறது.  அமேஸான் ப்ரைம்.  இதைப் பார்க்கச் சொல்லி பல நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள்.  பார்க்கவில்லை.  அப்போது தருண் தேஜ்பால் ஒரு லிங்க் அனுப்பியிருந்தார்.  பார்த்தால் தருண் எழுதிய The Story of My Assassins என்ற நாவலை அப்படியே திருடி, தருண் தேஜ்பால் பெயரையே போடாமல் பாதாள் லோக் என்ற தொடரை எடுத்திருக்கிறார்கள் என்று ஒரு பத்திரிகை கட்டுரை சொன்னது.  அதைத்தான் தருண் எனக்கு அனுப்பியிருந்தார்.  அப்புறம் அது பற்றி நாங்கள் கொஞ்சம் பேசினோம்.  என்ன என்று இங்கே சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.  தருண் நீதிமன்றம் போய் நீதி கேட்கலாம்.  நீதி கிடைக்க நாலைந்து ஆண்டுகள் ஆகும்.  அதுவரை இந்தத் தொடர் நிறுத்தி வைக்கப்படும்.  எப்படியும் தருண் பக்கம்தான் தீர்ப்பு ஆகும்.  ஏனென்றால், கதாபாத்திரங்களின் பெயரைக் கூட மாற்றவில்லை.  அதே கதை, அதே சம்பவங்கள், அதே பெயர்கள், அதே ஊர்கள், அதே முடிவு.  எல்லாம் அச்சு அசலாக The Story of My Assassins.  என்ன நடந்திருக்கிறது என்றால், தருணின் பெயர் இப்போது sexual assault கேசில் மாட்டியிருப்பதால், அவர் பெயரைப் போடுவது வியாபாரத்துக்குக் கேடு என்று நினைத்திருக்கிறார்கள் அமேஸான் நிறுவனத்தினர்.  அடக் கேடுகெட்டப் பதர்களா… பாப்லோ நெரூதா கூட ஒரு பெண் பிரச்சினையில் ஈடுபட்டு விட்டார்.  அதை அவரே தன் சுயசரிதையில் எழுதியும் இருக்கிறார்.  நான் தருணை நியாயப்படுத்தவில்லை.  தருண் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.  நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை.  தீர்ப்பு வரும் வரை அவரை எப்படிக் குற்றவாளி என்று சொல்ல முடியும்?  குற்றம் சாட்டப்பட்டவர், அவ்வளவுதானே?  சரி, தருணின் குற்றம் நிரூபணம் ஆகி விட்டது என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்.  அப்போது கூட அவர் பெயரை தொலைக்காட்சித் தொடரில் போட வேண்டியதுதானே அமேஸானின் கடமை? 

1977-இல் ரோமன் பொலான்ஸ்கியின் மீது அமெரிக்காவில் ஐந்து குற்றங்கள் சுமத்தப்பட்டன.  சமந்தா என்ற 13 வயதுப் பெண்ணை வன்கலவி செய்து விட்டார் என்பதும் அக்குற்றச்சாட்டுகளில் ஒன்று.  இந்தக் குற்றத்துக்கு அமெரிக்காவில் ஐம்பது அறுபது ஆண்டுகள் உள்ளே தள்ளி விடுவார்கள்.  வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த போது தீர்ப்பு வரும் சமயத்தில் கைது செய்யப்படுவதற்கு ஒருசில மணி நேரத்துக்கு முன்பு ஃப்ரான்ஸுக்குத் தப்பி வந்து விட்டார் பொலான்ஸ்கி.  இங்கேதான் ஃப்ரான்ஸ் தன் குடிமக்களை எப்படிக் காபந்து பண்ணுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.  பொலான்ஸ்கி ஃப்ரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்.  ஃப்ரான்ஸின் குடியுரிமைச் சட்டப்படி, வெளிநாட்டில் குற்றம் புரிந்த ஒரு ஃப்ரெஞ்ச் குடிமகனை ஃப்ரான்ஸ் சம்பந்தப்பட்ட நாட்டுக்கு அனுப்பி வைக்காது.  அதன்படி, அமெரிக்க அரசாங்கத்தின் வேண்டுகோளை ஃப்ரெஞ்ச் அரசு நிராகரித்தது.  (இந்தியா இந்த விஷயத்தில் என்ன சட்டம் வைத்திருக்கிறது என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்.  அநேகமாக, ’ஆளைத்தானே கேட்கிறீர்கள், பிணமாகவே தருகிறோ’ என்று சடலமாகவே கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.)   அதற்குப் பிறகு பல ஆண்டுகள் அமெரிக்கா பக்கமே போகவில்லை பொலான்ஸ்கி.  ஒருமுறை பொலான்ஸ்கி சுவிட்ஸர்லாந்தில் ஆயுட்கால விருது வழங்கும் விழாவுக்கு அழைக்கப்பட்டார்.   அப்போது இண்டர்போல் மூலமாக அவரைக் கைது செய்தது அமெரிக்கா.  அப்போதும் ஃப்ரான்ஸ்தான் முன்வந்து சுவிட்ஸர்லாந்த் அரசுக்கு நெருக்கடி கொடுத்து பொலான்ஸ்கியை மீட்டு வந்தது. 

பின்னர் முப்பது ஆண்டுகள் கழித்து ஐந்து லட்சம் டாலர் கொடுத்து சமந்தாவுடன் பொலான்ஸ்கிக்கு சமரசம் ஏற்பட்டது.  சமந்தா பிற்காலத்தில் அது பலாத்காரம் அல்ல, விருப்பத்தின் பேரில் நடந்த செக்ஸ் என்று பேட்டி கொடுத்தார். 

இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், தருண் மீது இன்னும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.  அப்படி நடக்கப் போவதும் இல்லை.  ஏனென்றால், இது முழுக்க முழுக்க ஒரு அரசியல் சதி.  பிஜேபியின் பிரசிடெண்ட் மீது லஞ்ச ஊழலை ஸ்டிங் ஆபரேஷன் மூலம் நிரூபித்தார் தருண்.  பிஜேபி பிரெசிடெண்ட் அதன் காரணமாக தன் தலைவர் பதவியையே ராஜினாமா செய்தார்.  2002-ஆம் ஆண்டு தெஹல்கா பத்திரிகையின் நிருபர்கள் ராணுவத் தளவாடம் விற்பவர்கள் என்ற போர்வையில் ராணுவ மந்திரி ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் வீட்டுக்குள் லஞ்சம் கொடுக்க நுழைகிறார்கள்.  3000 டாலர் கொடுக்கிறார்கள்.  லஞ்சம் பெற்றுக் கொள்ளப்பட்டது.  பிஜேபி ப்ரெசிடெண்டுக்கும் லஞ்சம் கொடுக்கப்படுகிறது.  அவர் லஞ்சப் பணத்தை வாங்கி மேஜை ட்ராயருக்குள் போடுவது அவருக்கே தெரியாமல் விடியோ எடுக்கப்படுகிறது.  பிரதம மந்திரி வாஜ்பேயி ஜார்ஜ் ஃபர்னாண்டஸை மந்திரி சபையிலிருந்து நீக்குகிறார்.  இந்தியாவே அல்லோலகல்லோலப்படுகிறது.

அப்போது பாகிஸ்தான் நான்கு பேரை அனுப்பி தருண் தேஜ்பாலைக் கொலை செய்ய அனுப்பி வைக்கிறது.  அந்த நான்கு பேரும் நேபாளத்தில் வைத்துக் கைது செய்யப்படுகிறார்கள்.  நான்கு பெரும் கூலிக்குக் கொலை செய்பவர்கள்.  இந்தியர்கள்.  பாகிஸ்தான் ஏன் தருணைக் கொலை செய்ய வேண்டும்?  தருணைக் கொன்று விட்டால் கொலைப்பழியை பிஜேபி அரசாங்கத்தின் மீது போட்டு விடலாம்.  தேசமே அப்படித்தான் நம்பும்.  ஏனென்றால், பிஜேபி தருண் மீது கடுங்கோபத்தில் இருந்தது.  ஆனால் நடந்ததோ நேர் எதிர்.  கொலையாளிகள் மாட்டி விட்டதால் இப்போது பிஜேபி அரசே தருணுக்கு மிகக் கடுமையான பாதுகாப்பைக் கொடுக்க வேண்டியதாகி விட்டது.  தருணின் உயிரை எப்பாடு பட்டாவது தருணின் மிக மோசமான எதிரியான பிஜேபி அரசு காப்பாற்றியாக வேண்டும்.  தருணுக்கு ஒரு பிரதம மந்திரிக்கு உண்டான பாதுகாப்பு கொடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.  அவர் வீட்டைச் சுற்றிலும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன.  எப்போதும் வீட்டிலும் அலுவலகத்திலும் அவருக்குப் பாதுகாப்பு.  டாய்லட் சென்றாலும் கூடவே ரெண்டு ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர்கள்.    

இதையெல்லாம்தான் அவர் The Story of My Assassins என்ற நாவலாக எழுதினார்.  உண்மைக் கதை.  இந்த பாதாள் லோக் தொலைக்காட்சித் தொடரின் கதை இதுதான்.  ஒரே ஒரு மாற்றம், நாவலில் கதைசொல்லி பத்திரிகையாளர்.  தொலைத்தொடரில் கதை போலீஸ்காரரை வைத்து நகர்கிறது.  பத்திரிகையாளர் ஒரு கெட்ட ஆளாக சித்தரிக்கப்படுகிறார்.  தருண் மீது பெண் பற்றிய குற்றச்சாட்டு வந்து விட்டதல்லவா, கெட்டவராகத்தானே இருக்க வேண்டும்? 

இப்படி ஒரு விவஸ்தை கெட்ட, நேர்மையற்ற செயலை என் வாழ்நாளில் அறிந்ததில்லை.  பொலான்ஸ்கியின் மீது குற்றச்சாட்டு இருந்தது என்பதால் அவர் படங்களில் அவர் பெயரை மையிட்டு அழித்தார்களா?  தருணிடமிருந்து நாவலை வாங்கிக் கொண்டு அவர் பெயரைப் போடாமல் மறைப்பது எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம்?  எல்லா பத்திரிகைகளிலும் இது கதைத் திருட்டு என்றே விமர்சிக்கப்படுகிறது.  பெயர் போடாவிட்டால் அப்படித்தானே சொல்வார்கள்?  அமேஸானுக்கோ இதன் இயக்குனருக்கோ கொஞ்சம் கூடவா வெட்கம் இல்லை?  இவ்வளவு விமர்சனங்கள் வந்த பிறகுமா வெளியே வந்து தருண் தேஜ்பால் பெயரைப் போடாததற்குக் காரணத்தைச் சொல்லக் கூடாது?

மற்றபடி நான் இந்திய வெப்சீரீஸை அவ்வளவாகப் பார்ப்பதில்லை.  இந்திய porn industry மாதிரியே வெப்சீரீஸும் மிக மிக மோசமான நிலையில்தான் இருக்கின்றன.  பல புகழ்பெற்ற இந்தியத் தொடர்களை என்னால் ஒரு எபிசோடுக்கு மேல் நகர்த்த முடியவில்லை.  அதற்கெல்லாம் விதிவிலக்காக இருக்கிறது பாதாள் லோக்.  பிரமாதமான தொடர்.  இந்தியாவின் எதார்த்தத்தை பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறார்கள்.  எல்லாம் தருணின் நாவலில் இருக்கிறது.  அவருடைய பெயரைத்தான் போடவில்லை.  ஆனால் தொடரில் நாவலுக்கு பங்கம் செய்யவில்லை என்பதைப் பாராட்டலாம்.  இந்தியத் தொடர்களிலேயே இதைத்தான் முதல் இடத்தில் வைப்பேன்.  இழுஇழு என்று இழுக்காமல் ஒரு விறுவிறுப்பான சினிமாவைப் போல் ஒன்பதே எபிசோடுகளில் முடித்து விட்டார்கள். 

பின்னோக்கிப் பார்த்தால்தான் தருண் தேஜ்பால் இந்தியப் பத்திரிகைத் துறைக்கு எவ்வளவு பெரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார் என்று தெரியும்.  ஜூன் 2000-இல் தொடங்கப்பட்ட தெஹல்கா இணைய இதழ் ஒரே வாரத்தில் மூன்று கோடி ஹிட்ஸை எட்டியது.   அதே சமயம் தருண் தேஜ்பால் பிஜேபி அரசினால் பழி வாங்கப்பட்ட கதைகள் பல பக்கங்களை எடுத்துக் கொள்ளும்.  அதில் ஆகக் கொடுமையானது இப்போதைய பெண்பழி. 

நான் எக்ஸைல் நாவலில் எழுதியிருக்கிறேன்.  இந்தியாவில் ஒரு எழுத்தாளனைப் பழி வாங்க வேண்டுமென்றால், சிறையில் அடைக்க மாட்டார்கள்.  நாடு கடத்த மாட்டார்கள்.  பெண்ணை பலவந்தம் செய்தான் என்று சொல்லி மானபங்கம் செய்வார்கள்.  அதோடு முடிந்தது அந்த எழுத்தாளனின் கதை.  தருண் சம்பவத்துக்கு ரொம்ப காலத்துக்கு முன்பே இதை நான் எழுதி விட்டேன். 

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai