பூச்சி 133: வணிக எழுத்தும் இலக்கியமும்

இன்னும் ஐம்பது ஆண்டுகளில் தமிழ் செத்து விடும் என்று எழுதியிருந்ததைப் படித்து பல நண்பர்கள் வருத்தப்பட்டு எழுதியிருந்தார்கள்.  அதில் ஒரு சிறிய திருத்தம்.  பாலி முற்றிலுமாக கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே அழிந்து விட்டது.  ஆனால் சம்ஸ்கிருதம் இப்போதும் அறிஞர்கள் மத்தியில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.  காரணம், பாலியில் இலக்கியம் இல்லை; சம்ஸ்கிருத இலக்கியமும் இலக்கணமும் கடல் போல் கிடக்கிறது.  இப்படியாக தமிழையும் அறிஞர்கள் காலம் உள்ளளவும் படித்துக் கொண்டிருப்பார்கள்.  இப்போதும் அதுதானே நடந்து கொண்டிருக்கிறது?  ப. சிங்காரத்தை எத்தனை பேர் படிக்கிறோம்?  அசோகமித்திரன்? ந. முத்துசாமி?  எல்லாம் ஆயிரங்கள்.  மற்றபடி தமிழ் பேசுவோர் மற்றும் எழுதுவோரின் வார்த்தை அறிவு நூறு வார்த்தைகளைத் தாண்டாது.  அதிலும் பாதி ஆங்கிலக் கலப்பு. 

இன்னொன்றும் சொல்கிறேன்.  இந்த பாஷை விஷயத்தில் நான் பெரியார் கட்சி.  தேசம், இனம், ஜாதி, மொழி போன்றவற்றில் புனிதம் எதுவும் இல்லை.  பாஷாபிமானம், குலாபிமானம், தேசாபிமானம் மூன்றுமே ஃபாஸிஸம்தான்.  உலக மொழிகளிலே தமிழ் போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாரதி அப்போது சொன்னான் என்றால் அதற்கான தேவை அந்தக் கால கட்டத்தில் இருந்தது.  அப்போது எல்லோருமே ஆங்கிலம்தான் பேசுவார்கள்.  அதாவது, புத்திஜீவிகள், படித்தவர்கள், அரசியல்வாதிகள் எல்லோரும்.  மேடைப் பேச்சும் ஆங்கிலம்தான்.  திரு வி.க.தான் அதை உடைத்தவர்.  தமிழை மேடையிலும் பேச முடியும் என்று காண்பித்தவர்.  தமிழுக்கு மரியாதை இல்லாத அந்தக் காலத்தில் பாரதிக்கு அப்படியான தேவை இருந்தது.  ஆனால் இப்போது அப்படிப் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.  உலகிலேயே இனிமையான மொழி அரபிதான்.  அதற்குப் பிறகுதான் மற்றதெல்லாம்.  அந்த மொழியின் லிபி ஓவியத்தைப் போல் இருக்கும்.  கேட்டால் இசை போல் இருக்கும். தமிழ் சிறப்பு என்னவென்றால், அதன் இலக்கியம் மற்றும் இலக்கணம்.  இப்படி ஒவ்வொரு பழைய மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. 

தமிழின் இப்போதைய அவல நிலைக்குக் காரணங்கள் பல உண்டு.  அதில் ஒன்று, இலக்கியத்தைத் தமிழர்கள் ஒதுக்கியது.  இது மிகவும் ஒழுங்காகவும் படிப்படியாகவும் ஏதோ யாராலோ திட்டமிடப்பட்டது போல் நடந்தது.  இலக்கியம் ஒதுக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணம், வணிக எழுத்து.  புதுமைப்பித்தன் ஒதுக்கப்பட்டு கல்கி முன்னணியில் வந்தார்.  உடனே கல்கியைத் திட்டுகிறேன் என்று எடுத்துக் கொள்ளாதீர்கள்.  இதற்கெல்லாம் தனிநபர் யாரும் காரணம் இல்லை.  ஒரு சூழலே அப்படி உருவானது.  ராஜாஜிக்கு பாரதியின் அருமை தெரியவில்லை.  அதை காந்தி போன்ற வெளியாள் ஒருவர் சுட்டிக்காட்ட வேண்டியிருந்தது.  அதேபோல் கல்கிக்கு புதுமைப்பித்தனின் அருமை தெரியவில்லை.  ராஜாஜிக்கும்தான்.  இல்லாவிட்டால் புதுமைப்பித்தன் எப்படிக் கதை எழுத வேண்டும் என்று ராஜாஜி புத்திமதி சொல்வாரா?  சிறுகதைகளின் அகில இந்தியத் தொகுப்பில் புதுமைப்பித்தன் கதை இல்லை; ஆனால் ராஜாஜி கதை இருந்தது.  அங்கே ஆரம்பித்தது தமிழின் வீழ்ச்சி. 

இந்தக் காரணத்தினால்தான் வணிக எழுத்துக்கு இலக்கியவாதிகள் எதிராக இருக்கிறார்கள்.  இல்லாவிட்டால் பட்டுக்கோட்டை பிரபாகர் மீது எனக்கு என்ன பிரச்சினை?  பாவம், அவர் ஒரு நல்ல மனிதர்.  இது ஒரு கலாச்சாரப் பிரச்சினை.  ஆரம்பித்தது பாரதி காலத்தில்.  தாகூர் சென்னை வருகிறார்.  உ.வே.சா.வை அவர் வீட்டுக்குப் போய்ச் சந்திக்கிறார்.  ஆனால் பாரதி பற்றி அவருக்குத் தெரியவே இல்லை.  அதனால்தான் சொல்கிறேன், நாளை வைரமுத்துவுக்கு நோபல் பரிசு கிடைத்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.  சமூகம் எப்படி இருக்கிறதோ அதைத்தானே பரிசுகளும் பிரதிபலிக்கும்? 

அந்த வகையில் வணிக எழுத்து என்பது – தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மட்டும் – ஒரு சமூகச் சீரழிவின் அடையாளம்.  ஆங்கிலத்திலோ ஏனைய பிற மொழிகளிலோ அப்படி இல்லை.  ஹெரால்ட் ராபின்ஸையோ மற்ற வணிக எழுத்தாளர்களையோ நான் சமூகச் சீரழிவு என்று சொல்ல மாட்டேன்.  சொல்லப்போனால் ஒரு சமூகத்துக்கு வணிக எழுத்து தேவை.  எல்லோரும் ஜேம்ஸ் ஜாய்ஸைப் படிக்க இயலாது.  எல்லோரும் நகுலனைப் படிக்க முடியாது.  வணிக எழுத்து தேவைதான்.  பிராந்தியை மட்டுமே குடித்து ஒருவன்  உயிர் வாழ முடியுமா?  செத்து விட மாட்டானா?  அதுதான் தமிழில் நடந்து கொண்டிருக்கிறது. 

சுஜாதா, பாலகுமாரனையே எடுத்துக் கொள்வோம்.  (அதற்கு முன்னால் கல்கி.) இந்த இருவருக்கும் பிறகு இத்தனை தரமான வணிக எழுத்து இல்லாமல் போய் விட்டது.  இனிமேலும் வராது.  ஆனால் ரமணி சந்திரன்கள் இருப்பார்கள்.  வந்து கொண்டே இருப்பார்கள்.  இன்னும் விளக்கமாகச் சொன்னால், புஷ்பா தங்கதுரை தரம் தாழ்ந்த வணிக எழுத்து.  அவரே ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் எழுதியவை தரமான வணிக எழுத்து. 

சரி, ஹெரால்ட் ராபின்ஸால் சீரழிவு இல்லை.  தமிழ் வணிக எழுத்தால் என்ன சீரழிவு என்றால் இதுதான்:  இந்தக் கட்டுரையை நீங்கள் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.  இது ஒரு manifesto மாதிரி.  பாலகுமாரன், சுஜாதா ஆகிய இரண்டு பேரால் ஒரு சமூகத்தின் இலக்கிய வாசிப்பையே நிறுத்தி விட முடிந்தது.  இலக்கியம் வாசித்திருக்க வேண்டிய அத்தனை பேரும் இந்த இருவரையும் மட்டுமே வாசித்தனர்.  என் நண்பர் ராகவன் அதற்கு ஒரு சிறந்த உதாரணம்.  நல்ல வாசிப்புப் பயிற்சியும் வாசிப்பு அனுபவமும், வாசிப்பதில் ஆர்வமும் கொண்ட அவருக்கு மேற்கண்ட இருவரையும் தவிர வேறு யார் பெயரும் தெரிந்திருக்கவில்லை.  (இப்போது பலரையும் படித்து விட்டார்.  நான் பத்து ஆண்டுகளுக்கு முந்தின கதையைச் சொல்கிறேன்.)  இது எந்த அளவுக்கு ஆபத்தான விஷயமாக இருந்தது என்பதற்கு ஒரு உதாரணம்.  வாசிக்கும் பழக்கம் உள்ள ஒரு இருபது வயதுப் பெண் சொன்னார், எனக்கு சுஜாதாதான் பிடிக்கிறது.  ஜெயகாந்தனைப் படித்தால் பயமும் அருவருப்பும் உண்டாகிறது.  சமூகம்தான் ஏற்கனவே பயமுறுத்துகிறதே, எழுத்துமா என்றார்.  அவருக்கு தி. ஜானகிராமனைத் தெரியாது.  தி.ஜா. சுஜாதாவை விட மகிழ்ச்சியும் சந்தோஷமும் தரக் கூடிய எழுத்தாளர் என்றால் அந்தப் பெண்ணுக்குப் புரியாது.  எனவே சும்மா இருந்து விட்டேன். 

