சீனி என்ற அராத்துவிடம் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் – அல்லது பதினைந்து ஆண்டுகளும் இருக்கலாம், சரியாக ஞாபகம் இல்லை – எழுதித் தருகிறேன், நீங்கள் ஒரு காலத்திலும் எழுத்தாளன் ஆக முடியாது என்று சொன்னேன். காரணம், அந்தக் காலத்தில் நான் கையால் எழுதிக் கொண்டிருந்தேன். அல்லது, கணினிக்கு மாறியிருந்த காலம். எழுதுவது என்பது கடும் உடல் உழைப்பைக் கோருகின்ற ஒரு விஷயம். சீனியும் கடுமையாக வேலை செய்வார். பதினைந்து மணி நேரம் கண் துஞ்சாமல், கொஞ்சம் கூட அலுப்புத் தட்டாமல் பிரமாதமாக கார் ஓட்டுவார், சரசரவென்று மலை ஏறுவார், மணிக்கணக்கில் நீச்சல் அடிப்பார். இன்னும் சிலது இருக்கிறது. வெளியே சொல்ல எனக்கு அனுமதி இல்லை. ஆனால் பதினைந்து மணி நேரம் வேண்டாம், ஐந்து மணி நேரம் இடைவெளி இன்றி காகிதத்தில் எழுத முடியுமா? சரி, காகிதத்தில் வேண்டாம், கணினியில் தட்ட முடியுமா? முடியவே முடியாது என்பது என் கணிப்பு. ஆனால், அவரிடம் எழுதுவதற்கான எல்லா கதைகளும் இருந்தன. அதனால்தான் நீங்கள் இந்த ஜென்மத்தில் எழுத்தாளராக முடியாது என்றேன். அவரும் ஒன்றும் எழுத்தாளன் ஆகியே தீருவது என்று இருக்கவில்லை. என்னைப் பார்த்த பிறகு எவனாவது எழுத்தாளன் ஆகலாம் என்று நினைப்பானா? இருந்தாலும் எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற அவாவோ தூண்டுதலோ உந்துதலோ சிறிதும் இல்லாதவர் எப்படி எழுத்தாளர் ஆனார்? சொல்வதற்கு அவரிடம் நிறைய கதைகள் இருந்தன. இன்னொரு விஷயம். அவர் சினிமாவுக்கும் தோதான ஆள். ஒரு சிச்சுவேஷனைச் சொல்லி வசனம் கேட்டால் இருபது நிமிடத்தில் டிக்டேட் செய்வார். அப்படி அவர் கௌதம் மேனனுக்குச் சொன்னபோது நான் பக்கத்தில் இருந்தேன். அந்தச் சமயத்தில் அவர் பிரபலமான எழுத்தாளர் ஆகியிருந்தார். ஆனால் அவர் எப்படி எழுத்தாளர் ஆனார் என்பது நவீனத் தொழில்நுட்பத்தில் நடந்த ஒரு புரட்சியால்தான் நிகழ்ந்தது. அது MacAir.
MacAir என்ற சாதனத்தை வாங்கியதும் உடனடியாக என் கணிப்பை முறியடித்து விட்டார். வாங்கிய வேகத்தில் தற்கொலைக் குறுங்கதைகள் என்று ஒரு புத்தகமே தயார். அதோடு நிற்கவில்லை. மேலும் மேலும் புத்தகங்கள். போகிற வேகத்தைப் பார்த்தால் ஜெயமோகனோடு போட்டி போடுவீர்கள் போலிருக்கிறதே என்று கிண்டல் செய்யும் அளவுக்கு ஆகி விட்டது. காரணம், எழுத்துக்கு அடிப்படைத் தேவையாக இருந்த உடல் உழைப்பை MacAir என்ற சாதனம் தேவையில்லாமல் ஆக்கி விட்டது. என்னிடம் இந்த மேக் ஏர் இருந்திருந்தால் கடந்த பத்தாண்டுகளில் இதுபோல் இன்னும் இரண்டு மடங்கு எழுதியிருப்பேன் என்பதை இப்போது தாமதமாக உணர்கிறேன். அதனால்தான் அவசர கதியில் அதை வாங்க முற்படுகிறேன்.
ஆச்சரியகரமாக என்னுடைய பத்து நெருங்கிய நண்பர்களுமே அதற்கு எதிர்க்கருத்துதான் சொன்னார்கள். சொல்லி வைத்தது போல் பத்து பேரும். சீனி விடவில்லை. ஒரேயடியாக நின்றார். மேக் ஏர்தான் நீங்கள் வாங்க வேண்டும். சீனி சொல்வதைத்தான் நான் கண்ணை மூடிக் கொண்டு கேட்பேன். ஏனென்றால், அவர் பேச்சைக் கேட்டதால் மட்டுமே நான் சென்ற ஆண்டு சீலே சென்று வந்தேன். இல்லாவிட்டால் இந்தக் கொரோனாவுக்குப் பிறகு சீலே செல்லும் கனவு வெற்றுக் கனவாகவே போயிருக்கும். மனரீதியாக பெரிதும் உடைந்திருப்பேன். இது ஒரு உதாரணம். இப்படி எக்கச்சக்கமான உதாரணங்கள் தரலாம். என் நண்பர்கள் யாரிடமும் street smartness போதாது. முக்கால்வாசிப் பேர் மகாத்மாக்கள். நேற்று ஒரு மகாத்மா பற்றி எழுத மறந்து போனேன். அவரே ஆஜராகி விட்டார். மதுரை அருணாசலம். நேற்று வாட்ச்மேன் பவுல் பற்றி எழுதியிருந்தேன் அல்லவா? அவருக்குத்தான் பிரியாணி வாங்கிக் கொண்டு போகலாமா என்று கேட்டார் அருணாசலம். அவரை நான் முதல்முதலாக, கடைசியாகவும் திட்டினேன். எப்படித் தெரியுமா? நீங்கள் மகாத்மா. அந்த இடத்தில் மகாத்மா – திட்டு. சீனி மட்டுமே street smart guy. மேலும், அவரோடு வெளியூர் போகும் சமயங்களில் அவருடைய மேக் ஏர் மடிக் கணினியில் நான் வேலை செய்திருக்கிறேன். மேலும்,
2001-இல் என் அலுவலகத்தில் கணினி நுழைந்தபோது பயந்து போய் வேலையை விட்டேன். நான் வேலையை விட்டதற்குப் பல காரணங்களில் ஒன்று கணினி. அலுவலகத்தில் திரிந்து கொண்டிருந்த முழுமூட ஜென்மங்கள் எல்லாம் கணினியில் அதகளம் செய்து கொண்டிருந்த போது ரெமிங்டனில் தட்டிக் கொண்டிருந்த எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் ஆயிற்று. வேலையை விட்டு விட்டு ரொம்ப நாள் காகிதத்தில்தான் எழுதிக் கொண்டிருந்தேன். ராஸ லீலா நாவல் முழுக்க காகிதத்தில் எழுதியதுதான். பிறகு ஒருநாள் கணினி பழகியது. அதிலும் தமிழ் தட்டச்சு வரவே இல்லை. இத்தனைக்கும் நான் ஆங்கில டைப்பிஸ்ட். ஆனால் பத்ரியின் யூனிகோட் வந்ததும் அதுவும் ஒரே நாளில் பழகி விட்டது. பட்டம் என்றால் paddam என்று தட்டினால் போதும். இதற்கு ஒருநாள் ஆனது. அப்படி பழகிக் கொள்ளலாம்.
MacAir வாங்கிக் கொடுக்க மூன்று பேர் பணம் போட இசைந்துள்ளார்கள். இன்னும் மூன்று பேர் முன்வந்தால் வாங்கி விடலாம். நான் தேர்ந்தெடுத்துள்ள மாடல் 1300 டாலர் விலை உள்ளது. https://www.apple.com/shop/buy-mac/macbook-air/space-gray-1.1ghz-quad-core-core-i5-processor-with-turbo-boost-up-to-3.5ghz-512gb#
(இதில் ஐ 5 மற்றும் ஐ7 என்று இரண்டு உள்ளன. எனக்குத் தேவை ஐ 7) யாரேனும் செலவைப் பகிர்ந்து கொள்ள விரும்புவீர்களா? பத்துப் பன்னிரண்டு பேர் என்றால் ஆளுக்கு நூறு டாலரே போதும். அது என்னவோ அமெரிக்கா எத்தியோப்பியாவை விட ஏழை நாடாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை அமெரிக்காவையும் இந்தியாவையும் ஒப்பிட்டால் இந்தியா ப்ரூனே என்று சொல்வேன். தமிழ்நாட்டில் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஒருத்தர் (உண்மையில் ஏழெட்டு பேர்) மாதம் 300 ரூ. அனுப்புகிறார்கள் என்றால் இது ப்ரூனே தானே?
போகட்டும். விஷயத்துக்கு வருவோம். MacAir ஒரு உடனடித் தேவை. இன்னும் அதிகம் எழுதலாம். அமெரிக்காவிலிருந்து ஏர் இந்தியா தினமும் விமானம் விடுவதாகக் கேள்விப்பட்டேன். யாரும் நண்பர்கள் அங்கிருந்து வருகிறீர்களா? அல்லது, உங்கள் நண்பர்/உறவினர் வருகிறார்களா? உங்கள் வீட்டுக்கு வந்து சேரும் MacAirஐ இங்கே கொண்டு வந்தால் போதும். வேறு எதுவும் வேண்டாம். யாரேனும் என் நண்பர்கள் உங்களிடம் வந்து வாங்கிக் கொள்வர். பெங்களூராக இருந்தாலும் பரவாயில்லை.
***
மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai