(இந்தப் பதிவு முப்பது வயதுக்குக் குறைவானவர்களுக்கு மட்டுமே. பெரியவர்கள் இதைப் படிக்க வேண்டாம். படித்தால் தொடர்பு படுத்திக் கொள்ள முடியாது.)
Toy Boy என்று ஒரு வெப்சீரீஸ். வெப்சீரீஸ் பற்றி எழுதுவதில்லை என்று உறுதி எடுத்திருப்பதால் டாய் பாய் பற்றி எழுதவில்லை. இல்லாவிட்டால் ஒரு ஐம்பது பக்கம் எழுதும் அளவுக்கு விஷயம் உள்ள சீரீஸ் அது. இதன் கதை Male Strippers-ஐ சுற்றி வருவதால் இரண்டு விஷயங்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆண் நடிகர்கள் பெண்களின் நைட் க்ளப்பில் நடனம் ஆடுபவர்களாக இருக்கிறார்கள். தொடரில் அவர்களின் நடனம் உலகத் தரத்தைத் தொடுகிறது. இதுதான் தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களுக்கும் மேற்கத்தியத் தொடர்களுக்கும் உள்ள வித்தியாசம். இதற்காக இந்த நடிகர்கள் கடும் பயிற்சியை மேற்கொண்டிருக்கலாம். அல்லது, அப்படிப்பட்ட நடனக் கலைஞர்களையே நடிக்க வைத்திருக்கலாம். இன்னொரு விஷயம், இசை. பாடல்களும் உலகத் தரம். ஸ்பானிஷ் கற்றுக் கொள்பவர்களுக்கு இந்த சீரீஸை நான் சிபாரிசு செய்வேன். அதேபோல், லா ரெய்னா தெல் சூர் தொடரைப் பார்த்தும் ஸ்பானிஷைத் தெரிந்து கொள்ளலாம். லா ரெய்னா நாயகி மெக்ஸிகோவைச் சேர்ந்தவள், அவள் ஸ்பெய்னுக்கு வருகிறாள் என்பதால் மெக்ஸிகோவின் ஸ்பானிஷை ஸ்பெய்ன்காரர்கள் கிண்டல் செய்வதையெல்லாம் நாம் வெகுவாக ரசிக்க முடிகிறது. கீழே உள்ள படத்தில் இருப்பவர் ஹேசூஸ் மோஸ்கேரா (Jesus Mosquera). இடது பக்கம் நிற்கும் பேரழகியின் பெயர் மரீயா பெத்ராஸா.
டாய் பாயில் இடம்பெறும் பதினாறு பாடல்களையும் பாடல்களாக மட்டுமே கேட்க வேண்டுமானால் இந்த இணைப்பில் கேளுங்கள். இந்தப் பாடல்களுக்காகவே இந்தத் தொடரை மீண்டும் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் எனக்கு இப்போது இருக்கும் நேர நெருக்கடியில் அது பற்றி யோசிப்பது கூடத் தப்பு.
https://www.youtube.com/watch?v=4E7akIu9zEM – Set You Free
https://www.youtube.com/watch?v=4G-f4t6sbAw – Your Game
https://www.youtube.com/watch?v=AnzG36PE-A4 – Going Harder
https://www.youtube.com/watch?v=CZw5mBM4PMU – Stuck in the Sound’
https://www.youtube.com/watch?v=w1L07DONBV4 – We Are The Party People
https://www.youtube.com/watch?v=X0dztYQdzGg – Someone Like You
https://www.youtube.com/watch?v=H_wRBCZM4Q4 – Da Bakkwo
https://www.youtube.com/watch?v=Bf3tz-Ww1P8 – Burning Up
https://www.youtube.com/watch?v=03B2xRM_PZg&list=PLwJ1D5KRSzdcaNjw_sOTx3Ge3keuvaRc0&index=20 – Puedes Ver Pero No Tocar
https://www.youtube.com/watch?v=CAARSdunwKY – A Fuego
https://www.youtube.com/watch?v=z5-Ho_ZeiRc (Jungle)
https://www.youtube.com/watch?v=Pg9_OEaezVs (Tiempo)
https://www.youtube.com/watch?v=9W0bfZykG1g (A Beautiful Life)
மீதி மூன்று பாடல்கள் கிடைக்கவில்லை. மேலும், இந்தப் பாடல்களெல்லாம் அந்த டாய் பாய் சீரீஸில் வந்துள்ள காணொலிகள் கிடைத்தால் நலம். யாரேனும் இளைஞர்கள் அதைத் தேடி எடுத்து அனுப்ப முடிந்தால் மகிழ்வேன்.
நீண்ட நேரம் நானே தேடி ஒரு காணொலியைக் கண்டெடுத்தேன். படு ரகளையாக இருக்கும்.
பாடல்: No me importa
ஆண் உடம்பை நுகர்பொருளாக்கும் நூற்றுக்கணக்கான பாலியல் காணொலிகளைப் பார்த்திருக்கிறேன். அதேபோல் Male Strippers இடம் பெறும் நைட் கிளப்புகளையும் காணொலிகளிலும் நேரிலும் கண்டிருக்கிறேன். ஆனால் இந்தத் தொடரைப் போன்ற நேர்த்தியை வேறு எதிலுமே பார்த்ததில்லை. கீழ்க் காணும் காணொலிகளில் இரண்டு காட்சிகளும் நடனங்களும் இடம் பெறுகின்றன. முழுசாக இல்லை. கொஞ்சம் கொஞ்சம். முதலில் ரஸ்புடின் பாடல். ஒரு லேடீஸ் கிளப்பில் நான்கு பேர் கொண்ட போலீஸ் குழு உள்ளே நுழைகிறது. ஸ்பெயினில் இது போன்ற லேடீஸ் கிளப்புகள் பிரபலம் போல் தெரிகிறது. சட்டரீதியானவைதான். ஆனாலும் அதில் கொஞ்சம் கட்டுப்பாடுகள் உள்ளன போலும். எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல, போலீஸுக்குக் கையூட்டு கொடுத்து நடப்பது போல் இருக்கிறது. இது போன்ற லேடீஸ் கிளப்புக்கும் லெஸ்பியன் கிளப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் லெஸ்பியன் கிளப்புக்கு எழுத்தாளர் என்ற ஹோதாவில் ஒரு பெண் நண்பருடன் சென்றிருக்கிறேன். ஆனால் லேடீஸ் கிளப்புக்குப் போனதில்லை. இது லெஸ்பியன் கிளப் இல்லை. லெஸ்பியன் கிளப் போலவே இங்கேயும் ஆண்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் நடனக்காரர்கள் அத்தனை பேரும் ஆண்கள். ஒன்றுமில்லை. நம் இந்திய டான்ஸ் பார்களில் பெண்கள் அவிழ்த்துப் போட்டு ஆடுவதை ஆண்கள் குடித்துக் கொண்டே பார்ப்பார்கள் இல்லையா, அதேபோல் அங்கே ஆண்கள் ஆடுவதை பெண்கள் ரசித்துப் பார்க்கிறார்கள். பெண் சுதந்திரம். இது தொலைக்காட்சித் தொடர் என்பதால் இதில் வரும் நடனக்காரர்கள் உடை அணிந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பொதுவாக இது போன்ற male strippers ஆடை அணிவதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நேரில் பார்த்தால்தான் தெரியும். தெரிந்தவர்கள் என்னை enlighten பண்ணலாம். வரவேற்கிறேன். அந்த பெண்கள் பார்ட்டியில் நுழைந்த போலீஸ் பட்டாளம் உண்மையில் போலீஸ் இல்லை. பிரபலமான male strippers. அப்புறம் அதகளம்தான். அதுதான் பின்வரும் காணொலி. ரஸ்புடின் பாடல். அதைத் தொடர்ந்தும் சில காணொலிகள் வருகின்றன. கண்டு களியுங்கள்.
மிக மிக மிக அவசரமாக வேலை செய்து கொண்டிருந்த போது என் நண்பன் ஒருத்தனின் உடம்பை முகநூலில் பார்த்தேன். அவனைப் போன்ற உடல் கட்டு கொண்ட ஆணை நான் தமிழ்நாட்டில் கண்டதில்லை. அச்சு அசலாக ஸ்பானிஷ் உடம்பு. பெயரும் ஸ்பானிஷ் பெயர். நம் நாரோயில்காரன் தான். எங்கேயோ இருக்க வேண்டியவன். இங்கே 200 பேருக்கு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறான்.
பெயர் லான்ஸா தெல் வாஸ்த்தோ Lanza del Vasto
தக்காளி, எனக்கு வைத்திருக்க வேண்டிய பெயரை இவன் வைத்துக் கொண்டிருக்கிறான். எனக்கு என் நைனா வைத்த பெயர் அறிவழகன்.
இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாருக்குப் பிறகு அடுத்த பன்மொழிப் புலவரான காயத்ரி ஃப்ரெஞ்ச், ஆங்கிலம், ரஷ்யன், ஆங்கிலம் அஃப்கோர்ஸ் இருக்கவே இருக்கிறது, எல்லாவற்றையும் முடித்து விட்டு இப்போது ஸ்பானிஷில் சேர்ந்திருக்கிறாள். அவள் வகுப்பில் உள்ள இளவட்டப் பசங்கள் எல்லாம் ஏன் ஸ்பானிஷ் படிக்கின்றனர் என்றால், வெப் சீரீஸ் பார்க்கும்போது ஸ்பானிஷ் தெரிந்தால் நன்றாக இருக்கும் என்பதால் ஸ்பானிஷ் கற்றுக் கொள்வதாகச் சொன்னார்களாம். அது நூற்றுக்கு நூறு உண்மை. இன்று ஸ்பானிஷ் சீரீஸ்தான் உலக அளவில் முன்னணியில் நிற்கின்றன. அதிலும் மெக்ஸிகன் சீரீஸ். லா ரெய்னா தெல் சூர் எல்லாம் மொத்தம் நூறு எபிசோடுகள். அத்தனையும் பார்த்து எனக்கு அப்படி இப்படி ஸ்பானிஷ் புரியவே ஆரம்பித்து விட்டது. டாய் பாய் பதிமூணே எபிசோட் தான். பிரமாதமாகக் கற்றுக் கொள்ளலாம். ஸ்பானிஷ்.