இப்படி லட்சக்கணக்கான பேருக்கு சுஜாதாவும் பாலகுமாரனையும் மட்டுமே தெரிந்திருந்தது.  இல்லாவிட்டால் – யோசித்துப் பாருங்கள் – ஒரு வணிக எழுத்தாளர் ஏழு வாரப் பத்திரிகைகளிலா தொடர்கதை எழுதுவார்?  இது உலகத்தில் எங்கேயாவது நடக்குமா?  சுஜாவுக்கு நடந்தது.  ஆனால் இருவருக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது.  சொன்னால் கோவித்துக் கொள்ளக் கூடாது.  அய்யருக்கும் அய்யங்காருக்கும் உள்ள வித்தியாசம்தான்.  பாலா தன் நாவல்களை அக்னி என்று சொல்வார்.  சுஜாதாவுக்கு அம்மாதிரி பிரமைகள் எதுவும் கிடையாது.  அவர் தெளிவாக இருந்தார்.  இந்த சமூகத்துக்கு இது போதும்.  எப்போதாவது டேய், எனக்கு இலக்கியமும் தெரியுண்டா என்று சொல்வது போல் கனவுத் தொழிற்சாலையும் நகரமும் எழுதுவார்.  பாலா அக்னி அக்னி என்று நாபியிலிருந்து சப்தம் எழும்பச் சொல்லும்போது நான் பதிலே பேச மாட்டேன்.  என்னை விட வயதில் மூத்தவர்களை நான் மறுத்துப் பேசும் பழக்கம் இல்லை.  வட இந்தியாவில் இருந்ததால் வந்த பழக்கம். 

இலக்கிய ரசனையையே இந்த வணிக எழுத்தாளர்கள் இல்லாமல் ஆக்கி விட்டார்கள்.  இதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது.  தெரியாமலேயேதான் செய்தார்கள்.  இதை நான் சொன்னாலும் அவர்களால் விளங்கிக் கொள்ள முடியாது.  அதற்கான திறப்பு அவர்களிடம் கிடையாது.  எனவேதான் தமிழ்நாட்டில் மட்டும் எந்தக் காலத்திலும் வணிக எழுத்து இலக்கிய ரசனையை அழித்து ஒழிக்கும் சீரழிவுக் காரியத்தைச் செய்து கொண்டே இருக்கிறது.  ஒரு ஆரோக்கியமான சமூகத்தில் அசோகமித்திரனும் இருக்க வேண்டும்; கல்கியும் இருக்க வேண்டும்.  இங்கே கல்கி மட்டுமே இருக்கிறார்.  அதுதான் சீரழிவு என்கிறேன்.  அதனால்தான் வணிக எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் இடையில் ஒரு தீராப் பகை இருந்து வருகிறது.   இதனால்தான் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக விளிம்பை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது.  எனவேதான் வணிக எழுத்தாளர்களோடு எனக்குப் பேச்சு வார்த்தையோ கைகுலுக்கலோ கிடையாது. 

இதே அவலம் இசையிலும் தொடர்கிறது.  ஒரு காமன்மேன் எனக்குப் பிடித்த எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் என்று சொல்லலாம்.  அதையே ஒரு இலக்கியவாதி சொல்லலாமா?  சொல்ல மாட்டார்.  ஆனால் இசையில் சொல்லுவார்.  இன்னும் கொஞ்ச நேரத்தில் அதை கவனிப்போம்.   

நண்பர்களே, அமெரிக்காவில் என் புத்தகங்கள் சில நண்பர்களிடம் உள்ளன. அதை இந்தியா வருபவர்கள் யாரேனும் கொண்டு வர முடியுமா? பெங்களூராக இருந்தால் என் நண்பரே வந்து வாங்கிக் கொள்வார். மற்ற ஊர்களாக இருந்தாலும் நண்பர்களைக் கொண்டு நானே பெற்றுக் கொள்வேன். எடுத்து வர இயலுமா? இயலும் எனில் எழுதுங்கள். உங்கள் முகவரிக்கு அந்த நூல்களை அனுப்பச் சொல்கிறேன். எடை அதிகம் இருக்காது. இரண்டு கிலோ இருக்கும்.

இன்னொரு விஷயம். இந்த மாதம் சந்தா/நன்கொடை வரத்து ரொம்ப ரொம்பக் கம்மி. கவனியுங்கள்.

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai