கோபி கிருஷ்ணனின் உலகுக்குள் நுழைந்து விட்டேன். இனி பத்து நாட்கள் நான் கோபியாகவே இருப்பேன். அதற்கு இடையில் என் உயிர் நண்பனின் ஒரு நாவலை எடிட் பண்ணிக் கொண்டிருப்பதாக அவ்வப்போது சொன்னேன் அல்லவா, அந்தப் பணியில் கடந்த ஐந்து மாதமாக ராப்பகலாக உழைத்தேன். மூன்று தினங்களுக்கு முன் முடித்தும் விட்டேன். பதிப்பகத்திடம் கொடுக்கும் நிலையில் இன்னும் நிறைய வேலை இருப்பதாகத் தெரிந்து, இப்போது காயத்ரியும் நானும் ஸூம் மூலமாக தினம் ஐந்து மணி நேரம் அந்தப் பணியைச் செய்யலாம் என்று நேற்றே ஆரம்பித்து விட்டோம். அலுவலகத்துக்குத்தான் வரச் சொன்னாள். ஆனால் என் வீட்டில் அனுமதி கிடைக்காது என்பதால் ஸூம் வழி காட்டியது. பணியின்போது சமயங்களில் அவந்திகாவும் கலந்து கொண்டு சிக்கலைத் தீர்ப்பாள். எப்படியும் ஒரு மாத காலம் தினமும் ஐந்து மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். நேற்று மூன்று மணி நேரம் செய்து 15 பக்கம் முடித்தோம். மொத்தம் 700 பக்கம் என்பதால் இன்றிலிருந்து ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் அமரலாம் என்று நினைத்திருக்கிறேன். என்னுடைய நாவல் வேலை ஒரு மணி நேரம் தள்ளிப் போகிறது. ஏற்கனவே இந்தப் பணியில் 200 மணி நேரம் செலவு. இப்போது ஆளுக்கு 150 மணி நேரம். ஆக, எங்கள் இரண்டு பேருக்கும் சேர்த்தால் 300 மணி நேரம். பத்து ஆண்டுகளில் ரொம்பவே மாறி விட்டேன். முன்பாக இருந்தால் எல்லாவற்றையும் சொல்வேன். இப்போது வேலை முடிந்த பிறகுதான் விஷயம் வெளியாகும். ஆனால் இதெல்லாம் கோபி கிருஷ்ணனை பாதிக்காது. அதற்காக காலை நான்கு மணிக்கே எழுந்து விடுகிறேன். ஸூம் சந்திப்பு பதினோரு மணிக்கு மேல்தானே ஆரம்பிக்கும். உண்மையில் எழுத்தாளர்களுக்கு உகந்த நேரம் காலை நான்கிலிருந்து பத்து வரைதான். ஆறு மணி நேரம் கச்சிதமாகக் கிடைக்கும். 24 மணி நேரத்தில் எழுதுவதற்கு எனக்கு உகந்த நேரம் என்றால் அதுதான். ஆனால் இந்தியப் பெண்களால் அது முடியாது. காரணம், உங்களுக்கே தெரியும். நம்முடைய ஸூம் சந்திப்பு கூட முன்னிரவு எட்டு என்பதால் இனிமேல் பெண்கள் கலந்து கொள்வது லகுவாக இருக்கும்.
ஸூம் சந்திப்பு நேரத்தைத் தீர்மானிப்பதில் அமெரிக்க வாசகர்களுக்கே முன்னுரிமை கொடுத்தேன். அவர்கள் இந்தியாவிலிருந்து நெடுந்தூரத்தில் இருக்கிறார்கள். வீட்டு விசேஷங்களுக்குக் கூட உடனே வர முடியாத நிலை. இந்தக் கொரோனா காலகட்டத்தில் பார்த்தோம். இந்தியாவை விட பணப்புழக்கமும் வசதி வாய்ப்பும் வாழ்க்கைத் தரமும் அங்கே பல மடங்கு அதிகம் என்றாலும் பிறந்த இடத்தை விட்டு வாழ்வதன் கொடுமை அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும்.
ஆல்டஸ் ஹக்ஸ்லி தன் ப்ரேவ் நியூ வேர்ல்ட் நாவலில் இரண்டே வழிகள்தான் இருப்பதாகக் கூறுகிறார். ஒன்று, Ford. இரண்டு, ஆதி இந்திய கிராமம். தமிழ் பிராமணர்கள் ஃபோர்டைத் தேர்ந்தெடுத்தார்கள். அது பற்றி எனக்கு எந்த விமர்சனமும் இல்லை. எனக்கும் வாய்ப்பு இருந்திருந்தால் நானுமே ஃபோர்டைத்தான் தேர்ந்தெடுத்திருப்பேன். ஆனாலும் இந்திய கிராமம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. Primitive Indian village என்கிறார் ஹக்ஸ்லி. நான் முழுக்க முழுக்க நகரவாசி. நகரங்களில் ஃபோர்டுக்கு ஆசைப்பட்டு அது கிடைக்காத மனிதர்கள் பாதி பிச்சைக்காரர்களாகவும் பாதி கிரிமினல்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே நான் ஒரு இந்திய கிராமவாசியை என் வாழ்க்கையினூடாகச் சந்தித்ததில்லை. ஒரு பயணியாக கிராமங்களில் செல்லும்போது பார்த்திருக்கிறேன். அனுபவம் கொண்டதில்லை. வெற்றிலைப் பாக்குக்குக் காசு வாங்க மாட்டேன், நீங்கள் வியாசனின் வாரிசு என்று சொல்லிப் பணம் வாங்க மறுத்த கிராமத்துச் சிறுவன் பற்றி எழுதியிருக்கிறேன். நான் சொல்வது, என் வாழ்வினூடாகச் சந்தித்ததில்லை. ஒரு உதாரணம் சொல்கிறேன்.
பெயர் மறந்து விட்டது. முகநூலில் படித்தேன். ஒருவர் தொடர்ந்து ஒருவரிடமே மீன் வாங்குகிறார். மீன்காரர் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்கிறார். சைக்கிளில். ஊர் நாகர்கோவிலோ தூத்துக்குடியோ. அதுவும் மறந்து விட்டது. ஒருமுறை பணமுடை என்று மீன்காரர் தன் வாடிக்கையாளரிடம் ஒரு ஆயிரம் ரூபாய் கடன் வாங்குகிறார். பிறகு பணம் வந்ததும் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்போது வாடிக்கையாளர் (கதைசொல்லி) பணம் வேண்டாம், நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடுகிறார். அவரும் வற்புறுத்திப் பார்த்து விட்டு விட்டு விடுகிறார். ஒருநாள் கடலில் வஞ்சிரம் கிடைக்கிறது. கொண்டு வந்து கொடுக்கிறார். பொதுவாக கிலோ 800 ரூ. (சென்னையில் 1500 ரூ) அன்றைய தினம் எக்கச்சக்கமாக வஞ்சிரம் கிடைத்து விட்டதால் நானூறு ரூபாய் கிலோ. மதியத்துக்கு மேல் கதைசொல்லி தன் மைத்துனரிடம் பேசுகிறார். மைத்துனரும் இதே சைக்கிள்காரரிடம்தான் மீன் வாங்குவார். அவரும் அன்றைய தினம் வஞ்சிரம். கதைசொல்லி அவரிடம் எதேச்சையாக எவ்ளோ விலை என்று கேட்க, அதே விலைதான், 800 ரூ. என்கிறார் மைத்துனர்.
கதை புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்த இடத்தில் உங்களுக்கு சார்வாகனின் முடிவற்ற பாதையில் வரும் தபால்காரர் ஞாபகம் வர வேண்டும். நான் இப்படிப்பட்ட மீன்காரர்களை என் வாழ்வில் சந்தித்ததில்லை. ஆனால் மேட்டுக்குடியில் இப்படிப்பட்ட மனிதர்களை சந்தித்திருக்கிறேன். நேற்றுதான் ஒரு இனக்குழுவைச் சார்ந்த மனிதர்களிடம்தான் ஆணவத்தையும் திமிரையும் பார்க்கிறேன் என்று எழுதியிருந்தேன் அல்லவா, நான் பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கும் மகாத்மா போன்ற மனிதர்கள் மேட்டுக்குடி மட்டும் அல்ல; பிராமணராகவும் இருக்கிறார்கள். எஸ்.ரா. என்று நான் பிரியமுடன் அழைக்கும் எஸ். ராமசுப்ரமணியன் அப்படிப்பட்டவர்களில் ஒருவர். பிறந்த நாள் பரிசு என்று எனக்குத் துருக்கிக்கு டிக்கட் வாங்கிக் கொடுத்தவர். சும்மா டிக்கட் அல்ல. தன் மூத்த மகனின் கல்லூரி அட்மிஷனுக்காக வைத்திருந்த பணம். இன்னொருத்தர், ராம்ஜி. நாணயம் என்பதன் மறு பெயர் ராம்ஜி. உங்கள் பொன்னையும் பொருளையும் ஏன் பெண்ணையும் நம்பிக் கொடுக்கலாம். காயத்ரி மற்றொரு மகாத்மா. அவந்திகா சூப்பர் வுமன். ஒருநாள் நடந்ததைக் கேளுங்கள். கீழ்த்தளத்தில் பவுல் என்று ஒரு வாட்ச்மேன். தொலைதூரத்திலிருந்து வருவதால் தினமும் அவருக்கு இரவு உணவு எங்கள் வீட்டிலிருந்துதான். மாலையில் தேநீரும் உண்டு. கீழே உள்ள பத்து பூனைகளில் இரண்டு பூனைகள் மட்டும் காலை ஒன்பது மணியிலிருந்து எங்கள் வீட்டு பால்கனிக்கு நேர் கீழே நின்று மேலே பார்த்துப் பார்த்து பசியில் கத்தும். கத்தல் பிறகு கதறலாக மாறும். என்னால் எழுத முடியாது. பாவமாக இருக்கும். கீழே போகலாம் என்றால் கால் மணி நேரம் போய் விடும். அவை சாப்பிட்டு முடிக்கும் வரை பக்கத்திலேயே நிற்க வேண்டும். நான் பால்கனியில் நின்று பவுல் பவுல் என்று தொண்டை தண்ணி வற்றக் கத்தினாலும் ஒரு சத்தம் கேட்காது. பிறகு நானே பத்து மணிக்குக் கீழே இறங்கிப் போய் கால் மணி நேரம் செலவு செய்து பூனைகளுக்குச் சாப்பாடு கொடுத்து விட்டு வருவேன். பவுலிடம் எப்போதுமே ஒரு கிலோ பூனை உணவு கொடுத்து வைத்திருக்கிறோம். பூனைகளுக்கு எதிரேதான் அவர் நாற்காலியில் அமர்ந்து மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டிருப்பார். அல்லது, யாரிடமாவது அரட்டை அடித்துக் கொண்டிருப்பார். ஒருநாள் அவரிடம் நான் நீங்களே பூனைக்கு சாப்பாடு கொடுத்திருந்தால் நான் கீழே வர வேண்டியிருந்திருக்காது என்றேன். ஹிஹி குடுக்கலாம்னுதான் சார் இருந்தேன் என்று இளித்தார். மறுநாளும் அப்படியே ஆனது. அன்றைய தினம் அரிசி வைக்கும்போது ஒரு ஆழாக்குதான் வைத்தேன். நான் தான் 365 நாளும் குக்கரில் சோறு வைப்பது. காய் நறுக்குவது. வெங்காயம், பூண்டு உரிப்பது. கீரை ஆய்வது. இத்யாதி. இத்யாதி எல்லாம். 365 நாளும். அன்றைய தினம் இரவு அவருக்கு சாப்பாடு கொடுக்க வந்து பார்த்தாள் அவந்திகா. சாப்பாடு இல்லை. இனிமேல் பூனைக்கு சாப்பாடு கொடுக்க நான் கீழே இறங்கிப் போக வேண்டுமாக இருந்தால் பவுலுக்கும் சேர்த்து நான் அரிசி வைக்க மாட்டேன் என்றேன். வீட்டுக்கு எதிரே தான் அம்மா உணவகம் இரண்டு மூன்று மெஸ் எல்லாம் இருக்கின்றன. மகாத்மா என்ன செய்தது தெரியுமா? ஐம்பது ரூபாய் பணத்தை எடுத்து பவுலிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னது. மகாத்மாக்களோடு வாழ்வது ரொம்பக் கஷ்டம். மறுநாளிலிருந்து நான் இரண்டு ஆழாக்கு அரிசி வைக்க ஆரம்பித்தேன். எங்கள் வீட்டிலிருந்து சாப்பிடாத மற்ற வாட்ச்மேன்கள் இப்படிச் செய்வதில்லை; பூனைகளுக்கு சாப்பாடு வைத்து விடுவார்கள். பவுல் மட்டும்தான் இப்படி. எங்கள் சாப்பாட்டு ராசி அப்படி. அவந்திகாவைப் போன்ற ஒரு சூப்பர்மேன் தான் ஸ்ரீராமும். துரதிர்ஷ்டவசமாக அவரும் டாக்டர். மேட்டுக்குடி. யாருமே விளிம்புநிலை இல்லை. சைக்கிள் இல்லை.
ஆக, என் வாழ்வில் ஹக்ஸ்லி சொல்லும் primitive Indian villager-ஐ நான் சந்தித்ததே இல்லை. ஆனால் மேட்டுக்குடியிலிருந்து வந்த மகாத்மாக்களைப் பார்த்திருக்கிறேன். இன்னும் பல மகாத்மாக்கள் உண்டு. சொன்னால் அடிக்க வருவார்கள். அடிக்க வராதவர்களாகப் பார்த்து பெயரைச் சொல்லியிருக்கிறேன். இந்த மகாத்மா லிஸ்டில் சீனியும் உண்டு. (இப்படி நான் பெயர் குறிப்பிடும் போதெல்லாம் சில பிரச்சினைகள் நேர்கின்றன. ஏன் என் பெயரைப் போட்டீர்கள்? ஏன் என் பெயரைப் போடவில்லை? ஏன் எக்ஸ் பெயரோடு என் பெயரைச் சேர்த்தீர்கள்? அவரும் நானும் ஒன்றா? இப்படிப்பட்ட பஞ்சாயத்து இனிமேற்கொண்டு என் பக்கம் வந்தால் நான் ஒரு வருட காலம் உங்களோடு பேச மாட்டேன். இது போன்ற வெட்டிப் பஞ்சாயத்துகளை என்னிடம் கொண்டு வராதீர்கள். உங்களுக்குத் தெரியும் சீனி வேறு. எனக்குத் தெரிந்த சீனி வேறு.)
திரும்பத் திரும்ப Viridiana படம்தான் என் வாழ்வில் நடக்கிறது. தூத்துக்குடி மீன்காரரையும் முடிவற்ற பாதை தபால்காரரையும் சென்னை போன்ற நகரங்களில் காண முடியவில்லை. இந்த நிலையில் அமெரிக்க நகரங்களை நோக்கிச் சென்று விட்ட வாசகர்களுக்கு நான் முன்னுரிமை கொடுக்கக் காரணம், அங்கே உடனடியாக தமிழ் நூல்கள் கிடைக்காது என்பதுதான். அதனால்தான் நேரத்தை மாலையில் மாற்றியிருக்கிறேன். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Here is the meeting invitation details for Aug 29th.
Satheesh waran is inviting you to a scheduled Zoom meeting.
Topic: Session with Charu – Gopi Krishnan
Time: Aug 29, 2020 08:00 PM India
Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/5482651592?pwd=VWNqRGx1VjZ3aTZmSnlKNnA4TWlnUT09
Meeting ID: 548 265 1592
Passcode: G74SYe
One tap mobile
+13126266799,,5482651592#,,,,,,0#,,568489# US (Chicago)
+16468769923,,5482651592#,,,,,,0#,,568489# US (New York)
Dial by your location
+1 312 626 6799 US (Chicago)
+1 646 876 9923 US (New York)
+1 301 715 8592 US (Germantown)
+1 253 215 8782 US (Tacoma)
+1 346 248 7799 US (Houston)
+1 408 638 0968 US (San Jose)
+1 669 900 6833 US (San Jose)
Meeting ID: 548 265 1592
Passcode: 568489
Find your local number: https://us04web.zoom.us/u/fbClfmbAUq
***
மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai