நேற்றுதான் விகடனில் என்னுடைய சிறிய பேட்டி ஒன்று வெளிவந்திருந்தது. அதுவே விகடனில் வெளிவரும் என் கடைசிப் பேட்டி. இனிமேல் விகடனில் எதுவும் எழுத மாட்டேன் என்று நான் எழுதினால் அதில் ஒரு கருத்துப் பிழை இருக்கும். துணுக்கு மாதிரிதான் ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒருமுறை அதில் என்னை அணுகுவார்கள். விகடன் தடத்தில் ஒரு நீண்ட பேட்டி வந்தது. அந்த மாதிரி பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். இனிமேல் அப்படிப்பட்ட விபரீதங்கள் நடக்காது. விகடனை நான் இனி முழுமையாகப் புறக்கணிப்பேன்.
என் நண்பர்களும் விகடன் வாங்குவதையோ விகடனைத் திட்டுவதையோ முழுமையாக நிறுத்தி விடுங்கள். விகடனைப் புறக்கணியுங்கள். ஏற்கனவே சினிமா பத்திரிகையான விகடன் இனிமேல் முழுமையாக சினிமாக்காரர்களை வைத்து பத்திரிகை நடத்தட்டும்.
விரைவில் விகடன் முழுமையாக டிவி சீரியல் நடத்தியே சமூகப்பணி ஆற்றும் என்று எதிர்பார்க்கிறேன்.
160க்கும் மேற்பட்ட தன் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி இருக்கிறது விகடன். விகடனை எழுத்தாளர்கள் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.